பாலாவின் படங்களில் அனாயசமான கிண்டல் (எங்கள் ஊர் மொழியில் "கிரித்துருவம்") விரவி இருக்கும் ("தமிழ் நாட்டுல தமிழ தப்பு தப்பா பேசுனா ஜனங்க நம்புறாங்க, நான் என்ன பண்ணட்டும்?" என்பது மாதிரியான கிண்டல்கள்). அது இந்த படத்தில் அதிகமாய் இருக்கும் என எண்ணி போனது என் தவறு என நினைகிறேன். ஓரிரண்டு இடங்களை தவிர, யாராலும் சிரிக்க முடியவில்லை. பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்பது அவர் ஓரிரண்டு இடங்களில் அசால்டாய் ஆடியதில் தெரிகறதே தவிர, பல இடங்களில் அவர் சறுக்கி இருக்கிறார்.
விஷாலும் (வால்ட்டர் வணங்காமுடி) ஆர்யாவும் (கும்புடறேன் சாமி) அண்ணன் தம்பிகள் (ஒரு அப்பா இரண்டு அம்மா). அப்பா தேர்வு ஆச்சரியம் - சூப்பர் சிங்கரில் பாடகர்களுக்கு குரல் பயிற்சி தந்தவர்! வால்ட்டர் கொஞ்சம் பெண் தன்மையோடு, தெற்று பல்லோடு, மாறு கண்ணோடு இருக்கிறார், கும்புடறேன் சாமி ஒரு ஜாலி டைப். (பிதாமகன் விக்ரம், சூர்யாவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை). இவர்கள் கள்ளதொழில் செய்கிற குடும்பத்தை சேர்த்தவர்கள் (திருடலேன்னா சாமி குத்தம் ஆயிடும்!). வால்டருக்கு திருட வரவில்லை, அவர் நாட்டமெல்லாம் கலைத்துறையில்... கும்புடறேன் சாமி ஒரு கைதேர்ந்த திருடன். இவர்கள் கமுதி கோட்டை ஜமிந்தரோடு (RK. குமார்) நெருக்கமாய் இருக்கிறார்கள். அவரை ஒருவன் கொன்று விட அவனை விஷாலும் ஆர்யாவும் பழி வாங்குவதாய் கதை முடிகிறது.
படத்தின் அழகான விஷயங்கள் என்றால் - விஷாலின் நடிப்பு. விஷால் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் . அவர் திருடியதை போலீஸ் கான்ஸ்டபில் (அவர் விஷாலின் காதலியா என கடைசி வரை புரியாத புதிராக!) மயக்கி பேசி வாங்கி செல்லும்போது விஷால் காட்டும் முக பாவம் அழகு. அவரது உடை வித்தியாசம், அதை அவர் கையாளும் விதமும் அருமை. விஷால் போடும் சண்டை அசத்தல். இசை இன்னொரு அழகான விஷயம். அம்பிகா இன்னொரு ஆச்சர்யம் (அம்மாவா ஒரு ரவுண்டு வருவாரோ?!?). ஜமிந்தாரக வரும் RK. குமார் (his 'Highness') நடிப்பது மாதிரியே இல்லை, இவர் படத்தின் முக்கிய பலம்.
பெண் போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை அண்ணா என அழைப்பது, இப்படி சில இடங்களை சொல்லலாம். நிற்க. சில இடங்களில் நகைச்சுவை very subtle and super. "என்னடா பேரு, கும்புடறேன் சாமி" - "நாங்க மட்டும்தான் உங்களை கும்புடறேன் சாமின்னு சொல்லனுமா, நீங்களும் சொல்லணும்தான் இந்த பேரை வச்சி இருக்கேன்!",
இந்த படத்தில் மிக பெரிய குறை, கதை இல்லாததுதான். காட்சிகள் கறிக்கடையில் தொங்குகிற கறித்துண்டுகள் மாதிரி தொங்குகிறது. திடீர் என்று சூர்யா வருகிறார். ஏன் வந்தார் எதற்கு வந்தார், கதைக்கும் அவர் வந்ததுக்கும் என்ன சம்பந்தம், புரியவில்லை. Highness - இடம் இருந்து அவரது சொத்துகளை ஒருவர் ஏமாற்றியதை அடிக்கடி சொன்னாலும் அதை பற்றி தெளிவாய் சொல்லுகிற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. அடி மாடுகளை ஒருவன் வாங்கி விற்பதை Highness போலீசிடம் சொல்வதும் அவனை போலீஸ் அரெஸ்ட் செய்வதும் குழப்பமாய் இருக்கிறது - அவன் செய்த தவறென்ன? மாடுகளை அவன் வதைப்பது மாதிரி தெரியவில்லை; பரந்த புல்வெளியில் மாடுகள் இருக்கின்றன, சண்டையின் போது தவிடு பறக்கிறது, அப்படி என்றால் அவன் மாடுகளை ஒழுங்காகத்தான் வைத்திருக்கிறான். மாடுகளை வாங்கி அடிமாடுகளாய் விற்பதற்கு லைசென்ஸ் தேவை இல்லை, அப்படி இருக்கையில் எப்படி போலீஸ் அவனை கைது செய்தது? இந்த விஷயம் தான் பிற்பாதியின் அடிப்படை காட்சி, இதில் எப்படி பாலா சறுக்கினார்?
