இந்த பதிவு பற்றி ஒரு சின்ன டிரைலர் :
*****
"அண்ணே வணக்கமண்ணே"
"வணக்கம் வணக்கம் யாரு நீங்க"
"வணக்கம் வணக்கம் யாரு நீங்க"
"என்னை தெரியலையாண்ணே ? நான் ரெண்டு நாளு முன்னாடி உங்களை அடிச்சிருக்கேண்ணே !"
"அப்புடியா? நம்ம ஆதி விட்ட பிளஸ்சில் குமுறு குமுறுன்னு நம்மளை குமுறினாங்களே அதில இருந்தியாப்பா நீயி? "
"இல்லைண்ணே "
"ஓஒ அப்ப என் கல்யாண நாளும் அதுவுமா புரட்டி போட்டு எடுத்தாங்களே அந்த பிளஸ்சிலே இருந்திருக்கே !"
"அட இல்லைண்ணே "
"இத பார்றா ! அப்ப, நம்ம வீடு சுரேஷ் போட்ட பதிவுல வந்து மூஞ்சுலேயே குத்துனியா நீயி? "
"போங்கண்ணே உங்களுக்கு எதுவுமே ஞாபகம் இருக்க மாட்டேங்குது !"
"அப்புடியா? நம்ம ஆதி விட்ட பிளஸ்சில் குமுறு குமுறுன்னு நம்மளை குமுறினாங்களே அதில இருந்தியாப்பா நீயி? "
"இல்லைண்ணே "
"ஓஒ அப்ப என் கல்யாண நாளும் அதுவுமா புரட்டி போட்டு எடுத்தாங்களே அந்த பிளஸ்சிலே இருந்திருக்கே !"
"அட இல்லைண்ணே "
"இத பார்றா ! அப்ப, நம்ம வீடு சுரேஷ் போட்ட பதிவுல வந்து மூஞ்சுலேயே குத்துனியா நீயி? "
"போங்கண்ணே உங்களுக்கு எதுவுமே ஞாபகம் இருக்க மாட்டேங்குது !"
***************
பதிவர் மாநாடு: கற்றதும் பெற்றதும்
ஆகஸ்ட் 26 -விழா எனக்கு ஏராள நண்பர்களையும் சில தற்காலிக எதிரிகளையும் (அவர்களும் மறுபடி நண்பர்களாவர் என நம்பிக்கை உண்டு) தந்துள்ளது
விழா குறித்த முதல் அறிவிப்பு வந்ததும் கேபிளிடம் போனில் பேசினேன். " என்ன கேபிள் அதிக அறிமுகம் இல்லாதவங்க விழா செய்றாங்களே ! நீங்க என்ன பண்ண போறீங்க?"
" இது எதோ நாலு பேர் மட்டும் சேர்ந்து செய்யும் விழா மாதிரி இருக்கே. மற்றவங்க பேரும் இருந்தா தானே எல்லாரும் இருக்க மாதிரி அர்த்தம்?" என்று ! கோபப்படாமல் மதுமதி சொன்னார்" நாங்க நாலு பேர் முதலில் இப்படி செய்யணும்னு ஆரம்பிச்சோம். யாராவது ஆரம்பிக்கணும் இல்லையா? இப்போ இருபது பேர் இருக்கோம். எல்லாரும் பேசுவோம். என்ன செய்யணுமோ செய்வோம். " இப்படி தான் ஆரம்பித்தது விழா குழுவினர் நட்பு.
சில ஆண்டுகளுக்கு முன் ஐம்பது பேர் இதே கூடி பேசும்போது நாற்பது பேருக்கு மேல் இதை தொடர்ந்து எடுத்த செல்ல ஆதரவு இருந்தும் நான்கைந்து பேர் இதை மிக எதிர்த்து மேலே தொடர முடியாமல் செய்து விட்டனர். இது பற்றி பேசி, "எந்த விஷயத்திலும் ஒருமித்த கருத்து வரமுடியாது; பெரும்பான்மை முடிவு படி மேலே செல்வோம்" என்று முடிவெடுத்தோம்
வாரா வாரம் விழா பற்றி பேச ஞாயிறு டிஸ்கவரியில் கூடுவார்கள். முடிகிற வாரம் மட்டும் செல்வேன். பல வாரம் போகலை. மீட்டிங் முடிந்ததும் மதுமதி அல்லது சிவாவிடம் விபரங்கள் கேட்டு தெரிந்து கொள்வேன்.
சில ஆண்டுகளுக்கு முன் ஐம்பது பேர் இதே கூடி பேசும்போது நாற்பது பேருக்கு மேல் இதை தொடர்ந்து எடுத்த செல்ல ஆதரவு இருந்தும் நான்கைந்து பேர் இதை மிக எதிர்த்து மேலே தொடர முடியாமல் செய்து விட்டனர். இது பற்றி பேசி, "எந்த விஷயத்திலும் ஒருமித்த கருத்து வரமுடியாது; பெரும்பான்மை முடிவு படி மேலே செல்வோம்" என்று முடிவெடுத்தோம்
வாரா வாரம் விழா பற்றி பேச ஞாயிறு டிஸ்கவரியில் கூடுவார்கள். முடிகிற வாரம் மட்டும் செல்வேன். பல வாரம் போகலை. மீட்டிங் முடிந்ததும் மதுமதி அல்லது சிவாவிடம் விபரங்கள் கேட்டு தெரிந்து கொள்வேன்.
செம காமெடியாய் பேசும் சேட்டைக்காரன் |
சேட்டைக்காரன் பேச்சை சிரித்து ரசிக்கும் பதிவர் மக்கள் |
பின் மூன்று நாள் ஹாலுக்காக அலைந்து பின் தற்போது விழா நடந்த ஹால் பிக்ஸ் செய்தனர். இந்த மூன்று நாளும் புலவர் ஐயா, மதுமதி, பாலகணேஷ், ஜெய் அனைவரும் செம டென்ஷன் ஆக இருந்தனர். ரொம்ப சோதனையான கட்டம் அது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். வாடகை ஐம்பதாயிரத்துக்கு மேல் இருக்கிறது. அன்று கல்யாண நாள் என்பதால் பல இடம் கிடைக்கலை. இத்தகைய கூட்டம் என்றால் ஹால் தரலை சிலர், போலிஸ் அனுமதிக்கான அலைச்சல் இப்படி எத்தனையோ பிரச்சனை இருந்தும் மூன்று நாள் வேறு வேலை அனைத்தையும் விட்டு விட்டு அலைந்து பிடித்தது தான் இந்த ஹால் !
நாங்கள் கற்ற பாடம் : ஹால் பிக்ஸ் செய்து விட்டு தான் இனி தேதியை அறிவிக்க வேண்டும். தேதி முதலில் முடிவாகி ஒரு முறை மாறுதல் வேறு ஆனதால் மறுபடி மாற்ற முடியாத நிலை. தேதியில் சற்று திறந்த மனதுடன் இருந்திருந்தால் ACS இன்ஸ்டிடியூட் or ICWA இன்ஸ்டிடியூட் போல ஒரு இடத்தில் முடித்திருக்கலாம். விழா செலவு குறைந்தது 15 முதல் இருபதாயிரம் குறைவாகியிருக்கும்.ஆனால் இந்த விழாவில் அதற்கான வாய்ப்பு இல்லை. உடனே ஹால் பிக்ஸ் செய்யும் நிலையில் அன்று இருந்தோம். இந்த ஹால் கிடைத்ததே பெரிது
அடுத்து பட்ஜெட். கிட்டத்தட்ட 75000 ஆகும் என முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அதை எப்படி புரட்ட போகிறோம் என்பது கேள்வி. பொதுவாய் இத்தகைய விழாக்களில் வெளியூர் நண்பர்களிடம் பணம் கேட்பதில்லை. உள்ளூர் நண்பர்கள் ஸ்பான்சர் மூலமோ, தங்கள் சக்திக்கு ஏற்றவாரோ பணம் போடுவார்கள்.
மக்கள் சந்தை ஒரு ஸ்பான்சர் ஆக கிடைத்தது பெரிய பலம். அவர்கள் 25000 தந்தது போக ஐம்பதாயிரம் புரட்ட வேண்டியிருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரே அளவு தான் காண்டிரிபியூட் செய்யணும்; வெவ்வேறு அளவு பணம் என்றால் பிரச்சனை வரும் வாய்ப்புண்டு என ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட முடிவானது. தேவையெனில் இவர்களே மீண்டும் பணம் போடவேண்டும் என்றும் பேசியிருந்தோம்.
மேலும் ஒவ்வொரு பதிவருக்கும் தொடர்ந்து வாசிப்போர் வேறுபடுவர்; எனவே அனைவரும் குழு முடிவுகளை ஒவ்வொரு கட்டத்திலும் தங்கள் ப்ளாகுகளில் ஒரே நேரத்தில் போடுவதாக முடிவானது. இதற்கான முழு டெக்ஸ்ட் ஒருவர் தயார் செய்து அனைவருக்கும் மெயிலில் அனுப்புவர். அனைவரும் படித்து பார்த்து விட்டு, கருத்து சொல்ல ஒரு நாள் போல் நேரம் தந்து, கருத்துகள் வந்தால் ஏற்று கொண்டு, இல்லா விடில் அதே டிராப்ட் பப்ளிஷ் ஆகும். இப்படி தான் ஆரம்பம் முதல் கடைசி வரை தொடர்ந்து அனைவரும் ஒரே பதிவுகளை வெளியிட்டோம், அதில் சிலர் தலைப்பிலும் மற்றும் உள்ளே சற்று மசாலா சேர்த்தும் வெளியிடுவர்.
