Monday, May 17, 2010

ராவணன் பாடல்கள் விமர்சனம்

மணிரத்னம்- ரஹ்மான்- வைரமுத்து என அமர்க்களமான கூட்டணியில் வந்துள்ளது ராவணன் பட பாடல்கள். இவை கேட்க எப்படி உள்ளது என ஒரு சாதாரண ரசிகனின் அலசல்..



1. உசுரே போகுதே உசுரே போகுதே

பாடியவர்கள் : கார்த்திக் முகமத் இர்பான்

ஆண் குரலில் சோலோ பாடல் இது. செம ஸ்பீடான இந்த பாடல் துவங்கும் போது சத்தமே இல்லாமல் ஆரம்பிக்கிறது. பாட்டு பாடுதா இல்லையா என நாம் சந்தேகிக்கும் அளவு அமைதி.. பின் மெதுவாய் ஆரம்பிக்கிறது...

"இந்த பூமியிலே எப்ப வந்து நீ பொறந்த..
என் புத்திக்குள்ள தீபொறியை நீள வச்சே
அடி தேக்கு மர காடு பெருசு தான்..

சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான் ..
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி..

கடும் தேக்கு மர காடு வெடிக்குதடி.. "

போக போக செம ஸ்பீடாகி விடுகிறது..

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே....மாமன் தவிக்கிறேன் மடி பிச்சை கேட்கிறேன் மனசை தாடி என் மணி குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும் மைவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி "


பின் வேகம் குறைவதும், அதிகமாவதும் மாறி மாறி நடக்கிறது. டிரம்ஸ் அதிருகிறது.

சில இடங்களில் பாடகர் மூச்சு விடாமல் பாட நமக்கு மூச்சு முட்டுகிறது. முதல் முறை கேட்கும் போதே ரசிக்க முடிகிற பாடல்.. Pick of the album!!

2. காட்டு சிறுக்கி

பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன் , அனுராதா ஸ்ரீராம்

இது ஒரு டூயட் பாடல். பழைய குற்றால குறவஞ்சி போல் கடினமான வரிகள் பல்லவியில் ஆணும் பெண்ணும் மாறி மாறி பாடுவது வித்யாசமான அனுபவம்.

"அவள் நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்கூடு ஒட்டுதே" என்பது trademark வைரமுத்து வரிகள்.. போக போக பெண்ணின் அழகை பல விதமாய் வர்ணிக்கிறது..

"உச்சந்தலை வகிடு வழி ஒத்தை மனம் அலையுதடி உதட்டு வழி பள்ளத்துல உயிர் கிடந்தது தவிக்குதடி.."

மணி ரத்னம் போன்றோர் கூட காதல், காமம் பெண்ணின் உடல் இவையே பாடலில் கூறாய் வைப்பது சற்று வருத்தமாக தான் உள்ளது

இந்த பாடலில் காட்டு சிறுக்கி என்ற வார்த்தை எத்தனை முறை ஒலிக்கிறது என போட்டியே வைக்கலாம். குறைந்தது 50 தடவையாவது ஒலிக்கிறது!! அதுவும் பாடல் முடியும் போது திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை சொல்லி கொண்டே முடிக்கிறார்கள்..

நான் சொன்ன சிறு குறைகள் தவிர்த்தும் இது கேட்க ஒரு இனிய பாடல் தான்

3. கெடா கெடா

பாடியவர்கள் : தன்வி ஷா, பென்னி தயாள், AR .ரேஹனா

ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடும் சந்தோஷ பாடல் இது. துவக்கத்தில் பாடலின் வரிகள் புரியாத அளவு இசை முழுமையாய் ஆட்சி செய்கிறது. நடு நடுவே சில வரிகள் மட்டுமே புரிகிறது.

திரும்ப திரும்ப வரும் சில கோரஸ் (பப்பர பப்பர) மற்றும் பீட்டுகள் தான் இந்த பாடலில் சுவாரஸ்யம்..

நன்கு உற்று கேட்டால் கல்யாண சீனில் இந்த பாடல் ஒலிக்கும் என புரிகிறது. மிக பெரிய துணை நடிகர்கள் கூட்டம் ஆடுகிற ஒரு பாடலாக இருக்கலாம்..

சுவாரஸ்யமான சில பீட்டுகள் இந்த பாடலை கேட்க வைக்கின்றன.

4. கோடு போட்டா

பாடியவர்கள் : பென்னி தயாள்

வீரா (விக்ரம்) கேரக்டர் குறித்த பாட்டு. இசையில் ஏனோ ஹிந்தி வாசனை அடிக்கிறது. " நேற்று வரைக்கும் உங்கள் சட்டம்; இன்று இருந்து இனி எங்க சட்டம்" என திரும்ப திரும்ப ஒலிக்கும் வரிகள் படம் மாவோயிஸ்டுகள் அல்லது வேறு extremists பற்றியது என்ற ரூமரை உறுதி செய்வது போல் உள்ளது. ரொம்ப சுமாரான பாடல் இது.

