Monday, November 1, 2010

வானவில் : நான் ஏன் காணாமல் போனேன்?

நான் ஏன் காணாமல் போனேன்? 

தற்போது ஏன் எழுதுவதில்லை என கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பில் நெகிழ்கிறேன். உங்களுக்காக கொஞ்ச நாளாக எழுதாததன் காரணம் சொல்லியே ஆக வேண்டும். 

பொதுவாகவே நான் வீடு &; அலுவல் இவற்றிற்கு தான் மிக அதிக முக்கிய துவம் & நேரம் ஒதுக்கும் ஆசாமி. ஆனால் பிளாக்கில் சில மாதங்களாக  ரொம்ப நேரம்  செலவிடுகிறோமோ என்று ஒரு  உணர்வு கொஞ்ச காலம் ஆட்டி படைத்தது. இதேநேரம் வீடு & அலுவலகம் ரெண்டு பக்கமும் பணி சுமையும் மிக அதிகம். எனவே தான் ஒதுங்கி இருந்தேன். எழுதுவதற்கு விஷயங்கள் இல்லாமல் போகவில்லை (சரக்கு இன்னும் தீர வில்லை :))

மீண்டும் எழுத துவங்கும் இந்நேரம் சில Does & Donts  உடன் தான் எழுத துவங்குகிறேன். அதில் சில மட்டும் (எல்லாவற்றையும் சொல்ல முடியாது!) உங்கள் பார்வைக்கு:

1. வாரம் இத்தனை பதிவுகள் எழுத வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கூடாது. (முன்பு வாரம் ரெண்டாவது எழுதுவேன்); சில வாரங்கள் பதிவே எழுதா விட்டாலும் பரவாயில்லை. 

2. வானவில் &; முன்னேறி பார்க்கலாம் தொடர் இரண்டும் தொடர வேண்டும். இவை வாரா வாரம் என இன்றி இயலும் போது எழுதலாம். 

3. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள், பிடித்த படங்கள், உடல் நலம் குறித்து பதிவுகள் இவை தொடர வேண்டும் . 

4. பதிவுகள் சனி, ஞாயிறுகளில் எழுத படும். ஆனால் சனி, ஞாயிறு நிறைய பேர் பிளாக் வாசிக்காததால் திங்கள் to வெள்ளிக்குள் பிரசுரம் செய்யப்படும். (இது முன்பே செய்தது தான்) பதிவுகளை வலை ஏற்றுவது மற்றும் கமெண்டுகள் வாசித்து பதில் சொல்வது இவை மட்டுமே பதிவுலகுக்காக திங்கள் to வெள்ளி வரை செய்ய கூடிய வேலை. (இதற்கு நிச்சயம் அதிக நேரம் ஆகாது; அதிக பட்சம் அரை மணி நேரம் ஆகலாம் )

சுருக்கமாக,  இயலும் போது மட்டும் எழுத போகிறேன். வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே; அது தான் உற்சாக டானிக். 

படித்ததில் பிடித்தது  குமார் தையலகம் சிறுகதை 

ஆனந்த விகடனில் இந்த வாரம் தாமிரா எழுதிய  " குமார் தையலகம்" சிறுகதை நெகிழ்த்தியது. 

கதை இது தான்: கிராமத்து நண்பர்கள் சேர்ந்து ஒரு நாடகம் போட திட்டமிடுகின்றனர். தையல் கடை வைத்திருக்கும் குமார் கடையில் அனைவரும் கூடி விவாதிக்கின்றனர்.  நாடகம் போடும் ஐடியா தந்ததோடு, அதற்கு  15,000 பணம் வேண்டும், பண்ணையார்களிடம் நானே வசூலித்து தருகிறேன் என்கிறான் ஒரு நண்பன். ஆனால் கொஞ்ச நாளில் அவன் நைசாக ஒதுங்கி கொள்ள, துவங்கி விட்டோம், முடித்தாக வேண்டுமென குமார் டைலர் நாடகம் போட்டு முடிக்கிறார். பணம் போதாமையால் தனது தையல் மிஷின்களை விற்று பணம் செட்டில் செய்கிறார். கதை இப்படி முடிகிறது:            " அதன் பிறகு ஊரில் வேறு யாரும் நாடகம் போட வில்லை; குமார் தையலகம் மூட பட்டு விட்டது; ஊர் காரர்கள் மட்டும் " குமார் போட்ட நாடகம் போல வராதுப்பா" என இன்னமும் பேசி கொண்டிருக்கின்றனர். 

