முதல் பிள்ளை, நடு பிள்ளை, கடைசி பிள்ளை இவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உண்டு. அவற்றை இங்கு பட்டியலிட முயல்கிறேன். உங்களுக்கு நீங்கள் பொருத்தி பார்த்து கொள்ளலாம். ஒரே குழந்தை என்றால் அது "முதல் குழந்தை" category-ல் தான் பெரும்பாலும் வரும் என்கிறார்கள் அறிவியலறிஞர்கள்!
முதல் பிள்ளை..
** பொறுப்பானவர்கள்.
** குடும்ப கஷ்டம் உணர்ந்தர்வர்கள்.
** சற்று dominating tendency உள்ளவர்கள்.
** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.
** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.
நடு பிள்ளை
** ரொம்ப balanced ஆன person ஆக இருப்பார்கள்.
** பொறுமை சாலிகள்
** நண்பர்கள் அதிகமாக இருக்கும்
** Attention முழுதும் முதல் மற்றும் கடைசி பிள்ளைக்கு கிடைக்க, இவர்கள் ** அதிகம் importance இன்றி வளர்ந்தவர்களாக இருப்பார்கள். இது குறித்த வருத்தம் சற்று இருக்கும்
** பல நேரங்களில் குடும்பத்திலும் பிற இடங்களிலும் வரும் சண்டைகளை தீர்த்து வைப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
** முடிவெடுப்பதில் சற்று தடுமாற்றம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.
** இவர்கள் எல்லாவற்றுக்கும் முதல் குழந்தை உடன் போட்டி போட்டே, எதையும் பெற வேண்டி இருப்பதால் நல்ல போட்டியாளராக ( Competitive ) இருப்பார்கள்.
கடைசி பிள்ளை
** குறும்புகாரர்களாய் இருப்பார்கள்.
** செல்லம் அதிகம்.
** எல்லோராலும் பந்தாட படுவார்கள்
** Creative person ஆக இருக்கும் வாய்ப்பு அதிகம்
** ரிஸ்க் எடுக்க ஆசை படுபவர்களாக இருக்க கூடும்
** மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பவர்களாக உள்ளதால் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் எளிதில் எல்லோரோடும் ஒத்து போய் விடுவார்கள்
** சில குடும்பங்களில் கடைசி பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போகாமல் இருப்பது உண்டு. (என் அம்மா என்னிடம் கடைசி பிள்ளையா இருந்து நீ நல்லா படிச்சு வந்தது ஆச்சரியம் தாண்டா என்பார்).
** அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களை depend செய்பவர்களாக இருப்பார்கள்.
என்ன உங்களோடு ஒப்பீடு செஞ்சாச்சா? சரியா இருக்கா தப்பா இருக்கான்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க !
நான் மூத்த பொண்ணு. நீங்க சொன்னதுல இதத் தவிர எல்லாஞ்சரி.
ReplyDelete//எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள். //
மூத்தவங்கதான் நல்லதை எப்பவும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்!!
i am last in my family but all three you said was not true....
ReplyDeletemay be an exception??? i dont know
நான் கடைசி.. ஓரளவு நல்லாவே ஒத்து போது :))
ReplyDeleteநான் நடுவுல மாட்டிக்கிட்டேன். ஆனா பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியல!
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி
நானும் கடைசி ஆள்தான்.
ReplyDeleteநான் நடு ஆளுங்க ...
ReplyDeleteசொன்னது ஒத்துப் போகுது...
// டக்கால்டி said...
ReplyDeleteநான் நடு ஆளுங்க ...
சொன்னது ஒத்துப் போகுது...//
ரிபீட்டோய்...
ரேகா ராகவன்.
You maybe interested in reading this:
ReplyDeletehttp://developmental-psychology.suite101.com/article.cfm/how_birth_order_changes_your_life
நாந்தான் முத்ல். நீங்க சொன்னது ஒரு அளவுக்கு ஒத்து போகுது.
ReplyDeleteசரி தான்...ஒத்து போகுது....
ReplyDelete//** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.
ReplyDelete** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.//
இது இரண்டுமே முரணா இருக்கு. நான் முதல்...ஆனா இன்னும் என் தம்பியை குழந்தையாத்தான் நினைக்கிறேன்.
