நண்பர் வா. மணிகண்டன் தினம் ப்ளாக் எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்
இது என்னுள் நிறைய எண்ணங்களை கிளறி விட்டது ....
*************
"தினம் பதிவு எழுதுவது பெரிய நேர விரயம் ; அதனால் பத்து பைசா பிரயோஜனம் இல்லை என்பதை எத்தனையோ நண்பர்கள் சொல்வார்கள் .. (எனக்கும் சொன்னார்கள்); சிலர் " எங்க காலம் மாதிரி வருமா ? இப்பலாம் யார் நல்லா எழுதுறாங்க சொல்லு" என்று சொல்வார்கள் :) அது ஒருவித ராகிங் என்றும் கொள்ளலாம் !
*************
சிற்சில மக்கள் பதிவு எழுதுவது வேஸ்ட் என்று சொல்லும்போது " பொறாமையில் சொல்கிறார்கள்; அவர்களுக்கு சரக்கு தீர்ந்துடுச்சு ; அதனால் தான் அப்படி சொல்கிறார்கள் " என்றெல்லாம் நினைத்தேன்
தினம் எழுதுவதும் அதன் ஊடாக நான்கைந்து கமண்ட் மற்றும் பத்து பன்னிரண்டு லைக் வாங்குவதும் பெரிய போதை. இதில் மிக பெரிய கொடுமை அடிக்கடி நமக்கு எத்தனை லைக் மற்றும் கமண்ட் வந்திருக்கிறது என்று எட்டி பார்ப்பது தான். அப்படி அடிக்கடி பார்ப்பது நமக்கே பிடிக்காது. ஆனாலும் அப்படி செய்வதை தடுக்க முடியாது. பதிவு போட்டு விட்டு - கணினியில் அமராமல் வேறு வேலையை பார்க்கும் ஆசாமி என்றால் லைக் மற்றும் கமண்ட்டுக்கு எட்டி பார்க்கும் பிரச்சனை இல்லை. நாமோ கணினியிலேயே அமரும் ஆட்கள். எட்டி பார்க்க தான் தோன்றும். கூடவே இப்படி பார்க்கிறோமே என்ற குற்ற உணர்வும் தலை தூக்கும்
*************
நூறு பேர் சொல்லும்போது - தினம் பதிவு எழுதுவது - முட்டாள் தனம் என்று தெரியாது - அதை நாமே உணர ஒரே ஒரு வழி தான்.
பல்லை கடித்து கொண்டு சில வாரங்களோ, சில மாதங்களோ பதிவு எழுதாமல் இருப்பது மட்டுமே - தினம் பதிவு எழுதுவது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று உணர ஒரே ஒரு வழி. இதற்கு குறைவான விலையில் இந்த தெளிவை அடைய முடியாது. முடியவே முடியாது !
இந்த காலத்தில் - நாம் தொடர்ந்து பதிவு எழுதிய போது செய்த முட்டாள் தனங்கள் - போட்ட அனாவசிய சண்டைகள் எல்லாம் வரிசை கட்டி மனதில் வந்து போகும்; பாராட்டு / அங்கீகாரம் என்கிற விஷயத்துக்காக எவ்வளவு கூத்தடித்துள்ளோம் என்று நம்மை நினைத்து நமக்கே சிரிப்பு வரும்
எனக்கும் இது நிகழ்ந்தது ;
*************
ஒரு நேரத்தில் " இனி இணையத்தில் புழங்குவதை குறைப்போம் " என முடிவெடுத்து - Dashboard -ல் 30 க்கும் மேல் பதிவுகள் இருக்க, எப்படியோ தினம் பதிவு போடுவதை நிறுத்தினேன்
சந்தேகமே இல்லை - தினம் பதிவு எழுதுவதும், அதன் விளைவாய் - இணையமே கதியாய் கிடப்பதும் ஒரு போதை தான்.
