Monday, December 20, 2010

அய்யாசாமி பங்கேற்ற டிவி நிகழ்ச்சி

அய்யாசாமி கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். கார சாரம் என்கிற இந்நிகழ்ச்சி நாளை இரவு 9   மணி முதல் 10 மணி வரை பொதிகை டிவியில் (தூர்தர்ஷன்) ஒளிபரப்பாகிறது. என்னாது பொதிகை டிவி-ன்னா என்னவா?? நோ நோ அப்படியெல்லாம் கேக்கபடாது. தமிழ் நாடு எனில்  உங்க வீட்டில் தேடி பாருங்க நிச்சயம் இருக்கும்.. மற்ற மாநிலங்கள் பற்றி தெரியலை..  

(இது அய்யாசாமி பங்கேற்ற நிகழ்ச்சி அல்ல. ச்சும்மா ஒரு படம்!)


இதை தனி பதிவாக போட வேண்டுமா என தயக்கம் இருந்தாலும் தூர்தர்ஷன் பற்றி நீங்கள் அறிய ஒரு வாய்ப்பு என்பதால் இப்பதிவு..


 

**தலைப்பு: மனிதர்களுக்கு மகிழ்ச்சி - திருமணத்துக்கு முன்பா? திருமணத்துக்கு பின்பா? அய்யாசாமி எந்த தலைப்பில் பேசியிருப்பார்னு சொல்லுனுமா என்ன ..ஹிஹி 

** அய்யாசாமி இதுவரை சன் டிவி, விஜய் டிவி, வசந்த் டிவி,  இமயம் டிவி (கடைசி ரெண்டு டிவி-யும் தெரியாதா? ரைட்டு!!) போல பலவற்றில் வந்திருந்தாலும்  தூர்தர்ஷனில் இது முதல் முறை. 2009 ஆண்டு மட்டும் ஆறேழு டிவிக்களில்   வந்ததால், அவருக்கே போர் அடிச்சிடுச்சு.  இந்த வருடம் கலைஞரில் கருத்து யுத்தத்துக்கு கூப்பிட்டாக..  விஜய் டிவியில் "நாளை நமதே" க்கு கூப்பிட்டாக.. பொதிகையில் ஏற்கனவே இதே கார சாரத்துக்கு கூப்பிட்டாக.. (ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாக ரேஞ்சுக்கு என்னா பில்ட் அப்பு) அப்போதெல்லாம் போகாத ஐயா சாமி இம்முறை தூர்தர்ஷனை ஒரு முறையாவது பார்க்கணும் என கிளம்பிட்டார். 

**சும்மா சொல்ல கூடாது. தூர்தர்ஷன் - தூர்தர்ஷன் தான். ஏரியாவே எவ்வளவு பெருசு!  ஏகப்பட்ட மரங்கள்!! நிறைய ஸ்டுடியோக்கள். எல்லாமே பெரிய அளவில் உள்ளன.  இது மாதிரி ஸ்டுடியோ எல்லாம் சன், விஜய்யில் கூட இல்லை. இதை வச்சிக்கிட்டு எவ்ளோ அருமையா நிகழ்ச்சி செய்யலாம். ம்ம் 

**மற்ற டிவிகளில் போனில் தொடர்பு கொண்டு பேசும் போது எப்படி பேசுறோம் என தெரிந்து கொள்ள நம்மை கொஞ்சம் பேச சொல்லி பார்ப்பார்கள். இங்கு அப்படி ஒன்னும் இல்லை. ஐயா சாமி நீண்ட நாள் நண்பர் மணியுடன்  (அவர் எதிர் அணி) இந்நிகழ்ச்சியில் பேசினார். 

**நிகழ்ச்சி பத்து மணிக்கு என சொல்லியிருந்தனர். தெரிந்த நண்பர் ஒருவர் மற்ற டிவி போல இல்லை; பத்து என்றால் 11 மணிக்காவது ஆரம்பிச்சுடுவாங்க என சொல்லியிருந்தார். ஆனால் சிறப்பு விருந்தினர் TP கஜேந்திரன் 1 மணிக்கு வர அப்புறம் தான் நிகழ்ச்சி ஆரம்பமானது. மூணு மணி நேரம் வெயிடிங்!!  நல்ல வேளை நீண்ட நாள் கழித்து நண்பரை இன்று பார்த்ததால் ஐயா சாமி அவருடன் பேசி நேரத்தை ஓட்டினார். 

