சூப்பர் சிங்கரில் பைனல் வரை வந்த ரோஷன்... எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் தான் கடந்த சில வருடங்களாகவே குடியிருக்கிறான். அடுத்த தெரு என்றாலும் - 50 மீட்டர் தான் தூரம்.. பல முறை அவனது வீட்டிலும் சாலைகளிலும் பார்ப்பது உண்டு. அவனை பார்த்து புன்னகைத்தால், வெட்கத்துடன் சிரித்த படி சென்று விடுவான். என்றாவது ஒரு நாள் அவனை நிறுத்தி பேசணும் என்று எண்ணி, எண்ணி அண்மையில் தான் அது சாத்தியமானது..
ஈஸ்டர் தினம்.. சாலையில் செல்லும் போது அவர்கள் வீட்டிலிருந்து பாடல் வழிகிறது " நான் தான் சகல கலா வல்லவன் " .. கேட்டபடியே சென்று விட்டு - அரை மணி கழித்து திரும்பும் போது மீண்டும் இன்னொரு பாடல் கசிகிறது " நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் "
சரி.. இன்றைக்கு அவனை நேரில் பார்த்து விடலாம் என அவர்கள் இல்லத்தின் உள்ளே சென்றேன்...
ரோஷன் ஹாலிலேயே லேப்டாப் உடன் அமர்ந்திருந்தான்.. அப்போது பாட்டு பாடியது? அவனது தம்பி ராபின்... ! இது அங்கு சென்றபின் தான் உணர முடிந்தது
உள்ளே ராபினுக்கு அவனது தந்தை பாட்டு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.
நான் ரோஷன் மற்றும் அவனது தாயுடன் பேசிக்கொண்டிருந்தேன்
ரோஷன் குடும்பம் முதலில் கோட்டூர் புரத்திலிருந்துள்ளது. இங்கு சொந்தமாய் வீடு வாங்கி கொண்டு 3 வருடம் முன்பு தான் வந்துள்ளனர். ரோஷனுக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அப்பா பெப்சிகொவில் விற்பனை துறையில் பணியாற்றுகிறார்
தற்போது +2 அக்கவுண்ட்ஸ் க்ரூப் படிக்கும் ரோஷன் C A படிக்க விருப்பம் என்று சொல்ல, எங்கள் ACS கோர்ஸ் பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். நான் அவனது துறை சார்ந்து தான் படித்துள்ளேன் என்பதை அறிந்ததும் நன்கு பேசத் துவங்கினான் ரோஷன்.
முறைப்படி கர்னாடிக் எல்லாம் கற்று கொள்ள வில்லை என்றும், ஹிந்துஸ்தானி சமீபத்தில் கற்று கொண்டதாகவும் சொன்னான். முக்கிய பயிற்சி அப்பாவிடமிருந்து தானாம் !.
ரோஷன் தாய் மற்றும் தந்தை பேச்சில் மலையாள வாடை தெரிகிறது. ரோஷனின் பேச்சில் சுத்தமாய் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தமையால் இருக்கலாம்...
சிறிது நேரத்தில் ரோஷனின் தந்தையும் எங்கள் பேச்சில் வந்து சேர்ந்து கொண்டார்.
+2 என்பதால் ரோஷன் தற்போது படிப்பில் கவனம் செலுத்த,அவனது தம்பி ராபின் தான் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சன் சிங்கரில் கலக்கி வருகிறான்.
அன்று கூட சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் செலெக்ட் ஆகி விட்டு அப்போது தான் இல்லம் திரும்பியிருக்கிறார்கள். உடனே அடுத்த சில நாட்களில் வரும் நிகழ்ச்சிக்கான பயிற்சி !!
ராபின் எந்தெந்த நிகழ்ச்சியில் தற்போது வருகிறான், எங்கெங்கு பாடுகிறான் என்று தாயும் தந்தையும் பெருமை பொங்க பகிர்ந்து கொண்டனர்.
சூப்பர் சிங்கர் பற்றியும் ஜட்ஜ்கள் பற்றியும் கூட கொஞ்சம் பேசினோம்.
அலுவலகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு ஒவ்வொரு முறை தனது மகன்கள் பாடும்போதும் விடுப்பு எடுத்து கொண்டு கூடவே செல்லும் அவனது தந்தையை - மனம் விட்டு பாராட்டினேன்.
அவர்கள் படிக்கும் வேல்ஸ் பள்ளியும் கூட இது போன்ற திறமைகளை நன்கு ஊக்குவிப்பதாக மகிழ்ச்சியாக சொன்னார்.பல பள்ளிகள் "படிப்பு படிப்பு " என விடுப்பே தர மாட்டார்கள்; அதனால் தான் அங்கு சேர்க்க வில்லை" என்றும் கூறினார்.
ரோஷனின் தம்பி - ராபின் - குட்டி பையன் . ரோஷன் போல இன்றி சற்று சதைபிடிப்புடன் இருப்பதால் செம அழகாக இருக்கிறான்.
இருவரை விட இன்னும் கியூட் அவர்கள் தங்கை. ஆறு வயது தான் இருக்கும். கண்ணில் குறும்பு கொப்பளிக்கிறது. அண்ணன்கள் இருவரும் பாட மட்டுமே செய்வார்களே ஒழிய முகத்தில் எந்த ரீ ஆக்ஷனும் இருக்காது. இவளது முகத்திலோ அத்தனை முகபாவங்கள் வந்து போகிறது...
எங்கள் வீட்டில் கிளிகள் இருக்கின்றன என்றதும், வந்து பார்க்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள் குட்டி பெண். ரோஷன் அல்லது அப்பாவுடன் இன்னொரு முறை வா என்று கூறி விட்டு விடை பெற்றேன்.
படிப்பு, படிப்பு என இருக்கும் இந்த காலத்தில் இத்தகைய பிற திறமைகளை ஊக்குவிக்கும் ரோஷன்- ராபின் தந்தை தான் வீடு நோக்கி நடக்கும்போது மனதில் நிறைந்திருந்தார் .. !

Anna super. Marupadi dhool arambam. Top gear la thattunga. Second innings start.
ReplyDeleteஅருமையான சந்திப்பு
ReplyDeleteSuper sir, if you would have shared some video and photo of his performance would be good. Good luck to Roshan, he is in right hands for CA !
ReplyDeleteநல்ல காலம் ப்ரின்ஸ் பள்ளியில் சேர்க்கவில்லை. அவர்கள் தனித் திறன்களை ஊக்குவிப்பது இல்லை.
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை! ரோஷன் தம்பிக்காக ஒரு முறை பார்க்கத்தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல சந்திப்பு.....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி மோகன்.
பெருபாலனவர்கள் இம்மாதிரியான சந்திப்பு பற்றி எழுதும்பொழுது கற்பனை கலந்து எழுதுவார்கள். ஆனால், தாங்கள் உண்மையை மட்டுமே எழுதுவீர்கள் என்பதை நானறிவேன். இதுவும் அப்படியே!
ReplyDelete