இன்விடேஷன் வெளியிட்ட அன்றே முக நூலில் சென்னையில் எனக்கு தெரிந்த அனைத்து பதிவர் நண்பர்கள் Facebook wall-க்கும் சென்று இன்விடேஷன் குறித்த லிங்க் தந்து , விழாவுக்கு அவசியம் வாருங்கள் என எழுதிவிட்டு வந்தேன்.
விழா துவங்க ஒரு வாரம் முன்பு, இன்னும் குறைந்தது இருபதாயிரம் தேவை என்கிற நிலை; சென்னை பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவு வந்திருந்தாலும் இன்னும் வரவேண்டிய நண்பர்கள் பலர் இருந்தனர். அவர்களில் சிலரிடம் போனில் பேசி சென்னை நண்பர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் போடுகிறோம். உங்களால் முடிந்தால் குடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அவர்களும் வங்கி கணக்கு தகவல் அனுப்புங்கள் பணம் அனுப்பிடுறோம் என்றனர். வங்கி கணக்கு தனி நண்பரின் பெயரில் இருந்ததால் அதை பொதுவில் (நம் பதிவுகளில்) பகிர முடியாது. தனி நபர் பெயரில் ஏன் பணம் வசூலிக்கிறீர்கள் என்று கேள்வி வரும் ( நாம் இன்னும் இயக்கமாய் ரிஜிஸ்தர் செய்ய வில்லை. இனி தொடர்ந்து விழா நடத்த ரிஜிஸ்தர் செய்ய இதுபோல் பல காரணம் உண்டு. போலீசில் எழுதி தரும் போது உங்களுக்கு இயக்கம்/ லேட்டேர்பேட் தேவைப்படும்; இன்னும் பல இடங்கள் சொல்ல முடியும் )
முதலில் Facebook-ல் சொன்ன போது வருவதாய் சொன்ன நண்பர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மெயில் அனுப்பினேன். இப்படி சிலருக்கு மட்டும் அனுப்ப ஒரே காரணம் தான் நான் நினைத்தது.
நண்பர்களில் வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு அளவு சம்பாதிக்கின்றனர். அவர்களில் ஓரளவு நல்ல சம்பளம் வாங்குவோருக்கு ஆயிரம் ரூபாய் தருவது சிரமமாய் இராது. சிலருக்கு அந்த ஆயிரம் ரூபாய் நாங்கள் கேட்ட ஆகஸ்ட் 20- போல் நிச்சயம் கஷ்டமான விஷயமாய் இருக்கும். இது நானாகவே முடிவு செய்து, சில நண்பர்களிடம் மட்டும் மெயில் அனுப்பினேன். அதிலும் மிக தெளிவாக உங்களுக்கு முடிந்தால் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப முயலவும் என்று தான் கூறியிருந்தேன். பண விஷயம் என்பதால் இந்த மெயில்கள் அனைத்திலும் மதுமதி மற்றும் நண்பர் ஜெய் இருவருக்கும் காப்பி மார்க் செய்திருந்தேன்.
இதனை பணம் தந்தால் தான் விழாவுக்கு வரலாம் என்று புரிந்து கொண்டனராம் சில நண்பர்கள் ! "முடிந்தால் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப முயலவும் " என்பதில் எங்கிருந்து " பணம் தந்தால் தான் விழாவுக்கு வரலாம் " என்று அர்த்தம் ஆகிறதோ தெரியவில்லை.
பணம் தராமல் விழாவுக்கு வந்தால் சங்கடமாய் இருக்கும் என்கிறார்கள் சிலர். சென்னையில் நடக்கும் பல பதிவர் விழா, பீச் மீட்டிங் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் யார் செலவு செய்கிறார்கள் என்று கூட தெரியாது. யாரோ டீ- க்கு காசு தருவார். யாரோ விழா நடத்துவார். இவை அனைத்திலும் யாரோ ஒரு நண்பர் பணம் தர, நானும், இன்று வராமல் போன நண்பர்கள் உட்பட மற்றவர்கள் ஒன்றாய் தான் உண்டோம்; பணம் யார் தந்தார் என்பது கூட தெரியாமல் ! அப்போது நமக்கு அசிங்கமாய் இல்லையே ! இப்போது எங்கிருந்து இந்த காரணம் முளைக்கிறது?
சரி போகட்டும். உண்மையில் என் நண்பர்கள் என்று நினைத்த கார்க்கி, கண்ணன் ராமசாமி, மயில் ராவணன் போன்றோரோ அல்லது நான் மெயில் அனுப்பிய வேறு யாரோ எனது மெயிலை ஒரு குழுவிடம் அனுப்பி " பணம் கேட்டாங்கப்பா" என்று விழா முடிந்த பின் பிரச்சனை ஆக்கினர்.
நீங்கள் உண்மையில் என் நண்பர்கள் என்றால் எனக்கு ஒரு போன் செய்து கேட்டிருக்கலாம். " பணம் தந்தால் தான் வரணுமா? எல்லாரும் பணம் போடுகிறார்களா? " என கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என நீங்கள் சொன்னால் தானே தெரியும்? நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய?
நான் உங்களை நண்பர்கள் என்று நம்பி அனுப்பிய மெயிலை, எனக்கு எதிராக குரல் எழுப்பும் நண்பர்களிடம் குடுத்து " இதையும் கேளுங்க" என்று விஷம் தோய்ந்த கத்தியை முதுகில் சொருகிய அந்த வீரர் யார் என தெரிய வில்லை. ஆனால் நண்பர்களே இன்று என்னை தேவையின்றி பிரச்சனையில் சிக்க வைக்க முயன்று எனது மெயிலை அனுப்பிய இந்த நபர், நாளை வேறு பிரச்சனையில் உங்கள் முதுகிலும் விஷம் தோய்ந்த கத்தியை இறக்க கூடும் ! அவர் பெயர் சொல்லா விட்டாலும் நீங்கள் இதை மனதில் கொள்ளுங்கள் !
நண்பர்களில் வெவ்வேறு பிரிவினரும் வெவ்வேறு அளவு சம்பாதிக்கின்றனர். அவர்களில் ஓரளவு நல்ல சம்பளம் வாங்குவோருக்கு ஆயிரம் ரூபாய் தருவது சிரமமாய் இராது. சிலருக்கு அந்த ஆயிரம் ரூபாய் நாங்கள் கேட்ட ஆகஸ்ட் 20- போல் நிச்சயம் கஷ்டமான விஷயமாய் இருக்கும். இது நானாகவே முடிவு செய்து, சில நண்பர்களிடம் மட்டும் மெயில் அனுப்பினேன். அதிலும் மிக தெளிவாக உங்களுக்கு முடிந்தால் ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப முயலவும் என்று தான் கூறியிருந்தேன். பண விஷயம் என்பதால் இந்த மெயில்கள் அனைத்திலும் மதுமதி மற்றும் நண்பர் ஜெய் இருவருக்கும் காப்பி மார்க் செய்திருந்தேன்.
பணம் தராமல் விழாவுக்கு வந்தால் சங்கடமாய் இருக்கும் என்கிறார்கள் சிலர். சென்னையில் நடக்கும் பல பதிவர் விழா, பீச் மீட்டிங் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் யார் செலவு செய்கிறார்கள் என்று கூட தெரியாது. யாரோ டீ- க்கு காசு தருவார். யாரோ விழா நடத்துவார். இவை அனைத்திலும் யாரோ ஒரு நண்பர் பணம் தர, நானும், இன்று வராமல் போன நண்பர்கள் உட்பட மற்றவர்கள் ஒன்றாய் தான் உண்டோம்; பணம் யார் தந்தார் என்பது கூட தெரியாமல் ! அப்போது நமக்கு அசிங்கமாய் இல்லையே ! இப்போது எங்கிருந்து இந்த காரணம் முளைக்கிறது?
நீங்கள் உண்மையில் என் நண்பர்கள் என்றால் எனக்கு ஒரு போன் செய்து கேட்டிருக்கலாம். " பணம் தந்தால் தான் வரணுமா? எல்லாரும் பணம் போடுகிறார்களா? " என கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என நீங்கள் சொன்னால் தானே தெரியும்? நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய?
நான் உங்களை நண்பர்கள் என்று நம்பி அனுப்பிய மெயிலை, எனக்கு எதிராக குரல் எழுப்பும் நண்பர்களிடம் குடுத்து " இதையும் கேளுங்க" என்று விஷம் தோய்ந்த கத்தியை முதுகில் சொருகிய அந்த வீரர் யார் என தெரிய வில்லை. ஆனால் நண்பர்களே இன்று என்னை தேவையின்றி பிரச்சனையில் சிக்க வைக்க முயன்று எனது மெயிலை அனுப்பிய இந்த நபர், நாளை வேறு பிரச்சனையில் உங்கள் முதுகிலும் விஷம் தோய்ந்த கத்தியை இறக்க கூடும் ! அவர் பெயர் சொல்லா விட்டாலும் நீங்கள் இதை மனதில் கொள்ளுங்கள் !
