குமுதம் அட்டையில் உள்ள தலைப்புகளை பாருங்கள்:
"சூர்யா கார்த்தி ஜெயித்த கதை";
"சூடான நயன்; கூல் செய்த பிரபு தேவா"
" காமெடி காவலன் விஜய் ",
"கலைஞர் Vs ஜெ"...
நான்கில் மூன்று தலைப்புகள் சினிமா பற்றி.. புத்தகமும் இப்படி தான் உள்ளது;
முழுதும் வாசித்தால் 60 சதவீதம் சினிமா செய்திகள், படங்கள்; 20 சதவீதம் அரசியல் மீதம் 20 சதவீதம் மட்டுமே தலையங்கம், சுய முன்னேற்றம், சிறு கதை.
புத்தகத்திற்கு பேசாமல் குமுதம் சினிமா என பெயர் வைத்து விடலாம். புரட்ட புரட்ட சினிமா செய்திகளாக வரும் போது அயர்ச்சியாக உள்ளது.
நிறைய விளம்பரங்கள் இருப்பது போல் தோன்றினாலும் எண்ணி பார்த்ததில் மொத்தம் பதிமூன்று பக்கங்களுக்கு தான் விளம்பரங்கள் உள்ளன.
சமீபத்திய கைது விவகாரத்திற்கு பின் தி.மு.க ஆதரவு பத்திரிக்கை போல் ஆகி விட்டது. இதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
ஒரு பக்க கதைகளில் தமிழ் சினிமாவில் ஒரு பாட்டில் பணக்காரனாவது போல் அரை பக்கத்தில் பெரிய மன மாறுதல்கள் நிகழ்கின்றன. கவிதைகள் ராணி, தின தந்தி அளவு தரத்தில் தான் உள்ளது.
தங்கம் விலை ஏறுவது பற்றி ஒரு செய்தி, அலர்ஜி மாத்திரைகள் பற்றி ஒரு ரிப்போர்ட், கோயில் பற்றிய தொடர் ஒன்று, சுய முன்னேற்ற புத்தகம் அறிமுகம் இவை புத்தகத்தில் உள்ள நல்ல விஷயங்கள். குறிப்பாய் வாரா வாரம் இவர்கள் அறிமுக படுத்தும் சுய முன்னேற்ற புத்தகங்கள், அவற்றின் கருத்துகளை சுருக்கமாக சொல்வது - இதை நான் ரசித்து வாசிக்கிறேன்.
லேனா. தமிழ்வாணன் கணவன் மனைவி பற்றி எழுதும் தொடர் செம போர். ஒன்றுமே இல்லாமல் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறார். நானும் ஏதாவது உருப்படியாய் சொல்லுவார் என ஒவ்வொரு வாரமும் படித்து ஏமாந்து கொண்டிருக்கிறேன்..
வாசகர் கடிதங்களில் குமுதத்தை திட்டி எழுதினாலும் வெளியிடுவார்கள். அந்த பாணி இன்றும் தொடர்கிறது. அரசு பதில்கள்?? ம்ம் என்ன சொல்வது? மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ். ஏ.பி இருந்த போது எழுதிய பல பதில்கள் இன்றும் நினைவில் உள்ளது. இன்றைக்கு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
இவ்வளவு எழுதுகிறேனே குமுதம் வாங்குவதை நான் நிறுத்துவேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! (ம்ம்.இதுக்காக எத்தனை பேர் திட்ட
போறாங்களோ? )
மிக பெரும் வாசகர் பலம் கொண்ட பெரும் பத்திரிக்கை சினிமா தகவல்களை குறைத்து, நல்ல விஷயங்களை நிறைய எழுத வேண்டும் என்பதே ஒரு சாதாரண வாசகனாக எனது எதிர் பார்ப்பு.
இருபது வருடமாய் வெளிமாநிலத்திலும் தேடி குமுதம் வாங்கி வந்த நான் இது போலவே ஏற்பட்ட சலிப்பினால் இப்போது இரு ஆண்டுகளாய் வாங்குவதை நிறுத்தி விட்டேன்:)!
ReplyDeleteதலைவா....