**"திருமணத்துக்கு முன் மகிழ்ச்சி" அணியில் ஒரு நேரம் போதிய ஆட்கள் இல்லாமல் ஈ ஆடியது. கோ ஆர்டினேட் செய்யும் பெண் அய்யாசாமியை "அந்த அணியில் வந்து பேசுங்க; வேணும்னா முன் வரிசையில் கூட உட்காருங்க" என்று கேட்க, அய்யாசாமி தன் சீட்டை கெட்டியா பிடிசிகிட்டு " மாட்டேன்.. மாட்டேன்" என அடம் பிடித்து இடம் பிடித்தார்.

**நிகழ்ச்சி நடத்திய (காம்பியர்) ஜான்,  தான் அதிகம் பேசாமல் அனைவருக்கும் பேச வாய்ப்பு தந்து நன்கு நடத்துகிறார்.

**இன்னும் டிடியில் நிழல்கள் ரவி போன்ற "இளம் ஹீரோக்கள்" நடித்த சீரியல்கள் தான் வருவது அங்கிருந்த போஸ்டர்கள் பார்த்து அறிய முடிந்தது

*மேலும் போஸ்டர்களில் உண்ணா விரதம்; வேலை புறக்கணிப்பு போன்றவையும் காண முடிந்தது (பொது துறை நிறுவனம்!!)

**அய்யாசாமிக்கு நான்கு முறை பேச வாய்ப்பு வந்தது. "கொஞ்சம் எடிட் ஆனால் கூட ரெண்டு அல்லது மூணு நிச்சயம் ஒளி பரப்பாகும்" என்கிறார். "ஓரிரு முறை கிளாப்ஸ் கூட வாங்கினேன்" என்கிறார் சிறு பிள்ளை போல.. 

**திருமணத்துக்கு பின்பு தான் மகிழ்ச்சி என்று தீர்ப்பு வரும் என நினைத்திருந்த அய்யாசாமிக்கு நிகழ்ச்சியை நடத்தியவர் தந்த தீர்ப்பு கேட்டு செம ஷாக். ஏன் ? நிகழ்ச்சி பார்த்து தெரிஞ்சுக்குங்க.

**மழை பெய்து ஓய்ந்த ஓர் சனிக்கிழமை காலை.. எனவே அய்யாசாமி ரெயின் கோட் சகிதம் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து டிரைன் வந்து ஏறிய பின்  தான் ரெயின் கோட் நினைவுக்கு வர, ஓடும் டிரைனில் இருந்து விஜய காந்த் போல குதித்து டிவி ஸ்டேஷன் சென்று மீண்டும் எடுத்து வந்தார். 

**பொதிகை டிவி தெரியலை பார்க்கலை என நீங்கள் சொன்னால்,   உலகம்  முழுதும்  தெரிகிற பிரபல  டிவியில் சீக்கிரமே  வந்து பேசுவேன் என மிரட்டுகிறார். இதுக்காகவாவது நாளை இரவு பார்த்துடுங்க.. ஒன்பது மணி.. பொதிகை டிவி.

**நிற்க எனக்கு ரெக்கார்டிங் செய்யும் வசதி இல்லை. நீயா நானா கருத்து யுத்தம் போன்ற நிகழ்ச்சிகள் யூ டியுபில் யாராவது வலை ஏற்றம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சி யாரும் வலை ஏற்றம் செய்வது போல் தெரிய வில்லை. காரசாரம் என்ற இந்நிகழ்ச்சி யூ டியுபில் இருந்தால் தெரிவியுங்கள் அல்லது யாராவது இதனை ரிக்கார்ட் செய்ய உதவினால் மிக்க நன்றி உடையவன் ஆவேன். :))

27 comments:

  1. எங்க வீட்டில பானஸோனிக் டிவிதான் இருக்கு, வேற எந்த டிவியும் இல்லை!! அதனால, இதைப் பதிவு செய்து யூ ட்யூபில் போட்டு அந்த லிங்க் தாங்க, பாக்கிறேன். :-)))

    ReplyDelete
  2. நாளை [செவ்வாய்] இரவு தானே. இங்கு பொதிகை தெரியும். கண்டிப்பாய் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் மோகன்.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  3. **டிவி தெரியலை பார்க்கலை என நீங்கள் சொன்னால். இதை விட பெரிய டிவியில் வந்து பேசுவேன் என மிரட்டுகிறார். இதுக்காகவாவது நாளை இரவு பார்த்துடுங்க.. ஒன்பது மணி.. பொதிகை டிவி.

    .... No பொதிகை டிவி. ....Youtube link, please.