நண்பர் சரவணன் பீ.கே. பியுடன் |
" இதுக்கு பதிலா ஏதாவது நல்லது செஞ்சா தேவலை " என்றனர் இந்த நண்பர்கள். (எப்போ விழா முடிஞ்சோன !) அரசு பள்ளிகளுக்கும் ஏழை மாணவர்களுக்கும் ஏற்கனவே உதவுவது பற்றி சொன்னால் " நீ பேசாம முதலமைச்சர் ஆகிடு " என்று கிண்டல் அடிக்கிறார்கள். பாஸ்டன் ஸ்ரீராம் போன்றோர் செய்வதை தான் நாங்களும் செய்கிறோம், அவர்கள் சொன்னால் பிரச்சனை இல்லை. நாங்கள் சொன்னால் புகழுக்கு செய்கிறோம் என்பதா? அட புகழுக்காகவாவது நல்ல காரியம் செய்யுங்களேன் ! நாலு பேருக்கு நல்லது நடக்கட்டும் !
அப்புறம் பதிவர் சந்திப்பு நடந்தது நிறைய பேருக்கு தெரியலையாம். இன்னும் பப்ளிசிட்டி பண்ணிருக்கனுமாம் !
கேபிள் கொத்து பரோட்டாவில் இந்த விழா பற்றி எழுதுறார்; இன்விடேஷன் பகிர்கிறார். சிபி தனி பதிவு போடுறார். விழா குழிவினரில் பத்துக்கும் மேற்பட்டோர் தினம் விழா முன்னேற்பாடு பற்றி பதிவு போட்டோம் !
சதீஷ் செல்லத்துரைன்னு ஒரு பதிவர்.. " என்னங்கடா இதே வேலையா பதிவர் சந்திப்பு பத்தியே எழுதிட்டு இருக்கீங்க" என திட்டி ஒரு பதிவு போட்டார். அவர் எங்கே இருக்கார் தெரியுமா? இந்தியாவின் எல்லை காவல் படையில் பணி புரியும் வீரர். பதிவர் சந்திப்பு பற்றி இந்தியா பார்டர் வரைக்கும் கேட்டது சென்னையில் இருக்கும் சிலருக்கு கேட்கலைன்னா என்ன சொல்றது?
கருத்துகளை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த கூட்டங்களில் நேரில் வந்து பேசியிருக்கலாம். போன் செஞ்சு சொல்லிருக்கலாம். மெயில் ஐ. டி தந்தோம் எழுதிருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு எப்படா விழா முடியும்னு பார்த்துகிட்டு இருந்துட்டு இப்படியெல்லாம் பேசுவது என்ன உணர்த்துகிறது என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன் !
சரி விடுங்க, ஒரு குட்டி கதையுடன் இந்த பதிவை முடிப்போம் :
ஒரு தந்தை, அவர் மகன் இருவரும் ஒரு கழுதையை கூட்டி கொண்டு சென்று கொண்டிருந்தனர். வழியில் பார்த்த ஒருவர் " ஏம்ப்பா சின்ன பையனை வெயிலில் வச்சு நடக்க வைக்கிறே? கழுதை மேலே வச்சு கூட்டி போகலாமில்ல?" என்றார்
சரியென சிறுவனை கழுதை மேல் வைத்து கூட்டி செல்ல " ஏம்ப்பா, அப்பாவை நடக்க விட்டுட்டு நீ உட்காருறே ? இதுவா மரியாதை?" என்று ஒருவர் கேட்க, சிறுவன் இறங்கி கொண்டு அப்பா கழுதை மேல் அமர்ந்து சென்றார்.
அதனை பார்த்த ஒருவர் "கழுதை பாவம் .. அதுமேலே இவ்ளோ பெரிய ஆள் உட்கார்ந்து போறியே? " என்றார்.
அப்புறம் கழுதையை தோளில் தூக்கி கொண்டு நடந்தாராம் அப்பா.
***
எல்லோரையும் திருப்தி படுத்த நினைத்தால், அனைத்து கருத்தையும் implement செய்ய முயன்றால் கழுதையை சுமந்த கதை தான் !
***
கடேசி பதிவு:
பதிவர் மாநாடு சாதித்தது என்ன? நாளை !
ஒரு தந்தை, அவர் மகன் இருவரும் ஒரு கழுதையை கூட்டி கொண்டு சென்று கொண்டிருந்தனர். வழியில் பார்த்த ஒருவர் " ஏம்ப்பா சின்ன பையனை வெயிலில் வச்சு நடக்க வைக்கிறே? கழுதை மேலே வச்சு கூட்டி போகலாமில்ல?" என்றார்
சரியென சிறுவனை கழுதை மேல் வைத்து கூட்டி செல்ல " ஏம்ப்பா, அப்பாவை நடக்க விட்டுட்டு நீ உட்காருறே ? இதுவா மரியாதை?" என்று ஒருவர் கேட்க, சிறுவன் இறங்கி கொண்டு அப்பா கழுதை மேல் அமர்ந்து சென்றார்.
அதனை பார்த்த ஒருவர் "கழுதை பாவம் .. அதுமேலே இவ்ளோ பெரிய ஆள் உட்கார்ந்து போறியே? " என்றார்.
அப்புறம் கழுதையை தோளில் தூக்கி கொண்டு நடந்தாராம் அப்பா.
***
எல்லோரையும் திருப்தி படுத்த நினைத்தால், அனைத்து கருத்தையும் implement செய்ய முயன்றால் கழுதையை சுமந்த கதை தான் !
***
கடேசி பதிவு:
பதிவர் மாநாடு சாதித்தது என்ன? நாளை !
வணக்கம்..மிக விரிவான ஆதங்கமான பதிவு...அட விட்டு தள்ளுங்க சார்..அதுதான் வெற்றிகரமா முடிந்து விட்டது...அப்புறம் என்ன...?
ReplyDeleteகட்டிய வீட்டிற்கு குறை சொல்லுவது நம்மவர்களது வழக்கம். இதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லோரும் திறம்பட,சீரிய முறையில் உழைத்து விழா சிறப்பாக நடந்தேற வழி செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெல் செட் மிஸ்டர் மோகன்குமார்.
ReplyDeleteஅப்புறம் நாம இத்தோட இந்த பிரச்சினைய மறந்துட்டு அடுத்த வேலை பாக்கலாம்.
கழுதைக் கதை தெரிஞ்ச கதையா இருந்தாலும்... இந்த இடத்துல சொன்னது கரீக்கட்டு....
ரொம்ப விரிவா உங்க நிலையில் இருந்து விளக்கி எழுதி இருக்கேங்க...
ReplyDeleteஎல்லோருக்கும் நல்லவங்க ஆகவே முடியாது...எல்லாரையும் திருப்தி படுத்தவே முடியாது சார்...
அப்புறம் சார்.. கழுதை முன்னாடி போன கடிக்கும், பின்னாடி போன உதைக்கும்.. :):):):):)
கடைசி வரிகளில் நிற்கிறீர்கள் .........உண்மையின் நிதர்சனத்தை உணர்திவிடீர்கள் .........தொடரட்டும் பயணம் முட்களை வீசி எறிந்து விட்டு மலரை நோக்கி ........
ReplyDeleteரொம்ப உருக்கமான பதிவு மோகன். பேரறிஞர் அண்ணா இதுபோன்ற பதிவுகளை திமுக மாநில மாநாடு நடந்து முடிந்தபிறகு எழுதுவார். வாழ்த்துகள்!
ReplyDeleteகடைசியில் நீங்கள் சொனன கழுதைக் கதை நல்ல உதாரணம். அனைவரின் ஆதங்கத்தையும் அந்தக் கதை பிரதிபலித்து விட்டது, அருமை.
ReplyDeleteஅண்ணே....
ReplyDelete// விழா துவங்க ஒரு வாரம் முன்பு, இன்னும் குறைந்தது இருபதாயிரம் தேவை என்கிற நிலை; //
பற்றாக்குறை இருந்துச்சான்னு எனக்கு தெரியல.... ஏன்னா நாம தெளிவான திட்டத்தோட தான் களம் இறங்கினோம்.. பணம் பற்றாக்குறை வந்தால் அங்கு இருக்கும் சென்னை நண்பர்கள் உடனே பங்களிப்பு செய்ய வேண்டும்.. அதற்க்கு தயாராய் பணம் கொண்டு வந்துவிடுங்கள் என்ற தெளிவான திட்டம் நம்மிடம் இருந்தது...
அதையும் மீறி பணம் தேவை பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சிவாவிடம் உறுதி கொடுத்து இருந்தேன்...
சோ, நமக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை அண்ணன்....
பொருத்தமான குட்டிக் கதை
ReplyDeleteமகாத்மா சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதித்தது சார்.....
ReplyDelete//என திட்டி ஒரு பதிவு போட்டார்// அவரு கிண்டல் பண்ணி போட்டாரு சார் ... ஆனாலும் அவர பத்தி நான் பதிவு எழுதறதுக்குள்ள எல்லாரும் எழுதிருவீங்க போல....
பெயர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது...... சந்தித்த பிரச்சனைகள் நமக்குப் புகட்டிய பாடமாகப் பெற்றுகொள்வோம்....
உங்க ஆதங்கம் சரிதான் சார்! ஊரு வாய மூட முடியுமா? cool!
ReplyDeleteஇதற்கு மேல் விவரங்கள் என்ன வேண்டும்...?
ReplyDeleteமகாத்மாவின் வரிகளோடு முடித்தது சிறப்பு...
இவ்வளவு நடந்திருக்கா...?
ReplyDeleteமுப்பதாயிரம், நாற்பதாயிரம் செலவு செய்து சிஸ்டம் வாங்கி மாசம் சொளையா கணிசமான தொகை நெட்டுக்கு தருபவர்கள் ஆயிரம் ரூபாய் தருவது கடினம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாது!
அப்படி உண்மையிலேயே தர முடியாதவர்களை யாரும் தாழ்ந்து கருதுவதில்லை!
அசத்தலான ஒரு விழாவை அற்புதமாக சாதித்துக் காட்டியிருக்கிறீர்கள் குழுவினரோடு. எல்லாரையும் திருப்திப்படுத்த ஒருவராலும் முடியாது. எல்லோருடைய ஆலோசனைபடியும் வீடு கட்டினால் கடைசியில் குருவிக்கூடுதான் கட்ட முடியும் என்பது பழமொழி. விடுங்க சார். அடுத்த முறை நானும் வருகிறேன். கலக்கலாம். மறுபடியும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
ReplyDeleteகடைசி கதையில் உண்மையை அழகாக விளக்கி விட்டீர்கள் சார்...எல்லாரையும் திருப்தி படுத்துவது என்பது வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவது போல ...
ReplyDeleteமிகவும் விரிவான விளக்கம்! ஒரு விழா நடத்த எவ்வளவு சிரமங்கள்! என்று உணர்த்திய பதிவு! சும்மா பேசுபவர்கள் எதையாவது சொல்லிவிடலாம்! நீங்கள் சாதித்து காட்டியுள்ளீர்கள்! இந்த விழாவில் கலந்து கொள்ளவும் பணவுதவி செய்ய முடியாமல் போனதும் எனக்கு வருத்தமாக உள்ளது! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
மிகவும் பலரை சந்திக்க முடிந்தது என்பதை பலரின் பதிவில் படிக்கும் போது அதன் வெற்றியை கான்முடியும் இரு சில்ரின் ஈகோ விட்டுத்தள்ளுங்க அண்ணாச்சி!
ReplyDeleteஇவ்வளவு சிறப்பாக பதிவர் திருவிழா நிகழ்ந்தேறியிருப்பதை உளமாறப் பாராட்டியவர்களே அதிகம்! மாற்றுக்கருத்துகளால் வருந்த வேண்டாம்! இதுவும் கடந்து போகும்! நன்றி!
ReplyDeleteஆரம்பம் முதல் அனைத்தையும் பற்றி விரிவை விளக்கமாய் கொடுதிருகின்றீர்கள் மோகன் சார்
ReplyDeleteவாழ்க்கையில் சில சந்தோச நிகழ்வுகள் அவ்வபோது வந்து நம்மை திக்குமுக்காட வைத்து விடும் இந்த பதிவர் திருவிழா ஒரு சந்தோச நிகழ்வு
ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அப்படியே இருந்தால் அதனால் ஒரு பயனுமில்லை!பலவிதமான கருத்துக்கள், இப்படிச் செய்திருக்கலாமே என்ற பின் யோசனைகள் ஆயிரம் வரும்.இதற்கு முன் நடந்த முயற்சிகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு இந்த சந்திப்பு நடந்திருப்பதாகத் தெரிகிறது.அதற்காகவே, இதற்கு உழைத்த நண்பர்கள் அனைவரையும் மனதார வாழ்த்த வேண்டும்! வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஇனி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் மட்டுமே,உங்கள் கவனம் இருக்குமானால், இந்த சந்திப்பு என்ன சாதித்தது என்ற கேள்விக்குப் பக்கம் பக்கமாக எழுதி விளக்கம் சொல்ல வேண்டியதே இருக்காது!.
இப்போதான் சில பதிவுகளும், ப்ளஸ்களும் பார்த்து தெரிந்துகொண்டேன். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டாம். மற்றவர்களும் உங்களை பற்றி அறியாமல் ஏதேதோ சொல்லியிருக்கிறார்கள்.
ReplyDeleteஇது குறித்து, நேரில் சந்திக்கும்போது பேசுவோம். இங்கு ஏதாவது சொல்லி, வேறு புதிய சர்ச்சைக்கு வித்திட விரும்பவில்லை. #நான் சொல்றத ஒருத்தரும் மதிக்க மாட்டாங்கங்கறது வேற விஷயம் :))
விரிவான பகிர்வு. தில்லியில் தொடர்ந்து மூன்று வருடங்கள் பொங்கல் விழா சிறப்பாக நடத்தினோம். ஒவ்வொரு வருடமும் காலை 08.00 மணிக்கு ஆரம்பித்து மாலை வரை விழா நடக்கும். ஏற்பாடுகள் செய்ய குறைந்த நபர்களே இருந்தாலும் குறை சொல்ல நிறைய பேர் வருவார்கள். இப்படி நடப்பது என்றுமே, எங்குமே உண்டு மோகன்.
ReplyDeleteஇதையெல்லாம் மனதிற்குக் கொண்டு சென்று வருந்த வேண்டாம் மோகன். நேரில் பார்க்கும்போது நிறைய பேசுவோம்.
பணம் பற்றாக்குறை பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே... விழா நடக்குமுன் அதுபற்றி யாரும் எதுவும் எழுதவில்லையோ... என்னால் இயன்றதை நிச்சயம் தந்திருப்பேன்.
// பாஸ்டன் ஸ்ரீராம் போன்றோர் செய்வதை தான் நாங்களும் செய்கிறோம், அவர்கள் சொன்னால் பிரச்சனை இல்லை. நாங்கள் சொன்னால் புகழுக்கு செய்கிறோம் என்பதா?//
ReplyDeleteஅன்பின் மோகன், பதிவில் என் பெயர் குறிப்பிடப்பட்டதால் நானும் இச்சந்திப்பிற்கு எதிரானவன் என்று சிலர் நினைக்கக் கூடும் அதனால் இந்த விளக்கம்.
சந்திப்பு நடந்ததில் எனக்கு மகிழ்ச்சியே, சந்திப்புக்கு நீங்க செலவு செஞ்சது உங்க தனிப்பட்ட விசயம், இதில் மூக்கை நுழைக்க எனக்கு உரிமையோ விருப்பமோ இல்லை.
எனக்கு இன்விடேஷன் / இன்ஃபர்மேஷன் வரலைன்னு சொன்னா அது சால்ஜாப்பு அல்லது வலையுலகில் ஆக்டிவா இல்லைன்னு அர்த்தம்.
இன்னும் சொல்லப் போனா, நீங்க சந்திப்பு நடத்தின ஏரியா என் ஏரியா, நான் பிறந்து வளர்ந்து கெட்டுக் குட்டிச்சுவ்ரான ஏரியா, ஐந்து விளக்கு சந்திப்பில் நாங்க செலவிட்ட நேரம் மிக அதிகம். என் ஏரியாவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததில் எனக்கு வருத்தமே. இது குறித்து கூகிள் பிளஸ்ஸில் கூட சொல்லியிருந்தேன். விழாக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். குறிப்பா கணக்கை பொதுவில் வச்ச ஜெய்க்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்.
These Said, ரெஜிஸ்டர்ட் சங்கம் அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை, அது என் தனிப்பட்ட க்ருத்து. இதை ஒரு சில கூகிள் பிளஸ்களில் சொன்னேன்.
மத்தபடி, நீங்களோ நானோ செய்யும் உதவிகள் நம்ம தனிப்பட்ட விசயம். அதற்கும் பதிவர் சஙக்த்துக்கும் சம்பந்தமில்லை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
The image with Gandiji's quote is now my desktop background. How true it is even now!
ReplyDeleteThe image with Gandiji's quote is now my desktop background. How true it is, even now!
ReplyDeleteமோகன், இத்தனை பேரைத் திரட்டி சந்திப்பு நடத்தி முடிப்பது பெரிய விடயந்தான், திருமணம் நடத்தி முடிப்பது போல. என்ன வித்தியாசம் என்றால், பொதுவாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் குறை சொல்லுவார்கள், என்னைச் சரியாக கவனிக்கல என்பது போல. ஆனால் இங்கு, கலந்து கொண்டவர்கள் நிறைவுடன் செல்ல, எட்டிக் கூடப் பார்க்காதவர்கள் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இப்படி ஒன்று நடப்பதே எனக்குத் தெரியவில்லை என்று கூறுவதெல்லாம் அபத்தம். திரட்டிகளில் தொடர்ச்சியாக இதைப் பற்றிய அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. பதிவர்கள், அதிலும் குறிப்பாக, ஒரு காலத்தில் ஆக்டிவாக பதிவு எழுதியவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுப்பது என்பது இயலாத காரியம். சமீப மாதங்களில் அவ்வளவாகப் பதிவெழுதாமல் திரட்டிகள் பக்கம் கூட எட்டிப் பார்க்காமல் இருந்தவர்கள் தான் இப்படி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteநீங்கள் பணம் கேட்ட விடயத்தைக் கூட திரித்துக் கூறியிருந்தார்கள். சென்னையில் பலருக்கும் இப்படி மெயில் அனுப்பட்டது என. உடனே வழக்கம் போல இதைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் குறை சொல்ல குதித்துவிட்டனர், அதெப்படி எல்லோருக்கும் அப்படி அனுப்பலாம், பொருளாதார நிலை எல்லாருக்கும் ஒன்றல்ல, கேட்டும் கொடுக்காமல் விழாவுக்கு வருவதற்கு சங்கடம் என்று. எனக்கெல்லாம் அப்படி ஏதும் மடல் வரவில்லை மறுத்துப் பேசிய சென்னைப் பதிவர்களையும், நீங்கள் சொன்னால் பத்தாது, நிர்வாகி யாராவது வந்து சொல்லட்டும் என்றார்கள். இப்பொழுது நீங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள், ஓரளவு நன்றாகத் தெரிந்த நண்பர்களுக்கு மட்டுமே அனுப்பினேன் என்று. விடயத்தை முழுவதுமாக அறியாது தெளிவுபடுத்திக் கொள்ளாது குறை மட்டும் கூறுவது எவ்வளவு எளிதான காரியம் என்பதை மீண்டும் இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
ஆதி எழுப்பிய ஒரு வேண்டுகோள் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. சென்னைப் பதிவர் குழுமம் என்று குழுமத்தைப் பதிவு செய்தால் அது சென்னையிலிருந்து பதிவிடும் என்னையும் குறிப்பதாகும். அப்படியான நான் தேர்ந்தேடுக்காத நான் பங்கு வகிக்காத ஒரு குழுமம் என்னை ரெப்ரெசென்ட் செய்வதை விரும்பவில்லை என்று கூறியது நியாயமான கருத்தே. பதிவு செய்ய விரும்பினால் இப்படிப் பொதுவான பெயராக இல்லாது தனிப்பட்ட பெயரைத் தேர்வு செய்வதே சரி.
