தமிழில் ப்ளாக் எழுதுவோரில் மிக அதிக ப்ளாகர்கள் இருப்பது தமிழகத் தலைநகரம் சென்னையில் தான் ! (300- க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னையில் உள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தெரிவிக்கிறார்). பதிவர்களை தவிர்த்து ஏராள பிரபலங்கள் (VIP's) உள்ள இடமும் கூட ! இத்தனை சிறப்பான ஊரில் இதுவரை பெரிய பதிவர் திருவிழா பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வண்ணம் மாபெரும் பதிவர் திருவிழா ஆகஸ்ட் 26- நடக்க உள்ளது.
இதோ விழாவிற்கான அழைப்பிதழ்
விழா அழைப்பிதழை நேற்று ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், தனி பதிவாக வெளியிட்டு தங்கள் ஒற்றுமையை காட்டினர்.
நேற்று தமிழ் மண முகப்பு பக்கத்தின் Snapshot இது :
விழா குறித்தான சில கேள்விகளும் விளக்கங்களும் இதோ (தலைப்புக்கு இது தானுங்க காரணம்; ஹிஹி)
சென்னை வாழ் பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?
விழாவிற்கு நீங்கள் உங்களின் பதிவர் நண்பர்களுடன் அவசியம் வருவதே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல் ! உங்கள் வருகையை ஈ மெயில் மூலம் உறுதிப்படுத்தினால் அது மிக உதவியாய் இருக்கும்.
மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். உங்களால் முடிந்தால் அவசியம் நீங்கள் வந்து இவற்றில் உங்கள் யோசனைகளை சொல்லலாம். நீங்களும் சில பொறுப்புகள் எடுத்து கொள்ளலாம்.
வெளியூர் பதிவர்கள் என்ன செய்ய வேண்டும்?
விழாவுக்கான தேதி முடிவான உடனே, பல்வேறு வெளியூர் பதிவர்களும் பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களின் பயண டிக்கெட்டை நீங்கள் உடனே புக் செய்யவும்.
உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! பல்வேறு பணிகளுக்கிடையில் விழாவை சிறப்புற நடத்த முயலும் நமது நண்பர்களுக்கு நீங்கள் வருகிற மகிழ்வான தகவலை விரைவில் சேர்ப்பியுங்கள் !
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மூத்த பதிவர்களுக்கு ...
தற்போது பதிவெழுதி வரும் அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பதிவர்களை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு விழாவில் உள்ளது.
உங்களுக்கு தெரிந்த அத்தகைய மூத்த பதிவர்களை எங்களுக்கு தெரிவியுங்கள். மூத்த பதிவர்கள் தாங்களாகவும் எங்களுக்கு எழுதலாம்
மூத்த பதிவர்கள் அவசியம் கலந்து கொண்டு எங்கள் அன்பை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
விழாவில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் செய்ய வேண்டியது என்ன?
விழாவின் முக்கிய நிகழ்வாக நடக்கும் கவியரங்கில் பங்கெடுக்க விரும்பும் கவிஞர்கள் தங்கள் பெயரை விழா குழுவினருக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும். ஆகஸ்ட் 18-க்குள் கவியரங்கில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தால் மிக உதவியாய் இருக்கும். கவியரங்கில் பங்கெடுக்கும் கவிஞர்கள் முழுமையான பட்டியல் நண்பர்கள் வெளியிடுவர்.
விழாவில் சாப்பாடு உண்டா?
அனைவருக்கும் மதிய சாப்பாட்டிற்கும், விழா நடுவே ஸ்நாக்ஸ் மற்றும் தேநீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவர் நண்பர் ஒருவரின் சமையல் காட்டரிங் மூலமே இந்த ஏற்பாடுகள் நடப்பது கூடுதல் மகிழ்ச்சி
விழாவில் கலந்து கொள்ள கட்டணம் உண்டா?
ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாய் விழா தயார் ஆகிறது. எனவே பங்களிப்பு தர விரும்பும் சென்னை நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம்.
விழா நடக்கும் மண்டபம் வருவது எப்படி?
இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.
நீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.
இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:
லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.
தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்
மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம்.
பங்கு பெறுதல் குறித்த உறுதிபடுத்தும் தகவல் யாரிடம் சொல்வது?
இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:
மதுமதி : kavimadhumathi@gmail.com
பாலகணேஷ் bganesh55@gmail.com
மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686
பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.
பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.
உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.
அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !
இதோ விழாவிற்கான அழைப்பிதழ்
அழைப்பிதழை காணும் போதே சென்னை மட்டுமல்லாது கோயம்பத்தூர், மதுரை. ஈரோடு, திருவள்ளூர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு ஊரில் இருக்கும் பதிவர்களும், விழாவில் முக்கிய பணிகளை செய்ய உள்ளது தெளிவாகும். இது எந்த குறிப்பிட்ட அணியும் இல்லாது பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் விழா.

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:
உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686
பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.
பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.
உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.
அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !
மிக மிக அருமையான சிறப்பான தெளிவான பதிவு... சென்று சேரட்டும் பலரை ... ஒன்று கூடுவோம்
ReplyDeleteகலக்குங்க பாஸ்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலந்துகொள்ள இருக்கும் பதிவர்களுக்கு சாலை வழிகாட்டுதலோடு சொல்லி இருப்பது சிறப்பு. நானும் அழைப்பு பதிவு வெளியிட்டுவிட்டேன். நன்றி.
ReplyDeleteரொம்ப தெளிவா எழுதி இருக்கேங்க சார்..வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் தவறாமல் வருகிறேன்....
ReplyDeleteவாழ்த்துக்கள்..
எங்களை மாதிரி ஆட்களை எல்லாம் விட்டுவிட்டு கூட்டம் நடுத்துகிறீர்கள் நடத்துங்கள் நடத்துங்கள்....முடிந்தால் ஆன்லைன் மூலம் ஒலிபரப்புங்கள் அல்லது நடந்த நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து பகுதி பகுதியாக யூடியுப்பில் பதிவேற்றுங்கள்
ReplyDeleteஅழகாக விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கி விட்டீர்கள்.. இதில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்களை கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு கொண்டு வரும் பதிவாக இருக்கிறது..
ReplyDeleteவரமுடியலைன்னு நினைக்கும்போது ஏக்கமா இருக்கு.
ReplyDeleteபங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.
விழா நன்கு நடைபெற இனிய வாழ்த்துகளைத் தெரிவிக்கும் நியூஸி தமிழ்ப்பதிவர் சங்கம் சார்பாக,
துளசி.
வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக விளக்கமான அருமையான பதிவு.அனைத்துப் பதிவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும், வாழ்த்துகள் மோகன்.
ReplyDeleteசந்திப்போம்... மகிழ்வோம்...
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..
ReplyDelete//உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! //
ஐ.. சாமி சோறுலாம் போடுது போல...
Who is Funding Sir
விரிவான பதிவுக்கு மிக்க நன்றி
ReplyDeleteநம் இல்லத் திரு விழா என்கிறஉணர்வு
அனைத்து பதிவர்களிடத்தும் உள்ளது
வேறென்ன வேண்டும் ஜமாய்த்திடுவோம்
tha.ma 8
ReplyDeleteமிகவும் விளக்கமான அருமையான பதிவு.
ReplyDeleteகண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே.
மிக மூத்த பதிவரான என் பெயர் பத்திரிக்கையில இல்லை # இந்த பஞ்சாயத்துல எனக்கு மரியாதை இல்லை # புறக்கணிக்கிறேன்.
ReplyDelete:)
joke apart.. 21 ஆம் தேதி இரவு பணி நிமித்தம் அமெரிக்கா செல்ல இருப்பதால் பங்குபெற இயலாத என் நிலையை மிகுந்த மன வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். :((
ReplyDeleteசெல்வதற்கு முன்னால் இந்த நிகழ்வு தொடர்பாக என்னால் செய்ய இயலும் அத்தனை வேலைகளையும் செய்து தருகிறேன்.
மகிழ்ச்சி. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநேர நெருக்கடி - படிக்க வேண்டிய வேலைகள் நிறைய சேர்ந்து விட்டன.
நன்றி. வாழ்த்துகள்.
/வரமுடியலைன்னு நினைக்கும்போது ஏக்கமா இருக்கு.
ReplyDeleteபங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்./
same blood!!
நன்றி மோகன்! மிகவும் விளக்கமான,தேவையான பதிவைத் தந்தீர்கள்! பாராட்டுக்கள்! சா இராமாநுசம்
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் மோகன்
ReplyDelete// மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். //
ReplyDeleteபதிவர் சந்திப்பிற்கு முந்தைய கலந்தாலோசனை பதிவர் சந்திப்புகளின் ஏதோ ஒரு வார இறுதி பதிவர் சந்திப்பில் சிராஜுதீனின் பாக்கெட்டில் இருந்த இனிப்பு பல்பத்தை அஞ்சாசிங்கம் ஆட்டையை போட்டு விட்டார் என்கிற பரபரப்பு வழக்கை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுகிறோம்.
