Tuesday, September 9, 2014

கணவன் - மனைவி சண்டை

ணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக அறிமுகம் ஆனதுதான். அம்மா - அப்பா சண்டை துவங்கி, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.

திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.

கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே. நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்னு நம்ம்ம்பி... வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..

அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.

1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.

2. அடுத்து யார் பக்கம் என்ன தப்புன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.

3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.

ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீ என்னை திட்டிட்டு - நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.

4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "சாரி" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).

சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு..!! என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.

என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.

ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்ட்டோம்!!

இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது! இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!

நண்பரை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் மனைவியை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..

என்ன தான் கோர்ட்ல நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்

இருங்க எதோ பாத்திரம் உருளற சத்தம் கேக்குது.......

"என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...."

31 comments:

  1. //என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.//

    :))

    ReplyDelete
  2. என்ன தான் கோர்ட்ல நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்

    குடும்பம் என்றால் அப்படிதாங்க. நல்ல காரசாரமாய் சண்டை பிடித்த் பின் வீடுக்கு வரும் விருந்தனர் முன் ரொம்ப அப்பாவியாய் கொடுக்கும் வரவேற்பு,இருகிறதே...இருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம் . மூன்றாம் நபருக்கு காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  3. //எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்//.

    டெக்குனிக்கு தெரிஞ்சு வைச்சிருக்கீங்க :)

    ReplyDelete
  4. வீட்டுக்கு வீடு வாசப்படி! நீங்க ஏழு வருடம்! நான் ஒன்பது வருடம்! அவ்வளவு தான் வித்தியாசம்! இருங்க அம்மணி கூப்பிடறாங்க! அப்புறம் வரேன்….

    ReplyDelete
  5. உபயோகமான தகவல்.. நன்றி..

    ReplyDelete
  6. //இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது! இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!//

    இதுலயும் க்ரெடிட் உங்களுக்குதானா:)? ஹவுஸ் பாஸ் இதை வாசித்தார்களா:)?

    ReplyDelete
  7. வீட்டில் தோற்று விட்டால் நமக்கு வீட்டிலும் பிரச்னை இல்லை வெளியிலும் இல்லை. வீட்டில் தான் என்று நினைக்க ஆரம்பித்தால் எங்கும் நிம்மதி இருக்காது. இது எனது அனுபவம்

    ReplyDelete
  8. // "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன்.//
    நல்ல கேள்வி

    //புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.//
    பாவம்

    //"என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...."//
    அது :)

    ReplyDelete
  9. என்ன தான் கோர்ட்ல நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்

    இருங்க எதோ பாத்திரம் உருளற சத்தம் கேக்குது

    "என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...."


    ......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்... இந்த பதிவை பிரிண்ட் எடுத்து, Mrs.மோகன் குமார்க்கு பார்சல் பண்ணிடுங்க...

    ReplyDelete
  10. என்னது சண்டையா அப்படின்னா???

    ReplyDelete
  11. //இருங்க எதோ பாத்திரம் உருளற சத்தம் கேக்குது

    "என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...." //

    நான் இன்னும் முழுசா ரெண்டு பதிவு கூட போடலை! அனால் இப்பவே, laptop கிட்டே போனாலே பாத்திரம் உருளுது வீட்ல...நீங்க இந்தப் பதிவை முடிக்கும்போது சத்தம் வந்ததில் ஆச்சர்யமே இல்லீங்களே!

    ReplyDelete
  12. இதை என்னவரிடம் வாசிக்கச் சொன்னேன். அவர் கமெண்ட் “என் நிலைதான் இப்படின்னு நெனச்சேன். எல்லாருக்குமே இப்படித்தான் போல!!”

    ReplyDelete
  13. ஒவ்வொரு பாயிண்டும் டாப் :-))

    ReplyDelete
  14. இதெல்லாம் முன்பே சொல்லிக்கொடுத்திருக்கலாமில்ல!இப்ப “அடிபட்டு” அனுபவப் பட்ட பின் மெல்ல வந்து சொல்றீங்களே:)

    ReplyDelete
  15. வாயைத் தொறந்தாத்தானே வம்பு வழக்கெல்லாம். வாயையே தெறக்கப்படாதுங்கற ஞானம் வர்றதுக்கு குறைந்தது 70 வயசாவது ஆகணும்.

    ReplyDelete
  16. //அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; //

    இதையெல்லாமா சொல்ற‌து...அப்பாவியா வ‌ள‌ர்ந்திருக்கீங்க‌ நீங்க :))

    பாய்ண்ட் ந‌ம்ப‌ர் 3யின் க‌டைசி வ‌ரி...வெகுவாக‌ ர‌சித்தேன்

    ReplyDelete
  17. நன்றி தனி காட்டு ராஜா
    **
    நிலாமதி: நன்றிங்க
    **
    சுதர்ஷன்: பின்னே இத்தனை வருஷத்தில் இது கூட கத்துக்கலைன்னா எப்புடி?
    **
    நன்றி மாதவி
    **

    ReplyDelete
  18. வெங்கட்: எனக்கு கல்யாணம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சு; நான் ஏழு வருஷம் என சொன்னது அதுக்கு பின் தான் தெளிவு வந்தது என்பதற்காக. அம்மணி கூப்பிடும் போதும் தாங்கள் போட்ட கமெண்டுக்கு நன்றி நண்பா
    **
    Madhavan Srinivasagopalan said...

    உபயோகமான தகவல்.. நன்றி..


    ரசித்து சிரித்தேன். நன்றி
    **
    ராமலக்ஷ்மி said...
    இதுலயும் க்ரெடிட் உங்களுக்குதானா:)? ஹவுஸ் பாஸ் இதை வாசித்தார்களா:)?