ஆனால் மற்றொரு கூற்று முற்றிலும் நகைப்புக்குரியது. இதே முறையில் முன்னெடுக்கப்பட்டு செலவு செய்து நடத்தப்பட்ட முன்னொரு சந்திப்புக்குச் சென்று விருதும் வாங்கிவிட்டு வந்து, இதை, 'ஏழைகளுக்கு செலவளித்திருக்கலாம்' என்று குறை கூறுவது தவறு. இப்படியான எண்ணமிருந்தால், தனக்கு இப்படியான செலவுகளில் விருப்பமில்லை என்று கூறி அந்த விருதை மறுத்திருக்க வேண்டும், சென்றிருக்கவும் கூடாது.
இருநூறு பேர் ஒரு நாள் சந்தித்துக் கொள்ள பதிவர்கள் செலவு செய்யக்கூடாதா அய்யா? மெரீனா பீச்சில் செலவில்லாமல் நடத்தினோம் என்பவர்கள், ஓரிரு மணிநேரங்களுக்குச் சரி, ஆனால் நாள் முழுவதும் இப்படி மெரீனா பீச்சில் இருநூறு பேர் அமர்ந்து இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க மறுக்கிறார்கள்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்ட்டும்...
ReplyDeleteசென்னையில் இதுவரை நடத்தாத விசயத்தை நடத்திக்காட்டியாச்சு இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்....
இனி அடுத்த வேலைய பார்ப்போம் அண்ணே...
நன்றி கோவை நேரம். பண விஷயத்தில் என் பெயரை இழுத்து கூகிள் பிளஸ்சில் சிலர் திட்டியதால் இந்த பதிவு எழுத வேண்டியதாயிற்று
ReplyDeleteவே.நடனசபாபதி said...
ReplyDeleteகட்டிய வீட்டிற்கு குறை சொல்லுவது நம்மவர்களது வழக்கம். இதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லோரும் திறம்பட,சீரிய முறையில் உழைத்து விழா சிறப்பாக நடந்தேற வழி செய்திருக்கிறீர்கள்
******
நன்றி ஐயா ! பெரியோர் ஆசி எங்களுக்கு கிடைத்தது மிக மகிழ்வான, நிறைவான விஷயம்
ReplyDeleteபட்டிகாட்டான் Jey said...
வெல் செட் மிஸ்டர் மோகன்குமார்.அப்புறம் நாம இத்தோட இந்த பிரச்சினைய மறந்துட்டு அடுத்த வேலை பாக்கலாம்.
****
நிர்வாகி ஐயா அவர்களே ! நாளை இந்த விழாவில் நிகழ்ந்த நல்ல விஷயங்கள் பற்றி மட்டும் ஒரு பதிவு எழுதி, பாசிட்டிவா ஜனகன மண பாடிடுறேன். !
ReplyDeleteராஜ் said...
ரொம்ப விரிவா உங்க நிலையில் இருந்து விளக்கி எழுதி இருக்கேங்க...
எல்லோருக்கும் நல்லவங்க ஆகவே முடியாது...எல்லாரையும் திருப்தி படுத்தவே முடியாது சார்..
****
சட்ட கல்லூரியில் ஐந்து வருடம் ( வருடத்துக்கு இரண்டு) விழா நடத்தியவர்கள் நாங்கள் ! அங்கு ஒவ்வொருவரும் ஹீரோ ஆக நினைப்பார்கள். எவ்வளவோ பாத்துட்டோம் இது புதுசு இல்லை நண்பா
கோவை மு சரளா said...
ReplyDeleteகடைசி வரிகளில் நிற்கிறீர்கள் .........உண்மையின் நிதர்சனத்தை உணர்திவிடீர்கள் .........தொடரட்டும் பயணம் முட்களை வீசி எறிந்து விட்டு மலரை நோக்கி .....
****
நன்றி கவிதாயினி; கவிதை போல் உவமை தந்தீர்கள்
யுவகிருஷ்ணா said...
ReplyDeleteரொம்ப உருக்கமான பதிவு மோகன். பேரறிஞர் அண்ணா இதுபோன்ற பதிவுகளை திமுக மாநில மாநாடு நடந்து முடிந்தபிறகு எழுதுவார். வாழ்த்துகள்!
**
யுவா: உங்க பின்னூட்டத்தில் உள்ள நுண்ணரசியலை வெகுவாக ரசித்தேன். இப்படி முரண்படும் பதிவுகளில் எப்படி பின்னூட்டம் இடுவது என உங்களிடம் நான் கற்று கொள்ள வேண்டும். (சீரியஸ் !!)
நன்றி பாலகணேஷ் ; உங்கள் ஹோட்டல் + பால ஹனுமான் அனுபவம் பற்றி எழுதலாமே ( நான் ஒருமுறை எழுதியதால் உங்களை எழுத சொல்றேன்)
ReplyDeleteசிராஜ் : நீங்க சொல்வது உண்மை தான். நான் நண்பர்கள் சிலரிடம் மட்டும் உரிமையில் பணம் கேட்டது தவறாய் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அப்துல்லா, குகன், பெஸ்கி
ReplyDeleteபோன்றோரிடமும் நான் தான் இதே போல் மெயில் அனுப்பி பணம் வாங்கினேன்
மற்றபடி நீங்கள் சொல்வது மிக சரி ! நான் சும்மா இருந்திருக்கலாம் :((
சீனு said...
ReplyDelete//என திட்டி ஒரு பதிவு போட்டார்// அவரு கிண்டல் பண்ணி போட்டாரு சார் ... ஆனாலும் அவர பத்தி நான் பதிவு எழுதறதுக்குள்ள எல்லாரும் எழுதிருவீங்க போல....
பெயர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது...... சந்தித்த பிரச்சனைகள் நமக்குப் புகட்டிய பாடமாகப் பெற்றுகொள்வோம்...
****
சீனு: ரைட்டு !
நன்றி சாமுண்டீஸ்வரி
ReplyDelete
ReplyDeleteநன்றி தனபாலன் சார் நீங்கள் கேட்ட விபரம் மெயிலில் இன்னும் அனுப்பலை. நாளை நிச்சயம் அனுப்புறேன்
ReplyDeleteசுரேஷ்: நீங்கள் சொல்வதை முழுசா ஏற்க முடியாது. யாரையும் பணம் தர சொல்லி கம்பெல் பண்ண முடியாது கூடாது
ReplyDeleteதுரை டேனியல் சார் வாங்க அடுத்த முறை சந்திப்போம்
TN முரளி சார் : நன்றி ; நேற்று சந்தித்த போது பதிவர் நண்பர் பாலஹனுமான் ( அமெரிக்காவிலிருந்து வந்தவர்) இந்த கதை வேறு விஷயத்துக்கு சொன்னார்.
ReplyDeleteஇதுக்கு பொருத்தமாக இருக்குமென்பதால் உடனே இங்கு எழுதியாச்சு
NKS.ஹாஜா மைதீன் said...
ReplyDeleteஎல்லாரையும் திருப்தி படுத்துவது என்பது வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவது போல ..
****
அடடா அருமை
S Suresh: நீங்க எல்லா இடத்துக்கும் போய் அந்த ப்ளாக் எழுதுறவர் பக்கமே நின்னு பேசுறீங்க. சதீஷ் செல்லத்துரை பதிவில் எங்களை திட்டி எழுதினா ஆமாம் நீங்கள் சொல்றது சரிதான் என்கிறீர்கள். இங்கு வந்து நான் சொல்வது சரி அப்படிங்குறீங்க. ஏதாவது ஒரு பக்கம் இருங்க சார். தப்பா நினைக்காதீங்க ! மனசுல தோனுச்சு சொல்லிட்டேன் ஹர்ட்
ReplyDeleteபண்ணிருந்தா சாரி !
நன்றி தனிமரம்
ReplyDelete
ReplyDelete//சேட்டைக்காரன் said...
