ஊஞ்சலாடி மகிழ்ந்தது
நாலாம் வகுப்பில் அலுத்தது.
கிட்டி புல்லும் கையுமாய்
தெரு தெருவாய் அலைந்ததும்
உயர பறப்பது
யாருடைய பட்டமென்ற போட்டியும்,
கண்கள் சிவக்க சிவக்க
ஆற்றிலடித்த நீச்சலும் -
காலத்திற்கேற்ப அகன்றன.
ஒரு தலையாய் காதலித்து
ஒருத்தியிடமும் சொல்லாமல்
கசந்து போன அனுபவங்களில்
கவிதை மட்டுமே மிஞ்சிற்று.
சிறு குழந்தைகளுடன் விளையாடல்
இனிமையே எனினும்
அரை மணியில்
அலுத்து போகிறது.
வாழ்வின் பாதி காலம்
படிப்பிற்கென செலவிட்டு
பெயரை விட நீளமாய்
பட்டங்கள் சேர்ந்த பின்
பட்டங்கள் பயிற்றுவிப்பது
ஏதுமில்லையென விளங்கிற்று.
பிடித்தமான எழுத்தாளரின்
படைப்புகளை
தேடி தேடி வாசித்து
நெகிழ்ந்து கடிதமெழுதி
நேரிலே கண்டபின்
இருந்த மதிப்பும் போயிற்று.
உடன் இயங்கும்
சக இயந்திரங்களின் புன்னகையை
சம்பிரதாயமாய் பிரதி பலிக்கும் போது
தோன்றும் கேள்வி:
அலுக்காதது
ஏதுமுண்டா வாழ்வில் ?
****************
டிஸ்கி: வேலை அதிகம்; வேறு ஏதும் எழுத முடியாததால் பிரசுரம் ஆகாத பழைய கவிதை ..
எல்லாம் அலுத்துப் போன பின் என் செய்வது ...?
ReplyDeleteவீடு திரும்பலாம் ...
எது வீடு என தெரியவில்லையே மோகன் ...*pr
ரொம்ப நல்லாருக்கு மோகன். வார்த்தைகளை ரொம்ப உணர்வுப் பூர்வமா கோர்த்திருக்கீங்க.
ReplyDeleteஎப்போதும் ரசனையோடிருங்கள். வாழ்க்கை அலுக்காது.
நல்லா இருக்கு மோகன்.
ReplyDeleteநிறைய எழுதுங்க.
நல்ல கவிதை.
ReplyDeleteமகிழ்ச்சி சார்.
//அலுக்காதது
ReplyDeleteஏதுமுண்டா வாழ்வில் ? //
நல்லா இருக்குங்க கவிதையெல்லாம். கவிதையும் ஒரு நாள் அலுக்கலாம் :)
ரொம்ப நல்ல கவிதை:)! அருமையாகக் கோர்க்கப்பட்ட நினைவுகள் + அனுபவங்கள். ஆனால் ஒன்று அலுத்தாலும் ஏதோ ஒன்று நம்மை உயிர்ப்புடன்தான் வைத்திருக்கிறது.
ReplyDeleteகவித ......... கவித.....
ReplyDeleteக.க.க.போ.
கவிதை நல்லாயிருக்கு நண்பரே..! ஆனால்
ReplyDelete//உடன் இயங்கும்
சக இயந்திரங்களின் புன்னகையை
சம்பிரதாயமாய் பிரதி பலிக்கும் போது//
என்னங்க நண்பரே.. இயந்திரங்கள்னு சொல்லியிருப்பதை பார்த்தால் அங்கும் மனிதம் இறந்து போனதாகத்தான் தெரிகிறது.! என்னவோ.. தெரியவில்லை உங்கள், கட்டுரைகளும், கவிதைகளும் மட்டும் எத்தனை முறை படித்தாலும் அலுத்துப்போவதில்லை..!!