    ReplyDelete
  4. Anonymous12:50:00 PM

    //Chitra said...
    .... No பொதிகை டிவி. ....Youtube link, please. //
    ரிப்பீட்டு :)

    ReplyDelete
  5. பதிவு மிக அருமை பாஸ்!! எனது டூட்டி டயதுக்கும் இந்த ப்ரோக்ரா முக்கும் ஒத்து வராத தூரம். ஹுசைனம்மா சொன்னதை நானும் ரிபிட்டிக்கிறேன் :))))

    ReplyDelete
  6. டாடா ஸ்கையில் பொதிகை தெரிகிறது. பார்க்கிறேன் அவசியம். க்ளாப்ஸ் வேறு வாங்கியிருக்கிறாராமே அய்யாசாமி. விட்டிருவோமா?

    முன்ன ஒரு காலத்துல, தமிழில நிகழ்ச்சிகளை நாம ஆ எனப் பார்க்கத் தொடங்கியது தூர்தர்ஷனில்தான் என்பதை மனதில் கொண்டு அய்யாசாமி அதை சின்ன டிவி என சொல்லாம இருப்பாராக:)))!

    ReplyDelete
  7. நிச்சயம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  8. பார்த்துட்டு சொல்றேன்..

    ReplyDelete
  9. அய்யா சாமி, ஆவலோட இருக்கிறேன் பார்க்க!

    ReplyDelete
  10. // அல்லது யாராவது இதனை ரிக்கார்ட் செய்ய உதவினால் மிக்க நன்றி உடையவன் ஆவேன்.

    //

    கொஞ்சம் செலவாகும், பரவாயில்லையா??

    ReplyDelete
  11. நீங்க‌ பேச‌ற‌தை வீட்ல‌ பார்ப்பாங்க‌ன்னே அந்த‌ டாபிக்கை தேர்ந்தெடுத்தீங்க‌ளா? உஷார்தான் நீங்க‌:))

    ReplyDelete
  12. நன்றி ஹுசைனம்மா, சித்ரா & பாலாஜி சரவணா & அப்துல் காதர்
    இந்த நிகழ்ச்சி யூ டியூபில் வர்ற மாதிரி தெரியலை; வந்தா நிச்சயம் சொல்றேன்; இங்கு ஷேர் செய்கிறேன்.

    **
    நிகழ்ச்சியை பார்க்க போகும் தைரிய சாலி நண்பர்கள்

    வெங்கட் நாகராஜ்
    ராம லட்சுமி
    சங்கவி
    கே. பி. ஜனா
    வித்யா
    மாதவன்

    அனைவருக்கும் நன்றி. பார்த்தால் எப்படி இருந்தது என சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. அப்துல்லா அண்ணே ரிக்கார்ட் செய்ய கொஞ்சம் செலவாகும்னு எழுதியிருந்தீங்க; ஜோக்குக்கா உண்மையா என்று தெரியாத அளவு அப்பாவியா இருக்கேன். உண்மையில் ரிக்கார்ட் செய்ய முடிஞ்சா செலவானாலும் பரவாயில்லை.
    **
    ரகு & ராதா கிருஷ்ணன் சார்: மிக்க நன்றி

    ReplyDelete
  14. நாளை பொதிகை டிவி.பார்க்கிறேன்..

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  15. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  16. வாழ்துக்கள் தல....கலக்கறீங்க. லிங்க் இருந்தா போடுங்க நாங்களும் பார்போம்ல

    ReplyDelete
  17. //திருமணத்துக்கு பின்பு தான் மகிழ்ச்சி என்று தீர்ப்பு வரும் என நினைத்திருந்த அய்யாசாமிக்கு நிகழ்ச்சியை நடத்தியவர் தந்த தீர்ப்பு கேட்டு செம ஷாக். ஏன் ? //

    லிவிங் டுகெதர் தான் மகிழ்ச்சின்னு தீர்ப்பு சொல்லிட்டாரா? :)

    ReplyDelete
  18. நிகழ்ச்சியை பார்க்க போகும் அமைதி அப்பா, ராம மூர்த்தி சார் ஆகியோருக்கு அட்வான்ஸ் நன்றி
    **
    டுபுக்கு: நன்றி நண்பா. முயற்சிக்கிறேன்.
    **
    சங்கர்: அதை இப்பவே சொல்லிட்டா எப்புடி; முடிஞ்சா நிகழ்ச்சியை பாருங்க சுவாரஸ்யம் வரணும்னு தான் சொல்லாம விட்டுருக்கேன்

    ReplyDelete
  19. //மோகன் குமார் said...
    .. ஜோக்குக்கா உண்மையா என்று தெரியாத அளவு அப்பாவியா இருக்கேன்.//

    ஒரு வக்கீல் இம்புட்டு அப்பாவியா???!!! இது ஜோக்குக்கா உண்மையா என்று தெரியாத அளவு நாந்தான் அப்பாவியா இருக்கேன் போல!! :-)))))

    ReplyDelete
  20. நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
    எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக கருத்துக்களை சொன்னீர்கள். நிகழ்ச்சியும் விளம்பர இடைவேளையில்லாமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

    என்னுடைய கருத்தும், திருமணத்துக்கு பின்புதான் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என்பதுதான்.