இவ்வளவு சிறப்பாக பதிவர் திருவிழா நிகழ்ந்தேறியிருப்பதை உளமாறப் பாராட்டியவர்களே அதிகம்! மாற்றுக்கருத்துகளால் வருந்த வேண்டாம்! இதுவும் கடந்து போகும்! நன்றி!
******
சேட்டைக்காரன் ஐயா மிக அழகாய் சொன்னீர்கள் நன்றி
நன்றி சரவணன்
ReplyDeleteரகு said...
ReplyDeleteநீங்களும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டாம்.
****
இதான்யா ஒரு நண்பன்கிறது நன்றி !
Krishna Moorthy S said...
ReplyDeleteஇதற்கு முன் நடந்த முயற்சிகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு இந்த சந்திப்பு நடந்திருப்பதாகத் தெரிகிறது.அதற்காகவே, இதற்கு உழைத்த நண்பர்கள் அனைவரையும் மனதார வாழ்த்த வேண்டும்! வாழ்த்துகிறேன்!
இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் மட்டுமே,உங்கள் கவனம் இருக்குமானால், இந்த சந்திப்பு என்ன சாதித்தது என்ற கேள்விக்குப் பக்கம் பக்கமாக எழுதி விளக்கம் சொல்ல வேண்டியதே இருக்காது!.
*********
அருமையாய் சொன்னீர்கள் நன்றி மகிழ்ச்சி. இனி செய்வது பற்றி இன்னும் பேச ஆரம்பிக்கலை பேசுவோம்
ஸ்ரீராம்: உங்களை பற்றி தெரியாதா? உங்களை தப்பாய் சொல்லலை. நான் தொடர்ந்து பதிவு எழுதுபவன்; நான் உதவி செய்வதை சொன்னால் பிரபலத்துக்காக சொல்றேன் என ஒரு
ReplyDeleteகுற்றசாட்டு ; ஆனால் ஓரமாய் ஒதுங்கி இருக்கும் நீங்கள் அதை செய்தால், அது பற்றி ஜாக்கி எழுதினால் யாரும் திட்டுவதில்லை அதை தான் சொல்ல முயன்றேன்
நன்றி வெங்கட் பேசுவோம்
ReplyDeleteபோத்தி : உண்மை . மகிழ்ச்சி
ReplyDelete
ReplyDeleteதணல் : மிக விரிவான பின்னூட்டம் அருமை சில விஷயம் உங்கள் மூலமும் தெரிய வருகிறது ; இதை கடந்து போவோம் மறுபடி பேசி புண்ணியமில்லை நன்றி !
சங்கவி: உண்மை தான் நன்றி
ReplyDeleteநல்ல முயற்ச்சி. அருமையான சந்திப்பு. Cool. வாழ்த்துகள்..
ReplyDeleteஅட விடுங்க தோழரே.. யாருக்கும் விளக்கம் சொல்லத் தேவையில்லை. அடுத்த வருடம் விழாவை சென்னை கதிகலங்குற மாதிரி நடத்துவோம். உதறித் தள்ளிட்டு வாங்க..அடுத்தக் கட்ட வேலை இருக்கு.. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தை இந்த வாரமே அரசாங்கத்துல பதிவு பண்ணிடலாம். கவலையை விடுங்க.. இணைய விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளட்டும் இல்லையென்றால் இருந்து கொள்ளட்டும். அதற்காக நாம் பின் வாங்க வேண்டிய அவசியமில்லை. 12 பேர் இருந்தால் போதும் தோழரே ஒரு கட்சியே ஆரம்பிக்கலாம் கவலையை விடுங்க..
ReplyDeleteபதிவர் சந்திப்பு நடத்திய சகோதரர்கள் இவ்வளவு டென்ஷனை மனதில் வைத்துக்கொண்டு வந்தவர்களை வரவேற்று நல்ல ஒரு மறக்க முடியாத (நான் நேரலைதான் பார்த்தேன்) சந்திப்பை நடத்தி காட்டியமைக்கு நன்றி .
ReplyDeleteமறப்போம் மன்னிப்போம்.
நம்ம மக்கள்ஸ் குற்றம் கண்டு பிடிப்பதில் கில்லாடிகள்.
ReplyDeleteஇந்த பணம் கேட்ட விவ(கா)ரம், ( பணம் கேட்டாங்களாமே!) என்று எனக்குக்கூட தெரிஞ்சுருச்சுன்னா பாருங்க.
நியூஸி என்ன கிட்டத்துலேயா இருக்கு?
போயிட்டுப்போகுது விடுங்க.இதுவும் ஒரு அனுபவப்பாடமுன்னு எடுத்துக்கணும்.
ஐயோ என்ன கொடுமை இது?நான் என் பதிவில் திட்டி எழுதவில்லை ஐயா...அது ஒரு மொக்கை பதிவு அவ்வளவுதான்.அதிலே ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்...
ReplyDelete#####யாருமே நல்லா இல்லைன்னு எழுத மாட்டீங்க...பேசா பொருள்கள் பேச மறுக்கும் பொருள்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.அவற்றை குற்றமாக எழுதாமல் அடுத்த முறை சிறப்பாக எடுத்து செய்ய வழிவகுக்கும் முறையில் திட்டம் தீட்டி கொடுங்கள்.###
இப்படிப்பட்ட ஒரு பொன்னான பதிவை திட்டலாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?
இது எல்லா இடத்துலேயும் நடக்கும் பிரச்சனைகள்தான்.இங்கே நாங்க யாராவது பென்சன் போகும்போதோ போஸ்டிங் போகும்போதோ தென்னிந்தியர்களாக(திராவிடர்கள்???) சேர்ந்து சிறுசா ஒரு நினைவுப்பரிசு கொடுத்து சிறப்பிப்போம்.அதுலேயே எனக்கு முன்னாடி சொல்லலை நான்தானே சீனியர் அது இதுன்னு கும்மியடிப்பாங்க.இதுல்லாம் இல்லாம இருந்தாத்தான் ஆச்சரிய பதிவு போடணும்.
அழைப்புகள் பார்டர் வரை நல்லாவே கேட்டது.கருத்துக்கள் வேறுபட்டாலும் நாம் அனைவரும் பதிவர்களே....பத்திரிகையாளர் சங்கம் ஒன்று இருப்பது போல பதிவர் சங்கம் ஒன்று அமைந்தால் என்ன?நானெல்லாம் சங்கத்தில் இருக்க முடியாது...என் பணி அப்படி.
//சேட்டைக்காரன் said...
ReplyDeleteஇவ்வளவு சிறப்பாக பதிவர் திருவிழா நிகழ்ந்தேறியிருப்பதை உளமாறப் பாராட்டியவர்களே அதிகம்! மாற்றுக்கருத்துகளால் வருந்த வேண்டாம்! இதுவும் கடந்து போகும்! நன்றி!//
மேலே சொன்னது தான் என் கருத்தும்.
ரேகா ராகவன்.
//. உண்மையில் என் நண்பர்கள் என்று நினைத்த கார்க்கி//
ReplyDeleteமுதலில் நம் நட்புக்கும் இந்த விழா பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவாக்கி விடுகிறேன். பதிவுலகம் தாண்டி உங்களுடன் பழக, பேச எனக்கு வாய்த்திருக்கிறது. :)
_________________
ஆதியின் பதிவில் சொல்லியிருந்தது போல எனக்கு இந்த வகை சந்திப்பில் உடன்பாடில்லை. அதாவது ஒரு சிலரை மேடையேற்றி விட்டு மற்றவர்களை கீழ அமர வைப்பது. இதன் காரணமாகத்தான் பல பதிவர் விழாகக்ளில் நான் கலந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். ஆனால் அந்த விழாவோ, இந்த விழாவோ முடிந்தவுடன் என் கருத்தை பதிவில் எழுதி எந்த சர்ச்சையும் ஏற்படுத்தியதில்லை. அது என் கொள்கை. எல்லோருக்கும் ஏற்ற்வாறு ஒரு விழா நடக்க வேண்டுமென்றால் அவரே அவருக்கு விழா எடுத்தால்தான் உண்டு என்பதை நான் அறியாமல் இல்லை.
அடுத்து அழைப்பு -இதுவரை எந்த பதிவர் சந்திப்புக்கும் தனியாக யாரும் என்னை அழைக்கவில்லை. அதை கேட்டும் நான் போனதில்லை. விஷயம் அறிந்து நானாகத்தான் எல்லா இடத்திலும் ஆஜர் ஆகிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களின் அந்த விஷயம் என்னை குறிப்பிடாததாக இருக்கலாம். இருந்தாலும் சொல்லிக்கிறேன். (ஈரோடு சங்கமத்திற்கு சங்கவி அலைபேசி அழைத்தார். அவருக்காவது போகலாம் என நினைத்தேன்.)
அடுத்து காசு: நான் ஹைதையில் இருந்தபோது ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு நடக்கும். நான் அன்றுதான் ஹைதை திரும்புவேன். ட்ரெயினில் 300ரூ. ஆனா 6.10க்கே வண்டி கிளம்பிவிடும். பேருந்தில் கடைசி வண்டி 9 மணிக்கு. ஆனா 850ரூ. சந்திப்புக்காக ஒவ்வொரு முறையும் 500ரூ அதிகம் தந்து பேருந்தில்தான் செல்வேன். அப்போது எனக்கு பிளாக் அவவ்ளவு விருப்பம். அதனால் பிரச்சினையில்லை.