பாலாவின் படங்களில் பெண் பாத்திரங்கள் வலிமை ஆனவை. ஆனால் இந்த படத்தில் பெண் பாத்திரங்கள் வலிமை அற்றவை என்பதை தாண்டி, கதாநாயகிகள் கதை நடக்கும் இடத்திற்கு அந்நியமாய் தெரிகிறார்கள். அம்பிகா போன்ற பாத்திரங்களும் வசை பாடுபவையாய் இருக்கின்றன. இன்னொரு முக்கிய விஷயம், சில இடங்களில் வசனங்கள் அருவருப்பை உண்டாக்குகின்றன. அவை கதைக்கு தேவையென சால்ஜாப்பு சொல்ல முடியாது, அவற்றை தவிர்த்தும் நல்ல விதமாய் எழுதி இருக்கலாம் (கனி இருப்ப?). போலீசை கிண்டல் அடிப்பது ஆண்டாண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடக்கிறது, அதை பாலாவும் செய்திருப்பது கொடுமை...
முதல் மதிப்பெண் வாங்குகிற மாணவன் திமிராய் படிக்காமல் தேர்வுக்குப்போய் just pass mark வாங்கியது மாதிரி இருக்கிறது இந்த படம். இயக்குனருக்கு தேவை அதிக பொறுப்புணர்ச்சி. இந்த படத்தை பொறுத்தவரை பாலாவிடம் அது குறைந்து இருப்பது தெரிகிறது. நீங்கள் இந்த படத்தை "தமிழ் தொலைகாட்சிகளில் முதல் முறையாக" வரும்போது பார்ப்பது நலம்.
இவன் அவன் (பாலா) இல்லை!!
விமர்சனம்: தேவ குமார்
ச்சும்மா போனா போகுதுன்னு க்ளைமேக்ஸ்ல ஹீரோஸை உயிரோட விட்டா, எல்லாரும் பாலாவை பயங்கரமா ஓட்டுறீங்க. அடுத்த படத்துல பாருங்க. யாரு ஹீரோவா இருந்தாலும், கடைசியில ஊஊதான்!
ReplyDeleteஇப்படம் ஈழத்தமிழர்களின் வெந்த நெஞ்சில் வேலைப் பாய்ச்சுகிறது.
ReplyDeleteஇதற்கான விளக்கத்தை இங்கு பார்க்கலாம்: http://visaran.blogspot.com/2011/06/blog-post_19.html
படம் பார்த்த பின்ர்தான் எதையும் சொல்லலாம் உங்க விமர்சனம் அருமை
ReplyDelete//"கிறித்துருவம்"// = கிருத்திருமம்?
ReplyDeleteஒரு சில காட்சிகளை தவிர்த்து மொத்தத்தில் ஒரு சொதப்பல் படம்
ReplyDeletethanks for the advice!
ReplyDeleteits not RK KUMAR its GM KUMAR (ARUVADAI NAAL )
ReplyDeleteஎனக்கு படம் பிடிக்கவில்லை என்பதோடில்லாமல்..பாலாவின் மீது ஆத்திரம். இங்கே கொட்டித் தீர்திருக்கிறேன். முடிந்தால் வாசியுங்கள். http://ta.indli.com/story/498188
ReplyDeleteஇந்த பதிவை வாசித்து விட்டு கமெண்ட் தந்த & வாக்களித்த நண்பர்களுக்கு தேவகுமார் சார்பாக நன்றி
ReplyDeleteபடம் பார்க்க அசைபட்டேன் நன்றி நண்பா
ReplyDeleteபடம் பார்க்க ஆசைப்பட்டேன் நன்றி நண்பா
ReplyDeleteபடம் பார்க்க ஆசைப்பட்டேன் நன்றி நண்பா
ReplyDelete