Thursday, December 30, 2010

2010 : சிறந்த 10 படங்கள் & 5 மொக்கை படங்கள்

சிறந்த பத்து பாடல்களை தொடர்ந்து சிறந்த பத்து படங்கள் தொகுப்பு இது. 

இது வசூல் ரீதியிலான அலசல் ரிப்போர்ட் அல்ல. அத்தகைய ரிப்போர்ட் கேபிள் ஏற்கனவே அருமையாய் எழுதிட்டார். நம்பர் 1 , 2  என்றில்லாமல் பொதுவாய் ரசித்த படங்களை பகிர்கிறேன். 

யோசித்து பார்க்கையில் கலைஞர் குடும்ப நிறுவனங்கள் தான் பெரும்பாலான வெற்றி படங்களை தந்துள்ளனர்.  மற்ற நிறுவனங்களுக்கும் இந்த தேர்வில் குறைந்தது 40 சதவீதமாவது இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பட்டியல் இட்டேன். அதனாலும் வேறு சில காரணங்களாலும் கலைஞர் குடும்ப நிறுவன படங்கள் சில இந்த லிஸ்டில் வரமால் போகலாம். 

முதலில் அப்படி இந்த லிஸ்டில் மிஸ் ஆகும் படங்கள் சுருக்கமாய்:


பையா 

சில படங்கள் எந்த மன நிலையில் பார்க்கிறோமோ அதனாலும் பிடிக்காமல் போகும். பையா ஏனோ ரொம்ப செயற்கையான படமாய் இருந்தது. தமன்னா அப்போது நான் ரசித்து கொண்டிருந்த போதும் பையா கவரவே இல்லை.

மதராச பட்டினம் 

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. அந்த காலத்து சென்னையை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. பாடல்கள் மற்றும் ஹீரோயினால் ஈர்த்தாலும் அளவுக்கதிகமான சோகம் இரண்டாம் பாதியில் மூட் அவுட் ஆக்கியது. மேலும் டைட்டானிக்கின் தழுவல் என்பது உறுத்தி கொண்டே இருந்தது. 

மைனா 

புது நடிகர், நடிகைகளால் நேச்சுரல் சம்பவம் போல இருந்தது பிளஸ். வலிந்து திணித்த சோக முடிவு மற்றும் பள்ளி பெண் காதல் இவை மைனஸ்.

எதிர் பார்க்க வைத்து ஊத்தி கொண்ட 5 படங்களை அடுத்து பார்ப்போம்.

சுறா 

சன் டிவி தயாரித்தும் காப்பாற்ற முடியாமல் போன படம். கதை, லாஜிக் எதுவும் இல்லை. வடிவேலு இருந்தும் சிரிப்பு இல்லை. கதாநாயகி வழக்கமான லூசு பெண்.  ஒரு காட்சி கூட ரசிக்க முடியாத படிக்கு ஒரு பெரிய நடிகர் & பேனர் படம் .விஜய் கதை கேட்டு நடித்தாரா என்பது பெரிய கேள்வி குறி.  

கோவா 

என்ன தைரியத்தில் இப்படி ஒரு கதையை படமாக எடுக்க சவுந்தர்யா & வெங்கட் பிரபு துணிந்தனரோ? வெங்கட் பிரபுவின் முந்தைய வெற்றிகளால் நிறைய எதிர் பார்க்க வைத்து நிறைய ஏமாற்றிய படம். பிரேம்ஜிக்கு தந்த ஹீரோ போன்ற பில்ட் அப்பும் ஹோமோ செக்சுவல் தீமும் படம் தோர்க்க முக்கிய காரணங்கள்.  

அசல் 

என்னத்த சொல்றது!! சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சந்திரமுகியில் சம்பாதித்ததை இதிலே கோட்டை விட்டனர். கதை வெளி நாடு அது இதுன்னு சுத்தினாலும் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. பாவனா இன்னொரு லூசு ஹீரோயின். சரண் கடைசியா எப்ப ஹிட் படம் குடுத்தார் என்பது அவருக்கே மறந்திருக்கும், 

வ குவார்டர் கட்டிங் 

இப்படி ஒரு கதை ஓடும்னு எப்படி நினைச்சாங்களோ? கதை, நடிப்பு, பாட்டு, காமெடி எதுவுமே கிளிக் ஆகாத படம். 

தில்லாலங்கடி 

சன் டிவி தயாரித்தும் நிச்சயமான தோல்வி படம். ஆனால் இந்த வரிசையில் உள்ள மற்ற படங்களை விட கொஞ்சம் பெட்டர் என்பேன். காரணம் வடிவேலு காமெடி ரசிக்கும் படி இருந்தது. கதை காதுல பூ. இயக்குனர் ராஜாவிற்கு முதல் தோல்வி படம் 

இனி சிறந்த பத்து படங்களை பார்க்கலாம். 

பாஸ் என்கிற பாஸ்கரன் 

சாதாரண கதை, சொன்ன விதத்தால் கவர்ந்தது. சந்தானம் காமெடி மனம் விட்டு சிரிக்க வைத்ததது. பல தட்டு மக்களையும் படம் சென்று சேர்ந்ததை அலுவலக நண்பர்கள் கமெண்டுகள் மூலம் அறிய முடிந்தது. ஒரே கடி ஹீரோயின்..(நயன் எப்பவமே நமக்கு பிடிக்காது!!)

நான் மகான் அல்ல

பழி வாங்கும் கதையை செம விறுவிறுப்பாக சொல்லியிருந்தனர். வில்லன்கள் சாதாரண இளைஞர்களாக காட்டியிருந்தது வித்யாசமாயிருந்தது. துவக்கம் முதல் வில்லன்கள் டிராக் தனியே, ஹீரோ பற்றி தனியே காட்டி கொண்டு போய் ஒரு புள்ளியில் ஒன்றாய் சேர்த்தது அருமை. அதிலும் துவக்கத்தில் ஹீரோ பற்றிய ஒரு காட்சி முடியும் போது அதே இடத்தில வில்லன்கள் பற்றிய டிராக் துவங்குவது போல் பார்த்து பார்த்து செய்திருந்தார் இயக்குனர். சற்று அதிகமான வன்முறை மட்டுமே குறை.

களவாணி

மறுபடி மறுபடி பார்த்தாலும் சிரிக்க வைக்கிற படி எடுத்த இயக்குனர் சற்குணத்திற்கு பாராட்டு. பள்ளி பெண் காதலிப்பது போல் காட்டியதற்காக அவருக்கே ஒரு குட்டு. கலைஞர் குடும்பம் தாண்டி பிற நிறுவனங்கள் எடுத்த படங்களில் லாபம் பார்த்த சில படங்களில் இதுவும் ஒன்று. 


இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் 

இப்படி ஒரு கான்சப்ட் எடுத்த தைரியத்துக்காகவே சிம்பு தேவனை பாராட்டலாம். செட்டுகள், நடிகர்கள், காமெடி என ரசிக்க வைத்தது படம். சன் அல்லது துரை அழகிரி மூலம் வெளி வந்தால் இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். 

எந்திரன்

எவ்வளவோ எதிர் பார்க்க வைத்து அத்தனையும் பூர்த்தி செய்தது. எனக்கு தெரிந்து காலை ஏழு மணி காட்சி தொடர்ந்து ஒரு வாரம் பல மல்டிபிலக்ச்களில் ஓடியது எந்திரனுக்கு மட்டும் தான். அந்த ஷோ கூட ரொம்ப சீக்கிரம் புல் ஆகியது! 

முதல் பாதி அசத்தல். இரண்டாம் பாதி எனக்கு பிடிக்கா விடினும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிலும் பலர் ரசித்தனர்.  ரஜினி ஷங்கர் & டீம் உழைப்பு பிரம்மிக்க வைத்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம்.  

அங்காடி தெரு 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான கதை ஜெயகாந்தன் அதிகம் எழுதுவார். அது போல ஒரு கதை. ரொம்ப இயல்பாயும் வலியுடனும் அவர்கள் வாழ்வை உணர வைத்தது. ஹீரோ ஹீரோயின் இருவருமே ரொம்ப அருமையாய் நடித்திருந்தனர். கடைசியில் ஹீரோயின்னை தேவையின்றி கால் இழக்க வைத்தது தவிர்த்திருக்கலாம். தமிழில் ஒரு நல்ல சினிமா! 

தமிழ் படம்

தமிழில் இப்படி ஒரு spoof  படம் பார்ப்பது நமக்கு புதிய அனுபவம். ரொம்ப யோசிக்காமல் சிரித்தால் சிரித்து கொண்டே இருக்கலாம். வெகு சிலர் கடி ஜோக்ஸ் என்று சொன்னாலும் பெரும்பாலான மக்கள் ரசித்து சிரித்தனர். இது மாதிரி கேரக்டர் சிவாவுக்கு செமையாய் பொருந்துது. ஆமாம் இந்த பட இயக்குனர் அடுத்த என்ன படம் பண்றார்?   

விண்ணை தாண்டி வருவாயா 

பாடல்கள் செம ஹிட் ஆகி படம் மீதான ஈர்ப்பை உண்டாக்கி விட்டது. அழகான சிம்பு & திரிஷா, லொகேஷன், வித்யாசமான முடிவு இவற்றால் கவர்ந்தது. திரிஷா காரக்டர் செம இன்டரஸ்டிங். நல்ல குணம் மட்டுமே இல்லாமல் மனிதர்களுக்கு இருக்கும் குழப்பமும் ஊசலாட்டமும் சேர்த்து திரிஷாவை காட்டியதற்கு கவுதம் மேனனுக்கு பாராட்டு. 