5. வீரா

இதுவும் வீரா பற்றிய பாடல் தான்.இதனை எழுதியது மணி ரத்னமாம்!! ஒரு சின்ன பிட் பாடல் போல் ஒலிக்கிறது. Not very impressive.

6. கள்வரே கள்வரே

ஸ்ரேயா கோஷல் பாடும் மெலடி இது; கேட்க கேட்க பிடிக்கலாம்.

மொத்தத்தில் உசுரே போகுதே, காட்டு சிறுக்கி ஆகிய இரு பாடல்கள் தான் எடுத்தவுடன் இந்த ஆல்பத்தில் ரசிக்க வைக்கின்றன. இன்னும் கேட்க கேட்க வேறு சில பாடல்களும் பிடிக்க கூடும்

ஆமாம்.. கதை? பத்திரிக்கைகளில் படித்ததும் டிவியில் நேற்று இசை வெளியீட்டு விழா பார்த்தும் உணர்ந்தது இது தான்:

பிரிதிவி ராஜ் - ஐஸ்வர்யா ராய் கணவன்- மனைவி. ஐஸ்வர்யா ராய், விக்ரமால் கடத்தபடுகிறார். காடு போன்ற பகுதியில் சிறை வைக்க படுகிறார். பிரிதிவி ராஜ் போராடி, இறுதியில் விக்ரம் இறக்க ஐஸ்வர்யா ராய் காப்பாற்ற படுகிறார். இதில் விக்ரம் மற்றும் அவர் மக்களின் துயரம் அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.

மாற்றான் மனைவியை கடத்தி செல்லும் ராவணனாக விக்ரம்.. கதையில் இந்த நெகடிவ் கேரக்டர் தான் முக்கியமானது போலும். அதான் படத்தில் பெயரே ராவணன் என உள்ளது.

கதை சாதாரணமாய் தோன்றினாலும், மணி ரத்னத்தின் presentation நன்றாக இருந்து, படம் மக்களை கவரும் வாய்ப்புகள் வழக்கம் போல் அதிகம்..

13 comments:

  1. அடுத்து ரொம்ப‌ எதிர்பார்க்கிற‌ ப‌ட‌ம் இதுதான். ஜுன் 28 ரிலீஸ்னு நினைக்கிறேன்.

    சுமாரா இருக்கும் பாட‌ல்க‌ளை கூட‌ விஷுவ‌லா பார்க்கும்போது ர‌சிக்க‌ வெச்சுடுவார் ம‌ணிர‌த்ன‌ம்

    ReplyDelete
  2. பாதி கதைதான் சொல்லியிருக்கிங்க. விக்ரம் செத்தபிறகு காப்பாத்தி கூட்டிட்டுபோன ஐஸ்வர்யாவை ப்ரித்விராஜ் சந்தேகப்படுவாரம். கிட்டதட்ட ஒரு மூணு மாசம் ராவணனோட இருந்த சீதையை....


    உசுரே பொகுதே.... பின்னி பெடலெடுக்குது..
    :-)

    ReplyDelete
  3. Waiting for the movie......!!!

    ReplyDelete
  4. அண்ணே அது கெடா கெடா...கறி அடுப்புல கிடக்கு...அண்ணே....
    செம பீட்.....

    ReplyDelete
  5. உசுரே போகுதே...

    கேட்டுக் கேட்டு உயிர் போகுது மோகன். என்ன ஒரு பீட், சான்ஸே இல்ல.

    ReplyDelete
  6. ரகு: ஜூன் 28 ஆ? அதுக்கு முன்னாலேயே வருதுன்னு நினைக்கிறேன்
    **
    முரளி: மீதி கதை நீங்க சொல்லி தான் தெரிஞ்சது; ம்ம்ம் பார்ப்போம்
    ***
    நன்றி சித்ரா
    ***
    தேங்க்ஸ் ஜெட் லி .. நீங்க சொன்னதும் மாத்திட்டேன்
    ***
    நன்றி சரவணா.. அந்த பாட்டு தூள்

    ReplyDelete
  7. இந்த ஆல்பத்துல என்னோட ஃபேவரைட் கள்வரே தாங்க...க்ளாஸ்! நல்ல அலசல்!

    ReplyDelete
  8. காத்திருக்கிறேன்.....

    ReplyDelete
  9. என்ன மோகன்.. வீரா.. வீரா.. Not Impressive'ன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு முதல் முறை கேட்கும் போதே பிடிச்சிருந்தது..

    Lets wait for the movie release!!

    ReplyDelete
  10. மனிரத்னம் படம்.. நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு!
    உசுரே போகுதே...இன்னும் கேட்கல, கேட்கனும்.

    ReplyDelete
  11. ராவணன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

    ReplyDelete
  12. June 18 release sir .... sema review sir .... kalvare top most .... sema voice ...

    ReplyDelete
  13. Is Ravanan "MOVOIST" ?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...