மே 2 -ஆம் தேதி அன்று நாங்கள் படித்த மன்னார்குடி நேஷனல் பள்ளி மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து நாங்கள் படித்த அதே பள்ளியில் சந்தித்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர். எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 35 பேர் அழைக்க பட்டு கௌரவிக்க பட்டனர்.
இந்த விழா ஐடியா நமது சக பதிவரும், எனது பள்ளி வகுப்பு தோழருமான பெயர் சொல்ல விருப்பமில்லை தான் துவங்கினார். பின் பல நண்பர்கள் பெரும் முயற்சியும், உழைப்பும் எடுத்து விழா நடந்தது. காலை, மதியம் இரு வேளை அருமையான உணவு, சென்னையில் உள்ள ஆசிரியர்கள் வந்து செல்ல வாகனம், ஆசிரியர்கள் தங்க லாட்ஜில் அறைகள் என பார்த்து பார்த்து செய்திருந்தனர்.
விழா மிக நெகிழ்வாய் நடந்தது. ஒவ்வொரு மாணவரும் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர். பள்ளியில் படித்த போது ஒல்லியாக இருந்தவர் இன்று குண்டாகவும், அப்போது குண்டாக இருந்த சிலர் இப்போது சற்று இளைத்தும் ஆச்சரியம் தந்தனர். சிலரை தவிர பலரை அடையாளம் கண்டு பிடிப்பது பெரும் சிரமமாகவே இருந்தது.
நாங்கள் படித்த போது தினமும் கடவுள் வாழ்த்து பாடும் எங்கள் வகுப்பு மாணவி சௌம்யா இன்றும் பாட, எங்கள் நண்பன் டாக்டர் ரவீந்திரன் கவிதை நடையில் ஆசிரியர்களை பாராட்டி அழைத்தார்.
கடவுள் வாழ்த்து சௌம்யா, அன்புமணிடீச்சர், கண்ணன்
ஆசிரியர்களுக்கு பள்ளி படத்துடன் கூடிய நினைவு சின்னமும், சால்வையும் வழங்க பட்டது. மேலும் அந்தமானில் உள்ள நண்பன் வேல் முருகன் அனைவருக்கும் நினைவு பரிசு அனுப்பி இருந்தான். நிகழ்ச்சிக்கு வர முடியாத அவன் தொலை பேசி மூலம் அனைவருடனும் பேசிய கணம் மிக நெகிழ்வான ஒன்று..
இனி விழாவில் பேசிய ஆசிரியர்கள் சிலரின் பேச்சு சுருக்கமாக
திரு சேது ராமன்; அறிவியல் ஆசிரியர்,முன்னாள் தலைமை ஆசிரியர்
" ஆசிரியர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என சரியாக சொல்ல முடியாது. His impact on the students is immeasurable. ஆனால் அப்படி நாங்கள் செய்த தாக்கம் காரணமாக தான் இன்று நீங்கள் எங்கெங்கோ இருந்து வந்துள்ளீர்கள்.
