Tuesday, November 17, 2009

முயற்சி



முயற்சி

குரங்கு பெடலில்
சைக்கிள் ஒட்டியும்
முட்டி தேய விழுந்து
ரத்தம் பார்த்திருக்கிறேன்.

நீந்த தெரியாமல்
தண்ணீர் குடித்து
நீருள் வீசிய அண்ணனை
ஏசியிருக்கிறேன்..

தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..

பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..

என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்

முயற்சி தரும் சுகத்தில்
லயித்து வாழ்கிறேன்...

*

சமத்துவம்

கணவனை இழந்த
அடுத்த வீட்டு சிவகாமி
பத்தாம் நாள்
பூவும் போட்டும் விடுத்து
திரு நீறு அணிந்தாள்...

மனைவியை இழந்த
எதிர் வீட்டு முருகையன்
மூணாம் மாசம்
துக்கமெல்லாம் தலை முழுகி
பட்டு வேட்டி அணிந்தான்...

*

முன்னேற்றம்

வேக வேகமாய் போனால் தான்
முன்னே போக முடியும்...

முன்னே போன சந்தோஷம்
மனசுள் இருந்தாலும்
புற்கள் மிதி பட்ட வருத்தம் மட்டும்
நெருடலாக நினைவினிலே...

*
புரிதல்

ஒன்றன்
அருகில் உள்ள போதல்ல
ஒன்றை விட்டு
தூரமான பின்பே
ஒன்றைப் புரிய முடியும் !
*

வேலை

படிக்கட்டுகள்...
புன்சிரிப்புகள்...
அலைக்கழிப்புகள்...
நிராகரிப்புகள்...
எனினும்
என்னுள் உண்டு
நம்பிக்கை...

*

நேயம்

எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர...

*
குறிப்பு: இந்த கவிதைகள் யூத் விகடனில் நேற்று பிரசுரம் ஆனது. தற்சமயம் யூத் விகடனில் முகப்பு பக்கத்தில் ( Front page) இணைக்கப்பட்டுள்ளது.

Link: http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp

கவிதைகளில் ஏதேனும் ஒன்று பிடித்தாலும் தமிழிசில் ஓட்டு போடுங்க.. நன்றி..

29 comments:

  1. முயற்சி கவிதை - எதார்த்தமாகவும், அழகாகவும் வந்திருக்கு.

    புரிதலும் ரொம்ப நல்லாருக்கு.

    எல்லாமே எளிமையான வார்த்தைகளால் அழகாக கோர்க்கப்பட்டுள்ளது. ரொம்ப நல்லாருக்குங்க.

    வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. ஜதார்த்தமான வார்த்தைகள் எளிய தமிழில்... மிகவும் நன்றாக உள்ளத உங்கள் கவிதைகள்

    //முன்னே போன சந்தோஷம்
    மனசுள் இருந்தாலும்
    புற்கள் மிதி பட்ட வருத்தம் மட்டும்
    நெருடலாக நினைவினிலே...//

    வரிகள் மனதைத் தொடுகின்றன...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி விக்னேஸ்வரி & பூங்கோதை

    ஒன்று தெரியுமா? இந்த கவிதைகள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னாள் என் கல்லூரி காலத்தில் எழுதப்பட்டவை.. உணர்வுகள் என்றைக்கும் பொதுவாக உள்ளது? இல்லையா?

    ReplyDelete
  4. அருமையா இருக்குங்க மோகன்... நிறைய எழுதுங்க!!

    ReplyDelete
  5. Anonymous3:05:00 PM

    Kavithaigal very nice.

    B. Deivasigamani.

    ReplyDelete
  6. நன்றி கலை அரசன். உங்க ப்ளாக் பார்த்தேன். காமெடியில் கலக்குறீங்க

    நன்றி மணி

    ReplyDelete
  7. கவிதைகள் நன்றாக உள்ளது. "முயற்சி" & "சமத்துவம்" மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    "தமிழிஷ்"-இலும் வாக்கு பதிவு செய்துள்ளேன்.

    என்றென்றும் அன்புடன்
    வெங்கட் நாகராஜ்,
    புது தில்லி

    ReplyDelete
  8. //எல்லோருக்கும் தர
    என்ன உண்டு என்னிடம்
    புன்னகை தவிர...//


    அழகான வரிகள். இப்போதான் உங்க ப்ளாக் பார்த்தேன். தொடர்ந்து படிக்கிறேன். All the Best

    ReplyDelete
  9. ஆறு கவிதைகளையும் வேறு யார் தர முடியும் இவ்வளவு அழகாக?

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  10. Anonymous5:55:00 PM

    நல்லா இருந்தது

    வைரமுத்துவில் இருக்கிற "m" உன் பேரின் முதல் எழுத்து என்கிறதால் முன்னேறுகிறாய் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நன்றி வெங்கட். பதிவுக்கும் வாக்குக்கும்.