    என்ன மேடம் ரெண்டு கேள்வி கேட்டீங்க. ஒன்றுக்கு கூட பதில் சொல்ல முடியலியே. கொஞ்சம் ஈசி ஆன கேள்வியா கேளுங்க :))

    ReplyDelete
  19. நன்றி ராஜ ராஜேஸ்வரி
    **
    இளங்கோ: நன்றி உங்களுக்கு இன்னும் இந்த அனுபவம் வரலையோ?
    **
    சித்ரா said
    //இந்த பதிவை பிரிண்ட் எடுத்து, Mrs.மோகன் குமார்க்கு பார்சல் பண்ணிடுங்க...//

    ஏங்க. என்ன கோபம்? எதுவா இருந்தாலும் பேசி தீத்துகலாம்ங்க. ஐ யாம் பாவம்
    **
    அமுதா கிருஷ்ணா said...

    என்னது சண்டையா அப்படின்னா???//

    சூப்பர் மேடம். கலக்குறீங்க

    ReplyDelete
  20. //என்ன தான் கோர்ட்ல நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்//

    உங்க கேசை ஆராய்ந்து பார்த்ததில் புலப்பட்ட முக்கியமான blunders இரண்டு:

    1. நீதிபதிக்கு உங்கள் "weak points" எல்லாம் தெரியாதே! அவரா ஆராய்ச்சி பண்ணணும் அல்லது எதிர்க்கட்சி வக்கீல் போட்டுக் குடுக்கணும்! ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே வசமா சிக்கல நீங்க! ஜெயிச்சிகிட்டே வரீங்க!

    ஆனா, கல்யாணமான மூணு மாசத்துக்குள்ளேயே உங்க எல்லா "weak points" ஐயும் வேட்டிலே போட்டு மூட்டையா கட்டி, "ஹவுஸ் பாஸ்" கிட்டே (வெத்துப் பத்திரத்திலே கையெழுத்துப் போட்டுக் குடுத்த மாதிரி) அன்பளிப்பா குடுத்திட்டீங்களே! அப்புறம் எப்படி ஜெயிக்கரதுங்கிறேன்?


    2. கோர்ட்டுல நீங்க சண்டை போடறது எதிர்க்கட்சி வக்கீல் கூட! நீதிபதி நடுவிலே வந்து உங்களைக் காப்பத்துறாப்பலே!

    ஆனா, வீட்டிலே நீங்க சண்டை போடறது நீதிபதிகிட்டேயே தானே! யாரு வந்து காப்பாத்துவாங்கோ!!!

    சுருக்கமா சொல்லப் போனா, டைகர் தாத்தாச்சாரியே ஆஜர் ஆனாலும் ஜெயிக்க முடியாத கேசுங்கோ!!!!

    ReplyDelete
  21. மதி: வாங்க சார். // laptop கிட்டே போனாலே பாத்திரம் உருளுது வீட்ல// வீட்டுக்கு வீடு வாசப்படி.
    **
    ஹுசைனம்மா: நிஜமாவே அவர் படிச்சாரா? நம்ம ப்ளாக் வீடு வரைக்கும் போச்சா என்ன ? ஆச்சரியம் (ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)) )
    **
    அமைதி சாரல்: நன்றிங்க. ஒத்துக்கிட்டீங்க பாருங்க நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க ..
    **
    ராஜ நடராசன்: அண்ணா எவ்ளோ சொல்லி குடுத்தாலும் இதெல்லாம் "வாங்கி" தான் ஆகணும்னா; என்சாய்
    **
    கந்தாசாமி சார்: அவ்ளோ வயசிலும் அப்படி தானா? ம்ம்
    **
    ரகு: சீக்கிரமே நீங்களும் இவற்றையெல்லாம் experience செய்வீர்களாக !

    ReplyDelete
  22. மதி உங்க ரெண்டாவது பின்னூட்டம் செம.

    ReplyDelete
  23. எல்லா வீட்டிலும் இதே கதை தான் போல...

    ReplyDelete
  24. எல்லா பாயிண்ட்டும் கரெக்டா சொல்லியிருக்கீங்க சார்!

    ReplyDelete
  25. //எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.//

    அஹா. இது தெரியாமல் நான் எப்பவுமே அதை தான் செய்வேன். அதனால் தான் கடைசியில் எப்பவுமே எரி மலை வெடிக்கிறதோ.

    //பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!! இந்த உண்மை புரிய நமக்கு ஏழெட்டு வருஷம் ஆச்சு... ம்ம்//

    எல்லோருக்கும் இது தெரியும். ஆனா அப்பப்ப அது மறந்து போய்டுது. அதனால் தான் திரும்பவும் தெரியாமல் சண்டை போட்டு விடுகிறோம்.

    //"என்னம்மா கூப்பிட்டியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்...." //

    இத பார்டா...பதிவ படிச்சுட்டு கூப்பிடுறாங்களோ?

    ReplyDelete
  26. நண்பரை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் மனைவியை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
    நன்றி நானும் அப்படியே நடந்துக்கிறேன்

    ReplyDelete
  27. ஏழெட்டு வருடம் ஆனாலும் உண்மை புரிந்ததே
    அருமை

    ReplyDelete
  28. //நண்பரை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் மனைவியை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு வந்தடுச்சு..//

    பத்து வருஷம் முன்னாடி தெரியாம போச்சே...

    ஹா ஹா... கடைசி வரியில் இன்னும் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் சார்....

    ReplyDelete
  29. இதனை பிரின்ட் போட்டு புது மண தம்பதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தால், அவர்களிடையே ஆரம்பத்திலிருந்தே நல்ல புரிதல் இருக்கும் என எண்ணுகிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...