இந்த நேரத்தில் நல்ல programmes பார்ப்பது கஷ்டம்தான்... எனினும் சில programmes இந்த முறை சற்று நன்றாக இருந்தது... பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு விமர்சன தொகுப்பு இதோ...
********** **********
நடிகர் சிவகுமார் 1950 முதல் 1975 வரை தனது வாழ்க்கை பற்றி பேசிய programme நன்றாக இருந்தது. இதில் இவர் சொன்ன முக்கிய விஷயம்: 13 வயது முதல் 19 வயது வரை ஒவ்வொரு ஆண்/ பெண்ணுக்கும் நிறைய energy-இருக்கும். இதை படிப்பில் செலுத்தினால் வாழ்கையில் நல்ல படி மேலே வருவார்கள். இதே energy-ஐ காதலில் காட்டினால், விழுந்து விடுவார்கள்.. காதல் தவறு அல்ல. படித்து முடித்த பின் காதலிக்கலாம்... " என்று பேசினார். (ம்ம்ம்... இதெல்லாம் இப்போ நமக்கு applicable இல்லை; நம்ம பசங்களுக்கு தான் applicable..)
********** **********
பாரதிராஜா & கங்கை அமரன் (Coffea with Anu- வில்) சொன்ன சில தகவல்கள் ரொம்ப சுவை ஆக இருந்தன.
* செந்தூரப்பூ என்று உண்மையில் ஒரு பூவே இல்லை!!. சும்மா ராகத்திர்க்காக எழுதிய வார்த்தையாம் அது !!
* இளையராஜா முதல் மரியாதையை re-recording- க்காக பார்த்து விட்டு, "என்னையா படம் எடுத்திருக்க? வயசானவன் love பண்றது மாதிரி..சொந்த படம் வேற எடுத்திருக்கே.. வேணும்னா நல்லா யோசிச்சி மறுபடி re-shoot -பண்ணு.." என்றாராம். பாரதிராஜா அவரை convince -பண்ணி re-recording செய்ய வைத்திருக்கிறார். இளையராஜா படத்துக்கு எந்த சம்பளமும் பேசிக்கொள்ள வில்லை . படம் நன்கு ஓடிய பின் பாரதி ராஜா சென்று பணம் தர, இளையராஜா வாங்கி கொள்ளவே இல்லை. "படம் ஓடாம நீ நஷ்ட படுவேன்னு நினைச்சேன்....இந்த படத்துக்கு பேனா எடுக்கும் போதே உன் கிட்ட பணம் வாங்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்; அதனால் வாங்க மாட்டேன்..."
* இளைய ராஜா வெறும் பத்து ரூபாயுடன் சென்னைக்கு தனது இரு சகோதரர்களுடன் வந்து இறங்கி இருக்கிறார். முதலில் பாரதி ராஜா-வின் ரூமில் அனைவரும் இருந்திருக்கிறார்கள். மூன்று பேர் மட்டுமே ஒண்டி படுத்து கொள்ளும் ரூமில் turn போட்டு மீதமுள்ள ஒருவர் வெளியே அல்லது மொட்டை மாடியில் படுக்கனுமாம் !
********** **********
யார் யார் எதை பொக்கிஷமாக நினைக்கிறார்கள் என்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன் 20 வருடங்களுக்கு முன் தனது புத்தகம் ஒன்றை தொலைத்ததையும், இந்த வருடம் அதே புத்தகம் பழைய புத்தக கடை ஒன்றில் கிடைத்ததையும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கூடவே, " பொக்கிஷம் என்பது அவரவர் பாதுகாக்கும் நினைவுகளே; அவற்றில் சில அந்தரங்க, ரகசிய நினைவுகள்.. சில பகிர்ந்து கொள்ள கூடிய இனிய நினைவுகள் என்றார்.. உண்மை தானே??
********** **********
இனி நல்ல program முடிந்து நொள்ள program -க்கு வரலாம்...
எந்த channel-ஐ திருப்பினாலும் விஜய் அல்லது பிரபு தேவா வந்த வண்ணம் இருந்தனர். அவர்களிடம், வில்லு என்று ஏன் பெயர் வைத்தீர்கள், போக்கிரி-க்கும் இந்த படத்துக்கும் என்ன வித்தியாசம் என்ற அறிவு பூர்வமான கேள்விகளை அனைத்து தொலை காட்சி compere- களும் கேட்க, அவர்களும் சலிக்காது ஒரே பதிலை சொல்லி மொக்கை போட்டனர்.
ஒரு TV-ல் மலை கோட்டை மற்றொன்றில் சண்ட கோழி- இரண்டிலும் விஷால் நடிக்க, break-ல் மாற்றி, மாற்றி என் பெண் பார்த்ததில் எது எந்த படம் என புரியாமல் பாயை பிரண்டும் நிலைக்கு தள்ளப்பட்டேன். (விஷால் எப்பவும் ரௌடியை உதைப்பார். இல்லாட்டி போலிசை உதைப்பார்).
நாயகன் என்று ஒரு படம் கலைஞர் TV-ல் காட்டபட்டது. ஏம்பா.. உங்களுக்கு மன சாட்சியே இல்லையா? நாயகன் எப்படி பட்ட படம்? கமலும், மணி ரத்னமும் உயிரை விட்டு எடுத்த படம்.. அதே பேரையா இந்த மாதிரி படத்துக்கு வைக்கிறது? ஏதோ இதை எழுதுவதால் நான் இந்த படத்தை பார்த்தேன்னு என்னை பத்தி தப்பா நினைச்சிட போறீங்க... Channael -மாற்றும் போது, பார்ப்பதே சகிக்க முடியல.. இந்த படத்தில் நடிச்ச ஹீரோ-வையும், டைரக்டரையும் கவுண்டமணியை விட்டு தான் உதைக்க சொல்லணும்..
.
மோகன், அது என்ன சிவகுமார் பேச்சு நமக்கு applicable இல்ல, நாம தான் படிச்சு முடிசிட்டோமே!
ReplyDeletewhere is the party எனக்கும் பிடிச்ச பாட்டு! எனக்கு jan 14 wrking day- ஆ இருந்ததாலே எல்லா program - இயும் பார்க்க முடியலே... பார்த்த ஒன்னு ரெண்டிலே ஒன்னுமே தேறலே... BTW, யாராவது இந்த ராஜாவை பேச வேண்டாமுன்னு சொல்லுங்களேன்... தாங்க முடியலே...
ஒரு விஷயம்...இந்த வருஷம், TN Govt பொங்கல் வேண்டாமுன்னு சொல்லி இருக்கலாம்... ஈழம் நினைத்து.... Devakumar