Wednesday, June 9, 2010

வானவில் -சிங்கத்தின் சிங்கம்- ஆள்ரவுண்டர் அஷ்வின்

நீண்ட நாள் கழித்து வானவில் வருகிறது. நடுவில் வந்த இடை வெளிக்கு வேலை பளு ஒரு காரணம். அது முடிந்து நிமிர்ந்தால், பதிவுலகம் அமளி துமளி பட்டு கொண்டிருந்தது. நடக்கும் நிகழ்வுகள் பார்த்தால் எழுதும் எண்ணம் வர வில்லை. புதிதாய் எழுத வரும் பதிவர்கள் மிரண்டு போகும் அளவு, இந்த பதிவுலகில் நீடிக்கணுமா என்ற அளவில் இருந்தது. நல்ல வேலையாக புயல் சற்று ஓய்ந்துள்ளது; இனி வெளியே வரலாம் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. இது போல் மீண்டும் சில நிகழ்வுகள் நடந்தால், இவற்றை பார்ப்பதை விட குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே சிறந்தது என பல ப்ளாகுகள் மூட படலாம்.

டிவி பக்கம்

சூப்பர் சிங்கர் இறுதி போட்டி ஏனோ முழுசாய் களை கட்டலை..சித்ரா ஆளை காணும். மற்ற நடுவர்கள் எல்லாரையும் ஆஹோ ஒஹோன்னு பாராட்டுறாங்க (ஓட்டு போட போறது மக்கள் தானே? ) அல்கா தான் ஜெயிப்பார் என ரொம்ப நாள் முன்பிலிருந்து எழுதி வருகிறேன். மலையாள பெண் என ஓட்டுகள் குறைந்து விழவும் வாய்ப்பு உண்டு.. அப்புறம்.. இந்த ஷ்ரவன் என்ன உயரம்..!! கிட்ட தட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா அளவு உயரம். பார்க்கலாம் அடுத்த வியாழன் ஜூன் 17 யார் சூப்பர் சிங்கர் என இறுதி முடிவு தெரிஞ்சிடும்

நிஜ நான் அவன் இல்லை

நான் அவன் இல்லை சினிமா போல ஒரு நிகழ்வு நடந்துள்ளதை வாசித்தீர்களா? ரவிச்சந்திரன் என்ற மனிதர் கிட்ட தட்ட 17 பெண்களை ஏமாற்றியுள்ளான்; பலரை மணந்து அவர்களிடம் பணம் ஏமாற்றியுள்ளான். ஒரு பெண் போலிஸ் இவனிடம் பழகி விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளார்.. ரவிச்சந்திரன் கையில் மொபைலை தூக்கி பிடித்தவாறே செமையா போஸ் தருகிறான்.. பார்க்க சுமாராய் இருக்கும் இவன் " ஏமாற்ற ஆள் எப்படி இருக்கிறார் என்பதல்ல; பேச்சு தான் முக்கியம்" என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறான்.

சிங்கத்தின் சிங்கம்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் ஹிட் ஆவதே கஷ்டம்; இந்த நிலையில் சூர்யாவிற்கு தொடர் வெற்றிகள்.. சிங்கம் படம் ஹிட் என அனைத்து தரப்பும் சொல்கிறது. படம் இன்னும் பார்க்கலை.


அனுஷ்கா கண்ணடிக்கும் அந்த காட்சி மட்டும் அவ்வப்போது டிவியில் பார்த்து மகிழும் எண்ணற்ற சராசரிகளில் நானும் ஒருவன். இதற்கு நடுவே சூர்யாவின் சிங்க குட்டியும் (பையன்) ரிலீஸ். அசத்துங்க சூர்யா வாழ்த்துக்கள் !!

போபால் வழக்கு

மிகுந்த வேதனையும் வலியும் போபால் வழக்கு தீர்ப்பு கேட்டு வருகிறது. : " தாமதமாய் கிடைக்கும் நீதி மறுக்க பட்ட நீதிக்கு சமம்" ("Justice delayed is Justice denied ") என்பார்கள். இங்கு நீதி தாமதமாய் வந்தது மட்டுமல்லாது தவறாகவும் வந்துள்ளது. குற்றவாளிகள் இரு வருட தண்டனை; உடனே பெயிலில் வெளியே வந்து விட்டனர். என்ன கொடுமை இது!! முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் பிடிக்க படவே இல்லை!! கடுமையான தண்டனை இருந்தால், வெளி நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவர் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்க கூடும்.. நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!