நந்தலாலா 

ஜப்பானிய தழுவல் என்ற போதும் உணர்வுகளால் கலங்க வைத்த படம். வெற்றி பெறாத போதும் தமிழில் என்றும் நினைவு கூற தக்க படம். 


சிங்கம்

A perfect Entertainer! சூரியாவுக்கு அவர் சட்டை போல கேரக்டர் பிட் ஆனது.  அனுஷ்காஆஆ .....!!! கதை, காமெடி, சில நல்ல பாட்டு, பைட், ஹீரோ - வில்லன் மோதல், அதில் ஹீரோ புத்தி சாலிதனமாய் வெற்றி என பாப்கார்னுடன் உட்கார்ந்து சிரித்து பார்க்க கூடிய படம்.  
***
டிஸ்கி: நாளைக்கும் வருட இறுதி அலசல் பதிவொன்று வெளியாகலாம்.   

14 comments:

  1. நல்ல பகிர்வு. நன்றி மோகன்.

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு...

    ReplyDelete
  3. Anonymous11:23:00 AM

    ஒவ்வொரு படத்தை பற்றியும் உங்கள் பார்வையில் பிளஸ் மைனஸ் குறிப்பிட்டது நன்று!
    சிங்கம் படத்தில் விவேக்கின் சகிக்க முடியாத டபுள் மீனிங் வசனங்களையும் குறிப்பிட்டிருக்கலாம் அண்ணா :)

    ReplyDelete
  4. எந்திரன், சிங்கம் ரெண்டும்தான் நான் பார்த்தவை. கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என நினைத்தால் அதற்குள் பார்க்க நினைக்கும் படங்கள் தியேட்டரை விட்டு போய் விட்டிருக்கும் பெங்களூரில்:)!

    இந்தப் பட்டியலில் நந்தலாலா, அக்காடித் தெரு பார்க்கும் ஆவல் உள்ளது.

    நாளைய பதிவுக்குக் காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete
  5. ராவணன் பத்தி ஒண்ணுமே சொல்லலைங்களே

    ReplyDelete
  6. எதிர்பார்த்த லிஸ்ட்ல சுறா இருந்ததா??

    இன்னுமா நீங்க விஜய்ய நம்பறீங்க;)))

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. நன்றி வெங்கட் நாகராஜ்
    **
    நன்றி சங்கவி
    **
    நன்றி பாலாஜி சரவணா; ஆம் மறந்துட்டேன் :))
    **
    ராமலட்சுமி: நன்றி; ஹிட் ஆகும் படங்கள் மட்டும் பாக்குறீங்க போல் இருக்கு

    ReplyDelete
  9. நாகராமசுப்ரமணியன்: நன்றிங்கோ; ஆம்; அது ஹிட்/ மொக்கை ரெண்டு வகையிலும் சேராததால் சேர்க்கலை.
    **
    வித்யா: என்ன இருந்தாலும் விஜய் ஒரு பெரிய fan following உள்ள நடிகர் தான். சண் டிவி வேற. கொஞ்சமாவது பாக்கிற மாதிரி இருக்க வேணாம்??ம்ம்ம்
    **
    கோவை டு தில்லி: நன்றி மேடம்
    **
    தயாநிதி: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    **

    ReplyDelete
  10. “எந்திரன்“சிறந்த படங்களுள் ஒன்றா...? என்னத்தைச் சொல்றது...

    ReplyDelete
  11. நந்தலாலாவை எப்படியும் பார்த்துவிட வேண்டியதுதான்.

    பரிந்துரைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. //எதிர் பார்க்க வைத்து ஊத்தி கொண்ட படங்களை அடுத்து பார்ப்போம்.

    சுறா
    //

    சுறா படத்தை எதிர்ப்பார்த்து சென்ற உங்களை மென்மையாக கண்டிக்கிறேன்....:))

    ReplyDelete
  13. மோகன் ஜி...

    நல்லா எழுதி இருக்கீங்க...

    எல்லா படத்தையும் பார்த்து விட்டீர்களா? உங்களுக்கு நிஜமாவே “தில்லுதுர” பட்டம் தந்துட வேண்டியது தான்...

    ராமலஷ்மி மேடம் ஏதோ புதுசா “அக்காடி தெரு”னு ஒரு படம் பேர் போட்டு இருக்காங்க... அப்படி ஒரு படம் இருந்தா, அதையாவது பார்க்கணும்... ஒரு வேளை அது “அங்காடி தெரு”வோ? பெங்களூருவில் தமிழ்ப்படத்தின் பெயரை மாற்றியதன் ரகசியம் என்னவோ?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...