வாழ்க்கை எத்தகைய மாறுதல்களை எல்லாம் தந்து விடுகிறது !↑
சச்சினின் ரசிகனாக இருந்தது ஒரு காலம். கடைசி சில வருடங்களில் " போதும் ; கெளம்பு ; காத்து வரட்டும் " என்று சொன்ன மனிதர்களில் ஒருவனாக மாறிப்போனேன்.
ஆனால் - இன்றைக்கு நிஜமாகவே சச்சின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை அறிந்தால் ஏனோ இனம் புரியாத சோகம் மனதை சூழ்கிறது
இனி அந்த ஸ்ட்ரைட் டிரைவ் பார்க்கவே முடியாதா ?
எப்போதேனும் பந்து வீச வரும்போது சட்டையை மடித்து கொண்டு சின்ன பையனின் குதூகலத்துடன் ஓடி வரும் அந்த சிரிப்பு .....
பீல்டிங்கில் நின்று கொண்டு அவர் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனங்கள்
இப்படி டிவி யில் பார்த்த நாமே நிறைய மிஸ் செய்ய போகிறோம் என்றால் - உடன் இருந்த - அவரை பல விதங்களிலும் குருவாக மதித்த Team Players நிறையவே மிஸ் செய்வார்கள் !
சச்சினை Good கிரிக்கெட்டர் என்பதை விட ஒரு சிறந்த மனிதனாக - ஒரு Idol ஆக நினைக்கும் பலரில் நானும் ஒருவன் !
எவ்வளவு உயரம் போனாலும் எளிமை; பெண்கள் போன்ற விஷயங்களில் சிக்காத தன்மை ; தன் மீது சிறு கருப்பு புள்ளி கூட இல்லாத படி மிக ஜெண்டில் ஆக நடந்து கொண்ட விதம் ; மனைவிக்கும் குடும்பத்துக்கும் தரும் முக்கியத்துவம் இப்படி எத்தனையோ சொல்லலாம் !
சச்சின் இந்த மேட்சில் ஒரு செஞ்சுரி அடிப்பார் என்பது பலரை போல எனது எதிர்பார்ப்பும்....
சச்சினின் இறுதி டெஸ்ட் துவங்கும் இந்த நேரத்தில் அவரது சிறந்த 5 இன்னிங்க்ஸ் கள் - ஒரு மீள் பதிவாக...
*******
சச்சினின் ஐந்து சிறந்த டெஸ்ட் ஆட்டங்கள் இதோ:
இங்கிலாந்துக்கு எதிராக முதல் செஞ்சுரி : 1990 : சச்சின் 119 ரன்கள் Not out
முதலாவது செஞ்சுரி என்பது மறக்க முடியாத ஒன்று.. முதல் காதலை போல !
தன் பதினேழாவது வயதில் சச்சின் தன் முதல் செஞ்சுரி அடித்தார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மிக மோசமான பிட்சில் இந்தியா தோற்காமல் மேட்சை காக்க வேண்டிய நிலையில் அவரது இந்த ஆட்டம் அமைந்தது. அதற்கு முன் நியூசிலாந்தில் 88 ரன் எடுத்து அவுட் ஆனார். அந்த மேட்ச் தான் சச்சின் என்கிற சிறுவன் செஞ்சுரி அடிப்பானா என அனைவரையும் ஆர்வத்துடன் பார்க்க வைத்தது.
அடுத்த சில மாதங்களில் இந்த மேட்ச். பிரேசர், மால்கம், கிரிஸ் லூயிஸ் போன்ற வேக பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சச்சின் அடித்த முதல் செஞ்சுரி நமக்கு மட்டுமல்ல அவருக்கும் மறக்க முடியாத ஒன்று !
இந்தியா Vs ஆஸ்திரேலியா பெர்த் மைதானம், 1991, சச்சின் 114 ரன்கள்
பதினெட்டு வயது சிறுவனாக சச்சின். இந்தியா ஆஸ்திரேலியா உடன் மிக வேகமான மைதானம் என்று சொல்லப்படுகிற பெர்த்தில் ஆடியது. ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, மறு முனையில் சச்சின் மட்டும் 114 ரன்கள் எடுத்தார். இந்தியா எடுத்த மொத்த ஸ்கோர் 240 மட்டுமே ! இந்த மேட்ச் வர்ணனையாளர்கள் "இப்படி ஒரு ஆட்டத்தை கடைசியாக யார் ஆடி எப்போது பார்த்தோம் என நினைவில்லை" என வியந்தார்கள். பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து டெஸ்டில் மிக அதிக ரன்கள் சேர்த்த அலான் பார்டரை பார்த்து மெர்வ் ஹியூக்ஸ் இப்படி சொன்னாராம்: "இந்த சின்ன பையன் நீ எடுத்த ரன்களை மிஞ்ச போகிறான் பாருங்கள் " A champion was in the making !