ReplyDeleteகுமுதம், விகடன் தரம் தாழ்ந்த மஞ்சள் பத்திரிக்கை வரிசையில் வந்து நெடுநாட்களாகிறது...
சினிமா, சினிமா மற்றும் சினிமா என்று அரைத்த மாவையே வெவ்வேறு தலைப்பில் இரண்டு புத்தகங்களும் அரைக்கின்றன...
ஒருவரை திட்டி எழுதும் போதும், அவரை அட்டையில் போட்டு கல்லா கட்டு... பின், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தை பற்றிய ஒரு ஸ்பெஷல் இதழ் போட்டு கல்லா கட்டுனு எங்கேயோ போயிட்டாங்க பாஸ்..
குமுதம் கலைஞர் ஆகி விட்டது எப்பவோ///ஞானியை கழட்டி விட்டு கலைஞர் சுயபுராணம் ஆரம்பித்தபோதே அதன் பழம் பெரும்பெருமையும்,குமுதம் தன்மானமும் காற்றிலே பறந்து விட்டது.இப்போது அது ஒரு ரொமான்ஸ் புக் மாத்திரமே பிரியா கல்யாணரமானின் ஆன்மீக தொடருக்காக வாங்குகிறேன்
ReplyDeleteகுமுதம் பதிலாக புதிய தலைமுறை வாங்கலாம்.கல்கி பரவாயில்லை.
ReplyDeleteமிக பெரும் வாசகர் பலம் கொண்ட பெரும் பத்திரிக்கை சினிமா தகவல்களை குறைத்து, நல்ல விஷயங்களை நிறைய எழுத வேண்டும் என்பதே ஒரு சாதாரண வாசகனாக எனது எதிர் பார்ப்பு.
ReplyDelete....... இப்படி எதிர்பார்க்கிற நீங்கள், ஒரு சாதாரண வாசகன் கிடையாதுங்க..... அக்கறை கொண்ட வாசகன். :-)
பூவரசி பேட்டியை விட்டுவிட்டீர்களே? யார் சொல்றது உண்மைன்னே தெரியல?
ReplyDeleteநான் குமுதம் வாங்குவதை நிறுத்தி 4 வருஷம் ஆவுது. போன வெள்ளி கிழமை ஒரு ரிசப்ஷனுக்கு வடபழனி நாகி ரெட்டி ஹால் வந்தேன். அன்னைக்குதான் ரொம்ப நாள் கழிச்சி குமுதம் வாங்கினேன்.
குமுதம் மட்டுமல்ல பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் அப்படி தான் இருக்கு.
ReplyDeleteகற்பனை வறட்சி யாய் இருக்குமோ...!
அன்புடன்,
http://vetripages.blogspot.com/
அண்ணே குமுதம் தான் இப்போ முரசொலின்னு பேர் மாறிடுச்சே :)
ReplyDeleteஇந்தியா வரும்போது வாங்கி டைம்பாஸுக்காக படிக்கறதுதாங்க எல்லா புத்தகமும். அதனால் ராமன் ஆண்டாலும் மாதிரி குமுதம், ஆவி எல்லாம் ஒண்ணுதான்னு ஆகிப்போச்சு
ReplyDeleteநல்ல விமர்சனம், ஞானி எழுதியது வரை அதை முதலில் படிப்பேன்.
ReplyDeleteஇதுதான் உண்மை
ReplyDelete//
Blogger ♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
குமுதம் மட்டுமல்ல பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் அப்படி தான் இருக்கு.
கற்பனை வறட்சி யாய் இருக்குமோ...!
//
குமுதம் தரமான பத்திரிக்கை என்று காலம் சென்ற அதனுடைய ஆசிரியர் S A P அவர்களே சொன்னதில்லை.என்ன முன்னைவிட அதிகமான ஆளும்கட்சி ஜால்ரா வாகவும் சினிமா கிசுகிசு பத்திரிக்கையாகவும் முன்னேறிவிட்டது.முழுக்க நினைந்தவனுக்கு முக்காடு எதற்கு என்ற லெவலில் இருக்கிறது.சூடு சொரனையற்றவர் விரும்பும் பத்திரிக்கையும் சூடுசொரணை இல்லாமல் இருப்பதுதான் ஞாயம்.