    பங்கேற்பவர்களின் அறிமுகம் இல்லாதது குறையாக உள்ளது.
    மற்றபடி நிகழ்ச்சி நன்று.

    2011-ல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  21. காரசாரத்தில் உங்கள் பேச்சு சிறப்பு.

    ** திருமணத்துக்குப் பிறகு வெயிட் போடுவதன் காரணம் சந்தோஷத்தில் பெருப்பது.. ரைட்:)!

    ** மனைவியையும் மகளையும் நண்பர்களாகப் பார்ப்பது.. க்யூட்:)!

    ** ஈகோ கூடாது. மனைவியை ஜெயிக்க நினைப்பவன் வாழ்க்கையில் தோற்பான். மனைவிக்கு விட்டுக் கொடுப்பவன் வாழ்க்கையில் ஜெயிப்பான்.. வெல் செட்:)!

    ** கடிவாளம் பூட்டப்பட்டக் குதிரைகள்தான் இலக்கை நோக்கிப் பயணிக்கும்.. பாயின்ட்:)!

    பாராட்டுக்கள் மோகன் குமார்.

    ReplyDelete
  22. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அமைதி அப்பா
    **
    ராமலட்சுமி: அடடா என்னா ஞாபக சக்தி உங்களுக்கு !! பேசியதில் உள்ள முக்கிய கருத்துக்களை இங்கு நீங்கள் குறிப்பிட்டது நிஜமாய் ரொம்ப மகிழ்ச்சி. நீண்ட நாள் கழித்து என்ன பேசினோம் என்பது நமக்கே கூட மறக்கும்; நீங்கள் அவற்றை குறிப்பிட்டு எழுதியதால் என்றும் இந்த விஷயங்கள் தான் பேசினோம் என்பது ரிக்கார்ட் ஆகிறது. மிக மிக நன்றி
    **
    மற்றும் நிகழ்ச்சி பார்த்து விட்டு எஸ்.எம்.எஸ் மற்றும் தொலை பேசியில் பேசிய அன்பு நண்பர்கள் விக்கி, வெங்கட் நாகராஜ் , தேவா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  23. ப்ரோக்ராம் பார்த்தேன். நல்லா தான் இருந்தது, அந்த compere தான் கொஞ்சம் கடி (குறிப்பா அவரோட ஜோக்ஸ்!!!) நீங்க நல்லாவே marriage life - ஐ பத்தி சொன்னீங்க (கொஞ்சம் ஓவரோ!). நிறைய லேடீஸ் fans உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு! ரெண்டு மூணு நாளைக்கு வீட்ல நல்ல டின்னர் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு ;-)

    BTW, DD அந்த set - ஐ மாத்தவே மாட்டங்களோ! பஜனை, பட்டி மன்றம் எல்லாத்துக்கும் ஒன்னே தான்!

    ReplyDelete
  24. //நீங்க நல்லாவே marriage life - ஐ பத்தி சொன்னீங்க (கொஞ்சம் ஓவரோ!)//.
    நன்றி தேவா. நாம் எடுத்து கொண்ட தலைப்புக்கு Justification செய்து தானே ஆகணும் !! மேலும் என் மனதில் உள்ளதை தான் பேசினேன்.

    //BTW, DD அந்த set - ஐ மாத்தவே மாட்டங்களோ! பஜனை, பட்டி மன்றம் எல்லாத்துக்கும் ஒன்னே தான்!//

    ஹா ஹா .. ஸ்டுடியோ இடம் எல்லாம் ரொம்ப பெருசு. ஆனா சேம் செட்டிங்க்ஸ்!!

    மிக்க நன்றி பார்த்தமைக்கும் உடனே எஸ். எம். எஸ் மற்றும் பின்னூட்டத்தில் கருத்துகளை பகிர்ந்தமைக்கும்.

    ReplyDelete
  25. நாங்களும் பார்க்க ஆசைபடுகிறோம். யாராவது youtube ல் போட்டால்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...