ஆசிரியர் சேது ராமன் குத்து விளக்கேற்றுகிறார்
“ஓர் கடிதத்தில் எத்தனையோ எழுதினாலும் Post script தான் முக்கியமானது. ஒரு மகன் தந்தைக்கு எழுதும் கடிதத்தில் எல்லோரையும் விசாரித்து விட்டு கடைசியில் பின் குறிப்பு: உடன் ஆயிரம் ருபாய் பணம் அனுப்பவும்" என எழுதுகிறான். அந்த கடைசி வரி தான் முக்கியமானது. அப்படி நீங்கள் எழுதுவது மற்றும் பேசுவதில் கடைசி பார்ட் முக்கியமானது"
திரு ராம சாமி , தமிழாசிரியர்
"பொதுவாக டல்லான மாணவர்கள் தான் ஆசிரியரை நினைவில் வைத்திருப்பார்கள்; எங்காவது போகும் போது நம்மிடம் வந்து, " நான் உங்க மாணவன்" என அறிமுகம் செய்து கொள்வார்கள்; என்ன செய்கிறாய் என்றால் மிக சாதாரண வேலை சொல்வார்கள்; நன்கு படித்த மாணவர்கள் சிலர் நம்மை பார்த்தால் கூட, பார்க்காத மாதிரி செல்வார்கள்; ஆனால் இங்கே நன்கு படித்து வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்"
திரு. M.R. சுவாமிநாதன், ஆங்கிலம்/ வரலாறு ஆசிரியர்
" இந்த பேட்ச் மாணவர்கள் இங்கிலீஷ் மீடியம்; இதற்கு ஏன் வகுப்பு எடுக்கிறாய்? ரொம்ப கஷ்டப்பட்டு தயார் செய்யனுமே என அப்போது கேட்பார்கள்; உண்மையில் தமிழ் மீடியம் பசங்களை விட இங்கிலீஷ் மீடியம் பசங்க intelligent. நாம சொல்லி குடுக்காமலே படிச்சுடுவாங்க. நம்ம வேலை ஈசி என்பேன். எனது மாணவர்களை எனது மகன்கள் போல தான் எப்போதும் நினைப்பேன். உங்க பேச்சு, செயல்கள் இவை எல்லாம் எங்களை ரொம்ப மகிழ்ச்சிக்குள்ளாக்கி இன்னும் பத்து வருடம் கூடுதலாய் வாழ செய்து விடும் என நினைக்கிறேன்"
திரு சீனிவாசன், கணக்கு ஆசிரியர்
நான் கணிதம் எடுத்தேன். மற்ற பாடங்களை விட கணக்கு சற்று வித்யாசமான் பாடம். மற்ற பாடங்களில் அறிவு பெறுவதை knowledge என்பார்கள் (English knowledge, Science knowledge). கணக்கில் அறிவு பெறுவதை Mathematical skills என்பார்கள். முழுக்க முழக்க பயிற்சி மூலமே அறிய வேண்டிய பாடம் கணக்கு.
முதல் நாள் வகுப்பிலேயே “Copying = Eating human waste” என்று போர்டின் ஓரத்தில் என எழுதி விடுவேன். அது உங்களில் சிலருக்கு இன்னும் நினைவில் உள்ளது அறிந்து ரொம்ப சந்தோசம். கணக்கில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் மற்றவரை காப்பி அடிக்க கூடாது; அடித்தால் வெல்ல முடியாது"
******
நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வந்த எங்கள் நண்பன் கண்ணனின் 12 வயது மகன் " நீங்க எல்லாம் நல்ல டீச்சர்ஸ் ஆக இருக்கீங்க; இது மாதிரி எல்லாம் எங்க டீச்சர்ஸ் இல்ல.. நீங்க எல்லாம் சென்னை வந்து எங்களுக்கு பாடம் எடுங்க" என்று பேசி கல கலப்பூட்டினான்.
நிகழ்ச்சியில் பேசிய பல ஆசிரியர்கள் " ஒரு மனிதன் முன்னுக்கு வருவதில் ஆசிரியர் ஒரு சிறிய பங்கு தான் வகிக்கிறார்; தனி மனிதனின் ஊக்கம் மற்றும் முயற்சியே அவரவர் முன்னுக்கு வர காரணம்" என பேசினர். " நன்றி உணர்ச்சி உள்ளவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னுக்கு வருவர்; அந்த விதத்தில் நாங்கள் செய்த உதவியை நினைவில் வைத்து எங்களை மகிழ வைத்த நீங்கள் நல்லபடி முன்னேறுவீர்கள்" என வாழ்த்தினர்.
குரூப் போட்டோ
விழா முடிந்து நண்பர்கள் சற்று கனத்த மனதுடன் பிரிந்தோம். நல்ல நிலையில் இருக்கும் இத்தனை பேர் ஒன்று கூடியது மகிழ்ச்சி; இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது; என்ன செய்வது என்பது குறித்து யோசித்தும் பேசியும் வருகிறோம்.