ReplyDeleteபாவம். இதை தவிர்த்து அவர்களால் வேறு என்ன செய்தி போட முடியும்.
ReplyDeleteஉங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன். என்னுடைய எதிர்பார்ப்பும் அதுவே
ReplyDeleteஅன்புடன்,
அருட்புதல்வன்
www.aaraamnilam.blogspot.com
சரியான கருத்து தலைவரே!
ReplyDeleteஎன் வீட்டிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக விகடனும் குமுதமும் வாராவாரம் வந்துகொண்டுதானிருக்கிறது. :-)
விகடன் எவ்ளோ தேவலை
ReplyDeleteகுமுதம் அக்மார்க் மஞ்ச பத்திரிக்கை.. அதுவும் அந்த புகைப்பட கமெண்ட்ஸை கவனித்ததுண்டா?
ச்ரோஜாதேவியில் கூட அவ்ளோ பச்சசையா போட மாட்டாங்க
குமுதம் வாங்கறதேயில்லை. அம்மா வீட்டில் மட்டும் விடாமல் வாங்குகிறார்கள்.
ReplyDeleteவிகடனும் அப்படியாகிடுமோ???
எந்த ஒரு வாரப் பத்திரிக்கையும் இப்போதெல்லாம் படிப்பதே இல்லை. தில்லியில் எல்லாமே மெதுவாகத் தான் வரும். அதுவும் ஒரு காரணம்....
ReplyDeleteவெங்கட்.
உண்மைதான். குமுதம் இரு சினிமா பத்திக்கையாகவே மாறி வருகிறது. ஒரு வேளை இந்த மாற்றத்துக்கு நாம் தான் காரணமோ?
ReplyDeleteஎல்லாருமே ஸேம் பிளட்தானா?
ReplyDelete:-)))
நீங்கள் கூறும் கருத்துகள் மிகவும் வாஸ்தவமானவை தான். எந்த பத்திரிக்கைகளிலும் சினிமாச் செய்தி இல்லாமல் இல்லை.
ReplyDeleteஆமாம். இந்த அளவிற்கு கேவலமாகத்தான் உள்ளது
ReplyDeleteவிளம்பரப்பணம்,ஊடக சலுகைகள், சுயலாபங்கள் என அரசியல் கலந்து விட்டதால், வியாபாராமாகி விட்டது. உண்மைகள், பத்திரிக்கை தர்மங்கள் எல்லாம் காலாவதியான சொற்கள்.
ReplyDeleteபின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநான் விகடனும் தொடர்ந்து வாசிக்கிறேன். விகடன் தரமும் சற்று குறைந்துள்ளது உண்மை தான் எனினும், குமுதத்தை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து.
வேலை பளுவால் அனைவருக்கும் தனி தனியே பதில்/ நன்றி சொல்ல முடிய வில்லை. மன்னிக்க
any business went in to 'online' lost its glory..
ReplyDeleteஎஸ்.ஏ.பி. இருந்தவரைக்கும் வாரா வாரம் படிச்சேன். சுஜாதா இருந்தபோதும் கொஞ்சம் கொஞ்சம் படிச்சேன். மாலன் ஆசிரியர் ஆனபோதே, குமுதம் படிக்கறதை விட்டுட்டேன்.
ReplyDeleteகுமுதம், ஆனந்த விகடன் வாங்கும் போது மலையாள நண்பர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் சினிமா பத்திரிக்கையா என்றேதான் இங்கே கேட்கிறார்கள்!
