Tuesday, July 31, 2012

தாஜ்மஹால்-அறியாத தகவல்-பார்க்காத படங்கள்-நேரடி அனுபவம்





மும்தாஜ் 1631-ல் இறந்ததும், அடுத்த வருடமே தாஜ் மகாலை கட்டும் முயற்சியில் இறங்கி விட்டார் ஷாஜஹான். 22 வருடங்கள் கட்டப்பட்டு 1653-ல் முடிக்கப்பட்டுள்ளது தாஜ்மஹால். ஒரு நாளைக்கு 20,000 பேர் கட்டிட வேலை பார்த்தனராம். அப்போது ஆன செலவு இருபது கோடி (அப்போது தங்கம் விலை ஒரு பவுனுக்கு 15 ரூபாய்)

தாஜ்மஹாலில் இருந்து சில விலை உயர்ந்த பொருட்களை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் லார்ட் பெனெடிக்ட் எடுத்து சென்று விட்டாராம். ஆனால் அதன் பின் வந்த லார்ட் கர்சன் அவற்றை இங்கு கொண்டு வந்து வைத்ததுடன் அதற்கு பிராயச்சித்தமாக விலை உயர்ந்த சாண்ட்லியர்கள் இங்கு வைத்தாராம் !

அசநாம் கான் என்கிற சிறந்த, திறமையான மனிதர் இங்குள்ள சுவர்களில் caligraphy முறையில் எழுதி உள்ளார்.


Caligraphy writing

கீழிருந்து மேலே பார்த்தாலும் கீழே உள்ள எழுத்துக்கள் எந்த சைசில் தெரிகிறதோ அதே அளவு சைசில் மேலே உள்ள எழுத்துக்களும் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி கீழே சின்னதாயும் மேலே பெரிதாயும் எழுதி உள்ளார்.


சாய்வான tomb-களை பாருங்கள்
தாஜ் அருகே இருக்கும் Tombs- ஒரு வேளை சாய்ந்து விழுந்தால் கூட அது தாஜ் கட்டிடம் மீது விழாத படி அமைக்க பட்டுள்ளது. தாஜுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது என எவ்வளவு பார்த்து பார்த்து செய்துள்ளனர் பாருங்கள் !

தாஜ்மஹாலில் என்னென்ன வசதி உண்டு என்று இந்த பலகை சொல்கிறது


தாஜ்மஹாலில் தடை செய்யப்பட்டவை இவை



தாஜ் மஹால் உள்ளேயே தனக்கும் கல்லறை வேண்டும் என்று இடம் ஒதுக்கி இருந்தார் ஷாஜகான். ஆனால் அவர் மகன் ஒளரங்கசீப் இதற்கெல்லாம் தனி இடம் மற்றும் செலவு செய்ய முடியாது என மும்தாஜ் அருகேயே தந்தை ஷாஜஹானையும் புதைத்து விட்டார். இப்போது கணவன்- மனைவி இருவரையும் புதைத்த இடத்தை அருகருகே நாம் பார்க்கலாம்.

இருவரும் புதைக்க பட்ட இடம் அருகே புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவா சொல்லியபடியே இருந்தபோதும் வேறு சிலர் எடுப்பதை பார்த்து நான் படம் எடுத்து விட்டேன். இருளில் எங்கிருந்தோ ஓடி வந்து என்னை பிடித்து விட்டார். இனி எடுக்கலை என்று சாரி சொன்னபின் விட்டார்.

நிறைய பிளாஷ் அடிப்பதால் அந்த இடத்தின் இயற்கை அழகு கெட்டு விடும் என்று  உயர் நீதி மன்றம் இந்த ஆணை பிறப்பித்துள்ளது.

**********
தாஜ் மஹால் குறித்த BBC -யின் அரிய வீடியோ - நண்பர் தாஸ் பகிர்ந்தது இங்குள்ளது. 45 நிமிடம் ஓடும் இந்த வீடியோ. நேரம் இருக்கும் போது பாருங்கள்.