    கவிதை காதலன் நன்றி. வெளியான கவிதைகளில் ஒவ்வொருத்தருக்கும் ஒன்று பிடிக்கிறது. இது இயற்கை தான்.

    ராகவன் சார்.. ரொம்ப நன்றி .. எனது ப்ளாக் நிறைய பேர் படிப்பதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். எந்த வித எதிர் பார்ப்பும் இன்றி பல அறிவுரை தந்தீர்கள். தமிலீஷ் சேர கூட தாங்கள் தான் சொல்லி தந்தீர்கள். மீண்டும் ரொம்ப நன்றி

    அனானி எனது நண்பரே. அவருக்கும் நன்றி

    ReplyDelete
  12. நேயமும் புரிதலும் அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நல்லா இருக்கு மோகன் குமார் உங்க கவிதைகள்

    ReplyDelete
  14. அழகான கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்! நேயம் என்னை மிகவும் கவர்ந்தது.

    //இந்த கவிதைகள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னாள் என் கல்லூரி காலத்தில் எழுதப்பட்டவை.. உணர்வுகள் என்றைக்கும் பொதுவாக உள்ளது? இல்லையா?//

    இதுபோல, 20 வருடங்களுக்கு முந்தைய படைப்புகள் பலவற்றை நானும் வலையேற்றியிருக்கிறேன்:)!

    ReplyDelete
  15. ஐயா!
    மிகவும் நன்றி வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்...!
    Unga Kavithai Romba Super.
    This comment is published from browsing centre. Why? Because my office systems is acces denied for the comment option.
    My Blog dpraveen03.blogspot.com
    My Email ID dpraveen03@gmail.com
    unga Blog very very intersting.
    Thank u. By Praveen Kumar.

    ReplyDelete
  16. அழகான கவிதைகள் :)))

    //நேயம்

    எல்லோருக்கும் தர
    என்ன உண்டு என்னிடம்
    புன்னகை தவிர...//

    மிகப்பிடித்தது... :)))

    ReplyDelete
  17. என் வலைப்பூக்கு வருகை தந்தமைக்கு நன்றி! கவிதை விகடனில் படித்தேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    என் வலைப்பூவில் என்று இல்லை, பின்புலம் ஃபோடோபக்கட் போன்ற புகைப்பட தளங்களில் இருக்கும் வர்ட்ப்ரெஸ் தீம்கள் எல்லாவற்றிலும், அப்படித்தான் தெரியும். காரணம், டேமேஜர் JPG block செய்திருப்பார்.

    ஒரே வழி, கூகிள் ரீடரில் சேர்த்துப் படிக்கலாம்.

    நன்றிங்க

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. பிரவீன் : நன்றி. நிறைய எழுதுங்க

    அருமையான பாட்டுக்கள் போட்டு அசத்தும் ஸ்ரீ மதி: நன்றி. அவ்வபோது நம்ம blog பக்கம் வாங்க.

    வானம்பாடிகள் சார்: நீங்க ஒரு senior. ரொம்ப நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  20. கவிதைத் தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது நண்பரே..

    தொடருங்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அருமையான தளம் மோகன் குமார்.முன்பே உங்கள் பின்னூட்டம் பார்த்து தளம் வர முயற்சி செய்தேன்.இயலவில்லை.திறக்க இயலவில்லை.மெயிலில் லிங்க் கொடுத்ததால் வர இயன்றது.மிகுந்த அன்பும் சந்தோசமும்.கவிதைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.இனி தொடர்ந்து வருவேன்.எனக்கு இன்னும் ஓட்டு அளிக்க தெரியவில்லை.தம்பிதான் எனக்காக தளம் திறந்து பதிந்து வருகிறான்.

    மற்றபடி,விலை மதிப்பற்ற அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  22. முயற்சியை பற்றி எழுதிய கவிதை அருமை....

    ReplyDelete
  23. கவிதைகள் அருமை! வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  24. நிகழ் காலத்தில், பா. ரா, ஊடகன், வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    ஊடகன் தங்கள் blog பார்த்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  25. எதார்த்தமாகவும், அழகாகவும் வந்திருக்கு.

    ReplyDelete
  26. கவிதைகள் அருமை மோகன்!

    ReplyDelete
  27. இது பட்டு போன

    மரமல்ல .

    துளிர் விட்டு

    மலரும் மொட்டு.

    (நின் கவி கண்ட

    பின்

    என்னுள் மாண்ட

    பினிக்ஸ் )

    ReplyDelete
  28. வைரமுத்துவில் இருக்கிற "m" எங்கிட்டேயும் இருக்கில்லே

    ReplyDelete
  29. வைரமுத்துவில் இருக்கிற "m" எங்கிட்டேயும் இருக்கில்லே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...