இணையம் மூலம் நல்ல நட்புகள் கிடைக்கின்றன. உண்மை. ஆனால் ஒரு அளவுக்கு மேல் - நம் குடும்பத்தாரை விட - இணைய மக்களே நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் - பாராட்டுகிறார்கள் என்று நம் மனது நினைக்க ஆரம்பிக்கும் அபாயமும் இருக்கிறது
*************
சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் சிலர் - அதை நிறுத்தும் போது பாக்கு போடும் பழக்கத்தை துவங்குவர்; அப்படித்தான் சிலர் ப்ளாக் எழுதுவதை நிறுத்தி விட்டு கையோடு கையாக - முகநூல் அல்லது கூகிள் பிளஸ்சில் சென்று ஐக்கியமாகி விடுகிறார்கள்
இதுவும் நான் செய்தேன்
பின் அதுவும் குறைந்தது
*************
இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். தொடர்ந்து பதிவு எழுதிய காலத்திலும் எனது அலுவலக வேலையில் எந்த சிறு குறையும் வைத்தது இல்லை. ஒன்று சொல்லட்டுமா ? அந்த இரு வருடங்களும் -Annual appraisal -ல் அதிக இன்க்ரீமென்ட் வாங்கிய வெகு சிலரில் நானும் ஒருவன்...
*************
பதிவு எழுதிய கடந்த சில வருடங்களில் ஓய்வு நேரம் முழுக்க என்ன பதிவு எழுதுவது என்று யோசித்தது போக - இப்போது அதே நேரத்தை - பாடல் கேட்கவும், எனது துறை சார்ந்து படிக்கவும், எழுதவும், எதிர் கால திட்டமிடல் மற்றும் அது சார்ந்த உழைப்புக்கும் செலவழிக்கிறேன்.
ப்ளாகில் எழுதவே மாட்டேன் என்றில்லை. அது பாட்டுக்கு ஓரமாய் இருக்கட்டும். வேண்டும்போது எழுதலாம் அவ்வளவே ; ப்ளாகின் பெரிய பிளஸ் வேண்டிய போது எழுதலாம் என்பதே. என்ன ஒன்று தினம் பதிவு போட்ட போது அதிக பட்சமாக 3000 - 3500 பேர் தினம் வந்தனர். எப்போதேனும் ஒரு நாள் பதிவு எழுதினால் 1000- 2000 பேர் மட்டும் படிப்பர் ; இருந்து விட்டு போகட்டும் !
சுபம் !

மனப்பக்குவத்தை பதிவில் திருவிழாவிலேயே அறிந்தேன்...
ReplyDeleteநண்பர்கள் பலரும் என்னிடம் விசாரிக்கும் போது, நான் கூறியது சரி என்றே இந்தப் பதிவின் மூலம் உணர்கிறேன்...
சிகரம் தொட்டு திரும்பிய நீங்கள்
ReplyDeleteசொல்வது மிக மிகச் சரி
சொல்லிச் சென்றவிதமும் அற்புதம்
வெளிப்படையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha/ma 3
ReplyDeleteகாலம் கடந்த ஞானோதயமாக இருந்தாலும் நல்ல முடிவே.
ReplyDeleteஎதற்குமே oru தொலைநோக்குப் பார்வை தேவை. புது டிசைன் புடவை
முதல் புது டெக்னாலஜி மொபைல் வரை வந்தவுடன் உடனே
விழுவதும் பின் மோகம் குறைந்து எழுவதுமே எல்லோருக்கும்
வாடிக்கையாகி விட்டது. அளவும் , மிதமான வேகமும் இருந்தால்
இவற்றில் இருந்து விடுபடலாம். ஆனால் ப்ளாகினால் சமையல் முதல்
ஜோதிடம் வரை பல பயனுள்ள விஷயங்களை நான் அறிந்து கொண்டு
என்னை செம்மைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்பது மறுக்க முடியாத
உண்மை. தேர்ந்து எடுத்து படிப்பதும் பின்னூட்டம் இடுவதும் நம் கையில் தானே .
