Monday, January 19, 2009

SLUM DOG MILLIONAIRE - படமும், பார்த்த சூழலும் BY தேவகுமார்

எல்லோரும் (அமிதாப் பச்சன் உட்பட) இந்த படத்தை பற்றி எழுதும் போது நான் என்ன புதிதாய் எழுதிவிட போகிறேன், இருந்தாலும் இதை எழுத காரணம் - இந்த படமும் அந்த படம் பார்த்த சூழலும் தான். இந்த படத்தை நான் New Jersey, US - இல் பார்த்தேன் - மாமா, அத்தை, மற்றும் மாமா பையன் (Thanks Ranjit!) சகிதமாய். அது ஒரு சிறிய தியேட்டர் (Trichy Maris Mini சைஸ்-இல்). எங்களுக்கு டிக்கெட் கொடுத்தவரே gate -ஐ சாத்திவிட்டு வந்து படம் போட்டார் (!). அவரே popcorn, pepsi (அதை ஏன் soda என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை, அதுக்கு பேர் soda என்றால், நம்ம ஊர் கோழி soda- வுக்கு என்ன பேர்?) விற்று கொண்டு இருந்தார்..

நான் theater-இக்குள் நுழைகில் கடும் அமைதியோடு இருந்தது, இருந்த ஓரிருவர் novel or news paper படித்து கொண்டு இருந்தார்கள் (என்ன கொடுமை sir இது). எங்களை தவிர இன்னொரு இந்திய குடும்பம் வந்தது. அவர்கள் கூட ஒன்றும் பேச வில்லை. (முன் தினம் தான் chicago-இல் பின் சீட்டுக்காரர் மொய்மொய் என பேசியதில் முன் சீட்டுக்காரர் துப்பாக்கியில் சுட்டுவிட்டார் என்பதால் நானும் சத்தம் இல்லாமல் படம் பார்த்தேன்). மொத்தம் 17 பேர்தான் படம் பார்த்தோம் (காலை காட்சி என்பதால் கூட இருக்கலாம்), 170 டாலர் தான் கல்லா கட்டியது என்றாலும் படம் ஒரு சூப்பர் படம்...

*******************************

ஒரு slum வாழ் இளைஞன் தான் வாழ்க்கையில் கற்ற/அனுபவித்த விசயங்களை வைத்து எப்படி koan Banega crorepati (KBC) - இல் 2 கோடி வெல்கிறான் என்பதுதான் ஒரு வரி கதை. ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அவன் வாழ்க்கையில் இருந்து சொல்ல அந்த விடைக்கான சம்பவங்கள் கதையாய் விரிவது அற்புதம்...

Vikas Swarup (தற்போது Pritoria - இல் Deputy High Commissioner - ஆக இருக்கிறார்) எழுதிய Q&A நாவலை (2003 இல் வெளி வந்தது) வைத்து எடுத்தது இந்த படம்...

படத்தில் நிறைய விஷயங்கள் அருமை ஆனவை... Dev Patel (கதாநாயகன் Jamal) London-இல் பிறந்த Gujarathi என்றாலும், அந்த slum இளைஞனின் "don't care attitude"-ஐ கொண்டு வந்தது அதிசயம்...

கதாநாயகி (Freida Pinto, படத்தில் Latika) ஒரு நல்ல தேர்வு...அவரிடம் ஒரு பாவமான அழகு (pityful beauty) இருக்கிறது (நம்ம ஊர் Boomika மாதிரி! - of course, much more beautiful) இன்னொமொரு நல்ல விஷயம், அந்த பெண் dusky complexion- இல் இருபதுதான். உண்மையில், நம் தமிழ் cinema-இல் காட்டுவது மாதிரி Mumbai பெண்கள் சிவப்பானவர்கள் இல்லை, அவர்களின் அழகு dusky complexion தான் என்று சொல்வேன். இதில் தப்பு செய்யாமல் இருந்தது director - இன் நேர்த்தி. நம் தமிழ் சினிமா heroines மாதிரி இவருக்கும் நடிக்க அவ்வளவு வாய்ப்பு இல்லை என்பது என்னவோ உண்மை.