It can be watched here:
http://www.youtube.com/watch?v=1Aj6EINaDXc
பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை டெஸ்ட் செஞ்சுரி 1998 (சச்சின் 136 ரன்கள் )
கடினமான சூழலில், அற்புதமான பந்து வீச்சை தனி ஆளாக நின்று ஆடி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற மேட்ச் இது. இந்த மேட்ச் நான் சில நாட்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் பார்த்து, இந்தியா தோற்ற போது மனம் நொந்து போனேன். முதல் இன்னிங்க்சில் சச்சின் 0-க்கு அவுட். இந்தியா ரெண்டாவது இன்னிங்க்சில் 271 ரன் அடுத்தால் வெற்றி என்கிற இலக்கு. இம்ரான், சக்குலைன் முஷ்டாக் ஆகியோர் மிக அற்புதமாக பந்து வீசி கொண்டிருந்தனர். ஒரு புறம் விக்கட்டுகள் சரிந்து விட, நயன் மோங்கியாவை வைத்து கொண்டு சச்சின் 250 ரன் வரை வந்து விட்டார். முதுகு பிடிப்பு வந்து விட, சச்சினால் ஆடவே முடிய வில்லை. வேறு வழியின்றி அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி அவுட் ஆகி விட்டார். அதன் பின் இருபது ரன் எடுக்க முடியாமல் மீதம் நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தன. அன்று மேட்ச் முடிந்த போது அழுதவாறே இருந்த சச்சினுக்கு இந்திய வீரர்கள் யாருமே ஆறுதல் சொல்ல அருகில் கூட போக வில்லையாம் ! பயம் !!
காமெண்டரி தந்து கொண்டிருந்த கவாஸ்கர் டிவியில் கோபமாய் பேசியது இன்னும் நினைவிருக்கிறது : " Don't trust others and leave the result to them. You have to be there till the end to win the match for India !!"
சோகமான மலையாள படங்கள் போல இந்த மேட்சின் முடிவு வருத்தமானாலும், கடைசி நாள் பிட்சில் தனி ஆளாக சச்சின் ஆட்டம் மறக்க முடியாத ஒன்று !
இந்தியா vs ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம் 1998: சச்சின் 155 ரன்கள் :
முதல் இன்னிங்க்சில் சச்சின், வார்னே பந்தில் நான்கு ரன்னுக்கு அவுட் ஆகி விட்டார். இந்தியா ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்க்சில் 70 ரன்கள் குறைவாக எடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்க்சில் இந்தியா வேகமாகவும் அதிகமாகவும் ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலை.
சச்சின் Vs ஷேன் வார்ன். ஸ்பின்னுக்கு பெயர் போன சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம். சச்சின் வார்னேயை உரித்து எடுத்து விட்டார். லெக் ஸ்டம்புக்கு வெளியே தூக்கி வீச, வீச, அவற்றை இறங்கி இறங்கி நான்கும் ஆறுமாக அடித்தார். வார்னே மிரண்டு போனார். அந்த சீரீஸ் முடிந்த போது சச்சினிடம் ஆட்டோ கிராப் வாங்கினார் வார்னே !
இந்தியா vs இங்கிலாந்து சென்னை சேப்பாக்கம் 2008: சச்சின் 103 ரன்கள் Not out :
சச்சின் இரண்டாவது இன்னிங்க்சில் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்ததில்லை என்று ஒரு சாரார் கூறி கொண்டிருந்தனர். இதற்கு பதில் தருமாறு அமைந்தது சச்சின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டம். நான்காவது இன்னிங்க்சில் இந்தியா 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்ய பட்டது. ஷேவாக் வழக்கம் போல் ஒரு விளாசு விளாசிட்டு போயிட்டார். அடுத்த சில விக்கெட்டுகள் விழுந்து விட்டன. யுவராஜ் வரும் போது இந்தியா மோசமான நிலைமையில் இருந்தது. ஆனால் சச்சினும் யுவராஜும் பின் விக்கெட் இழக்காமல் கடைசி வரை ஆடி இந்தியாவை ஜெயிக்க வைத்தனர். வின்னிங் ஷாட் சச்சினின் செஞ்சுரி ஆக அமைந்தது.