ம்ம் ஒவ்வொரு கிராமத்திலும் இது போல நாடகம் போட்ட அனுபவங்கள் 
இருக்கும். (எனக்கும் கூட !)

டிவி பக்கம் : ஒரு வார்த்தை ஒரு லட்சம்

விஜய் டிவியின் புது நிகழ்ச்சி ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்". சனி கிழமை இரவுகளில் ஒளிபரப்பாகிறது. ரெண்டு பேர் கொண்டது ஓர் அணி; இவ்வாறு இரு அணிகள் முதலில் மோதுகின்றன. பின் அதிக பாய்ண்டுகள் எடுத்த அணி "மணி ட்ரீ ரவுண்ட் " விளையாடுகிறது. இதில் Rs. 10,000/ 50,000/ 75,000/ 100,000 என சில ரவுண்டுகள். எப்போது வேண்டுமானுலும் விலகலாம்.

இருவர் உள்ள டீமில் ஒருவரிடம் சில தமிழ் வார்த்தைகள் லேப் டாப் மூலம் காட்டுகிறார்கள். இதனை மற்றவருக்கு சில க்ளு கொடுத்து கண்டு பிடிக்க வைக்க வேண்டும். க்ளு ஒரே வார்த்தையில் தர பட வேண்டும்; மேலும் ஒரு வார்த்தை கண்டு பிடிக்க அதிக பட்சம் 3   க்ளு தான் தரலாம். 

அந்த நேரத்தில் சரியான வார்த்தை/ க்ளு நினைவுக்கு வர வேண்டும்; அது தான் விஷயமே! தற்போது சின்ன திரை நட்சத்திரங்கள் தான் கலந்து கொள்கின்றனர். (கொஞ்சம் மேட்ச் பிக்ஸ்சிங் இருக்க மாதிரி சந்தேகமும் வருது!!) கூடிய விரைவில் பொது மக்களும் கலந்து கொள்ள கூடும். 

போக போக தான் நிகழ்ச்சி ஹிட்டா இல்லையா என சொல்ல முடியும்.

தீபாவளி சினிமாக்கள்

தீபாவளிக்கு ரஜினி, கமல் படங்கள் வந்தது ஒரு காலம். அதற்கு அடுத்த வரிசையில் உள்ள விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் இவர்களில் யார் படமும் இம்முறை வரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் நிலை நிச்சயம் பாவம் தான்.  தனுஷின் உத்தம புத்திரன் & வ குவார்டர் கட்டிங் இவை தான் முக்கியமான (!!??) படங்கள். (மைனா, வல்ல கோட்டை இவற்றை விட்டது ஏன் போன்ற பின்னூட்டங்கள் வரவேற்க படுகின்றன) குவார்டர் கட்டிங் என தலைப்பிலேயே வைப்பது எவ்வளவு அராஜகம். இதற்கும் வரி விலக்கு உண்டு. வாழ்க செம்மொழி!! 

ரசித்த SMS: 

Stay committed to your decisions, but stay flexible in your approach. 