தாஜ்மஹாலுக்கு வந்த போது டயனா தனியாக படம் எடுத்து கொண்டார். "Symbol of love" -ல் தனியாக படம் எடுத்து கொண்டார் பாவம் டயானா.. " என பத்திரிக்கைகள் எழுதின.

ஒரு புகைப்பட கண்காட்சி இங்குள்ளது. அதில் உலக தலைவர்கள் பலரும் இங்கு வந்த போது எடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.

தாஜுக்கு நூறு மீட்டர் தூரத்துக்கு எந்த பில்டிங் கட்டவும் அனுமதி இல்லை.

பாட்டரி காருக்கு மாற்று இந்த குதிரை வண்டி


தாஜ் இருக்கும் அதே சாலையில் தொழு நோய் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. தாஜ் உள்ள சாலையில் எடுத்த வீடியோ பாருங்கள்



வெளியே வந்ததும், நாம் தமிழர்கள் என தெரிந்து கொண்டு அங்குள்ள கடைகளில் உள்ளோர் தமிழில் பேசுகிறார்கள். "வாங்க. தண்ணி பாட்டில் இருக்கு" என்று கூப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது (வட நாட்டினர் ஆங்கிலமே பேச மாட்டார்கள் இதில் தமிழ் எப்படி?)

தாஜ் பார்த்து விட்டு இறங்கும் படிகள் 

தாஜ் முன்பு இரவுகளிலும் பார்க்க அனுமதிக்க பட்டது. இப்போது பௌர்ணமிக்கு சில நாட்கள் முன்பு மட்டும் இரவில் பார்க்க அனுமதிக்கிறார்கள். அப்போதும் சற்று தூர இருந்து அழகை மட்டும் தான் ரசிக்க முடியும். உள்ளே போக முடியாது போலும்.



தாஜ் அருகே ஒரு அம்மா- அப்பா தமிழில் பேசி கொண்டது:

"நல்லா பாத்துக்கடா தாஜ்மஹாலை. மறுபடி பாக்க முடியாது" - இது அம்மா

" அவன் டில்லி வரும்போது பார்ப்பான்" -அப்பா

" டில்லிக்கு எப்பங்க வர போறான்"

" அவன் ஐ.எ. எஸ் படிப்பான் இல்லை.. அப்ப இண்டர்வியூவுக்கு டில்லி தான் வருவான்"

இவர்கள் இவற்றை சொன்ன பையனுக்கு வயது 8 !

****

ஆக்ரா பயணம் முடிந்தது. அடுத்து சிம்லா !

அடுத்த பதிவில்.. சிம்லா செல்லும் அட்டகாசமான குகை ரயிலில் (வித்தியாச அனுபவத்துடன்) பயணமாவோம்  வாருங்கள் !

59 comments:

  1. காலை வணக்கம்..தாஜ் மகால் போகலைனாலும் உங்க பதிவ படிச்ச பின்னாடி போன ஒரு பீலிங்..

    ReplyDelete
  2. ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது..அடுத்து சிம்லா வா,,,>அசத்துங்க...

    ReplyDelete
  3. கண்டிப்பா போய் பார்க்கணும் அப்படிங்கிற ஆவலை உண்டாக்கி விட்டீர்.தாஜ்மஹால் பற்றிய தகவல்கள் அருமை..அப்புறம் நூர்ஜகான் பத்தி ஒரு எஸ் எம் எஸ் படிச்சு இருக்கேன்..அது உண்மையா ..?

    ReplyDelete
  4. தகவல்களுடன் பகிர்வு நன்று. முதல் படம் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  5. சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. ரஜினி ஒரு தடவை சொன்னா நூறுதடவை
    சொன்ன மாதிரின்னுதான் சொன்னார்

    ஆனால் நீங்க்க ஒரு தடவை ஒரு ஊரைப்பார்த்தா
    அதை ஆயிரம் பேரு பார்த்த மாதிரி மிக மிக
    அழகாய் பதிவு செய்துவிடுகிறீர்களே

    அடுத்தது சிம்லா பார்க்க ஆவலாக உள்ளோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. உங்க ஹவுஸ்பாஸ் உடன் ஜோடியா தாஜ்மஹால் முன் படம் எடுத்திங்களா.....? எடுத்தா வீட்டுல பிரேம் போட்டு மாட்டிவைங்க....!