பலரின் சந்தேகங்களுக்கு தீர்க்கும் பகிர்வு...
ReplyDeleteவிளக்கமான பதிவிற்கு சல்யூட்...
விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி… (TM 13)
//நீங்கள் டி. நகரில் இருந்து வந்தாலும், //
ReplyDeleteதி.நகர். - தியாகராயர் பாவம் :(((
//இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.//
ReplyDeleteஐந்து விளக்கு பிரகாசமாக எரியும் வண்ணம் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்(இன்று அதிகாலை வரை அவர்தான் அமைச்சர் என நம்புகிறேன்), அன்று முழுதும் பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென கோருகிறோம்.
மிகத் தெளிவாக விவரமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் மோகன்குமார். விழாவிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக விழா நடக்கும் இடத்துக்கு வரும் வழி மற்றும் மேப் வெளியிடலாம் என நினைத்திருந்தேன். நீங்கள் எக்ஸ்பிரஸாய் செயல்பட்டு வெளியிட்டதில் மகிழ்ச்சி. அனைவரின் கரங்களும் இணைந்து கலக்கட்டும்.
ReplyDeleteடிஸ்கவரி வேடியப்பன் தரும் பதிவர்களுக்கான தள்ளுபடி வழக்கம்போல 90% என்பதே நிஜம். 10% என்பது முற்றிலும் தவறான தகவல். சரி செய்யவும்.
ReplyDelete@புதுகை அப்துல்லா,
ReplyDeleteஎப்போ திரும்பி வர்றீங்க?
சிவகுமார் ! said...
ReplyDeleteடிஸ்கவரி வேடியப்பன் தரும் பதிவர்களுக்கான தள்ளுபடி வழக்கம்போல 90% என்பதே நிஜம். 10% என்பது முற்றிலும் தவறான தகவல். சரி செய்யவும்.
***
சிவா: வாரா வாரம் அவர் கடையில் தான் சந்திப்பு நடக்குது. நீர் தான் அவரை பத்தி இப்படி அடிச்சு விடுறீங்கன்னு மாட்டி விடுறேன் இருங்க. :)
நான் வராட்டி கூட, நிறைய முடி வச்சிக்கிட்டு இருப்பார் அவர் தான் சிவகுமார்னு ஈசியா அடையாளம் சொல்லி அவருக்கு போன் பேசிடுறேன் :)
பால கணேஷ் said...
ReplyDeleteவிழாவிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக விழா நடக்கும் இடத்துக்கு வரும் வழி மற்றும் மேப் வெளியிடலாம் என நினைத்திருந்தேன்
**
அவசியம் அப்போ Map வெளியிடுங்க கணேஷ். நிச்சயம் அந்த நேரம் எழுதினால் பயன்படும் !
good work!!!
ReplyDelete@துளசி அம்மா.
ReplyDeleteசெப்டம்பர் 15 திரும்பி வர்றேங்கம்மா.
@புதுகை அப்ய்துல்லா.
ReplyDeleteஆஹா..... செப்டம்பர் 20 தேதியை குறிச்சு வச்சுக்குங்க. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை:-)
துளசி டீச்சர் அப்து அண்ணே செப்டம்பர் 15 வந்து விடுவதால் அவசியம் செப்டம்பர் 20-உங்கள் இல்ல விழாவுக்கு வந்து விடுவார்.
ReplyDeleteசமீபத்தில் அப்து அண்ணே, அகநாழிகை உள்ளிட்ட நண்பர்களை ஒரு நிகழ்வில் சந்திக்கும் போது அனைவரும் உங்கள் மேல் எவ்வளவு பிரியமும் மரியாதையும் வைத்துள்ளனர் என்று அனைவரின் பேச்சிலும் தெரிந்தது. அனைவருமே உங்களை காண ஆவலுடன் இருக்கிறோம் !
// செப்டம்பர் 20 தேதியை குறிச்சு வச்சுக்குங்க
ReplyDelete//
உங்கள் மகன் இல்லாமல் உங்கள் வீட்டில் விழாவா? அவசியம் இருப்பேன் இன்ஷா அல்லாஹ் :)
பதிவர் மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள். கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் மோகன்.:))
ReplyDeleteநன்றி மோகன் குமார் & அப்துல்லா.
