Friday, June 25, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

18 comments:

  1. nalla yennankalai solirukinga..ungal ithayam vaazhaga...

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷ்-ல் என் பதிவும் வந்துள்ளது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  2. நல்ல பயணள்ள தகவல்கள். நன்றி

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  3. பயனுள்ள நல்ல தகவல்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. Anonymous6:17:00 PM

    naala thagavalgalnantre nanbra

    ReplyDelete
  5. watching TV for a long time, really increases body weight.

    If possible one should go by walk for buying daily things like, veg, milk etc.. if the distance is not far off.

    If u r living in apartments, once a week use stair case.. do some walk during free time.. This is b'cos we use machines for everything leaving no physical work for our body.

    Nice informations.. thanks dear Mohan Sir.

    ReplyDelete
  6. மிக்க நன்றி :
    குரு
    ரவிச்சந்திரன்
    வெங்கட்
    உமா
    மாதவன்

    ReplyDelete
  7. நல்ல ஆலோசனைகள்.
    நல்ல தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  8. I remember reading these in a brochure. Easy to follow instructions. தமிழில், பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உபயோகமுள்ள பதிவு பாஸ் ..

    ReplyDelete
  10. ரொம்ப அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் மோகன். நன்றி.
    :)

    ReplyDelete
  11. பயனுள்ள, பின்பற்றவேண்டிய யோசனைகள்.!

    ReplyDelete
  12. மிக உபயோகமான, நண்பர்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய பதிவு.

    ReplyDelete
  13. Anonymous12:55:00 PM

    useful info.

    ReplyDelete
  14. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
    இது உண்மை, இந்த வகையில்தான் நான் மிகவும் பாதிக்கப் படுகிறேன், இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன், நன்றி.

    ReplyDelete
  15. இதயப்பூர்வமான நன்றி.

    ReplyDelete
  16. தமிழ் உதயம்: நன்றி
    *********
    நன்றி சித்ரா
    *********
    அட விதூஷ் & வித்யா !! அடுத்தடுத்து ரெண்டு வித்யா!!நன்றி !
    *********
    ரோமியோ : நன்றி
    *********
    நன்றி சின்ன அம்மணி
    *****
    வாங்க சுரேகா அதிசயமா நம்ம வலை பக்கம் : நன்றி
    *********
    ஜெயதேவா: சரியா சொன்னீங்க ; எல்லோருக்கும் இது பொருந்தும்
    ******
    அப்துல்லா: அண்ணே வணக்கம்; நன்றிக்கு நன்றி

    ReplyDelete
  17. அவசியமான பதிவு. அருமையான பகிர்வு. நன்றி

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல்கள் ...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...