Friday, July 22, 2016

கபாலி சினிமா விமர்சனம் : 1000 வது பதிவு !

ப்ளாகில் இது 1000வது பதிவு !

இன்று காலை வரை படம் பார்ப்போம் என தெரியாது.. நண்பன் - வழக்கறிஞர் பாலா உதவியால் டிக்கெட் கிடைத்தது; இல்லாவிடில் முதல் 3 நாளுக்குள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை  !

கதை 

விரிவாய் கதை சொல்லி உங்கள் சுவாரஸ்யம் கெடுக்க விரும்ப வில்லை; 

கெட்டவர்களை அழிக்கும் மாஸ் ஹீரோ கதை தான். கூடவே மனைவி-மகள் சென்டிமென்ட் - நட்பு- துரோகம் இவையும் பின்னணியில் .



ப்ளஸ் 

ரஜினிக்கு அவரது வயதுக்கேற்ற பாத்திரம்.. நடிக்கவும், ஸ்டைலில் பிரகாசிக்கவும் நிறைய ஸ்கோப்... ரஜினி இல்லாத ஷாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..

ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா Perfect casting ! இவர்களுடனான ரஜினியின் சென்டிமென்ட் - பெண்களிடம் ஓரளவு எடுபட கூடும்

பல ரஜினி படங்களில் கதையே இருக்காது; இங்கு நிச்சயம் கதை உண்டு.. திரைக்கதை இன்னும் ஷார்ப் & சுவாரஸ்யமாய் இருந்திருக்கலாம் :(

படத்தின் இறுதிநிமிடத்தில்  ஒரு துப்பாக்கி வெடிக்கிறது.  யார் மீது வெடித்தது என காட்டாமல் - பார்வையாளர் முடிவுக்கே விடுவது செம !

படத்தின் துவக்கம்- இன்டெர்வல் பிளாக் இரண்டும் அட்டகாசம்.

திரைக்கதை முழுதும் சில சின்ன சின்ன டுவிஸ்ட்- சஸ்பென்ஸ்கள் புதிதாய் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது; உண்மையில் இவை இல்லாவிடில் படம் பார்ப்பது மிக கஷ்டமாகியிருக்கும் !

சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மற்றும் 2 பாடல்கள் (மட்டும்) அருமை

நெகட்டிவ் 

கேங்ஸ்டர் படம்- க்ரைம் கதை - ஆனால் படம் மிக மெதுவாய் நகர்கிறது; இடைவேளை வர ஒண்ணரை மணி நேரம் ஆகிய உணர்வு.. பிற்பகுதியில் நிச்சயம் ஓர் lag உள்ளது

 கதை மலேஷியாவில் நடப்பதால் ரஜினி உள்ளிட்டோர் பேசும் சில வார்த்தைகள் புரியவில்லை; அவற்றை திரும்ப திரும்ப வேறு பேசுகிறார்கள். எங்கள்/ பின் வரிசையில் பலர்  " அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் " என கேட்டு கொண்டே இருந்தனர்

கடைசி அரை மணி நேரத்தில் ரத்தம்/ வன்முறை சற்று அதிகம்..

துரோகம் படம் முழுதும் வருகிறது; இதனால் எல்லா பாத்திரங்களையும் சந்தேகிக்கிற மாதிரி ஆகி விடுகிறது



தியேட்டர் நொறுக்ஸ் 

நீண்ட நாள் கழித்து ரஜினி படம் முதல் நாள்- முதல் ஷோ; PVR  -வேளச்சேரியில் பார்த்தோம்;

ரஜினி ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம்... முதல் 10-15 நிமிடம் பேப்பர்களை தூக்கி வீசி, எழுந்து நின்று டான்ஸ் ஆடியதில் ... ஆங்காங்கு பல இளம் பெண்கள் !! எங்கள் பின் சீட்டில் ஒரு நண்பர் குழு.. அதில் ஒரே ஒரு பெண்.. அவர் தான் முதல் 15 நிமிடம் தொடர்ந்து கத்தி கொண்டிருந்தார்.. போக போக ரஜினி ரசிகர்களும் சைலன்ட் ஆகி விட்டனர்..

பைனல் வெர்டிக்ட் 

ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் மிக பிடிக்கும்... மற்றவர்களுக்கு படம் ஜஸ்ட் ஓகே தான்.

இணையம் அல்லது கணினியில் பார்த்தால் சுத்தமாய் பிடிக்காது ! சந்தேகமே இல்லை

கபாலி : Worth Rs. 120; Nothing more; nothing less !

14 comments:

  1. 1000 மாவது பதிவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. 1000 பதிவுகள்!!! great. வாழ்த்துக்கள்!!
    கபாலி பார்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. எனவே வாழ்த்துக்கள் உங்களுக்கு மட்டுமே.

    ReplyDelete
  3. 1000-வது பதிவு. வாழ்த்துகள் மோகன்......

    ReplyDelete
  4. Kabali movie is fantastic! Watch more!

    ReplyDelete
  5. Best wishes for 1000th post

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  7. ஆயிராமாவது பதிவு... ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆயிரமாவது பதிவு, கபாலி படத்திற்காகவே காத்து இருந்தது போல் தெரிகிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    subbu thatha

    ReplyDelete
  10. தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  11. நச் விமர்சனம். குறை மற்றும் நிறைகளை சுட்டிக்கு காட்டிய விதம் அருமை. 1000 பதிவுகள் எட்டியதற்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள் :-)

    ReplyDelete
  12. ஆயிரமாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..மேலும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துகிறேன்..கபாலி பார்வை நச்

    ReplyDelete
  13. ஆயிரமாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..மேலும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துகிறேன்..கபாலி பார்வை நச்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...