ReplyDeleteஇன்னும் மற்ற நண்பர்கள் அனைவரும் இல்ல விழாவுக்கு வந்து சிறப்பிக்கணும்.
இது ஒரு முன்னறிவிப்பு.
மற்றவைகளை இன்னும் ரெண்டொரு வாரத்தில் விவரமாத் தெரிவிக்கிறேன்.
ரொம்ப முன்னாலே சொன்னால் தேதியை மறக்கும் வாய்ப்பு இருக்கே:(
நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிளக்கமான பதிவு.
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதினம் தினம் இங்ஙேயே இருக்கிறேன்.கரெக்டா நான் இல்லாத நேரமா பார்த்து பதிவர் திருவிழா. 20 என் கணவரின் அண்ணா பெண் திருமணம் இங்கே நாங்கள் நடத்துகிறோம். 26 கோத்தகிரியில் ரிஷப்ஷன் பையன் ஊரில்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விரிவான , விளக்கமான , அழகான , தேவையான விஷயங்களுடன்
ReplyDeleteரொம்ப ப்ராக்டிக்கலான தங்களின் பதிவு கண்டு படை திரள்வது
உறுதி. வாழ்த்துக்கள் !
அழைப்பிற்கு மிக்க நன்றி தோழரே !
ReplyDeleteதென்றலிடம் உறுதிப்படுத்துகிறேன்
நல்ல படைப்பாளிதான் உங்கள் வரவேற்ப்பு அனைத்து சந்தேககங்களையும் தெளிய வைக்கிறது நன்றி நிச்சயம் கலந்துகொள்கிறோம்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்களே...!
ReplyDeleteவாழ்த்துக்கள் பதிவர்களுக்கு
ReplyDeleteமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பர்களே!! விழா சிறக்க.. நிச்சயம் வருகிறேன்..
ReplyDeleteவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிளக்கமான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in
அழைப்புக்கு நன்றி! விழாவில் சந்திப்போம்.
ReplyDeleteநன்றி சீனு. மகிழ்ச்சி விழாவில் சந்திப்போம்
ReplyDeleteநன்றி கலாநேசன்
ReplyDeleteமுரளி சார் மகிழ்ச்சி வாசித்தேன்
ReplyDeleteராஜ் முடிந்தால் வாருங்கள் உங்களை சந்தித்தால் மிக மகிழ்வேன்
ReplyDeleteஅவர்கள் உண்மைகள்: சென்னை வரும்போது சொல்லுங்க நண்பா. குட்டி பதிவர் சந்திப்பு வச்சிடலாம்
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி சங்கவி
ReplyDeleteதுளசி மேடம்: உங்கள் இல்ல விழாவே மினி பதிவர் சந்திப்பு தானே? ஜமாய்ச்சுடுவோம் !
ReplyDeleteநன்றி ஹாரி பாட்டர். நீங்கள் போட்ட தனி பதிவுக்கும்
ReplyDeleteசென்னை பித்தன் ஐயா: நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteசங்கவி. வாங்க வாங்க சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
ReplyDeleteமாதவா: விழாவுக்கு வர்றீங்களா? முயற்சி பண்ணுங்க
ReplyDeleteநண்டு @ ராஜசேகர் : தங்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி. . காத்திருக்கிறேன்
ReplyDeleteஅப்து அண்ணே: நீங்க வர முடியாதது ரொம்ப வருத்தம் அண்ணே
ReplyDeleteநடராசன் ஐயா: மிக மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteஅருணா மேடம்: சென்னை வரும்போது சொல்லுங்க சந்திப்போம்
ReplyDeleteஇராமாநுசம் ஐயா: மிக மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி சரவணன். சென்னையில் தான் இருக்கீங்க என்றால் அவசியம் வாங்க
ReplyDeleteதனபாலன் சார்: முடிந்தால் அன்று சென்னை வாருங்கள் பலரை சந்திக்கலாம்
ReplyDeleteசுகுமார்: மிக நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteதேனம்மை மேடம்: உங்களை எதிர்பார்ப்போம் வாருங்கள்
ReplyDeleteகாவேரி கணேஷ்: அவசியம் வந்துடுங்க
ReplyDeleteஸ்ரீராம்: சென்னை காரர் தானே? நீங்க அவசியம் வாங்க சார்
ReplyDeleteநன்றி உமா மேடம்
ReplyDeleteஅமுதா மேடம்: அடடா ! உறவினர் கல்யாணம் எனும்போது நீங்கள் என்ன செய்ய முடியும்?