//பிடித்தமான எழுத்தாளரின்
ReplyDeleteபடைப்புகளை
தேடி தேடி வாசித்து
நெகிழ்ந்து கடிதமெழுதி
நேரிலே கண்டபின்
இருந்த மதிப்பும் போயிற்று//
இப்படி சொல்லிட்டீங்களே :(
//அலுக்காதது
ஏதுமுண்டா வாழ்வில் ? //
இப்போதைக்கு தமன்னா?!...;)
ஹி..ஹி..ரசனையான கவிதையில் வந்து காமெடி பண்ணியதற்கு மன்னிக்கவும்...
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க
ReplyDeleteஒரு விஷயத்துக்கு ரொம்ப பக்கத்திலே போறதோ அல்லது தொடர்ந்து ஒன்னையே செய்யறது அலுப்பத்தை தான் தரும்
நண்பர்களுக்கு நன்றி; 10 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை. இதில் இப்போது(ம்) பிடிப்பது என் வாழ்கையின் ஒரு பகுதி சுருக்கமாய் சொல்ல பட்டிருப்பது தான்; Publish ஆனதும் சற்று நெகடிவான கவிதையோ, Publish செய்திருக்க வேண்டாமோ என தோன்றியது!!
ReplyDeleteநியோ: முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDelete*********
வாங்க விக்கி; ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.
//எப்போதும் ரசனையோடிருங்கள். வாழ்க்கை அலுக்காது.// ரைட்டு !!
*********
நன்றி உலக்ஸ். எழுதுறேன்
*********
அமைதி அப்பா: நன்றி
*********
சின்ன அம்மணி: ஆமுங்கோ ; கவிதையும் ஓர் நாள் அலுக்கும்.
*********
நன்றி ராமலக்ஷ்மி. //ஒன்று அலுத்தாலும் ஏதோ ஒன்று நம்மை உயிர்ப்புடன்தான் வைத்திருக்கிறது.//
நீங்க எப்போதும் பாசிடிவான நபர் ராமலக்ஷ்மி.
*******
பெயர் சொல்ல: நன்றி
******
பிரவீன்,
//என்னவோ.. தெரியவில்லை உங்கள், கட்டுரைகளும், கவிதைகளும் மட்டும் எத்தனை முறை படித்தாலும் அலுத்துப்போவதில்லை..!!//
உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்வை தந்தது நன்றி!!
*****
ரகு: தமன்னாவா? நமக்கு பிடிச்ச ஹீரோயின் ரொம்ப சீக்கிரம் மாறும் ரகு; தமனாவும் சேர்த்தே
****
வேலு: //ஒரு விஷயத்துக்கு ரொம்ப பக்கத்திலே போறதோ அல்லது தொடர்ந்து ஒன்னையே செய்யறது அலுப்பத்தை தான் தரும்// ரொம்ப சரி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஒரு தலையாய் காதலித்து
ReplyDeleteஒருத்தியிடமும் சொல்லாமல்
கசந்து போன அனுபவங்களில்
கவிதை மட்டுமே மிஞ்சிற்று.
..... :-) good one.
//வாழ்வின் பாதி காலம்
ReplyDeleteபடிப்பிற்கென செலவிட்டு
பெயரை விட நீளமாய்
பட்டங்கள் சேர்ந்த பின்
பட்டங்கள் பயிற்றுவிப்பது
ஏதுமில்லையென விளங்கிற்று. //
மோகன்குமார்,
விளைவுகள் எப்போதும் முடிவில் தானே தெரியும்...?
நல்லதொரு சுய அலசல் கவிதை.
எதையும் ரசித்து பாருங்கள், வாழ்க்கை அலுக்காது. (நமக்கு அறிவுரைக்கா பஞ்சம்)
ReplyDeleteஉண்மையை சொல்ல சொன்னதால் சொல்கிறேன், நல்லா கவிதை எழுதுறீங்க...
ரொம்ப நாளா காணமே, ரொம்ப பிஸி போல இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். கவிதைல கலக்கிட்டீங்க.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
இந்த உணர்வுகள் ஒவ்வொருத்தர் வாழ்விலும் அவ்வப்போது ஏற்படும் உணர்வுகள்தான்!
ReplyDeleteரொம்பவும் நிதர்சனமான-இலேசாக சோகம் இழையோடுகின்ற அருமையான கவிதை!
VIRUPPANGAL:
ReplyDelete:ALUKKAATHA KAVITHAI.