    எடுக்கலைன்னா என் கமெண்ட்டை டெலிட் பண்ணிருங்க பாவம் என்னால நீங்க அடிவாங்க வேண்டாம் அவ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  9. அருகில் சென்று பார்த்த உணவு...

    அண்ணே சிம்லா சென்று வந்து ஒரு மாதம் இருக்குமா???

    ReplyDelete
  10. //தாஜ் மஹால் உள்ளேயே தனக்கும் கல்லறை வேண்டும் என்று இடம் ஒதுக்கி இருந்தார்//

    ’கல்லறை’ என்று சொல்வதைவிட அவர் கட்ட நினைத்தது ‘தாஜமஹால்’இன் replica ஆனால், கருப்பு கற்களில் (ஏனென்றால் அது தாஜ்மஹாலின் நிழல் போலத் தோற்ற்ம் அளிக்கும் என்பதே).

    நல்ல நீண்ட விவரமானத் தகவல்கள்.

    ReplyDelete
  11. மும்தாஜ்ஜுன்னு இருக்கணும். நூர்ஜஹான் ஜஹாங்கீரின் மனைவி!

    அடுத்து ...

    ஆஹா......... சிம்லாவுக்கு ரயில் பயணமா!!!!!

    கொடுத்துவைக்கலையே .... எனக்குக் கொடுத்து வைக்கலையே:(

    காரில் போயிட்டு வந்தேன்.

    ReplyDelete
  12. //மும்தாஜ்னு இருக்கணும் //

    இதுக்கு தான் நம்ம டீச்சர் வேணும்கிறது. மாத்திட்டேன் டீச்சர்.

    டீச்சர்: நான் சொன்னா நீங்க கோபிக்க கூடாது.

    நீங்க பல இடம் சுத்தி பாக்குறீங்க. ஆனா நீங்கள் போகாத குகை ரயிலில் நான் போயிருக்கேன் என்பது ஸ்கூல் படிக்கும் சின்ன பிள்ளைங்க பந்தா விட்டுக்குற மாதிரி எனக்கு குஷியா இருக்கு :)

    ReplyDelete
  13. நோ ஒர்ரீஸ் ! எஞ்சாய்:-))))))

    ReplyDelete
  14. கலக்கல் படங்கள்! கலக்கல் கட்டுரை!

    ReplyDelete
  15. மிகவும் ரசனையான அனுபவத்தை அருமையான படங்களுடன் விவரித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  16. போட்டோ எடுக்க கூடாதுன்னு சொன்னபிறகு எடுத்தே ஆகணும்னு வர்ற ஆசையை எப்படி கட்டு படுத்த...?! :)

    அதான் நானும் அப்டி இப்டி பார்த்து இரண்டு கிளிக் அடிச்சேன்... :)

    அற்புதமான நினைவுகளை உங்களின் இரு பதிவுகளும் மீண்டும் நினைவு படுத்துகிறது.

    அரிய விடியோ அருமையாக இருக்கிறது...(பாதி தான் பார்க்க இப்ப டைம் கிடைச்சது) அடுத்து முழுசா பார்க்கணும்.

    உங்களின் விவரிப்புகள் சுவாரசியம்!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //மும்தாஜ்ஜுன்னு இருக்கணும். நூர்ஜஹான் ஜஹாங்கீரின் மனைவி!//

    மும்தாஜ்-இன் அத்தை தான் நூர்ஜஹான். ஷாஜகானின் சிற்றன்னை நூர்ஜஹான் [ஜஹான்கீர்-இன் 20-ஆவது மனைவி; ஜஹான்கீர் அவருக்கு 2-ஆவது கணவர்]

    ReplyDelete
  18. அட்டகாசமான படங்கள்.