நெகிழ்ச்சியான சந்திப்பு....
ReplyDeleteநம்மை உருவாக்கிய சிற்பிகளை இத்தனை காலம் கழித்து சந்திப்பது ஒரு மகிழ்ச்சியான சம்பவம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
பாராட்ட தக்க முயற்சி. மிக நெகிழ்வான பகிர்வு மோகன்.
ReplyDeletewonderful meet...
ReplyDelete//"திரு சுதர்சனம், தமிழாசிரியர் "//
ReplyDeleteI think that's Tamil Pandit Ramasaamy.. (His son's name is Sudarsanam, who was your classmate).
I was also very happy, attending the function as the brother of one of your classmates. Me too got the opportunity to meet my teaches and also one of my classmates.
Finally.. It was me who photographed the group photo.
மோகன்,
ReplyDeleteஉண்மையில் மிகமிக நெகிழ்வானதொரு பகிர்வு.
நல்ல முயற்சி. வாழ்க்கையின் மிக நெகிழ்வான தருணத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeletevery happy to see all the teachers :)
ReplyDeletethanx
siva.
நன்றி சங்கவி, வெங்கட், ராஜாராம், கிருஷ்ண பிரபு, ராமசாமி கண்ணன், மன விழி சத்ரியன், சிவா
ReplyDelete***
மாதவன்: மிக்க நன்றி; நீங்கள் சுட்டிய தவறை சரி செய்து விட்டேன். தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி
விழா முடிந்து நண்பர்கள் சற்று கனத்த மனதுடன் பிரிந்தோம். நல்ல நிலையில் இருக்கும் இத்தனை பேர் ஒன்று கூடியது மகிழ்ச்சி; இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது; என்ன செய்வது என்பது குறித்து யோசித்தும் பேசியும் வருகிறோம்.
ReplyDelete...... Thats a very good idea. Best wishes!
Dear Mohan,
ReplyDeleteI have been reading your blog for quite some time without realizing that you are my batch mate in NHSS. Yes, I am also from 1985 (First group)batch. Are you from which group? Is this get together for only your class or for the entire +2?
Very happy to see our teachers in the photo after 25 years!!
Malarum Ninaivugal........
Please send me your phone number to me: vssravi@gmail.com
Let's talk over phone.....
Anbudan,
-Ravichandran
Hi Guys,
ReplyDeleteYour nostalgic trip makes me feel very jealous.
I wish there was some mechanism to locale my class mates of 68 Batch in Hindu High School Triplicane Chennai.
Or, my batch mates at CPT Taramani 71 batch.
We can also organise a meet and go down the memory lane.
longing
Shankar
நெகிழ்வான சந்திப்பு + உங்கள் பதிவு அருமை .
ReplyDeleteஎனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.
http://romeowrites.blogspot.com/
மீண்டும் பள்ளி ஞாபகங்கள்!!!!!
ReplyDeleteஆசிரியர்களையும் தோழர்களையும் மீண்டும் சந்திப்பதே ஒரு அருமையான அனுபவம்தான்.
பழைய நண்பர்களை சந்தித்தாலே சந்தோசம் தான்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
நெகிழ்வான தருணங்கள்.
ReplyDeleteMohan,
ReplyDeleteJust read your classmate -பெயர் சொல்ல விருப்பமில்லை posts and found that you are my junior. You are from 1985 SSLC batch whereas I am from 1985 +2 batch.
Anbudan,
-Ravichandran
//விழா முடிந்து நண்பர்கள் சற்று கனத்த மனதுடன் பிரிந்தோம். நல்ல நிலையில் இருக்கும் இத்தனை பேர் ஒன்று கூடியது மகிழ்ச்சி; இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது; என்ன செய்வது என்பது குறித்து யோசித்தும் பேசியும் வருகிறோம்//
ReplyDeleteரொம்ப சந்தோஷம். நீங்க மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி, நான் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி..