இந்த படம் மும்பையின் எல்லா முகங்களையும் படம் பிடிக்கிறது - தாதா உலகம், dance bars, பரபரப்பான இரவுகள், எப்பொழுதும் கட்டட வேலை நடந்து கொண்டு இருக்கும் suburban area - கள், traffic light - இல் பிச்சை எடுக்கும் குழந்தைகள், எப்போதும் கண்மூடாத BPO உலகம், தேன்கூடு மாதிரி கும்பல் அப்பி செல்லும் local trains, பயம் கொள்ள வைக்கும் slum-கல், குண்டு வெடிப்புகள், மத கலவரம் இப்படி உண்மையான விஷய நிரவல்கள்...


பல விஷயங்கள் முதலில் ஆரம்பித்து கடைசி வரை நூல் பிடித்தது மாதிரி கொண்டு சென்று இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு apartment-இல் நடக்கும் ஒரு பள்ளியில் (மும்பையில் மட்டுமே பார்க்க முடிந்த விஷயம்!) சிறுவர்கள் Three Musketeers - ஐ ஒழுங்காக படிக்காமல் ஆசிரியரை அலைகழிப்பதும் அதை கடைசி காட்சியில் அதே Three Musketeers - ஐ சேர்த்து இருப்பதும் சரியான விசயம்!

கதாநாயகன் சிறு பிள்ளையில் இருந்து emotional - ஆக இருப்பதும் (அம்மாவை மத கலவரத்தில் பறிகொடுத்துவிட்டு மழைக்கு ஒரு பழைய container-இல் அண்ணனோடு நடுங்கி கொண்டே தூங்குகையில், இன்னுமொரு சிறிய பெண் (Latika) நானும் உள்ளே வரட்டுமா என மழையில் நனைந்து கொண்டே கேட்க, அவளையும் சேர்த்து கொள்ளலாம் என அண்ணனிடம் recommend செய்வதும், she can be the third musketeer என சொல்வதும் கவிதையான காட்சி), அண்ணன் எப்போதும் "business like" ஆக, பணத்தின் மேல் குறியாக இருபதும் கடைசி வரை தொடர்கிறது...


இன்னுமொரு நல்ல விஷயம், அந்த slum-களை உள்ளது உள்ள படி காட்டி இருப்பது -

தங்களை மாயம் காட்டி சிக்க வைக்கும் மாயவலை என பூச்சிகள் நினைத்தன
ஓட்ட ஓட்ட ஒழியாத ஒட்டடை என மனிதர்கள் நினைத்தார்கள்
ஆனாலும் அதுதான் சிலந்திக்கு வீடு -

என்ற யாரோ எழுதிய கவிதையை நினைவுபடுத்தும் slum-கள்.


இன்னொரு ஆச்சர்யம் - Anil Kappor; KBC -ஐ நடத்துபவராக வருகிறார். இவரை எப்படிப்பா உட்டீங்க நிஜ நிகழ்ச்சியில்! ஒரு வேலை இன்னுமொருமுறை KBC வந்தால் Anil Kappor-தான் compere.


வசனங்கள் நறுக்! ஆங்காங்கே Hindi பேச விட்டு இருப்பது நமை படத்துக்கு நெருக்கம் ஆக்குகிறது (அதற்காக எனக்கு Hindi தெரியும் என நினைக்காதீர்கள்). தாதாவின் பிடியில் இருக்கும் Latika - ஐ தன்னோடு Jamal வர சொல்ல, அதற்கு அவள், what will we live on" என கேட்க "Love" என அவன் சொல்வது ஒரு சோறு பதம் - கண்ணீரை குடித்து காதல் உண்டு வாழ்வோம் - என்ற இலங்கை கவிதையை நினைவுபடுத்தியது...