வார நாளில் மேட்ச் நடந்ததால் அப்போது எங்கள் அலுவலகம் இருந்த காம்ப்ளக்ஸ்சில் உள்ள ஒரு கடையில் நூற்று கணக்கானோர் மேட்ச் பார்த்து கொண்டிருந்தோம். சச்சின் வின்னிங் ஷாட் and செஞ்சுரி அடித்ததும் எழுந்த சத்தம் ! அப்பப்பா ! அனைவரும் தாங்கள் செஞ்சுரி அடித்தது போல் மகிழ்ந்தனர். மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதலுக்கு பின் நடந்த மேட்ச் இது. சச்சின் இந்த ஆட்டம் வருத்தத்தில் உள்ள மும்பை மக்களுக்கு சற்று மன மாற்றம் தந்தால், அது தான் சிறந்த பரிசு என சொன்னார் . அது தான் சச்சின் !!
*********
சென்ற பதிவு: சச்சினின் சிறந்த ஐந்து ஒரு நாள் ஆட்டங்கள்

டெஸ்ட்டில் நீண்ட நேரம் நின்று ஆடும் ஸ்டாமினா இல்லாதது சச்சினுக்கு ஒரு குறை. லாரா என்ன வரம் வாங்குன மனுஷனோ. மூணு நாள் ஆனாலும் ஸ்டெடியா நின்னு ஆடுற ஆளு!!
ReplyDeleteயப்பா இந்த கொசுதொல்ல தாங்கல...
ReplyDeleteசீக்கிரம் மருந்தடி நாராயணா
சச்சினோட சாதனைகள பட்டி தொட்டி எல்லாம் பரவச் செய்யுங்க..
ReplyDeleteஅதப் பாத்தாவது அவரு "நெறைய செஞ்சிட்டோம்.. இப்பவாவது ரிடையர் ஆகலாம்னு" முடிவுக்கு வர்றாரா பாக்கலாம்...
//பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை டெஸ்ட் செஞ்சுரி 1998 (சச்சின் 138 ரன்கள் )//
ReplyDelete136 ரன்கள் மோகன், 138 இல்லை.
நிஜமாகவே மனம் வெறுத்து போன நாள். முதுகுபிடிப்பு பிரச்னை வராமலிருந்தால், சச்சினே ஆட்டத்தை முடித்திருப்பார். சச்சின் பெஸ்ட் ஃபினிஷர் இல்லை என்று சொல்பவர்கள், டோட்டல் டீம் ஸ்கோரில் சச்சினின் பர்சண்டேஜை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
இதற்கும் மாதவன் சார் என்ன சொல்வாரோ? ;))
// ஷேவாக் வழக்கம் போல் ஒரு விளாசு விளாசிட்டு போயிட்டார். //
இந்த ஸ்கோரை சேஸ் செய்வது சாத்தியமானதே சேவாக்கின் ஆட்டம்தான். சச்சின் செஞ்சுரி என்றாலும், வரலாறு முக்கியம் :))
// ஒரு நாள் போட்டியில் அவர் சாதிக்க வேண்டியது இன்னும் என்ன உள்ளது? //
ஒரு நாள் போட்டியில், 50வது செஞ்சுரி...இந்த வருடமே இது நடந்தால் மகிழ்ச்சி :)
ரகு: நன்றி, மாதவன் நிச்சயம் திரும்ப வருவார். உங்களையும் என்னையும் ஒரு ரவுண்டு அடிப்பார் . :))
ReplyDeleteசச்சின் ரசிகராயிருந்து இப்போது சச்சினை எதிர்ப்பவராகி விட்டார் என் நண்பர் மாதவன். நானும் கூட இதே மாதிரி பலருக்கு fan-ஆக இருந்து பின் அவர்களுக்கே எதிரானது நடந்திருக்கிறது
சச்சின் பதிவை மெச்சுகிறேன்
ReplyDelete//என்னை பொறுத்தவரை சச்சின் ஒரு நாள் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு பெற்று விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் concentrate செய்ய வேண்டும்//உண்மை உண்மை
ReplyDelete//ஒரு நாள் போட்டியில் ரிட்டையர் ஆகி விட்டு டெஸ்டில் கவனம் செலுத்தலாம். அப்போது டெஸ்டில் இன்னும் நன்கு ஆடுவார் // மிகச் சரி.... நிறைய ரெஸ்ட் கிடைக்கும்.... டெஸ்டில் நன்கு விளையாடவும் முடியும்...
ReplyDeleteசச்சினைப் பற்றி நல்ல தொகுப்பு !
ReplyDelete//சச்சின் பெஸ்ட் ஃபினிஷர் இல்லை என்று சொல்பவர்கள், டோட்டல் டீம் ஸ்கோரில் சச்சினின் பர்சண்டேஜை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
ReplyDeleteஇதற்கும் மாதவன் சார் என்ன சொல்வாரோ? ;))//
வந்துட்டேன்.. வந்துட்டேன்..