ReplyDeleteஸ்ரவாணி: விழாவுக்கு வர முயலுங்கள் நன்றி
ReplyDeleteசரளா: மகிழ்ச்சி விழாவில் சந்திப்போம்
ReplyDeleteநன்றி மனோ. தங்களின் பதிவுக்கும் தான்
ReplyDeleteமுரளி கண்ணன் :சயின்டிஸ்ட் சார் அவசியம் வாங்க
ReplyDeleteமணிஜி : நீங்கள் வருவதில் பெரும் மகிழ்ச்சி
ReplyDeleteநிசாமுதீன் : நன்றி
ReplyDeleteநடன சபாபதி : மகிழ்ச்சி அவசியம் வாருங்கள்
ReplyDeleteThanks Suresh !
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவிவரங்களைக் கொடுத்திருக்கும் விதம் அருமை.
கலக்கலாக, அசத்தலாக இருக்கின்றன விபரங்கள்!
ReplyDeleteகலந்து கொள்ளப்போகும் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
வெளி நாட்டில் இருப்பதால் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ள முடியாத இயலாமை வருத்தப்படுத்துகிறது!
விழாவிற்கு அடியேனின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பன்,
ஆர்.ஆர்.ஆர்.
தமிழ்மணம் மகுடம்
ReplyDeleteகடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
சென்னை பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன தோழர்களே? - 22/22
மோகன் குமார்
விழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete// இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.
ReplyDeleteநீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.
இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:
லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.
தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்
மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம். //
பாஸ்... கக்கிஸ் வழியா ஏறிகுதிச்சு கூட சாப்பிடுற இடத்துக்கு போயிரலாம் பாஸ்...
மதுமதி, பாலகணேஷ், ஜெயக்குமார், சிவகுமார் பெயர்களுக்கு முன்பு உயர்திரு போடாததில் நீங்கள் வைத்திருக்கும் உள்குத்து புரிகிறது தோழரே... ம்ம்ம் நடத்துங்க...
ReplyDeleteநியூசில ஒரு தமிழ்ப்பதிவர் சங்கமா? (என்னங்க துளசி இது ஒரு நபர் சங்கமா?)
ReplyDeleteநன்றி அப்பாத்துரை சென்ற மாதம் இருந்தால் நீங்களும் கலந்துட்டுருந்துருப்பீங்க
ReplyDeleteநன்றி மனோ மேடம்
ReplyDeleteநன்றி மனோ மேடம்
ReplyDeleteநன்றி ஆர் ஆர் ஆர் சார்
ReplyDeleteநன்றி கருன்
ReplyDeleteபிரபா: பெரியர்வர்கள் இருவர் பெயருக்கு முன்பும் உயர்திரு போட்டேன். நண்பர்களுக்கு எதற்கு உயர்திரு போடணும்? :) நண்பர்கள் பெயருக்கு முன் அப்படி போட்டால் அவர்களே ஏன் போட்டாய் என கேட்பார்கள்
ReplyDeleteஅப்புறம் வழி பற்றி விரிவாய் எழுதணும் என மதுமதி, சிவா உள்ளிட்ட நண்பர்கள் சொன்னதால் தான் எழுதினேன் ! நன்றி !
என்னங்க அப்பாதுரை, இப்படிக் கேட்டுட்டீங்க?????
ReplyDeleteஇன்னும் ஒரு பதிவர் இருக்கார் வடக்குத்தீவில். கிவியன். அவர் வலைப்பதிவின் பெயர் மௌனம். அதுக்குத் தகுந்தமாதிரி அப்படியே இருப்பார்.
ரொம்ப நாளா அவரைக்காணோம்.
அதான் ஒன் பெர்ஸன் ஆர்மியாப்போச்சு:-)
பி.கு: துளசிதளத்தின் ஹெட் க்வாட்டர்ஸ் தெற்குத்தீவில்.
தெற்கு(ம்) வாழ்கிறது:-)))
முன்பு நியூசியில் சின்ன அம்மணி அக்கா இருந்துச்சு..அதுவும் சமீபத்துல ஆஸ்திரேலியாவுக்கு மாறிப் போயிருச்சு. கிவியன் அங்கதான் இருக்காரு. ஆனா என்னய மாதிரி அவரும் எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற என்னால ஆன எல்லா உதவிகளையும் செய்வேன் என்று நான் உளமார உறுதி கூறுகிறேன்...