கிரிக்கட் கார்னர்

ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் இரண்டாவதாக பாட்டிங் செய்த அணி தான் வென்றது. கவனித்தீர்களா? அதனால இந்தியா தோத்ததுக்கு காரணம் டாஸ் தான் என்று நிச்சயம் சொல்ல வாய்ப்பு இருக்கு :))

IPL-ல் கலக்கிய சிலர் அங்கு சென்று வழிந்தனர். IPL மேட்சில் பஞ்சாப் உடன் ரெண்டு பந்தில் ஒரு ரன் அடிக்க வேண்டிய நிலை; நம்ம அஷ்வின் தான் ஆடினார். முதல் பந்து கட்டை போட்டார். கடைசி பந்து அவுட் ஜெயிக்க வேண்டிய ஒரு மேட்ச் சென்னை மோசமாய் தோற்றது.... ஜிம்பாப்வே சென்ற அஷ்வின் அங்கு ஒரு மேட்சில் 38 ரன் எடுத்தார். இப்போது அவரை ஆசியா கப்புக்கு "ஆள் ரவுண்டர் " என்ற கேட்டகரியில் செலக்ட் செய்ததாக ஸ்ரீ காந்த் சொல்றார்!! நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்க முடியலை நாராயணா!!

28 comments:

  1. //இந்தியா தோத்ததுக்கு காரணம் டாஸ் தான் என்று நிச்சயம் சொல்ல வாய்ப்பு இருக்கு :))//

    தலை....

    நம்ம ஆளுங்க எங்க போனாலும் ஜெயிக்கமாட்டாங்க... அவர்களுக்கு மைதானத்தில் ஆடுவதைவிட இரவு நேர கேளிக்கை விடுதிகளில் ஆடுவதுதான் ரொம்ப பிடிக்குமாம்....

    ReplyDelete
  2. //புதிதாய் எழுத வரும் பதிவர்கள் மிரண்டு போகும் அளவு//

    பிரபல பதிவர்கள் பயந்து ஓடும் அளவு என்றும் சேர்த்திருக்கலாம்.

    //ஒரு பெண் போலிஸ் இவனிடம் பழகி விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளார்//

    பழகி......? (புரியலை)

    // சிங்கம் படம் ஹிட் என அனைத்து தரப்பும் சொல்கிறது//

    நானும் படம் பாத்துட்டேன். நல்லாத் தான் இருக்கு.

    //நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!//

    Too late!
    கற்பழிப்பு வழக்கில் முன்னாள் டி.ஜி.பி.க்கு வெறும் ஆறு மாத தண்டனை கொடுத்தபோதே இது தெரிஞ்சிடுச்சே!

    //கிரிக்கட் கார்னர்//

    "இன்னுமா நம்மளை இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு" என்று இந்திய டீம் அதிசயிப்பதாய் ஒரு தகவல்.

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வானவில்லைப் பார்த்ததில்/படித்ததில் மகிழ்ச்சி. போபால் தீர்ப்பு நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  4. :-))) வெல்கம் பேக்!!

    ReplyDelete
  5. உலககோப்பை கால்பந்து போட்டி ஆரம்பிக்க போகுது..
    அதை பத்தி எதுவும் எழுத மாட்டீங்களா??

    ReplyDelete
  6. வரதராஜலு : நன்றி சார்
    ********
    சங்கவி: ரொம்ப சூடா இருக்கீங்க
    ********
    பெயர் சொல்ல: நன்றி பெரிய பின்னூட்டம் ரசித்தேன்
    ********
    ஹுசைனம்மா: நன்றி மேடம்
    ********
    வெங்கட்: நன்றி இனி அவ்வபோதாவது எழுத முயல்கிறேன்
    ********
    வித்யா: நன்றி
    ********
    ஜெட்லி: நமக்கு கால் பந்து அதிகம் தெரியாது; கிரிக்கட் பார்த்து வாழ்க்கை இழந்த கூட்டத்தில் ஒருவன் :))

    ReplyDelete
  7. வணக்கம்ணா,

    வரும்போதே கதம்பமா சில தகவல்களைத் தொகுத்து இடுகை போட்டு அசத்திட்டீங்க.

    ReplyDelete
  8. for your information, Ashwin is good all rounder compare than Yusuf Pathan, you to check ranji trophy statistic and domestic statistic.

    ReplyDelete
  9. போபால் வழக்கு

    மிகுந்த வேதனையும் வலியும் போபால் வழக்கு தீர்ப்பு கேட்டு வருகிறது. : " தாமதமாய் கிடைக்கும் நீதி மறுக்க பட்ட நீதிக்கு சமம்" ("Justice delayed is Justice denied ") என்பார்கள். இங்கு நீதி தாமதமாய் வந்தது மட்டுமல்லாது தவறாகவும் வந்துள்ளது. குற்றவாளிகள் இரு வருட தண்டனை; உடனே பெயிலில் வெளியே வந்து விட்டனர். என்ன கொடுமை இது!! முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் பிடிக்க படவே இல்லை!! கடுமையான தண்டனை இருந்தால், வெளி நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவர் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்க கூடும்.. நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!


