Tuesday, December 16, 2014

தொல்லை காட்சி - நீயா நானா - ஆபிஸ் -விஜய் டிவி ஸ்பெஷல்

பெண்கள் Vs ஆண்கள் 

நரசுஸ் காபிக்கான விளம்பரம் இது:

அம்மா - சிறு பெண்ணுக்கு காபி போட சொல்லி தருகிறார். காபி போட்டு முடித்ததும் சரியாக அப்பா உள்ளே நுழைந்து காபியை குடித்து விட்டு " பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லா இருக்கு " என்கிறார்

" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " என கோரசாக சொல்கிறார்கள் அம்மாவும்,பெண்ணும் !

சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வது மட்டுமே ஆணின் வேலை - அவனை நல்ல சாப்பாட்டால் குஷிபடுத்துவ்து பெண்ணின் பொறுப்பு ("" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " ) இப்படி பழமை ஊறிய சிந்தனையில் எடுக்கிறார்களே ! இன்னிக்கு உலகம் எவ்வளவோ மாறி போச்சு !

அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் ! (சனிக்கிழமை மாலைகளில் எங்க வீட்டில் நடக்குறதை சொன்னேன் பாஸ் ! )

அழகு கார்னர்

விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் வரும் ப்ரியா பவானி ஷங்கர்..

சீரியல் பார்ப்பதில்லை. சேனல் மாற்றும் போது இந்த அம்மணி கண்ணில் பட்டால் மட்டும் நின்று சற்று இளைப்பாறுவது உண்டு. கோதுமை நிறம், பேசும் விழிகள் என அம்மணி ............ரசிக்கும் அழகு !



நீயா நானா - கார்பரேட்டால் வேலை இழந்தோர் 

"அடடா நாம கலந்து கிட்டுருக்க வேண்டிய தலைப்பல்லவா ? " என எண்ண வைத்த டாப்பிக்.

கம்பனிகளில் வேலை இழந்தோர் ஒரு புறமும், நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்புவது ஏன் என HR உள்ளிட்டோர் மறு புறமும் பேசினர்.

ஓரளவு சுவாரஸ்யமான மற்றும் சில அவசிய தகவல்கள் பகிர்ந்த நிகழ்ச்சி என்றாலும் சட்ட ரீதியான ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய தகவல்களை சொல்லாமல் சென்றனர்...

நிறுவனம் - தான் நினைத்த படி ஒருவரை உடனே வேலையை விட்டு அனுப்ப முடியாது - தவறு செய்திருந்தால் - ஒரு என்கொயரி நடத்தி - அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை தரமுயும் என்பதையும், அத்தண்டனை கூட தவறுக்கு நிகரான அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் கூற வில்லை. (வேலையை விட்டு அனுப்புவது மரண தண்டனை போல அரிதான நேரங்களில் மட்டுமே தரப்பட வேண்டும் !)

குறிப்பாக நிர்வாகம் மிரட்டுகிறது என்பதற்காக வேலையை விட்டு செல்ல ரிசைநேஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. " என் மீது தவறு என்றால் அதை நிரூபியுங்கள்" என்றால் - நிர்வாகம் இறங்கி வந்து '" உனக்கு சில மாதங்கள் டைம் தருகிறோம்; அதற்குள் வேறு வேலை பார்த்து கொண்டு செல் " என சொல்லும் என்கிற தகவலை சொல்லியிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு அது பயனுள்ள வகையில் இருந்திருக்கும் !

ஆபிஸ்

ஹவுஸ் பாஸ் பார்ப்பதால் - கூடவே நானும் "கேட்கும்" (கண்- கணினி மீது) ஒரே சீரியல் இது...

லட்சுமிக்கு நடிக்க விருப்பமில்லை என விலகிய பின் - அவரது காரக்டர் வெளியூர் சென்றதாக காட்டி முடித்து விட்டனர். போலவே இன்னொரு முக்கிய பெண்மணி (சூசன்) நிஜ வாழ்வில் கர்ப்பம் என்பதால் - கதையில் அவரை இறக்க வைத்து காரக்டரை காலி செய்தனர்....

