Sunday, July 24, 2016

வானவில்: அரவிந்த்சாமி - HDFC ATM பிரச்சனை - இரவு வாக்கிங்

ஆயிரம் பதிவுகள் பற்றி ...

சென்ற கபாலி விமர்சனம் -1000வது பதிவு; சினிமா விமர்சனம் என்பதால் 1000 பற்றி வேறு எதுவும் சொல்லவில்லை;

2011-முதல் 2013 வரை தீவிரமாக பிளாகில் எழுதி வந்தவன், ACS இன்ஸ்டிட்யூட் வேலைகள் மிக அதிக நேரம் எடுத்து கொள்ள, பதிவு எழுதுவது குறைந்தது.

சில மாதங்களுக்கு முன் பார்க்கும்போது ஆயிரம் பதிவுகளுக்கு இன்னும் 50-60 பதிவுகள் தான் தேவை என்பதை அறிய, அதுவே கடந்த சில மாதங்களில் தொடர்ந்து எழுத உத்வேகம் தந்தது; நடுவில் அவ்வப்போது பழைய பதிவுகளை பப்லிஷ் செய்து வந்ததையும் ஓரிரு மாதமாய் குறைத்து விட்டு முழுக்க புதிய பதிவுகள் மட்டுமே..

நிச்சயம் கடந்த சில மாதங்கள் போல் தொடர்ந்து எழுதும் உத்தேசம் இல்லை.. இயலும் போது மட்டும் எழுத கூடும்; வாரம் புதிதாய் ஒரு பதிவேனும் எழுத எண்ணம்.. மேலும் பழைய பதிவு வாரம் ஒரு முறை re publish ஆகலாம்

பயணம் சார்ந்த பதிவுகள் தான் அதிகம் விரும்பப்படுகிறது என்பது நண்பர்கள் அவ்வப்போது பேசும்போது தெரிகிறது..

ஊக்கம் தரும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

தொல்லை காட்சி  (டிவி கார்னர் ) 

கணவன்- மனைவி - கணவரின் தாயாருடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஜீ தமிழில் -ஆஹா மாமியார் ஓஹோ மருமகள். அநேகமாய் இளம் ஜோடிகளை தான் தேர்வு செய்கிறார்கள். கண்ணை கட்டி விட்டு -அரங்கில் சேர் எங்கு இருக்கிறது என கண்டு பிடித்து அமர சொல்வது; சினிமா சம்பந்தமான சில எளிய கேள்விகள் என ஓரளவு சுவாரஸ்யமாக செல்கிறது..
*********
புது சரவணன் மீனாட்சி - அதே பழைய கதை என்றாள் பெண்..சரவணன் - மீனாட்சி 2 குடும்பத்துக்கும் பகை - ரெண்டு பேர் அப்பாவுக்கும் ஆகவே ஆகாது  என்கிற ரீதியில் செல்கிறது. புது ஹீரோ ரியோவுக்கு நடிப்பு நிச்சயம் வரலை.. போக போக improve செய்தால் தான் உண்டு !
*********
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அரவிந்த் சாமி - மணி ரத்னம் நட்பு பற்றி ஒருவர் கேட்டார்; அரவிந்த்சாமி முதல் படத்தில் நடித்த போது - முதல் நாளே பலரும் பாராட்டினாராம். உடனே அவர் மணிரத்னத்திடம் போய் " எனக்கு இந்த படத்துக்கு என்ன நேஷனல் அவார்ட் கிடைக்கும் - சிறந்த நடிகருக்கா? சிறந்த துணை நடிகருக்கா? என்று கேட்டாராம் ! மணிரத்னம் அண்மையில் ஒரு கெட் டுகேதரில் இதனை சொல்லி சொல்லி சிரித்தாராம்..



அரவிந்த்சாமி " நான் எல்லாத்தையும் முயற்சி பண்ணி பார்த்துடுவேன்; குறிப்பா என்னால் செய்ய முடியாதுன்னு நான் நினைக்கிற விஷயத்தை எடுத்து செய்து பார்ப்பேன்; இன்னிக்கு வரை நான் தமிழ் நல்லா பேச மாட்டேன்; இந்த நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வந்த போது தமிழ் நல்லா பேச முடியாதுன்னு தெரிஞ்சும் - அதை இம்ப்ரொவ் செய்ய ஒரு சான்ஸ் என ஒப்பு கொண்டேன்; இப்படி நிறைய விஷயம் - என்னால் செய்ய முடியாததை  எடுத்து செய்வேன் .. அப்புறம் நல்லா வந்துடும் " என்றார் . Very good attitude !