ஒரு நெருடல் நான் கவனித்தது - இந்த சிறுவர்கள் (கதாநாயகனும் அவன் அண்ணனும்) ஆக்ரா-இல் (போலி) guide-ஆக வேலை பார்கையில் ஒரு அமெரிக்கரை சலவை தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்துக்கு கூட்டிபோய் அவர்கள் அந்த பக்கம் போன சமயத்தில் அவர்களின் car-ஐ அக்கு வேர் அணி வேராக பிரித்து எடுத்து செல்ல, அமெரிக்கர் சிறுவனை அடிக்க, அவன், this is a piece of India for you, என சொல்ல, அந்த அமெரிக்கரின் மனைவி 100 டாலரை (மருந்துக்காக) எடுத்து கொடுத்து, this is a piece of America for you என சொல்வது கொஞ்சம் நெருடல் (அவங்க ஒன்னும் அவ்வளவு பாசக்கார பசங்க இல்ல!)

ஒரு விஷயம் கவனித்தேன் - நான் கைத்தட்டி ரசித்த இடங்களும் அமெரிகர்கள் கைத்தட்டி ரசித்த இடங்களும் வேறுவேறாக இருந்தது.


நிறைய விருதுகள் (4 Golden Globe awards) இந்த படம் வாங்கியிருக்கும் வேளையில் இந்த படத்தின் பாடல்களை பாடி இருப்பது நம்ம ஊர் (Chennai) பெண் Tanvi என்பது அதிகம் வெளி வராத தகவல்.
**************************************************
எனக்கு தோன்றிய விஷயம், இந்த படத்தை தமிழில் எளிதாய் remake செய்ய முடியும் என்பதுதான். தமிழ் படங்கள் மாதிரி அனாவசிய பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இந்த படத்தில் இல்லை என்பது சபாஷ் போட வைத்தாலும், பாடல்கள் வைப்பதற்கும், விஸ்தாரமான சண்டை காட்சிகளுக்கும் இந்த படத்தில் நிறைய இடமுண்டு. Jamal - ஐ CST Railway Station - இக்கு (Terrorist attack - இக்கு உள்ளானதே அதே station), Latika தேடி வருகையில், வில்லன் (கதாநாயகனின் அண்ணன்) அவளை இழுத்து சென்று ஒரு பெரிய காரில் அழுத்தி செல்லும் பொது, ஏதோ ஒரு சிறிய பறவை ஒரு பெரிய கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட மாதிரி நமக்கு தோன்றுகிறது. ஓடி வரும் Jamal - ஐ Latika காரிலிருந்து பாவமாக பார்க்கும் போது ஒரு பெரிய பயமான மௌனம் நம்மை அழுத்தும் - "அனல் மேலே பனித்துளி, அலை பாயும் ஒரு கிளி" பாடலை இங்கே வைக்கலாமே என எனக்கே தோன்றும் போது, நின்றால் நடந்தால் பாடல் வைக்கிற தமிழ் directors- இக்கு தோன்றாத என்ன...

**************************

கண்டிப்பாய் இந்த படம் போய் பாருங்கள்... அசந்து போவீர்கள்...
**************

4- 5 (ஒரு தலை) காதல்களோடும், 5-6 காதல் தோல்விகளோடும் (!) சுற்றி திரிந்த கல்லூரி காலங்களில் கிறுக்கிய கவிதைகளை பீராயிந்ததில் தேறிய ஒன்று -

தூரத்தில் தெரியும் ஒற்றை மேகம்
அருகினில் தெரியும் புன்னை மரம்
வரண்டாவில் கசக்கி எறிந்த காகிதம்
வாசலில் தெரியும் திரைச்சீலை
மற்றும் நான்
ஒரு தென்றலின் வரவுக்காய்...
*******************************
(Blog - குவோம்)

1 comment:

  1. who is that spring? Thendral vanthatha... as per your expectation?
    mohan there is no failiure in love. In your life time it may cross again.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...