    ........ என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  10. நல்வரவு! :)

    ReplyDelete
  11. இந்த கொசு தொல்லை தாங்க முடியலை .....உண்மைதான் சரியா சொன்னிங்க

    ReplyDelete
  12. வாங்க மோகன் , எப்படியுள்ளீர்கள்.
    எழுதுங்கள், படிக்க நாங்க இருக்கிறோம்

    ReplyDelete
  13. ஆளாளுக்கு நாட்டாமையாக‌ மாறிப்போன‌தில் ப‌திவுல‌க‌ம் மேல் கொஞ்ச‌ம் வெறுப்பு வ‌ந்த‌து உண்மைதான். ஆனால் எழுத்தின் மேல‌ல்ல‌ :)

    //அனுஷ்கா கண்ணடிக்கும் அந்த காட்சி மட்டும் அவ்வப்போது டிவியில் பார்த்து மகிழும் எண்ணற்ற சராசரிகளில் நானும் ஒருவன்//

    நானும் நானும்!.........ப‌ட‌ம் பாருங்க‌, ந‌ல்ல‌ எண்ட‌ர்டெய்ன‌ர்!

    //நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!//

    ச‌ர்ச்சைக்குள்ளான‌ வ‌ழ‌க்குக்கே இந்த‌ நிலை..........ம்ம்...க‌டவுள்தான் காப்பாத்த‌ணும்

    அஷ்வின் தேர்வு - க‌ண்டுக்காதீங்க‌, ஸ்ரீகாந்த் தேர்வுக்குழு த‌லைவ‌ரா இருக்க‌ற‌ வ‌ரைக்கும்தான் த‌மிழ்நாட்டு ப்ளேய‌ர்ஸுக்கு சான்ஸ் ;))

    ReplyDelete
  14. சத்ரியன்: நன்றிங்கோ
    ****
    குட்டி: ரைட்டு .
    ****
    சித்ரா: ஆமாங்க
    ***
    ஷங்கர்: நன்றி
    ****
    Faidh : முதல் வருகைக்கு நன்றி
    ***
    காவேரி கணேஷ்: மிக்க நன்றி; இது மாதிரி வார்த்தைகள் ரொம்ப தெம்பு தரும்
    ****
    ரகு: ரசிச்சு எழுதிருக்கீங்க நன்றி

    ReplyDelete
  15. அனுஷ்காவை வீட்டுல வைச்சே சைட் அடிக்கிற மேட்டர் உங்க ஹவுஸ் பாஸுக்கு தெரியுமா..? :)

    ReplyDelete
  16. வெல்கம்மோ வெல்கம் :)

    //மிகுந்த வேதனையும் வலியும் போபால் வழக்கு தீர்ப்பு கேட்டு வருகிறது. : " தாமதமாய் கிடைக்கும் நீதி மறுக்க பட்ட நீதிக்கு சமம்" ("Justice delayed is Justice denied ") என்பார்கள். இங்கு நீதி தாமதமாய் வந்தது மட்டுமல்லாது தவறாகவும் வந்துள்ளது. குற்றவாளிகள் இரு வருட தண்டனை; உடனே பெயிலில் வெளியே வந்து விட்டனர். என்ன கொடுமை இது!! முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் பிடிக்க படவே இல்லை!! கடுமையான தண்டனை இருந்தால், வெளி நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவர் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்க கூடும்.. நீதி மன்றங்களில் மக்களுக்கு நீதி கிடைக்கா விடில் நம் நாட்டில் வேறு எதை தான் சாதாரண மனிதர்கள் நம்புவது!!

    //


    ஒரு வழக்கறிங்கரான நீங்களே நொந்துகொள்ளும் அளவில் இருக்கு தீர்ப்பு :((

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கேபிள்: அனுஷ்கா உங்க favourite-ஆமே?
    ***
    வாங்க அப்துல்லா நன்றி
    ***
    நன்றி ரமேஷ் @ சிரிப்பு போலிஸ்

    ReplyDelete
  19. சூர்யாவுக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிடறேன்!

    ReplyDelete
  20. //நிஜ நான் அவன் இல்லை//
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் நிச்சயம் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்... கதம்பம் மணக்கிறது...தஞ்சாவூர் பாஸையில்.

    //பதிவுலகம் அமளி துமளி பட்டு கொண்டிருந்தது//
    எங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரிய மாட்டேங்குது. அப்படியா? அதெல்லாம் பெரியவங்க சமாசாரம் போலருக்கு!

    ReplyDelete
  21. இதை ப்ளாக் திரும்பல் என்று எடுத்துக் கொள்ளலாமா, திரு மோகன் குமார்.
    விடாமல் எழுதுங்கள்..படிக்க நாங்கள் இருக்கிறோம்! இனி வரும் நாட்கள், எழுத்து உங்கள் ஸ்வாசமாய் இருக்கட்டும்!!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  22. உங்கள் எழுத்துக்களில் ஒரு சமுதாயப் பொறுப்புணர்வு இருக்கிறது.CSR போல,
    இது WSR WRITERS SOCIAL RESPONSIBILITY. அதற்காகவாவது, நீங்கள் எழுத வேண்டும்!!

    ReplyDelete
  23. ஒரு வழக்கறிஞரே ஒரு வழக்கின் தீர்ப்பை விமர்சிக்கிறார், அடடா ஆச்சரியக்குறி !!!

    ReplyDelete
  24. vanavil indha vaaram varnajalam!

    ReplyDelete
  25. வானவில் தொகுப்பு நன்றாக இருக்கிறது! மேலும் தொடருங்கள்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...