எந்ந்ந்த்த்திரா 

எந்திரன் பார்த்தது பற்றி இப்போ எழுதினால் அடிக்க மாட்டீர்களே? :))
முதல் பாதி முடிந்து அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். என்ன அருமையா எடுத்திருக்காங்க என!! இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து விட்டது ரோபோவிற்கு ரெட் சிப் வைத்த பின் ஒவ்வொரு நிமிடதிற்குள்ளும் பல கார்களும் மனிதர்களும் செத்து கொண்டே இருக்கின்றனர்.  எனக்கு அழிவை தொடர்ந்து பார்ப்பது மிகுந்த அயர்ச்சியாக இருந்தது. குட்டி பசங்களுக்கு இத்தகைய ஜெட்டிக்ஸ் சமாச்சாரங்கள் காரணமாய் இரண்டாம் பாதி(யும்)  மிக பிடிக்கிறது !!

எப்படி எல்லாம் பணம் பண்ணலாம் என சன் டிவியிடம் தான் கத்துக்கணும். இப்போ "Making of Enthiran" என டிவி மூலம் காசு செய்ய போகிறார்கள்..

ரசிக்கும் விஷயம் : மேகம் 


என்னவோ கொஞ்ச நாளாக மேகங்களை ரசிக்கும் வழக்கம் வந்துள்ளது. வெள்ளை வெள்ளையாய் வெவ்வேறு வடிவங்களில் மேகங்கள். அது என்ன வடிவம் என கற்பனை செய்வதே ஒரு விளையாட்டு போல் உள்ளது. சில நேரம் அவற்றை சும்மா பார்ப்பதே மனச்சுமை குறைக்க உதவுகிறது. இதுவரை இல்லா விடில் இனியாவது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் மேகங்களை கவனியுங்கள். முக்கியமான விஷயம் வண்டி ஓட்டும் போது பார்க்காதீர்கள். அது கவனத்தை சிதற அடிக்கும். நிற்கும் அல்லது நடக்கும் நேரம் மட்டும் பார்த்து ரசிக்கலாம். இயற்கையை ரசிப்பது நிச்சயம் நல்ல stress relief. 

19 comments:

  1. மேகங்களை ரசிக்க பழகுறீங்களா? அப்ப நிச்ச்யமா உங்களுக்கு அது வந்திருச்சு..:))

    ReplyDelete
  2. Welcome back!!! நேரம் இருக்கும் போது, அடிக்கடி எழுதுங்க... :-)

    ReplyDelete
  3. கேபிள்.. உங்க profile போட்டோ பின்னால கூட மேகங்கள்.. எவ்ளோ அழகா இருக்கு பாருங்க..
    **
    நன்றி சித்ரா

    ReplyDelete
  4. வணக்கம் சார்,
    ரொம்ப நாளா எழுதவில்லை என்றவுடன் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன். உங்களுடடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியது மட்டுமல்ல பின்பற்ற வேண்டியதும் கூட.

    குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுவது, நல்ல வழிமுறை.

    குடும்பம் மற்றும் பணி இரண்டுதான் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

    நேரம் கிடைக்கும் போது மகிழ்ச்சியாக தொடருங்கள்.

    ReplyDelete
  5. வாங்க வாங்க எங்க ஆளை காணம் என்று நினைத்தேன்...

    அடிக்கடி எழுதுங்க...

    ReplyDelete
  6. வெல்கம் பேக்..

    எனக்கு மழையில் நனையப் பிடிக்காது. மேகங்களை உற்று கவனித்தால் நிறைய கார்டூன் கேரக்டர்கள் தென்படும்:)

    நீங்க வெகேஷன் முடிச்சு வர்றீங்க. நான் வெகேஷனுக்குப் போறேன்:))

    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வெல்கம் பேக் மோ.கு.
    :)
    இப்படியே தொடருங்கள்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி அமைதி அப்பா; எனது நிலையை சரியாக புரிந்து கொண்டதோடு அதற்கு ஆதரவும் தரும் தங்களுக்கு நன்றிகள் பல.
    **
    சங்கவி: நலமா? நன்றி
    ***
    வித்யா: ம்ம்.. மேகத்தில் தெரியும் உருவம் நம் பார்வையை பொறுத்தே இருக்கு. உங்களுக்கு கார்டூன் எல்லாம் தெரியுதா? குட்டி பசங்க வீட்டில் இருப்பதால் இருக்கலாம்
    **
    நன்றி வரதராஜலு சார்; ஆஸ்திரேலியா எதிரே சச்சின் ஆட்டத்தையும் ICC விருதையும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் (நானும்..!!)