    மிக்க நன்றி சார்.
    (த.ம. 8)

    ReplyDelete
  19. \\மும்தாஜ் 1860-ல் இறந்ததும், அடுத்த வருடமே தாஜ் மகாலை கட்டும் முயற்சியில் இறங்கி விட்டார் ஷாஜஹான். 22 வருடங்கள் கட்டப்பட்டு 1883-ல் முடிக்கப்பட்டுள்ளது தாஜ்மஹால். ஒரு நாளைக்கு 20,000 பேர் கட்டிட வேலை பார்த்தனராம். அப்போது ஆன செலவு இருபது கோடி (அப்போது தங்கம் விலை ஒரு பவுனுக்கு 15 ரூபாய்) \\ This estimate is not giving the real picture & not helping to appreciate its magnificence. பேசாம இன்னிக்கு அது மாதிரி கட்டனும்னா எவ்வளவு செலவாகும்னு சொன்னா, Taj-ன் மதிப்பை appreciate செய்ய வசதியாய் இருக்கும்.

    ReplyDelete
  20. \\தாஜ்மஹாலில் தடை செய்யப்பட்டவை இவை \\
    \\ உயர் நீதி மன்றம் நிறைய பிளாஷ் அடிப்பதால் அந்த இடத்தின் இயற்கை அழகு கெட்டு விடும் என்று இந்த ஆணை பிறப்பித்துள்ளது. \\
    \\தாஜுக்கு நூறு மீட்டர் தூரத்துக்கு எந்த பில்டிங் கட்டவும் அனுமதி இல்லை. \\

    இந்த சமாதிக்கு குடுக்கும் முக்கியத் துவத்தில் பத்தில் ஒரு பங்காவது , நம் நாட்டின் நதிகளுக்கும், மனித உயிர்களுக்கும், மக்கள் வாழும் இடங்களுக்கும் விலை நிலங்களுக்கும் கொடுத்தால் எப்படியிருக்கும்....... ம்ம்ம்........

    ReplyDelete
  21. \\
    இவர்கள் இவற்றை சொன்ன பையனுக்கு வயது 8 !\\ நான் காத்திருப்பேன்னு Asian Paints விளம்பரத்தில் ஒரு பொண்ணு சொல்லுமே அது மாதிரி இருக்கு!! ஆனாலும் ஒன்னு சார், பசங்க எப்படி வளருதின்னே தெரியாது, வருஷமெல்லாம் நொடி மாதிரி ஓடுது, அதப் பார்த்தா சீக்கிரமே அந்தப் பையன் அங்கே திரும்பப் போவான் போலத்தான் இருக்கு!! ஹா.ஹ்ஹா..ஹா............

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. Please verify the year built Mohan kumar.

    ReplyDelete
  24. தாஜ்மகாலின் அழகு பிரமிப்பூட்டும்.அதை அங்குலம் அங்குலமாக ரசித்து பதிவிட்டது நன்று.

    ReplyDelete
  25. கோவை நேரம் said...

    நூர்ஜகான் பத்தி ஒரு எஸ் எம் எஸ் படிச்சு இருக்கேன்..அது உண்மையா ..?


    போன பதிவிலும் இதையே இன்னொரு நண்பர் சொன்னார். ஆள் ஆளுக்கு சஸ்பென்சா சொல்றீங்க. உண்மை எதுன்னு சொல்ல மாட்டேங்குறீங்க. முடிஞ்சா தனி மெயிளிலாவது சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  26. படம் நன்றாக உள்ளதாக புகைபடக்கரரான நீங்கள் சொல்வது மகிழ்ச்சி தருகிறது ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  27. நன்றி சமுத்ரா. மகிழ்ச்சி

    ReplyDelete
  28. ரமணி சார்: பின்னூட்டத்திலேயே அசத்துறீங்க நன்றி

    ReplyDelete
  29. வீடு சுரேஷ்: அவ்வ் ... போட்டோ எடுத்தோம் தான். அதை வீட்டில் எதுக்கு மாட்டி வச்சு பாத்து பாத்து பயப்படனும் விடுங்க பாசு

    ReplyDelete
  30. சங்கவி said...