ReplyDeleteசகோதரி ராமலக்ஷ்மி சொல்கிற மாதிரி குமுதம் தொடர்ந்து வாங்குவதை எப்போதோ நிறுத்தியாகி விட்டது. என்றாவது சில சமயம் வாங்குவதுண்டு.. நீங்கள் குறிப்பிட்ட இந்த வார இதழ் நானும் வாங்கிப் படித்த பின் உங்களை மாதிரிதான் எனக்கும் சலிப்பு ஏற்பட்டது. ஒரு சிறிய திருத்தம். ராணி வார இதழ் குமுதத்தை விட தரத்தில் எத்தனையோ மடங்கு தேவலாம். சமீபத்தில் சுதந்திர தினத்தன்று வந்த ராணி இதழைப் படித்ததும் அசந்து போனேன். உண்மையான சுதந்திர வீரர்களைப்பற்றி நிறைய பக்கங்கள் போட்டிருந்தார்கள்!!
ReplyDeleteகுமுதத்தை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க..
ReplyDeleteகொஞ்சம் நாள் முன்னாடி, கலைஞருக்கு பிடித்த ஸ்வீட்னு சமையல் பத்தி எழுதுற கட்டுரையில கூட கலைஞர கொண்டு வந்துட்டாங்க...
காமெடி பீசுங்க.. இக்னோர் திஸ் பத்திரிக்கை
5 important blogs for bloggers
ReplyDeletehttp://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html
மின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க
http://ramasamydemo.blogspot.com/2010/09/add-words-email-this-to-friends-near.html
:))
ReplyDeleteஇதுதான் உண்மை..பெரும்பாலான புத்தகங்கள் இப்போ இப்படித்தான் வருகின்றன.
ReplyDeleteஅட்டையைக் கிழிச்சுட்டு பாருங்க. எல்லா வார இதழ்களும் இப்படிக் கேவலமாத்தான் இருக்கு.
ReplyDeleteகுமுதம் வேணாமுன்னு விட்டு 20 வருசம் ஆச்சு. இப்போ இந்தியாவில் இருக்கோமேன்னு ஒரு வருசமா கோபால் வாங்கும் குமுதத்தையும் மற்ற குங்குமம், கல்கி இவைகளை ஒரு பார்வை பார்ப்பதோடு சரி.
கிராமக்கதைன்னு ஒன்னு வருது பாருங்க...... :(
குமுதம்? ச்சும்மா ஒரு டைம்பாஸ் அவ்ளோதான். மத்தபடி......
ReplyDeleteதங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/10/blog-post_06.html
எங்க ரொம்ப நாளா காணவேயில்லை? ரொம்ப பிசியா?
ReplyDeleteநானும் தற்போது குமுதம் ஏன் ஆனந்த விகடன் ஜூ. வி. ஆகியவற்றை படிப்பதை நிறுத்தி விட்டேன். அதற்கு பதிலாக உங்கள் பிளாக் மாதிரி நிறைய பிளாக்குகளை படித்தாலே நல்ல விஷயங்கள் பல சுவாரசியமாக (இலவசமாகவும்) கிடைக்கும்.
ரொம்ப ஐஸ் வைக்கிறானோ?
நன்றி ஆதி மனிதன். வேலை (வீடு & அலுவலகத்தில்) அதிகம் தற்போது மறு படி எழுத யோசித்து வருகிறேன்
ReplyDeleteகுமுதம் வலைதளத்தில் ஆயுட்காலம் காசு கட்டு சேந்துட்டேன். இப்போ தலையில அடிச்சிக்கிறேன். அங்கேயே திட்டி திட்டி கமெண்ட்டும் கொடுத்திட்டேன். ம்கும் கொஞ்சம் கூட மழை பேஞ்ச எருமைமாடாட்டும் அசைய மாட்டேங்குறாங்க. கண்டிப்பா என்னை மாதிரி குமுதத்தை விரும்புபவர்கள் கமெண்ட் எழுதியிருப்பார்கள். அரசு பதில்கள் செம மொக்கையாக இருக்கிறது, ஞானியையும் தூக்கிட்டாங்க, இப்போ கலைஞ்ருக்கு கூஜா தூக்குறாங்க. படிக்க சுவாரஸ்யமாக ஒண்ணும் இல்லை. கைதுக்கு முன்புவ்ரை ஏதோ தேவலாம்னு இருந்துச்சு இப்போ சுத்தம். நடிகர்களை பத்தி எழுதி பக்கத்தை நிரப்புறாங்க.
ReplyDeleteநல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு