Friday, December 31, 2010

வீடுதிரும்பல் விருதுகள் 2010

எழுத்தாளர் சுஜாதா வருடா வருடம் செய்யும் பணி இது. அவர் மானசீக சிஷ்யன் கடந்த சில வருடங்களாக தொடர்கிறேன். இந்த வருட விருதுகள் &இந்த ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள்.


சினிமா விருதுகள்

சிறந்த இசை அமைப்பாளர்

ரஹ்மான் (விண்ணை தாண்டி வருவாயா & எந்திரன்)
G.V. பிரகாஷ் குமார் (மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த பின்னணி இசை : இளைய ராஜா (நந்தலாலா)

சிறந்த பின்னணி பாடகர்: விஜய் பிரகாஷ் (ஹோசன்னா & காதல் அணுக்கள்)

சிறந்த பாடகி : ஆண்ட்ரியா (இதுவரை இல்லாத உணர்விது- கோவா; Who's the Hero- மன்மதன் அம்பு)
 
சிறந்த சண்டை பயிற்சி: பீட்டர் ஹெயின் (எந்திரன்)
 
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன் )

சிறந்த வில்லன்: பிரகாஷ் ராஜ் (சிங்கம்)

சிறந்த கலை இயக்குனர் : செல்வ குமார் (மதராச பட்டினம்)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (எந்திரன்)

சிறந்த நடிகர்: ரஜினி (எந்திரன்) (இது சர்ச்சையாகும் என்று தெரிந்தே எழுதுகிறேன். வேறு யாருக்கு குடுக்கலாம்? நீங்களே சொல்லுங்க)


சிறந்த புது முக நடிகர்: மிஷ்கின் (நந்தலாலா)

சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடி தெரு)

சிறந்த நடிகை சிறப்பு பரிசு: அனுஷ்கா (சிங்கம்) (அந்தந்த ஆண்டு யார் தலைவியோ அவங்களுக்கு இப்படி சிறப்பு பரிசு தரப்படும்... கண்டுக்காதீங்க )

சிறந்த புது முக நடிகை: ஓவியா (களவாணி)

சிறந்த திரைக்கதை: சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

சிறந்த இயக்குனர்: ஷங்கர் (எந்திரன்)

சிறந்த புது முக இயக்குனர் :  சற்குணம் (களவாணி)

****** 

தமிழ் டிவி சேனல்களில் சிறந்த நிகழ்ச்சிகள் :

1. கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர்

2.ஜீ தமிழின் டாப் 10 செய்திகள்

3 .விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் (முதலில் ஜூனியர்; பின் சீனியர்)


அரசியலில் அசத்தியவர் :நிதிஷ் குமார் (பீகாரில் பெரிய வெற்றி) 

விளையாட்டில் இரு வீழ்ச்சி & எழுச்சி :

செஸ்: ஆனந்த் பல்கேரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில்  வென்றாலும், வருடம் முழுதும்  சோபிக்க வில்லை. அவரை விட மேக்னஸ் கார்ல்சன் என்ற நார்வே வீரர் ஆண்டு முழுதும் நன்கு ஆடி அசத்தினார். 

கோல்ப்: டைகர் வுட்ஸ் முதலிடத்தை இழக்க, லீ வெஸ்ட்வுட் அந்த இடத்தை பிடித்தார். 


மறைந்த முக்கிய தலைவர்கள்: 

ஜோதி பாசு (இவர் கண்கள் இறந்த பின் தானம் செய்ய பட்டது அற்புத விஷயம்)

கருணாகரன் (கேரளா முன்னாள் முதல்வர். கறை படியா கைக்கு சொந்த காரர் என மலையாளி நண்பர் சொல்ல கேள்வி) 

மறக்க முடியாத "வரவேற்பு": இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு  லண்டனில் கிடைத்தது


கோர்ட் தீர்ப்புகள் : 


அசத்தல்: ராமர் கோவில் குறித்த தீர்ப்பு.  ஹிந்து முஸ்லிம் இரு தரப்பு மக்களையும் சற்று திருப்தி படுத்த, சற்று பெருமூச்சு விட வைத்தது 

கொடுமை: போபால் விஷ வாயு குறித்த தீர்ப்பு..

சென்னை: நல்லதும் கெட்டதும்

நல்லது: வுட்லேண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில அற்புதமான பூங்கா திறப்பு 

கெட்டது: மிக அதிக குழந்தைகள் கடத்தல் & காய்கறி விலை சாமானியர்கள் வாங்க முடியாத படி சென்றது 

முக்கிய திருமணங்கள் : 

1 .சானியா மிர்சா -ஷோயப் மாலிக் (இது முடிவதற்குள் எவ்வளவு டிராமா??)

2.சசி தரூர் -சுனந்தா (மந்திரி பதவி போனாலும் மறக்காமல் மணந்தார்)

3.டோனி - சாக்ஷி (திடீர் திருமணம்)

கிரிக்கெட் சந்தோஷங்கள்:

1. சச்சினின் பார்ம் . டெஸ்டில் ஏழு  செஞ்சுரி, ஒன் டேயில் இருநூறு அடித்த முதல் மனிதர், டெஸ்டில் ஐம்பது செஞ்சுரிகள் என தல அசத்திய வருடம் இது.

2.இந்திய அணியும் இந்த ஆண்டு முழுதும் தொடர்ந்து நன்கு ஆடி ஆச்சரிய படுத்துகிறது.

3.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியோ ஐ.பி. எல் மற்றும் சாம்பியன் லீக்ஸ் ரெண்டும் ஜெயித்து நம்மை குஷிபடுத்தியது.

4. ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி மற்றொரு சந்தோஷம்.(எவ்ளோ நாள் தான் அவங்களே டாமினேட் செய்வது?)


டாப் சர்ச்சைகள்: 
தமிழக அளவில்:  நித்யானந்தா- ரஞ்சிதா குறித்த செய்திகள், படங்கள்
இந்திய அளவில்:  

1. ஸ்பெக்ட்ரம் ஊழல் (மத்திய அரசு JPC-க்கு ஒத்து கொள்ளுமா? இனியாவது பார்லிமென்ட் நடக்க விடுவாங்களா? )
2. ராடியா - ராடியா
3. காஷ்மீர் தொடர் கலவரங்கள் 
4. டில்லி காமன் வெல்த் கேம் (சர்ச்சை தாண்டி துவக்க விழா & மொத்த டோர்னமென்ட் உலகை அசத்தியது நல்ல விஷயம்) 

உலக அளவில்: விக்கி லீக்ஸ் ( இதன் ஓனரை, மிக அதிக தண்டனை பெற வேண்டுமென  பொய் கேஸ் போட்டு அமெரிக்கா தற்போது துரத்துவது நம் நாட்டை போல இருக்கு!!)

கிரிக்கட்டில் : லலித் மோடியின் வீழ்ச்சி & பாகிஸ்தான் வீரர்கள் மீதான குற்ற சாட்டுகள். 


பதிவுலகில்: வேணாம் விடுங்க. நான் சர்ச்சைக்குள் சிக்க விரும்பலை..:))

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !! 

22 comments:

 1. அற்புதமான தொகுப்பு...

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Anonymous9:50:00 AM

  பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. முயற்சிக்கு நன்றி!

  ReplyDelete
 4. நல்ல தொகுப்பு.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மோகன்....

  ReplyDelete
 5. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்லா இருக்கு. டென்னிசில் நடால் அசத்திய வருடம் இது. ஆனந்த் உலக சாம்பியன் ஆனது மட்டுமின்றி சமீபத்திய போட்டியில் கார்ல்சனை one-to-one முறையில் வென்றார்.
  ஹோசானா & காதல் அணுக்கள் - செம்ம செம்ம :)

  கருணாகரன் பற்றி [கறைபடியா கரம்] அறிந்ததில்லை. வேறு மாதிரி எண்ணி இருந்தேன். ஜோதி பாசுவைப் பற்றிக் கூட அப்படிக் (கறைபடியா கரம்) கேள்விப் பட்டதுண்டு. நம்ம ஊரில் காமராஜருக்குப் பின் அப்படி ஒருவர் கூட இல்லை...ம்.

  நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 7. // நல்லது: வுட்லேண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில அற்புதமான பூங்கா திறப்பு

  //

  எனக்குக் கெட்டது :(

  ReplyDelete
 8. பூங்கா திறந்தது நல்ல விஷயம் தான். வுட்லேண்ட்ஸ் மூடினது அவ்வளவா நல்ல விஷயம் இல்லை:( மிஸ்ஸிங் 29C, கதீட்ரல் ரோட், வுட்லேண்ட்ஸ் சாம்பார் வடை:( ஹும்ம். சாரி ஃபார் கொசுவத்தி.

  பதிவுக்கு ரொம்ப உழைச்சிருக்கீங்க. குட் லிஸ்ட்:)

  புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்:)

  ReplyDelete
 9. // பதிவுலகில்: வேணாம் விடுங்க. நான் சர்ச்சைக்குள் சிக்க விரும்பலை..:)) //

  அட.. என்ன தயக்கம்..
  என்னைப் பத்தி சொல்ல வேண்டியதுதான.. ?

  ReplyDelete
 10. நன்றாக அலசி ஆராய்ந்து விருதுகளைத் தந்திருக்கிறீர்கள். முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 11. //சிறந்த நடிகர்: ரஜினி (எந்திரன்) (இது சர்ச்சையாகும் என்று தெரிந்தே எழுதுகிறேன்//

  'சிட்டி'யா க‌ல‌க்கியிருந்தாரே த‌லைவ‌ர்...தாராள‌மா த‌ர‌லாம்

  //சிறந்த நடிகை சிறப்பு பரிசு: அனுஷ்கா (சிங்கம்) (அந்தந்த ஆண்டு யார் தலைவியோ அவங்களுக்கு இப்படி சிறப்பு பரிசு தரப்படும்... கண்டுக்காதீங்க )
  சிறந்த புது முக நடிகை: ஓவியா (களவாணி)//

  Great men think alikeங்க‌ற‌து இதுதானோ ;))

  //பதிவுலகில்: வேணாம் விடுங்க. நான் சர்ச்சைக்குள் சிக்க விரும்பலை..:))//

  I know.......I know...I know....I know I know I know.....

  ReplyDelete
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  தொகுப்பு அருமை. வருங்காலத்திலும் தொடருங்கள்.

  ReplyDelete
 13. சிறந்த திரைக்கதை மைனாவுக்கு கொடுத்திருக்கலாம்.
  சிறந்த வில்லன் ரஜினிக்கே கொடுத்திருக்கலாம்.
  Happy new year!

  ReplyDelete
 14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மோகன் :)

  ReplyDelete
 15. நல்ல தொகுப்பு.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அனுஜன்யா: ரொம்ப நாள் கழித்து வந்தமைக்கு நன்றி. ரொம்ப அருமையான பின்னூட்டம்.

  ரகு: பின்னூட்டம் மிக ரசித்தேன்

  நாக சுப்ரமணியன்: ஆம் நான் கூட ரஜினிக்கு சிறந்த வில்லன் விருது குடுக்கலாம்னு நினைத்தேன்

  நேரமின்மை காரணமாய் அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல வில்லை மன்னிக்க

  புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி & வாழ்த்துகள் .

  ReplyDelete
 17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. மிக அருமையான பதிவு. விருது வாங்குவதற்கு மட்டுமல்ல, இம் மாதிரி விருது வழங்குவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும்.
  அதற்காக என்னுடைய பாராட்டுகள்.

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அற்புதமான பதிவு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அற்புதமான தொகுப்பு...

  ReplyDelete
 21. புத்தாண்டு வாழ்த்துக்கள் மோகன்.

  //பதிவுலகில்: வேணாம் விடுங்க. நான் சர்ச்சைக்குள் சிக்க விரும்பலை..:))//

  நீங்க ஏதாவது சொன்னாதானே அது சர்ச்சையா என்னான்னு நாங்க முடிவு பண்ண முடியும்?

  லிஸ்ட் சூப்பர். நிறைய விஷயங்கள் என்னை கவர்ந்தது மட்டுமில்லாமல் என்னுடைய 2010 - Top 10 பதிவுடன் ஒத்துபோனதில் எனக்கும் மகிழ்ச்சி.

  அதிலும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பு மேட்டர் செம சூப்பர்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...