HDFC வங்கி ATM ஒரு முக்கிய பிரச்சனை

அநேகமாய் எல்லா வங்கி ATM களிலும் - ATM கார்டை வைத்து விட்டு எடுத்து விடலாம். ஆனால் HDFC வங்கி ATM வித்யாசமானது; ATM கார்டை மிஷின் சற்று நேரம் விழுங்கி விட்டு பின் வெளியே தள்ளும்; வெகு சில நேரங்களில் கார்ட் உள்ளே போய் மாட்டி விடுவதும் உண்டு; எனக்கும் அப்படி ஒரு முறை நடந்துள்ளது; நல்ல வேளையாக வங்கி இருக்கும் இடத்திலேயே உள்ள ATM என்பதால் - உடன் வங்கியில் புகார் செய்தேன்; விபரம் சேகரித்து கொண்டு மறு நாள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றனர். மறுநாள் சென்று வாங்கி வந்தேன்.. இந்த ஒரு நாள் நீங்கள் கார்ட் உபயோகித்து பணம் எடுக்க முடியாது என்கிற பிரச்சனை வேறு

HDFC வங்கியும் பிற வங்கிகள் போல கார்டை உள்ளே விழுங்காமல் வெளியில் வைத்து எடுக்கிற மாதிரி செய்தால் நன்றாய் இருக்கும் !

QUOTE CORNER


Think big, and your deeds will glow.
Think small, and you will fall behind.
Think that you can, and you will.
It is all in the state of mind.

என்னா பாட்டுடே   -புத்தம் புது காலை

அலைகள் ஓய்வதில்லைக்காக எழுதப்பட்ட இப்பாடல் அப்படத்தில் இடம் பெறவில்லை; 25 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையமைத்த மேகா படத்தில் மீண்டும் ரீ மிக்ஸ் செய்து பயன் படுத்தப்பட்டது.

பெரும்பாலான ரீ மிக்ஸ் பாடல்கள் எனக்கு பிடிப்பதில்லை; இப்பாடல் அதற்கு ஒரு விதிவிலக்கு

புத்தம் புது காலை பாடலை திரையில் பார்க்க முடிவது முதல் காரணம்; அடுத்து ஹீரோயின் ஸ்ருஷ்டி ..அடடா.. என்னா அழகு. மிக லேசாய் (ஒரு சுற்று ) எடை அதிகம் எனினும்- அந்த சிரிப்பும் dimple -ம் மனதை கொள்ளை அடிக்கிறது

இப்பாடலை அதிகாலை நேரத்தில் இயற்கை சார்ந்து தான் படமாக்கியிருக்க வேண்டும்; படத்தில் வேறு விதமாய் பயன்படுத்தினாலும், சில சின்னச்சின்ன விஷயங்களால் பாடல் கவரவே செயகிறது



ஹெல்த் கார்னர் 

நடை பயிற்சி மீண்டும் துவக்கியிருக்கிறேன் (அவ்வப்போது விடுவதும், பின் தொடர்வதும் வழக்கம் - கடந்த 7 ஆண்டுகளில் - வருடத்தில் பாதி நாட்களாவது நடந்திருப்பேன்)

நேரமே இல்லை என்று செல்வோருக்கு ஒரு சின்ன ஐடியா; இரவில் நடக்கலாம். இரவு என்று நான் சொல்வது 8 மணி முதல் 10 மணி வரை.

மாலை வீடு திரும்பி - சாப்பிட்டு விட்டு கூட 30-45 நிமிடம் நடக்கலாம். சாப்பிட்ட பின் நடக்கலாமா என்றால் - நடக்காமலே இருப்பதை விட - சாப்பிட்ட பின் நடப்பது தப்பே இல்லை !

இதனை தொடர்ந்து செய்து பார்த்து விட்டு தான் சொல்கிறேன்.

சாப்பிட்ட பின் நடப்பதில் நல்ல விஷயங்கள் சில உள்ளன..

முக்கியமாய் - அது மிக ரிலாக்ஸ்ட் ஆன நேரம்; வேறு வேலை எதுவும் மனதை உறுத்தாது; வெயில் அடிக்காது- இதனால் சோர்வாகமால் நடக்கலாம். சாப்பிட பின் நடப்பதால் - உறங்கும் முன் உண்ட உணவு செரித்து விடுகிறது; இதனால் எடை கூடும் வாய்ப்பு குறையும்.

ஒரு விஷயத்துக்காக தான் யோசிக்க வேண்டும்: நடந்து விட்டு வந்தால் தூக்கம் வருமா?

வரும்..!  நாம் நடக்க தானே செயகிறோம்... ஓடவில்லையே.. ஓடினால் தூக்கம் மிக லேசாக தொந்தரவாகலாம் - நடந்து விட்டு வந்து அடுத்த அரை மணியில் உறங்கினால் கூட எந்த பிரச்சனையும் இல்லை..

கூட யாரேனும் வந்தால் நலம்; இல்லா விடில் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்து பின் வாக்கிங் கிளம்புவது சற்று கடினம். வீட்டில் உள்ள யாரையேனும் ஜோடி சேர்த்து கொள்ளுங்கள்; பேசி கொண்டு நடப்பது பரம சுகம்.

விருப்பம் உள்ளோர் முயன்று பாருங்கள்.. இரவு வாக்கிங் !

5 comments:

  1. மனம் நிறை வாழ்த்துகள் மோகன் குமார். இன்னும் நிறைய எழுத ஆசிகள். வல்லிம்மா.

    ReplyDelete
  2. Pls continue writing sir

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்! தொடருங்கள் உங்களின் சிறப்பான பதிவுகளை வாசிக்க காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  4. மீண்டும் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
  5. ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...