ReplyDeleteயோவ் சிவா..
ReplyDeleteஎன்னையா உம்மோட ஒரே ரோதனையா போச்சு.. எப்ப பார்த்தாலும் என்னையும் அஞ்சா சிங்கத்தையும் கோர்த்துவிட்டுகிட்டே இருக்கீங்க...
அவரு அவ்வளவு வொர்த் இல்லப்பா..விட்ருங்க....
விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்... அமீரகப்பதிவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவேண்டும் என்பது எனது ஆசை...!
ReplyDeleteநல்ல பதிவுதான்... இப்படியொரு சந்திப்பு நடக்கவிருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்... விழா சிறக்க வாழ்த்துக்கள்... வெறுமனே அரட்டைக்கச்சேரிகளுடன் முடித்து விடாமல் பதிவர்களுக்கான எதிர்காலத்திட்டமிடல்களும் நடத்துங்கள்... Great..All the best.
ReplyDeleteவிழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்டிப்பா கலந்துக்க வேண்டிய நம்ம வீடு திருவிழா , விழா ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி , கண்டிப்பாக கலந்துகிறேன் நண்பர்களே , முன்பு நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபவம் மகிழ்ச்சியானது .........
ReplyDeleteஅழைப்புக்கு ரொம்ப நன்றி நானும் வந்து கலந்துக்கரேன்
ReplyDeleteவிழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteஅழைப்பிற்கு நன்றி, மோகன்.
ReplyDeleteவிழா நடக்கும் நாளில் பணி காரணமாக வெளியூரில் இருப்பதால், விழாவில் கலந்துகொள்ள இயலாது :( பயண ஏற்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தால், கட்டாயம் கலந்துகொள்கிறேன்.
விழா சிறக்க வாழ்த்துகள்!
பதிவில் தகவல்கள் சூப்பர்.
ReplyDeleteநல்ல பதிவு. அயல்நாட்டில் இருக்கும் எங்களுக்கு இதில்கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தம். முடிந்தால் யூ டியூப் லிங்க அனுப்புங்க நாங்களும் பார்த்துமகிழ்வோம். அடுத்த சந்திப்புக்காவது கலந்துக்கிறோம்.
ReplyDeleteபதிவர்களுக்கு நல்ல சிறப்பா கொண்டாடி மகிழ் வாழ்த்துக்கள்.
நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமரியாதைக்குரிய நண்பரே,இனிய வணக்கம்.தாளவாடி மலைப்பகுதியில் அரசுப்பேருந்தில் ஓட்டுனர் பணி புரியும் நான் அவசியம் ஆகஸ்டு 26-இல் புண்ணியகோட்டி மண்டபத்தில் இருப்பேன்.எனக்கும் ஒரு இடம் ஒதுக்கமுடியுமா? அன்புடன் paramesdriver // konguthendral.blogspot.com // tnsfthalavady.blogspot.com // tntransport.blogspot.com // paramesdriver.blogspot.com// நன்றிங்க!
ReplyDeleteParamesdriver said...
ReplyDeleteமரியாதைக்குரிய நண்பரே,இனிய வணக்கம்.தாளவாடி மலைப்பகுதியில் அரசுப்பேருந்தில் ஓட்டுனர் பணி புரியும் நான் அவசியம் ஆகஸ்டு 26-இல் புண்ணியகோட்டி மண்டபத்தில் இருப்பேன்.எனக்கும் ஒரு இடம் ஒதுக்கமுடியுமா?
*****
பரமேஸ் டிரைவர் அவர்களே
உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது. அவசியம் கலந்து கொள்ளுங்கள் நண்பர்கள் அனைவரிடமும் சொன்னேன். அனவைரும் மிக மகிழ்ந்தனர். உங்களை சென்னையில் சந்திக்க ஆவலாக உள்ளோம்
இன்று தான் பார்த்தேன். நன்றி தகவல்களுக்கு. மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக மாநாடு நடத்துவதும் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே!!!
ReplyDeleteமோகன் குமார்,
ReplyDeleteபொழுது விடிஞ்சால் பதிவர் மாநாடு!!!!!!
அனைவரையும் நான் அன்புடன் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.
க்ரீட்டிங்ஸ் ஃப்ரம் நியூஸி.
coming there in 30 mins
ReplyDelete