சலீம்
"நான் " ஆச்சரியப்படுத்தியது என்றால் - அதன் இரண்டாம் பாகம் சலீம் - கூட அதே போன்ற உணர்வை தருகிறது !
முதல் நல்ல விஷயம் ... வித்யாசமான கதைக்களன்.. காதல் - கிராமம் போன்ற டெம்ப்ளேட்களில் இருந்து வேறு பட்டு சுவாரஸ்யமாய் கதை சொல்லி - ஆர்வமாய் கவனிக்க வைக்கிறார்கள்
"நான்" - படம் - ஹீரோ டாக்டருக்கு படிப்பதுடன் நிறைவடையும். இங்கு ஹீரோ டாக்டர் படிப்பை முடித்து ஆஸ்பத்திரியில் பணியாற்றுவதில் இருந்து தொடர்கிறது.
சாதாரணமாக செல்லும் முதல் பாகம்.. இரண்டாம் பாகத்தில் விறுவிறுக்க வைத்து விடுகிறார்கள். கதை , திரைக்கதை -மற்றும் - சொன்ன விதம்.. இவற்றால் ரசிக்க வைக்கிறது படம்.
"நான் " படத்தின் பார்மட் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது... குறிப்பாக இவ்வளவு தப்பு செய்யும் ஹீரோ நிச்சயம் மாட்டி கொள்வான் என நினைக்க வைத்து முடிவில் வேறு விதமாய் முடிப்பது இங்கும் தொடர்கிறது.
குறைகள் இல்லாமல் இல்லை.
குறிப்பாக - முக பாவங்கள் எதுவும் மாற்றாத ஹீரோ - ஏராள லாஜிக் மிஸ்டேக் இவை இரண்டும் !
இருப்பினும்... இரண்டரை மணி நேரம் சுவாரஸ்யமான படம் என்ற அளவில் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ... சலீம் !
*********
ஓம் ஷாந்தி ஓசானா
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த மலையாள படம் இப்போது தான் காண முடிந்தது.
செம்ம்ம வித்யாசமான கதை. சொன்ன விதமும் கிளாஸ் ! இவை இரண்டையும் விட அசத்தும் விஷயம் ஹீரோயின் நஸ்ரியா நடிப்பு.. வாவ் .. என்ன பெர்பார்மன்ஸ் !!
முழுக்க முழுக்க - ஒரு பெண்ணின் பார்வையில் செல்லும் கதை.. அவளது Calf love .. துவங்கி - பின்பு வரும் காதல்... சண்டை - பிரிவு.. படிப்பு... என நழுவி கொண்டு ஓடுகிறது படம்.
படத்தில் ஹீரோ வரும் காட்சிகள் மிக குறைவு.முழுக்க படத்தை சுமப்பது நஸ்ரியா.. நஸ்ரியா.. நஸ்ரியா மட்டுமே !
அந்த பாத்திரத்தை ரொம்ப அழகாக வடிவமைத்துள்ளனர். நடப்பதில் துவங்கி, பார்வை - பேச்சு என ஒவ்வொன்றும் அப்படி பொருந்தி போகிறது !
இங்கும் அங்கும் ஊசலாடி சென்றாலும்.. இறுதியில் ஒரு நல்ல பீல் குட் மூவி என்ற நிறைவை தருகிறது ஓம் ஷாந்தி ஓஷானா !
அண்மையில் திருமணமான நஸ்ரியா மீண்டும் நடிப்பாரா ? நடிக்க வேண்டும் என்ற ஆவல் - படம் பார்த்து முடிக்கும் போது - நம் மனதில் !

வணக்கம்
ReplyDeleteதங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது... படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்