    அண்ணே சிம்லா சென்று வந்து ஒரு மாதம் இருக்குமா???

    ஆம் மே கடைசியில் சென்றோம் சங்கவி; இவ்ளோ நாள் கழிச்சு எழுதுவதால் கேக்குறீங்களா? போய் வந்ததும் எல்லாம் எழுதியாச்சு. இப்போ ஜஸ்ட் பப்ளிஷ் தான் செய்றேன் நன்றி

    ReplyDelete
  31. சீனி: வழக்கம் போல் அடிஷனல் தகவல்கள் மிக மிக நன்றி

    ReplyDelete
  32. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  33. சாதிகா: மிக நன்றி

    ReplyDelete
  34. கௌசல்யா மேடம்: உங்கள் பின்னூட்டம் மிக ரசித்தேன்

    ReplyDelete
  35. தனபாலன் சார்; நன்றி

    ReplyDelete
  36. தாஸ்: எதுக்கு சமாதி என்று சொல்லணும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இடம் தானே நண்பா? இன்னொரு விஷயம் தாஜ் நீண்ட நாள் இருக்காது; சாய்ந்து விடலாம் என ஒரு வதந்தி உண்டு. எனவே அதை நீண்ட நாள் காக்க சில நடவடிக்கை எடுக்கிறார்கள்

    ReplyDelete
  37. வரலாற்று ஆசிரியர் அமரபாரதி: தன்யனானேன்

    ReplyDelete
  38. நன்றி முரளி சார்

    ReplyDelete
  39. தாஜ்மகாலை அருகில் பார்த்து வந்தவுடன் சற்று அது பற்றிய பிரமிப்பு குறைந்துள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆவல்! உடனே உங்கள் மனதில் எழும் கேள்விக்கு என்னுடைய பதில் 'சும்மா தெரிஞ்சிக்கத்தான்'!

    ReplyDelete
  40. நல்ல பகிர்வு மோகன்.

    ஷிம்லா போக நான் ரெடி!

    ReplyDelete
  41. ஸ்ரீராம்: தாஜ் மகாலை இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கணும் என்று ஆவல் தான் வந்துள்ளது

    ReplyDelete
  42. நன்றி வெங்கட். விரைவில் சிம்லா பயணமாவோம்

    ReplyDelete
  43. தெரியாமல் எடுத்த படம்

    Very very very bad manners. I see you can remove the comments too. So, let me convey this message, anyway.

    What you've done was wrong. Please correct it by removing that picture from the blog. It only sets a bad example on what a person shouldn't do. It is morally not right. Let God enlighten you!

    ReplyDelete
  44. Interesting....

    //உயர் நீதி மன்றம் நிறைய பிளாஷ் அடிப்பதால் அந்த இடத்தின் இயற்கை அழகு கெட்டு விடும் என்று இந்த ஆணை பிறப்பித்துள்ளது.//

    உயர்நீதி மன்றம் எதுக்குங்க பிளாஷ் அடிக்கனும்...:))

    ReplyDelete
  45. மிக அருமையானதும் பயனுள்ளதுமான பதிவு.
    இன்னும் கொஞ்சம் நீட்டி சொல்லியிருக்கலாம். அவ்வளவே

    ReplyDelete
  46. அவன் ஐ.எ. எஸ் படிப்பான் இல்லை.. அப்ப இண்டர்வியூவுக்கு டில்லி தான் வருவான்"

    இவர்கள் இவற்றை சொன்ன பையனுக்கு வயது 8 !//

    உங்க கூடவே சேர்ந்து பார்த்தது போலவே இருக்கு....!

    கூடவே ஒரு தந்தையின் கனவையும் கவனித்து சொன்னது, அந்த அப்பாவின் அளவில்லாத நம்பிக்கையை சொல்லிற்று அருமை....!