    ReplyDelete
  9. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி மோகன் சார். தங்களது கட்டுரை எப்பவும் சூப்பர்தான்.
    தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    ReplyDelete
  10. வாங்க மோகன், வேலையில் மூழ்கி இருப்பீர்கள் என நினைத்தேன். தொடர்ந்து எழுதுங்கள், சமயம் கிடைக்கும் போதெல்லாம்.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  11. உண்மைதான், எதற்கும் அடிமை ஆகாது (அடிக்ஷன்) இருக்கவேண்டும்.
    "வலைப் பதிவிற்காக நாமில்லை, நமக்காக வலைபதிவு", என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    Happy Diwali

    ReplyDelete
  12. உங்க "Do's & Don't do's" நல்லாருக்கு. எல்லாருமே யோசிக்க வேண்டியது.

    அப்புறம், மேகங்களை நாமே பார்ப்பதைவிட, குழந்தைகளைப் பார்க்கச் சொல்லி கேட்பது இன்னும் சுவாரஸ்யம்!! :-)))

    ReplyDelete
  13. வானவில்லில் அய்யாச்சாமியைக் காணாது ஆக்கி விட்டீர்களே:)?

    // வாரம் இத்தனை பதிவுகள் எழுத வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கூடாது.//

    எப்போது முடிகிறதோ எழுதுங்கள். வகுத்துக் கொண்டுள்ள வரையறைகள் நன்றாகவே உள்ளன.

    ReplyDelete
  14. பிரவீன் குமார்: நன்றி; தங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
    **
    நன்றி வெங்கட்; நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
    **
    வாங்க மாதவன். நன்றி; தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    ஹுஸைனம்மா said...
    //மேகங்களை நாமே பார்ப்பதைவிட, குழந்தைகளைப் பார்க்கச் சொல்லி கேட்பது இன்னும் சுவாரஸ்யம்!! :-//
    அடடா செம யோசனைங்க; முயற்சி செய்யலாம்
    **
    நன்றி ராம லட்சுமி; உண்மையில் இந்த Does & Donts - பதிவில் எழுத சற்று தயக்கம் இருந்தது. தனக்கு தானே வேலி போட்டு கொள்வது போல/ இதனை அனைவருக்கும் announce செய்கிறோம் என.. இருந்தும் நீங்களும் ஹுஸைனம்மா வும் இது மற்றவர்களுக்கும் பயன் தரும் என்றது மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
  15. டைம் கிடைக்கிறப்ப எழுதுங்க மோகன்.. மீண்டும் உங்க பதிவ படிச்சதில மகிழ்ச்சி :)

    தீபாவளி திருநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  16. அதான் வந்துட்டீங்களே ஜமாய்ங்க!

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  17. பரிசல் எனக்கு சொல்லித் தந்தது

    ஆஃபிஸ்ள டென்ஷன் ஆனா வெளிய போய் மேகஙக்ளின் விதவிதமான டிசைன்கள் பார்ப்பேன்.. மனசு இலகுவாகிடும்

    ReplyDelete
  18. ராகவன் சார் மிக்க நன்றி
    **
    கார்க்கி : அருமை; இதனை நானும் செயல் படுத்தி கொண்டு தான் இருக்கிறேன்

    ReplyDelete
  19. மேகம் மட்டுமல்ல நீலவானத்தையும்,நிலவு அசைவதையும் கூட எனக்கு ரசிக்கப் பிடிக்கும் :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...