Monday, September 13, 2010

ஒரு கவிதையும், ஒரு அறிவிப்பும்..

சுயம்

எவரோ அமர்ந்து போன
இருக்கைகளில் தான்
அமர்கிறேன் ..

முன்னவர் விட்டு போன
வேலைகளை தான்
செய்து முடிக்கிறேன்

யாரோ உள்ளிழுத்து விட்ட
மூச்சைத்தான்
சுவாசிக்கிறேன்

முகம் தெரியாதவர் நடந்து போன
சுவடுகளில் தான்
பாதம் பதிக்கிறேன்

முன்னர் எவரோ பேசிய
வார்த்தைகளையே
பேசி திரிகிறேன்

யாரோ வாழ்ந்து விட்டு
மிச்சம் வைத்த வாழ்வைத்தான்
வாழ்ந்து கழிக்கிறேன்

இதுவரை இல்லாத
இனியும் இருக்க முடியா
சுயம் வாய்த்திடுமோ - என்றைக்கேனும் ?

***
அறிவிப்பு 


நண்பர்களே, அடுத்த ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பை ஏற்று வலைச்சரத்தில் எழுதுகிறேன். அடுத்த ஏழு நாட்களில் எனக்கு தெரிந்த, நான் வாசிக்கும் பதிவர்கள் சிலரை அங்கு அறிமுகபடுத்துவேன். வாசித்து ஊக்குவியுங்கள். நன்றி 

26 comments:

  1. Anonymous8:44:00 AM

    அருமையா இருக்கு அண்ணே!
    சுயமானதல்ல சுயம்!

    ReplyDelete
  2. அருமையா இருக்குங்க

    ReplyDelete
  3. அருமையான கவிதை.
    வலைச்சரத்திலும் கலக்குங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கவிதை நல்லாருக்கு.

    வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நிதர்சனமான விஷயம்..


    வலைச்சரத்துல பார்ப்போம்

    ReplyDelete
  6. நல்ல சிந்தனையைத் தூண்டும் கவிதை.
    வலைச்சரத்தில் எழுதுவது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. சுயத்தை சுட்டு வாழ்க்கை நடத்துகிறோம். நல்லா இருக்கு மோகன்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  8. oh!.. just y'day thought / wondered why no new posts in your blog.

    All the best to perform well in 'valaicharam' (anbin cheena's page)

    ReplyDelete
  9. கவிதை நன்று. வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. கவிதை நல்லா இருக்கு மோகன்.

    ReplyDelete
  11. கவிதை அருமை... வாழ்த்துக்கள் மோகன்!!

    ReplyDelete
  12. நிதர்சனமான கவிதை. ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  13. //இனியும் இருக்க முடியா//

    அருமை. நல்ல கவிதை.

    வலைச்சரத்தில் வாழ்த்திவிட்டுதான் வருகிறேன். இங்கும் என் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  14. கவிதை நல்லாயிருக்குங்க...

    வலைச்சர ஆசிரியராகவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. எல்லோருமே எதோ ஒரு விதத்தில் ‘சுயம்’ இழந்தவர்கள் தான் போலும்!

    ReplyDelete
  16. Balaji saravana
    செல்வராஜ் ஜெகதீசன்
    Chitra
    Vidya
    பின்னோக்கி
    அமைதி அப்பா
    RVS
    Madhavan
    Vidhoosh
    என். உலகநாதன்
    Manikandan
    கோவை2தில்லி
    ராமலக்ஷ்மி
    க.பாலாசி
    ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

    அனைவருக்கும் மிக மிக நன்றி;

    ReplyDelete
  17. கவிதை ரொம்ப எதார்த்தமா நல்லா இருக்கு மோகன். ஆனா ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்த ஞாபகம். அப்படியா?

    ReplyDelete
  18. கவிதை ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  19. பல்லுக்கு பல்லுன்னு போய்க்கிட்டு இருக்கிற இந்த பொழப்ப 'சுயம்' வெட்டவெளியில விட்டுட்டு போகுது!

    ReplyDelete
  20. இதுவரை இல்லாத
    இனியும் இருக்க முடியா
    சுயம் வாய்த்திடுமோ - என்றைக்கேனும் ?

    மிகவும் ரசித்த வரி.

    ReplyDelete
  21. வலைச்சரத்திலா.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. நல்லா இருக்கு

    ReplyDelete
  23. அருமையான வரிகள்.
    கவிதை சூப்பர்ங்க.

    ReplyDelete
  24. எப்ப‌டியிருக்கீங்க‌?

    வ‌லைச்ச‌ர‌த்திலெழுதுவ‌த‌ற்கு வாழ்த்துக‌ள். ர‌வுடின்னா இப்ப‌டித்தான் ;))

    ReplyDelete
  25. கவிதை அழகு... வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியர் பொறுப்பை நயமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    வெங்கட்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...