    ReplyDelete
  47. படங்கள் எல்லாம் நல்ல இருக்கு




    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  48. போத்தி: நீங்கள் சொன்னது சரிதான். அந்த படம் எடுத்து விட்டேன். மேலே ஒரு கமன்ட் டெலிட் செய்ததை வைத்து நான் கமன்ட் டெலிட் செய்வேன் என நினைத்தீர்களா? அது ஒரு ஸ்பேம் மெயில். பல பதிவுகளில் வந்து செக்ஸ் பட வீடியோவுக்கான லிங்க் தந்து போகிறார்கள். இரண்டு நிமிடத்தில் எனது 15 பதிவு களின் கமன்ட்களில் செக்ஸ் பட லிங்க் தந்தார்கள்; அதனால் தான் அகற்றினேன்.

    நல்லதை யார் சொன்னாலும் கேட்டு கொள்ளலாம் ! நன்றி

    ReplyDelete
  49. பிரதாப்: ஏனுங்க ? நான் சொல்ல வந்தது புரியலீங்களா?

    ReplyDelete
  50. எட்வின் சார்: மிக நன்றி. தாஜ் குறித்த இரண்டாவது பதிவு. இன்னும் நிறைய தகவல் முதல் பதிவில் கூறியுள்ளேன். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. மனோ: நீங்கள் ரசித்த விதத்தை அப்படியே சொன்னது அருமை நன்றி

    ReplyDelete
  53. படங்களும் தகவல்களும் அருமை..

    ReplyDelete
  54. அருமையான பதிவு.
    நன்றி.
    வாழ்த்துகள்.
    இங்கு தினம் மின்சாரம் காலையில் 3 மணி நேரம், இரவிலும் மின் தடையிருக்கிறது. அதனால் படிப்பதில் நிறைய தாமதம்; சுணக்கம்.

    ReplyDelete
  55. Dear Mohan Kumar,

    Thanks for removing the picture. I highly appreciate it.

    This is the first time, I write a comment in your blog (actually, this is only the second consecutive day, I read your blog by subscribing to it by email). So, I do not know about you and how you'd take my criticism. I thought the other link was something similar to my comment too. Glad to know, it was entirely different.

    I requested to remove it because the younger generation is looking up to us for guidance and we are, kind of, the role models for them. Every bad habit that we have, passes very easily to the next generation. But, it is not the case of good habits that always take time to be passed to the next generation.

    To provide you an example (that happened last week end), in a family where they shared Bovonto on an occasion. When the Bovonto was poured into the glasses, a child, aged 4, asked her parents... "is it alcohol" (in Tamil... சரக்கு). The parents of the child were in extreme shock on how that child learned that term.

    I also believe that the corruption is primarily due to generations of bad habits passed onto the following generations.

    I know my examples are *not* at all related our topic (Taj Mahal). I just wanted to share my thoughts on how our next generations picks up the bad habits much faster than the good habits.

    Thanks again for not editing my comment and accepting (and correcting) the mistake. When I saw your comment (to my reply), I just remembered an article on why we need to fail to succeed in life.

    Pothi

    ReplyDelete
  56. தாஜ் மஹல் - ஒரு காலத்தில் மிகவும் ஈர்த்ததுண்டு. ஆனால், அதன் பின்கதை அறிந்தபின் - தன் சுயலாபங்களுக்காக குடிமக்களைக் கஷ்டப்படுத்திய மன்னனின் பிரதிபலிப்பாகவே அது தெரிவதால், ஆர்வம் போய்விட்டது.

    ReplyDelete
  57. தாஜ்மஹால் நான் ஒருமுறை தான் சென்றிருக்கிறேன். ஆனால் மறக்க முடியாத பயணம். சிறிது தொலைவிற்கு முன்பிருந்து குதிரை வண்டியில் தான் சென்றோம். தாஜ்மஹாலின் உச்சியை நாம் தொடுவது போல புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். நீங்க எடுக்கலையா....

    நிறைய தகவல்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...