ஒருவருக்கொருவர் முதுகு சொரிதல் [ பின்னூட்டங்கள் , வாக்குகள் இடல் ] தவிர
அளவான வலையிடுதல் மிக அவசியமே என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
Good to hear from you that, "...தொடர்ந்து பதிவு எழுதிய காலத்திலும் எனது அலுவலக வேலையில் எந்த சிறு குறையும் வைத்தது இல்லை. ஒன்று சொல்லட்டுமா ? அந்த இரு வருடங்களும் -Annual appraisal -ல் அதிக இன்க்ரீமென்ட் வாங்கிய வெகு சிலரில் நானும் ஒருவன்..."
ReplyDelete//சந்தேகமே இல்லை - தினம் பதிவு எழுதுவதும், அதன் விளைவாய் - இணையமே கதியாய் கிடப்பதும் ஒரு போதை தான்.
// இணையம் மூலம் நல்ல நட்புகள் கிடைக்கின்றன. உண்மை. ஆனால் ஒரு அளவுக்கு மேல் - நம் குடும்பத்தாரை விட - இணைய மக்களே நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் - பாராட்டுகிறார்கள் என்று நம் மனது நினைக்க ஆரம்பிக்கும் அபாயமும் இருக்கிறது //
Great realization..
We all know from a long time, 'anything' that could not be controlled / stopped is 'addiction'.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சன்றோ..?
ஆரம்பநாட்களில் தினம் ஒரு பதிவு என்றுதான் நானும் இருந்தேன். அப்புறம் குடும்பச்சுமைகளுக்கு நடுவில் இது முடியாமல் போக் வாரம் மூன்று என்றாகிவிட்டது. வீட்டின் நிலை அனுசரித்து இப்போதெல்லாம் அந்த வாரம் மூன்று கடைப்பிடிக்க முடியலை. எப்போ முடியுமோ அப்போது எழுதினால் போதும் என்றாகிவிட்டேன். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மருந்தை அளவோடு எடுத்துக்கணும் இல்லையா:-)
ReplyDeleteதெளிஞ்சுட்டீங்களா!? நான் சீக்கிரம் தெளியனும்
ReplyDelete//நூறு பேர் சொல்லும்போது - தினம் பதிவு எழுதுவது - முட்டாள் தனம் என்று தெரியாது - அதை நாமே உணர ஒரே ஒரு வழி தான்.//
ReplyDeleteதினமும் ஒரு பதிவு எழுதினால் சீக்கிரம் உணர்ந்து விடுவோம் . அனுபவத்தை சொல்லி விட்டீர்கள். தொடர்ந்து எழுதும்போது விரைவில் அலுத்து விடும் என்பது உண்மை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று எழுதிக் கொண்டிருந்தேன். அதையும் ஒன்றாகக் குறைக்க திட்டமிட்டுள்ளேன்.
பதிவு ஒரு போதைதான்! நானும் மீளத்துடித்துக் கொண்டிருக்கிறேன்! விரைவில் மீண்டுவிடுவேன் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteநல்ல பகிர்வு.... காலையில் முகப்புத்தகத்தில் படித்தேன்....
ReplyDeleteவெங்கட்டை வழிமொழிகிறேன்!
ReplyDeleteஇணையமே கதியாய் கிடப்பதும் ஒரு போதை என்பதும் உண்மைதான் தான்.
ReplyDeleteமுற்றிலும் அனுபவம் .பதிவுலகத்தில் முற்றியதால் வந்தது .
ReplyDeleteஇணையம் போதைதான் ஆனால் எழுதுவதை Passion ஆக கொண்டவர்களுக்கு Blog ஒரு நல்ல இடமே!
ReplyDeleteநேரத்தை வெட்டியாக செலவிடுபவர்கள், பயனுள்ள வகையில் செலவிட blog பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு அடிமைகளாகிவிடக் கூடாது.
ReplyDelete