Sunday, May 22, 2016

பத்மநாபபுரம் பேலஸ்- படம் + வீடியோவுடன் ஒரு பார்வை

நாகர்கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் அவசியம் செல்லும் இடங்களில் ஒன்று - பத்மநாபபுரம் அரண்மனை. ஆறரை ஏக்கர் பரப்பில் அசத்துகிறது. நாகர்கோவில் அருகே இருந்தாலும் கேரள அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளது இந்த அரண்மனைஅரசர் பயன்படுத்திய 167 அறைகள் இங்குள்ளன அவற்றில் இப்போது 120 மட்டுமே நாம் பார்க்க திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க சில அறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.சென்று வந்து பல மாதங்கள் கழித்து எழுதுவதால் படம் மற்றும் வீடியோ சற்று அதிகமாக இருக்கும் பொறுத்தருள்க !

பூ முகம்

ராஜா தன்னை காண வரும் வி. ஐ பி -களை இந்த இடத்தில் தான் சந்திப்பாராம்.

இங்குள்ள குதிரைக்காரன் விளக்கு - எந்த பக்கம் வெளிச்சம் இல்லையோ - அந்த பக்கம் தானாகவே திரும்பி கொள்ளும் விதத்தில் உள்ளது சிறப்புஅரசருக்கு வந்த Wooden க்ரீட்டிங்க் கார்டுகள் பார்வைக்கு இங்கு வைத்துள்ளனர். இன்றைக்கும் ஜம்மென்று இருக்கும் நாற்காலிகள் சைனாவில் இருந்து வந்த வியாபாரிகள் அரசருக்கு பரிசாய் தந்தவையாம்

அறையின் மேல் பக்கம் -90 வித மலர்கள் - கற்களில் செதுக்கப்பட்டுள்ளது - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..அரசசபை


நடுவில் அரசரும் இரு புறமும் அமைச்சர்களும் அமர்ந்திருந்த இந்த இடத்தில் செம குளுமையாக உள்ளது. குளிரூட்டப்பட்ட அறை போல மூலிகைகள் வைத்தே இந்த இடத்தை ராஜா காலத்தில் குளிர வைப்பார்களாம்

அரண்மனை முழுதுமே மின்சாரம் இல்லை. அந்த காலத்தில் இருந்த நிலையிலேயே -அரண்மனையை வைத்து - ஆனால் மிக அழகாக மெயின்டெயின் செய்கிறார்கள்

அன்னதான சாலை

2 அடுக்குகளில் (2 Floor ) இருக்கிறது அன்ன தான சாலை. ஒவ்வொரு தளத்திலும் 1000 பேர் அமர்ந்து உணவு உண்ண முடியும். இன்றைக்கு அன்றைய நாளின் நினைவாக அன்றைய அடுப்புகளும், ஊறுகாய் வைக்க பயன்படுத்திய ராட்ஸச ஜார்களும் இருக்கின்றன . மிக பெரிய அன்னதான சாலை நம்மை பிரமிக்க வைக்கிறது

ராஜாவின் அந்தரங்க அறைகள்

ராஜாவின் படுக்கை அறை , தியானம் செய்யும் இடம், பூஜை அறை போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு தற்போது அனுமதி இல்லை.

உப்பரிகை மாளிகை

அரண்மனையில் மிக உயரமான இடம் இது தான். 16-ஆம் நூற்றாண்டில் செய்த கட்டில் இன்னும் அங்கு உள்ளது. அரசர் கழட்டி வைக்கும் கிரீடம் வாள் உள்ளிட்டவை இங்கு நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது
விருந்தினர் மாளிகை

இந்த இடம் முழுக்க முழுக்க வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 2 படுக்கை அறைகள், 2 பால்கனி கொண்ட இந்த அறைக்கு வெளியே அரண்மனையில் ஒரு வாயிலும் - பொதுமக்கள் வசிக்கும் தெருவும் உள்ளது. அது பற்றி விசாரித்தால், வெளிநாட்டினர் - அரண்மனையின் பின் வாயில் வழியே தான் உள்ளே வர முடியும் என்றும் - முன் பக்கம் வழியே அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொல்கிறார்கள் !
அரண்மனை கட்ட மண் தோண்டி எடுத்த பின், காலியாய் கிடந்த இடத்தில் குளம் கட்டப்பட்டதாம் !இந்த இடத்தின் அருகே சரஸ்வதி தேவிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்ட சேரன், சோழன் பாண்டியன் மூவரும் - பல பொருட்கள் மூலம் - தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்120 அறைகளை பொறுமையாய் பார்வையிட - அரை நாளாகும் ! ஆனால் பெரும்பாலான மக்கள் ஓரிரு மணி நேரத்தில் அவசரமாய் பார்த்து விட்டு செல்கிற படி தான் ஆகிறது !

அங்கிருக்கும் ஊழியர்கள் மிக பொறுமையாகவே அனைத்தும் விளக்குகிறார்கள். நீங்கள் சென்றால் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் செலவிடுகிற மாதிரி திட்டமிட்டு செல்லுங்கள்.. அரண்மனையின் அழகை அப்போது தான் முழுதாய் ரசிக்க இயலும் . 

15 comments:

 1. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 2. நாங்க ஆகஸ்ட் மாசம் போலாம்ன்னு பிளான் பண்ணி இருக்கோம் சகோ!

  ReplyDelete
 3. நல்லதொரு பகிர்வு! சுற்றுலா செல்வோருக்கு மிகுந்த பயனளிக்கும்! நன்றி!

  ReplyDelete
 4. பயனளிக்கும் பகிர்வு!!

  ReplyDelete
 5. அரண்மனை நன்றாக இருக்கின்றது. மிகுதி காண வருகின்றேன். நன்றி.

  ReplyDelete
 6. நாங்களும் நிறையத்தடவை போயிட்டு வந்தோம். நல்லாவே சுத்திக் காமிச்சிருக்கீங்க. பக்கத்துலயே இருக்கும் மியூசியத்துக்குப் போகலையா.. அடுத்த பகுதியில் வருதா என்ன?

  ReplyDelete
 7. எனக்கு கொசுவத்தி:-)))))

  நன்றீஸ்.

  'ஒருமுறை வந்து பார்த்தாயா?' பார்த்தீங்களா?

  ReplyDelete
 8. நேர்ல பாத்தா மாதிரியே இருக்கு சகோ...

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete

 10. வணக்கம்!

  நல்ல பதிவினை நல்கி மணக்கின்ற
  வல்ல வலையினை வாழ்த்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 11. நல்ல புகைப்படங்கள்.... தகவல்களுக்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 12. அற்புதமான பதிவு

  ReplyDelete
 13. அற்புதமான பதிவு

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...