Tuesday, August 3, 2010

வானவில் - எந்திரனும் களவானியும்

எக்கச்சக்க வேலை பளு. அஞ்சு நாளா உடம்பு சரியில்லை. ஜூரம் அதிகமா இருந்தும் தொடர்ந்து அலுவலகம் வர வேண்டிய சூழல். எனவே தான் கொஞ்ச நாளாய் பதிவுகள் எழுதலை. வந்து பார்த்து ஏமாந்த நண்பர்கள் மன்னிக்கவும்.


***************

ஜீஜிக்ஸ் : ஒரு அறிமுகம்

ஜீஜிக்ஸ் என்ற புதிய திரட்டி வாரா வாரம் சில ப்ளாகர்களை கௌரவிக்கிறது. இவர்களிடமிருந்து

எனக்கு சமீபத்தில் வந்த ஒரு இ மெயிலை தங்களுடன் பகிர்கிறேன்:

சென்ற வார சிறந்த எழுத்தாளராக தேர்வு பெற்றிருக்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !!.

உங்கள் படைப்புகளை சமூகம் சார்ந்த வளர்ச்சிக்கு ஆதரவாக எழுதுங்கள்.

ஆக்ரோஷமாய் வளர்வோம் !!

நன்றி

ஜீஜிக்ஸ் குழு

http://www.jeejix.com/Post/Show/321/சென்ற%20வார%20சிறந்த%20எழுத்தாளர்கள்
ம்ம்.. கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு

நமது ப்ளாகை பார்வையிட்டோர் எண்ணிக்கை ( Page Hits ) 50,000 ஐ கடந்துள்ளது. இது இன்னொரு சிறு மகிழ்ச்சி..

****

களவாணி: சிறு பார்வை

களவாணி பார்த்தோம். பள்ளி பெண் காதலிப்பதாக, திருமணம் செய்வதாக காட்டும் தவறான கதை. இத்தகைய அலைகள் ஓய்வதில்லை டைப் பள்ளி காதல்கள் எனக்கு பிடிப்பதில்லை. இத்தகைய படங்கள் பார்த்து குறைந்தது பத்து பேராவது கேட்டு போவார்கள் என்பது நிச்சயம். பள்ளி பருவத்தில் வருவது calf love தான். அது பெரும்பாலும் நிலைப்பதில்லை.
நிற்க. அதை தவிர்த்து களவாணி படம் செம காமெடி. கஞ்சா கருப்பு பகுதிகள் விழுந்து விழுந்து சிரித்தேன். போலவே ஹீரோ மாட்டு வண்டி ஓட்ட அப்போது ஹீரோயின் இடம் இருந்து போன் வந்ததும் அப்படியே விட்டு விட்டு இறங்கி பேச ஓடி விடுவார். மாடுகள் பக்கத்து வயலை மேய போயிடும். வண்டி பின்னால் இருக்கும் பெண்கள் பேசும் பேச்சு மற்றும் ரியாக்ஷன் செம சிரிப்பு. மறுபடி போன் வர அந்த ரெண்டு பெண்களும் மறுபடி குசுகுசுப்பாங்க.. ரசிச்சு சிரிக்கிற மாதிரி இருக்கு பல காமெடி காட்சிகள் .

படத்தில் எங்க தஞ்சையை அழகா பசுமையா பார்க்க சந்தோஷமா இருந்தது.

****

கிரிக்கட் கார்னர்

சச்சின் 48 ஆவது செஞ்சுரி அடித்தது அசத்தல். மிக அதிக டெஸ்ட் ஆடிய பெருமையும் தலைக்கு கிடைத்துள்ளது. ஆனால் ஒன் டேயில் இவரை விட ஜெய சூரியா சில மேட்சுகள் அதிகம் ஆடியுள்ளாராம்! விரைவில் அதையும் தாண்டுவார்.

சச்சின் , ரைனா ஆட்டம் தவிர இந்திய அணியில் சொல்லிக்கிற மாதிரி வேற ஒன்னும் இல்லை. குறிப்பா பவுலிங் .. சுத்த மோசம்..

எந்திரன் : கிளிமான்ஜோரோ


எந்திரன் பாடல்களில் தற்போதைக்கு பிடித்தது " கிளிமான்ஜோரோ " தான். சின்மயிக்காகவே பிடிக்குமுங்க...அதோட இந்த பாட்டின் பீட் அட்டகாசம்.

ரசித்த SMS:

It is not what we have makes a difference, but how we use what we have makes the difference.

29 comments:

  1. .


    //ப்ளாகை பார்வையிட்டோர் எண்ணிக்கை ( Page Hits ) 50,000 ஐ கடந்துள்ளது. இது இன்னொரு சிறு மகிழ்ச்சி//

    பாராட்டுகள் மோகன்.
    ரேகா ராகவன்.

    ReplyDelete
  2. ப்ளாக் இருக்க‌ட்டும்..உட‌ல் ந‌ல‌த்தைப் பாருங்க‌ முத‌ல்ல‌

    நீங்க‌ளும் ர‌வுடியாயிட்டீங்க‌..வாழ்த்துக‌ள் :))

    நானும் பார்த்துட்டேன். ச‌மீப‌த்தில் பார்த்த‌தில்‌ க‌ளவாணிதான் ர‌சிக்க‌ற‌ மாதிரியிருந்த‌து

    ச‌ச்சின்கிட்ட‌ இன்னொரு செஞ்சுரி எதிர்பார்க்கிறேன் மூன்றாவ‌து டெஸ்ட்டில்

    எந்திர‌ன்...இன்னும் பாட‌ல்க‌ள் கேக்க‌ல‌ :(

    ReplyDelete
  3. //நமது ப்ளாகை பார்வையிட்டோர் எண்ணிக்கை ( Page Hits ) 50,000 ஐ கடந்துள்ளது. இது இன்னொரு சிறு மகிழ்ச்சி.. //

    பாராட்டுக்கள் மற்றும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    //ஆனால் ஒன் டேயில் இவரை விட ஜெய சூரியா சில மேட்சுகள் அதிகம் ஆடியுள்ளாராம்! விரைவில் அதையும் தாண்டுவார். //

    நிச்சயமா. சூர்யாதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே. நம்ம ஆளு 2011 உலககோப்பை வரை நிச்சயம் அடிச்சி ஆடுவாரே.