நான் கடைசி. என் கணவர் முதல்
ReplyDeleteபெரும்பாலும் எல்லாம் சரியா இருக்கு :)
கடைசி பிள்ளைங்களுக்கு நாய் பூனைன்னு செல்லப்பிராணிகள் மேல பாசம் அதிகம். அதனால நிறைய வெட் டாக்டர்கள் வீட்டுக்கு கடைசிப்பிள்ளைங்களா இருப்பாங்களாம் :)
ReplyDelete//ஆனா இன்னும் என் தம்பியை குழந்தையாத்தான் நினைக்கிறேன்//
ReplyDeleteநான் என்னையே குழந்தையாத்தான் நினைக்கிரேன் பாஸ்
நான் நடு, கிட்டதட்ட பல விஷயங்கள் ஒத்துபோவதாய்தான் இருக்கிறது, இது போன்ற கணிப்புகள் பற்றி ஒரு புத்தகமே இருக்கு.
ReplyDeleteஆமா, தல, இந்த வார பதிவர்.......?
நல்லா ஒரு தொடரா வந்துட்டு இருந்துதே?
/** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.
ReplyDelete** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.//
இது இரண்டும் என் விஷயத்தில் தப்பு...
அமுதா கிருஷ்ணா said...
ReplyDelete/** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.
** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.//
இது இரண்டும் என் விஷயத்தில் தப்பு...
//
யெஸ்ஸூ..
இதனால் தான் முதல் பிள்ளையும் முதல் பிள்ளையும் அந்த காலத்துல கட்டி வைக்கமாட்டாங்க.. டாமினேட்டானவங்கன்னு... இப்ப ஒத்த பிள்ளைங்கள் கட்டிக்கிட்டு சண்டை வரதுக்கு இது கூட காரணம்..
ஹுஸைனம்மா நன்றி நிறைய முதல் பிள்ளைகள் இதே கருத்து சொல்லிருக்காங்க. நான் என் அனுபவம் சொன்னேன்.
ReplyDelete********
தன்ஸ் நன்றி. ஆம். நீங்க exception ஆக இருக்கலாம்
********
அட கார்க்கி நீங்களும் கடைசியா?
********
நன்றி வெங்கட்
********
அட வாங்க அப்துல்லா!! நீங்களும் கடைசியா? நானும் தான்
********
டக்கால்டி.. நன்றி.. நடு ஆளு.. ம்ம்
********
ராகவன் சார் நீங்களும் நடு பிள்ளையா? ரைட்டு
********
சித்ரா; பார்த்தேன்; நன்றி
********
நன்றி ராமசாமி சார்.
********
ஜெட் லி நீங்க எந்த category-ன்னு சொல்லவே இல்ல.. !!
********
ஆகா ரகு.. கார்க்கி சொன்னதை கேட்டிங்களா
********
சின்ன அம்மணி .. நன்றிங்கோ
********
முரளி. நன்றி!! நிறைய உழைப்பு தேவை படுவதால் தற்போது எழுதலை. பின் தொடர்கிறேன்
********
நன்றி அமுதா
********
நன்றி முத்து லக்ஷ்மி
//அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஇதனால் தான் முதல் பிள்ளையும் முதல் பிள்ளையும் அந்த காலத்துல கட்டி வைக்கமாட்டாங்க.. //
அட ஆமா, எங்க ஊர்லயும் தலப்பிள்ளங்கள கட்டிவைக்க மாட்டாங்க (இப்ப மாறிடுச்சு). இந்த சைக்காலஜிக்கல் ரீஸன்னாலத்தானா? நான்கூட ஏன் இப்படி ஒரு மூடநம்பிக்கைன்னு நினைப்பேன்!!
நல்ல பதிவு. எனக்கும் சரியாகப்படுகிறது.
ReplyDeleteஹி ஹி மீ சிங்கிள்..
ReplyDeleteஎனக்கு கரெக்ட்டா தான் இருக்கு ரென்ட்ய் பாயிண்ட் தவிர :))
ReplyDeleteநான் கடைசிதான். நீங்க சொன்னதுல 95 சதவிகிதம் சரி.
ReplyDeleteம், ஓரளவுக்கு நல்ல புரிதல்.
ReplyDelete