இதுபோல எங்க ஸ்கூல் மாணவர் ஒருவர் செய்த்தையும் பாருங்கள்
http://dbtrnhss.blogspot.com/2010/03/12.html
வாழ்த்துக்கள்..
Me too from the same school
ReplyDelete1993 passed out...
Took me back to my school days out there
-Thilak
நல்ல 12 மணி வெய்யிலில் எடுத்த குரூப் போட்டோவில் தெரிந்தவர்கள் யாராவது தெரிகிறார்களா என்று பார்த்தால்....ஹூகும் கிடைக்கவில்லை.
ReplyDeleteம(நெ)கிழ்ச்சியான சந்திப்பு!
ReplyDeleteMathematical 'Skills' என்பது 100% சரி!
arumai thala, nalla vishayam panniyirukkinga, kaiya kudunga.....
ReplyDeleteaamaa neenga manaargudiyaa? :-)
நன்றி சித்ரா
ReplyDelete***
ரவி: மிக்க மகிழ்ச்சி; தங்களுடன் உரையாடியதிலும் தங்கள் நட்பு கிடைத்ததிலும்...
***
நன்றி ஷங்கர்
***
ரோமியோ: நன்றி; அவசியம் பார்க்கிறேன்
***
சின்ன அம்மணி: சரிங்கோ
***
ஜெட் லி: நன்றி தம்பி
***
கேபிள்: நன்றி
***
சீமாச்சு: நன்றி நீங்கள் தந்த சுட்டி படிக்கிறேன்
***
திலக்: அட நீங்களும் நம்ம பள்ளியா? மகிழ்ச்சி
***
வடுவூர் குமார்: ஹா ஹா.. நீங்க இந்த பள்ளியில் படித்தீர்களா? இல்லையெனில் எப்படி நண்பா தெரியும்?
***
ரகு: ரைட்டு
***
முரளி: ஆம் எனது ஊர் நீடாமங்கலம் மன்னைக்கு அருகில் உள்ளது
மிகவும் நெகிழ்ச்சியான அந்த தருணங்களை மிகவும் அழகாக வருணித்து எழுதி இருக்கிறாய். உன் அளவுக்கு ஞாபகத்தோடு எழுதவில்லையே என்பதை நினைக்கும்போது வருத்தமாகத் தான் இருக்கிறது.
ReplyDelete//இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது; என்ன செய்வது என்பது குறித்து யோசித்தும் பேசியும் வருகிறோம் //
ReplyDeleteநல்ல எண்ணம். என் யோசனை:
நீங்கள் எல்லாரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள். +2 பரீட்சைக்கு பின் உங்கள் பள்ளி சென்று மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரியாத துறைகளை அறிமுக படுத்தலாமே? இது நீங்கள் எல்லாரும் சந்தித்து கொள்ளவும் ஒரு வாய்பாகவும் அமையும்..
அருமையான நிகழ்ச்சியை நடத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள் மோகன்.
ReplyDeleteநல்ல பகிர்வு சார்,
ReplyDelete//இனி பள்ளிக்கு அல்லது சமூகத்திற்கு பயன் படும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற யோசனை அனைவருக்கும் உள்ளது//
ரொம்ப மகிழ்ச்சி.
நன்றி.
ஹலோ, நானும் அதே பள்ளியில் தான் 1977 ஜூன் முதல் 1981 ஏப்ரல் வரை (1979 ல் SSLC ம், 1981 ல் +2 வும்) படித்தேன். மிக நல்ல முயற்சி மற்றும் நிகழ்ச்சி.
ReplyDeleteஅன்பின் மோகன் குமார்
ReplyDeleteசிறு வயதில் படித்த பள்ளி - பழைய ஆசிரியப் பெரு மக்கள் - பழைய நண்பர்கள் ( இப்பொழுதும் நண்பர்கள் தான் ) - அடடா அடடா - இந்த சந்திப்பிற்கு எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நண்பரே !
அட்டகாசம் போங்க !
நல்வாழ்த்துகள் மோகன் குமார்
நட்புடன் சீனா