    //குறிப்பா பவுலிங் .. சுத்த மோசம்.. //

    என்னாது பவுலிங்கா? அப்பிடின்னா?

    என்ன ஆச்சிங்க அய்யாசாமிய காணோம். காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு-ல சேத்துடலாமா?

    ReplyDelete
  4. நீங்களும் பிரபல பதிவராக ஆனதற்கு வாழ்த்துக்கள்..

    உடல் நலம் முக்கியம்... அதை கவனித்துக் கொள்ளுங்கள்..

    தமிழ் மணத்தில் இணைத்து... ஒரு ஓட்டும் போட்டாச்சு... (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..)

    ReplyDelete
  5. //அஞ்சு நாளா உடம்பு சரியில்லை.//

    டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்.

    ReplyDelete
  6. அலைகள் ஓய்வதில்லை டைப் பள்ளி காதல்கள் எனக்கு பிடிப்பதில்லை////

    எனக்கும் தான். இன்றைய சமுதாய சூழலில், யாரையும் வாழ வைக்க வேண்டாம். கெடுக்காமலாவது இருக்கலாமே. .

    ReplyDelete
  7. Get well soon!


    50,000 hits! Congratulations!

    ReplyDelete
  8. களவானி படத்துல ஒரு சீன் நம்ம நேஷனல் ஸ்கூல் காமிக்கறாங்களே, அதைச் சரியா கவனிக்கலையோ (கிரிக்கெட் மேச்சுக்கு வசூல் பண்ண மன்னார்குடி வருவாங்களே, அந்த சீன்)

    ReplyDelete
  9. பாராட்டுகள் மோகன்

    ReplyDelete
  10. முதலில் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும்.
    உங்கள் வலைப் பதிவில் புதிய பதிவு இல்லையென்பதால் மட்டுமே நான் ஏமாற்றம் அடையவில்லை..
    எனது புதிய பதிவுகளில் உங்களின் கருத்துக்கள் பின்னூட்டமாக இல்லாதது கண்டும், ஏமாற்றம் அடைந்தேன்..
    -- இப்போ வந்துவிட்டீர்கள், இரண்டும் சரியாகிவிடும்..

    ReplyDelete
  11. பார்வையிட்டோர் எண்ணிக்கை 50000 கடந்ததற்கு பாராட்டுக்கள் மோகன். உடல் நலமே முதல், வலைப்பூவும் பதிவுகளும் இரண்டாவதே.

    ReplyDelete
  12. நல்ல பகிர்வுகள்.

    take care mohan.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. take care mohan...அய்யாசாமிய கேட்டதா சொல்லுங்க :)

    ReplyDelete
  15. வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. அய்யாசாமி இல்லாமல் ஒரு வண்ணம் குறைந்தது போல ஒரு ஃபீலிங்ஸ்..!

    உடம்பு தேவலையா ஜி!

    50000 வாழ்த்துகள்!

    ---

    இராகவன் நைஜிரியா said
    //தமிழ் மணத்தில் இணைத்து... ஒரு ஓட்டும் போட்டாச்சு... (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..)//

    :))
    சிங்கம் களமிறங்கப் போகுது போல!

    ReplyDelete
  17. நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி. தனி தனியே பதில் எழுத தற்சமயம் நேரம் இல்லை. அனைவருக்கும் அன்பும், நன்றியும்..

    ReplyDelete
  18. Take care sir..Get well soon !!
    Congrats for hitting 5k :)

    ReplyDelete
  19. ஆவ்வ்வ்.அதான் குரல் டல்லா இருந்துச்சா? பார்த்துக்கொங்க பாஸ்..

    ReplyDelete
  20. உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  21. 50,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. Take care Mohan...

    களவானி படம் எனது சொந்தங்கள் வாழும், ஒடி விளையாண்ட பக்கத்து ஊர்களான எட கீழையூர், எட மேலையூர் கிராமங்களில் எடுத்த படம். நம் ஊரை வெள்ளித்திரையில் முதன் முதலில் பார்த்தபோது அளவில்லா மகிழ்ச்சி. படம் அருமை... கலக்கல். இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று ஒரு வாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கவில்லை.... சீக்கிரம் எனது பார்வையில் எழுதுகிறேன்.

    தல சச்சின் சீக்கிரம் 50 டெஸ்ட் சதங்கள் அடிக்க வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  23. viewers 50000! மட்டற்ற மகிழ்ச்சி சார் உங்கள் வளர்ச்சி!

    ReplyDelete
  24. Need not publish this.

    I called you for one 'தொடர்பதிவு'
    link http://madhavan73.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  25. சார், உடல் நலத்தைக் கவனியுங்கள்.
    50,000 வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மோகன்,

    ”களவாணி” படம் பற்றிய என் பார்வை:

    http://vssravi.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  27. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete
  28. endhiran paadalgal patri nammoda padhivai padinga. nalla irukka paarunga mohan.
    http://mannairvs.blogspot.com/2010/08/blog-post_03.html

    anbudan RVS

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...