இந்த இருவரும் இன்றி இரண்டாம் பாகம் துவங்கி - ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது... கலர்புல் பெண்கள்.... காமெடி என்ற பெயரில் மரண மொக்கை... சின்ன சின்ன சஸ்பென்ஸ் என்று செல்லும் கதையில் - நிச்சயம் முதல் பாக சுறுசுறுப்பில்லை.... இழுவையாக செல்வதை உணர்ந்து கதையை ஒழுங்கு செய்தால் நலம் !

மேலும் மிக கொடுமையான நேரத்தில் (இரவு 10.30) ஒளிபரப்புகின்றனர்.. பழையபடி 10 மணிக்கு மாற்றா விட்டால் - மக்கள் தேவையான போது யூ டியூபில் மட்டும் பார்த்து கொள்ள துவங்கி விடுவர் !

பார்த்த படம் - தங்கபதக்கம்

ஒரு ஓய்வு நாளின் மதிய வேளையில் - பாதியிலிருந்து பார்த்தோம். எங்கள் ஊர் காவேரி தியேட்டரில் தரை டிக்கெட்டில் அமர்ந்து பார்த்து அழுது விட்டு வந்தது அவ்வப்போது நினைவுக்கு வந்தது. இப்போது பார்க்க பல இடங்கள் காமெடியாக தான் இருந்தது. குறிப்பாக சிவாஜி - கஞ்சி போட்ட போலிஸ் யூனிபார்ம் போல செம விறைப்பாக நடிப்பது செம என்டர்டெயின்மென்ட் . வீட்டில் சாப்பிடும்போதும் மனைவி கூட பேசும்போதும் கூட அதே விறைப்பு தான்.


ஸ்ரீ காந்த் மாடுலேஷன் அதற்கு மேல். ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உடலை ஒருவாறு ஆட்டியபடி, அல்லது சற்று எம்பி எம்பியபடி அவர் பேசுவது ஸ்டெயிலாமாம் !!

இப்படத்துக்கு பதிவர் சிபி விமர்சனம் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் என தோன்றியது (குறிப்பாய் கே ஆர் விஜயா மற்றும் பிரமிளா பற்றிய அவரது வர்ணனைகள் மற்றும் படத்தின் லாஜிக் மீறல்கள் )

பேக் டு ஸ்கூல்

ஏகப்பட்ட விளம்பரங்கள் - பில்ட் அப் தந்து வந்த இந்நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப சுமார்.

குஷ்பூவை சில குழந்தைகளுடன் விளையாட விடுகிறார்கள். இதில் பொது அறிவு கேள்விகள் வேறு... ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு எப்படி பெரியவர்கள் அளவு பொது அறிவு இருக்கும் !

எவ்வித சுவாரஸ்யமும் இன்றி கொட்டாவி வர வைத்த நிகழ்ச்சி. போக போகவாவது இம்ப்ரூவ் செய்கிறார்களா என பார்க்கலாம் !

4 comments:



  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி - https://pathavi.com

    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்!

    ReplyDelete
  2. எங்கே ரொம்ப நாளாக் காணோம்?

    நலமா?

    டிவி பார்ப்பதில்லை. நியூஸ் தலைப்புமட்டும் முதல் பத்து நிமிசங்கள். அதுவும் இங்கத்து நேஷனல் டிவிதான்.

    ReplyDelete
  3. TV serial penkalin vitha vidhamana dresses mattume paarkkalam. Jammunnu irukkum

    ReplyDelete
  4. //அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்!//
    வீட்டில் இருக்கும் பெண்களும்தான் செய்த வேலையையே செய்து அலுப்படைவார்கள். அவர்களுக்கும் அவசியம் வாரம் ஒருநாளாவது ஆண்கள் சமையலில் உதவ வேண்டும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...