ரகு மற்றும் மோகன் ஐயாக்களே (சார்களே என பன்மையில் சொன்னேன், தப்பா நெனைக்காதீங்க).
சச்சினோட Play, நானும் ரொம்பவே ரசிச்சிருக்கேன்.... காலம்னு ஒண்ணு, வயசுனு மற்றொன்னு இருக்கு... சச்சின் சாதனையில் உச்சிலையே விலகுறதுதான் அவருக்கு அழகு. 'போய்யா... போ.. போ..'னு 'சதா'(நடிகை) சினிமால சொன்னா நல்லாருக்கும். சதா(எப்பவும்/always) எல்லாரும் சொல்லுற நிலைக்கு வந்திட்டா அவருக்குத்தான் நல்லா இருக்காது.
------------------
டெண்டுல்கர் 1994(March) லையே அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பிச்சாரு.. அதுவரைக்கு அவரு ஒரு செஞ்சுரி கூட போட்டதில்ல (He made his first century later in Sep 1994 Source .. அப்படி அதிரடி ஆட்டம் போட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவரு நெறைய செஞ்சுரி அடிச்சாரு.. அதுக்கு அப்புறம்தான் மத்த எல்லா டீமு மொதல் பத்து ஓவருல நெறைய ரன் அடிக்க முடியும்னே தெரிஞ்சு புரிஞ்சு ஆதிரடி ஆட்டாம் ஆட ஆரம்பிச்சாங்க...(ஜெய சூரியவே சச்சினுக்கு அப்புறம்தான் அப்படி ஆட ஆரம்பிச்சாரு)
அந்த March 1994, Match எனக்கு ஓரளவுக்கு நெனப்பு இருக்கு, நியூசிலாந்தோட, நியூஜிலாந்த்ல. ஒரு கட்டத்துல இந்தியா டீம் சந்திச்ச மொத்த ஓவர்களே 12 அதுக்கு குறைவாவோ இருந்திச்சு(72 balls or less).. அதுல சச்சின் மட்டும் எழுபத்தஞ்சுக்கு மேல எடுத்திருந்தாரு.... அப்படியோர் அதிரடி ஆட்டம் காமிச்சாரு.. இந்த(link)னு நெனைக்கிறேன்.
நல்லதொரு தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//டெண்டுல்கர் 1994(March) லையே அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பிச்சாரு.. அதுவரைக்கு அவரு ஒரு செஞ்சுரி கூட போட்டதில்ல (He made his first century later in Sep 1994 Source .. அப்படி அதிரடி ஆட்டம் போட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவரு நெறைய செஞ்சுரி அடிச்சாரு.. அதுக்கு அப்புறம்தான் மத்த எல்லா டீமு மொதல் பத்து ஓவருல நெறைய ரன் அடிக்க முடியும்னே தெரிஞ்சு புரிஞ்சு ஆதிரடி ஆட்டாம் ஆட ஆரம்பிச்சாங்க...(ஜெய சூரியவே சச்சினுக்கு அப்புறம்தான் அப்படி ஆட ஆரம்பிச்சாரு//
ReplyDeleteஇதை ஆரம்பிச்சது நம்ம ஸ்ரீகாந்த் தான் நினைக்கிறேன்.opening batsman அதிரடியா ஆடறதை யாரும் விரும்ப மாட்டார்கள் ஸ்ரீகாந்த்தை திட்டவும் செய்தார்கள்.ஆனால் பின்னாளில் அப்படித்தான் ஆட வேண்டும் என்ற நிலை உருவாக்கப் பட்டுவிட்டது.இதை ஒரு டீமின் strategy யாகவே கடைபிடித்தது இலங்கை. மற்ற நாடுகள் அதை கற்றுகொள்ளுமுன் ஒரு கலக்கு கலக்கி உலகக் கோப்பையை கைப்பற்றிக் கொண்டது.
+++++++++++++++++
விலகி விடு சச்சின் என்று நானும் கவிதை எழுதினேன். அவர் புகழுடன் இருக்கும்போதே ஒய்வு பெற வேண்டும் என்பதே ரசிகர் பலரின் விருப்பம். இப்படி ஒரு வழி அனுப்புவிழா வேறு எந்த கிரிகெட் வீரருக்கும் கிடைத்ததில்லை .இனி கிடைக்க சாத்தியமும் இல்லை
Sachin Tendulkar over his role in Albee Morkel a boundary, hoisted sixes. The first opportunity: Marcy acattiya debut match, no ciramaminri continued its action.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_14.html?showComment=1400071933383#c3693130298869983656
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-