ReplyDeleteஆனால் இந்த சந்திப்பு அபப்டியல்ல. அதன் வடிவமே எனக்கு ஒவ்வாத ஒன்று. இதை டிஸ்கவரியில் வந்து சொல்லி எதற்கு பிரச்சினையாக்க வேண்டும்? அதனால் அமைதியாக ஒதுங்கினேன். அதனால் பணமும் தரவில்லை.
அதே சமயம், எனக்கு இன்னொரு விஷயமும் சரியெனப்படவில்லை. என்னிடம் நேரிடையாக விழாவுக்கு காசு தர முடிந்தால் தாருங்கள். நாங்கள் எல்லோரும் காசு தந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். என்னால் தர இயலாவிட்டால் எப்படி சகஜமாக அங்கே வர முடியும்? கேபிளும், லக்கியில் இயல்பாக இதை சொல்லிவிட்டு வந்தார்களே என்று சொல்வது அபத்தம். கேபிள் கவலைக் கொள்ளவில்லையெனில் அடுத்தவர்களும் அபப்டியே இருக்க முடியுமா? ஒரு வேளை இந்த நிகழ்வுக்கு வருவாதாக இருந்தாலும் இந்த காரணத்தால் நான் தவிர்த்திருப்பேன். என்னைப் போல இன்னும் சிலர் நினைக்கலாம். அதனால் மடல் அனுப்பி பணம் கேட்டது என்னளவில் சரியான முறையல்ல.
ட்விட்டரில் ஒரு நிகழ்வு நடந்தது. 150க்கு மேற்பட்டோர் கூடினோம். அதன் ஆரம்பத்திலே நான் தெளிவாய் சொன்னது மேடைப் போட்டால் நான் வரமாட்டேன். அதே போல அந்நிகழ்வும் அமைந்தது. கடைசியில் நிகழ்வ்ரங்கில் ஒரு டேபிள் போட்டு விரும்பியவர்கள் பணம் தரலாம் என்று சொன்னார்கள். யார் யார் எவ்வளவு தந்தது என “உபயம்’ ரேஞ்சுக்கு லிஸ்ட் போட்டு காசு தராதவர்களை தர்ம்சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. இதுதான் சரியென சொல்லவில்லை.இது எனக்கு உவப்பான செயலாக இருக்கிறது.
ReplyDeleteஎப்படி நடத்தினாலும் யாரேனும் ஒருவருக்கு மாற்று கருத்து இருகத்தான் செய்யும். கண்டுக்காம விட்டு வேலையை பாருங்க சார் :))
ReplyDelete//முப்பதாயிரம், நாற்பதாயிரம் செலவு செய்து சிஸ்டம் வாங்கி மாசம் சொளையா கணிசமான தொகை நெட்டுக்கு தருபவர்கள் ஆயிரம் ரூபாய் தருவது கடினம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாது!//
ReplyDelete:))))
//அட விடுங்க தோழரே.. யாருக்கும் விளக்கம் சொல்லத் தேவையில்லை. அடுத்த வருடம் விழாவை சென்னை கதிகலங்குற மாதிரி நடத்துவோம். உதறித் தள்ளிட்டு வாங்க..அடுத்தக் கட்ட வேலை இருக்கு.. தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தை இந்த வாரமே அரசாங்கத்துல பதிவு பண்ணிடலாம். கவலையை விடுங்க.. இணைய விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளட்டும் இல்லையென்றால் இருந்து கொள்ளட்டும். //
ReplyDeleteஇந்த ஒரு கமெண்ட் போதும். ”:))))
கார்க்கி: உங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் உறுதியாய் இருக்கிறீர்கள் ! புரிகிறது !
ReplyDeleteஎல்லோரிடமும் ஒரே அளவு பணம் வாங்கணும் என முடிவெடுத்தோம்;( இது ஒரு restriction ) வெளியூர் பதிவர்களிடம் வாங்க கூடாது.
பட்ஜெட் 75 ஆயிரம்; ஸ்பான்சர் தந்த 25 ஆயிரம் போக சென்னையில் ஐம்பது பேராவது ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போடணும். அப்போ தான் ஐம்பதாயிரம் சேரும் இப்படி தான் நிலை இருந்தது. அதுக்கு தான் சில நண்பர்களுக்கு மெயில் அனுப்பினேன். அவர்களில் சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நிச்சயம் அந்த தவறு இனி செய்ய மாட்டேன்; இந்த முறை எனக்கிருந்த வருத்தம் அவர்களுக்கு குழப்பம் இருந்தால் மெயில் அல்லது போனில், மெயில் அனுப்பிய என்னை தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது தான்
மதுமதி கமன்ட் நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என தெரியலை. அரசியல் கட்சி என உதாரணத்துக்கு சொல்லிருக்கார். இதை எப்படி ரிஜிஸ்தர் செய்யவும் 12 பேர் போதும் என ! மற்றபடி வேறில்லை
மேடை போடுவதில் தப்பில்லை கார்க்கி. இதற்கு முன் சென்னையில் நடந்த அணைத்து விழாவிலும் நான்கைந்து பேர் மட்டும் தான் மேடை ஏறுவார்கள். புத்தக விமர்சனம் என்றாலும் சரி, நினைவு பரிசு தந்தாலும் சரி நான்கைந்து பேருக்குள் மட்டுமே அது நடக்கும். அது நிச்சயம் தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து. இங்கு மேக்சிமம் மக்களை மேடை ஏற்ற முயன்றோம். மேடை பயம், கூட்டத்தின் நடுவே பேசுவதில் உள்ள பயம் போகவேண்டும் ; இது 81 வயது புலவர் ஐயா திரும்ப திரும்ப சொன்னது
நிச்சயம் நல்ல விஷயங்கள் செய்வோம். மிக வெளிப்படையாக எந்த ஒரு தனி நபர் டாமினேஷன் இன்றி, கிட்டத்தட்ட 25 பேர் கருத்து வாங்கி கொண்டு இது போய் கொண்டு இருக்கிறது. இதற்கு மேல் ஜனநாயகமாக எப்படி செய்ய முடியும் என தெரியலை
மதுமதி - யாருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை. இஷ்டப்பட்ட இணையட்டும் போன்ற வார்த்தை பிரயோகங்களை குறிப்பிட்டேன். அதுவும் தவறென சொல்லவில்லை. சிரிக்க நேர்ந்தது :)
ReplyDelete//இதற்கு முன் சென்னையில் நடந்த அணைத்து விழாவிலும் நான்கைந்து பேர் மட்டும் தான் மேடை ஏறுவார்கள்.//
எந்த பதிவர் சந்திப்பில் இது நடந்தது? புத்தக வெளியீட்டு விழா வேறு. அது ஒரு தனிநபர் விழா. பதிவர் சந்திப்பு அல்ல. அங்கே பதிவர்கள் கூடி பேசுவது வழக்கம். ஆனால் அது அந்த ஆசிரியருக்கான விழா. யார் மேடையேற வேண்டும் என்பது அவர் விருப்பம்.
பேசும்போது மேடையேறி பேசுவதை சொல்லவில்லை.
கார்க்கி: நாம சென்னையில் நடத்தியவை பெரும்பாலும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளே. அவற்றில் புத்தக ஆசிரியர் தான் யார் புத்தகம் மதிப்புரை தருவது என்றும், யார் நினைவு பரிசு தருவது என்றும் முடிவு செய்தார் என்கிறீர்கள். அது எப்படி நாலே நாலு பதிவர்களை எல்லா புத்தக ஆசிரியர்களும் மதிப்புரை வந்து பேசுங்க, நினைவு பரிசு வி.ஐ.பி க்கு தாங்கன்னு சொல்லுவாங்க? உண்மை என்னன்னா, சென்னையில் ஒரு பத்து பேர் மட்டுமே எல்லாவற்றையும் முடிவு செய்யும் நிலையில் இருந்தது தான். அவர்களே நினைவு பரிசு தருவாங்க. மதிப்புரை தருவாங்க. விழாவுக்கு வரும் மற்ற பதிவர்கள் எல்லாரும் கை தட்ட வரும் ஆட்களாக தான் கருதப்பட்டாங்க. அந்த பத்து பேர் தான் தி சோ கால்ட் பிரபல பதிவர்கள் ! இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை ! மறைத்தாலும் எல்லாருக்கும் இது புரியும் !
ReplyDeleteநீங்க வேறு இடத்தில பேசிய இன்னொரு விஷயத்துக்கும் விளக்கம் தரணும்:
சென்னை என்ற பெயரோ, பதிவர் என்ற பெயரோ வரக்கூடாதுன்னு ஒரு கருத்து இருக்கு
சென்னை வாக்கர்ஸ் கிளப் இருக்கு. அதில் சென்னையில் இருக்க எத்தனை பேருங்க மெம்பர்? சென்னை பிரஸ் கிளப் துவங்கி இது மாதிரி எத்தனை கிளப் நான் உங்களுக்கு காட்டணும்?
" நான் எங்க ஏரியாவில் வாக்கிங் போறேன். உங்க குழுமத்தில் மெம்பர் இல்லை. நீங்க எப்படி சென்னை வாக்கர்ஸ் கிளப் பேர் வைக்கலாம்?" னு நான் போயி அவங்க கிட்டே சண்டை போட முடியுமா? அப்படி தான் இருக்கு சென்னை என்றோ பதிவர் என்றோ பேர் வைக்க கூடாது என்பதும் !
சென்னை என்ற பெயரை உபயோகிக்க கூடாது என்று சொல்வோரின் அறியாமையை நினைச்சு அழுறதா, சிரிக்கிறதான்னு தெரியலை ;
விழாவுக்கு வந்த மணிஜி, ஷங்கர் போன்றோர் சென்னை என்று தான் வைக்கணும் என்றனர். உங்களை போன்ற சிலர் சென்னை யூஸ் பண்ண கூடாது என்கின்றனர்.
வடிவேலு- பார்த்திபனின் " இங்கு நல்ல மீன் விற்கப்படும்" கதை தான் நியாபகத்துக்கு வருது :))
ஈரோடு பதிவர் சங்கத்திலும் சேராத எத்தனையோ பதிவர்கள் ஈரோடில் இருக்காங்க. உதாரணம்: சிபி செந்தில்குமார்,
ReplyDeleteநல்ல நேரம் சதீஷ்குமார் , வக்கீல் ராஜசேகர் போன்றோர் அதில் சேரலை. அதுக்காக அவர்கள் நீங்க எப்படி ஈரோடு பதிவர் சங்கம்னு வைக்கலாம்..அது என்னை represent செய்ற மாதிரி இருக்குன்னு கேட்டாங்களா என்ன?
அவங்களுக்கு இருக்க maturity ஏன் நமக்கு இல்லை?
//சென்னையில் ஒரு பத்து பேர் மட்டுமே எல்லாவற்றையும் முடிவு செய்யும் நிலையில் இருந்தது தான்.//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? படிக்கிறவங்களே இதை முடிவு செய்து கொள்ளட்டும்
--------
chennai press clubஐ உதாரணம் காட்டுறீங்க. அது எப்படி நடக்குதுன்னு தெரியும்தானே? அதுக்கு ஒரு கமிட்டி இருக்கு. உறுப்பினர்களால் தேர்ந்தெடுகப்பட்ட நிர்வாகிகள் உண்டு. அந்த தேர்தலில் நடக்கும் கூத்துகள் பற்றியெல்லாம் தெரியும்தானே? அதிகாரத்தை கைப்பற்ற எல்லா தேர்தல்களிலும் இது போன்ற சச்சரவுகள் நடபப்து அறிந்ததே. நீங்களும் அபப்டி தேர்தல் நடத்திதான் நிர்வாகிகளை கண்டறிய போகிறீர்களா?
ஆம் எனில் -இந்த கொடுமையெல்லாம் வேண்டுமா என்பதே என் கருத்து.
இல்லை எனில் - எப்படி செயல்பட போறீங்க?
//அவங்களுக்கு இருக்க maturity ஏன் நமக்கு இல்லை?//
ReplyDeleteபோகிற போக்கில் இப்படித்தான் ரொம்ப திமிரா பேசிட்டு போறீங்க மோகன்,.ஈரோடு சங்கமம் முடிந்த உடனே நீங்க சொன்னவர்களில் ஒருவர் செய்த பிரச்சினை பதிவுலகம்றியும்.
நான் ஒரு கமெண்ட் போட்டு என் கருத்தை சொன்னேன். வேற என்ன செய்தேன்? இதுல நான் மெசூர்டா நடந்துக்கலையா???
நீங்க சென்னையாச்சும் வைங்க.. வெண்ணைன்னாச்சும் வைங்க. :)))))
This comment has been removed by the author.
ReplyDeleteஎந்த ஒன்றையும் செஞ்சு பார்க்காமலே சரியில்லை என முடிவு செய்ய வேணாம்.
ReplyDeleteமேலும் இதை பதிவு செய்வது நல்லது என ஏராளமானோர் கருதும் போது சிலர் வேண்டாம் என்பதால் அதை பாதியில் விட போவதில்லை. சென்ற முறை அப்படி தான் சிலர் வேண்டாம் என்றதால் விட்டுட்டாங்க. இம்முறை அப்படி நடக்காது
விழாவுக்கு வந்த ஒவ்வொருவரும் ( அட்லீஸ்ட் பெரும்பாலானோர்) இதனை சப்போர்ட் செய்கிறார்கள் .
இப்படி சில எதிர்ப்பு வருவது தான், இந்த குழுவில் உள்ள அனைவரும் மிக மிக மிக மிக உறுதியாய் இருக்க உதவுகிறது. அதை மட்டும் நிச்சயம் சொல்ல முடியும். இத்தகைய எதிர்ப்புகள் தொடர்வது நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்வோர் ஒற்றுமையாய் இருக்க உதவும்
//ஈரோடு சங்கமம் முடிந்த உடனே நீங்க சொன்னவர்களில் ஒருவர் செய்த பிரச்சினை பதிவுலகம்றியும்.//
இப்போது உங்களில் சிலர் செய்தது மாதிரியா கார்க்கி ? அப்படி பார்த்தா கூட நீங்கள் சொல்வது ஒருவர் தானே? மற்றவர்கள் ஈரோடு குழுமத்தில் இல்லையே?
மிக இளைஞர்கள் பலர் இதில் இருக்காங்க. நீங்க வெண்ணை கிண்ணைன்னா அவங்க வேறு மாதிரி பேச ஆரம்பிப்பாங்க. தேவையற்ற பிரச்சனை வரும்
இந்த பிரச்னையை இதோடு விட்டுடுவோம். அப்புறம் அது நம் தனிப்பட்ட நட்பையும் கெடுக்கும் !
//மிக இளைஞர்கள் பலர் இதில் இருக்காங்க. நீங்க வெண்ணை கிண்ணைன்னா அவங்க வேறு மாதிரி பேச ஆரம்பிப்பாங்க. தேவையற்ற பிரச்சனை வரும் //
ReplyDeleteரொம்ப மோசமான/அநாகரிகமாக வார்த்தைப் பிரயோகம் மோகன். நீங்க இதுமாதிரி பேசுவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.
யாராவது ஏதாவது பேசினாங்கன்னா அவங்க மேலே பாயுங்கன்னு சில பேரை நீங்க நேரடியாக தூண்டிவிடறா மாதிரி இருக்கு :-(
லக்கி பல இடங்களில், மற்றும் சில தளங்களில் நடக்கும் விவாதங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். எனக்கு அவர்களும் வேண்டும். கார்க்கி, நீங்கள் போன்றோரும் நண்பர்களே, வீணான சண்டை வரக்கூடாது என நினைக்கிறேன். வெண்ணை என்பது நல்ல வார்த்தை பிரயோகம் மாதிரி எனக்கு தெரியலை. அதை நான் எடுத்து கொள்கிற மாதிரி எல்லாரும் எடுத்துக்குவார்கள் என சொல்ல முடியாது.
ReplyDeleteநான் தூண்டி விட்டு செயல்படும் நிலையில் அவர்களும் இல்லை. அப்படிப்பட்டவன் நானும் இல்லை.
விவாதம் மூண்டால், கமன்ட் மாடரேஷன் வைத்து இரு பக்கமும் ஒருவரை ஒருவர் திட்டி எழுதினால் , அவற்றை வெளியிடாமல் டெலிட் செய்து, பார்த்து பார்த்து தான் கமன்ட் வெளியிடனும். இது எனக்கு தேவையில்லாத வேலை. அதை தான் சொன்னேன். வேறு எந்த உள் அர்த்தமும் இல்லை.
கமென்ட் பெட்டியை மூடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போவது உத்தமம்!கார்க்கி தன்னுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பதிலுக்குப் பதிலுக்குப் பதில் என்று வளர்த்துக் கொண்டே போவது யாருக்கும் பயன்படப் போவதில்லை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteS Suresh: நீங்க எல்லா இடத்துக்கும் போய் அந்த ப்ளாக் எழுதுறவர் பக்கமே நின்னு பேசுறீங்க. சதீஷ் செல்லத்துரை பதிவில் எங்களை திட்டி எழுதினா ஆமாம் நீங்கள் சொல்றது சரிதான் என்கிறீர்கள். இங்கு வந்து நான் சொல்வது சரி அப்படிங்குறீங்க. ஏதாவது ஒரு பக்கம் இருங்க சார். தப்பா நினைக்காதீங்க ! மனசுல தோனுச்சு சொல்லிட்டேன் ஹர்ட்
ReplyDeleteபண்ணிருந்தா சாரி !
சதீஷ் செல்லதுரை பதிவில் சில கருத்துக்களில் உடன்பட்டிருப்பதாக தோன்றியதால் அவ்வாறு கருத்திட்டேன்! பின்னர் உங்கள் விளக்க பதிவுகள் படித்தேன்! இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவம் எனக்குண்டு! உங்கள் விளக்கம் ஏற்றுக் கொண்டேன்! நான் உங்கள் பக்கம் தான் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! இதற்கு முன் ஒரு முறை வவ்வால் பதிவிலும் உங்களுக்கு எதிராக ஒரு கருத்து பதிந்து உள்ளேன்! சில கருத்துக்களில் அவரோடு உடன் பட்டதால்! உண்மையில் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதிற்கு வருந்துகிறேன்! பளிச்சென்று கருத்து சொன்னதற்கு நன்றி!
நாள் கழித்து நான் இந்த பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன். எப்படி செலவை சந்தித்திருப்பார்கள் என்று நினைத்தேன். உங்கள் பதிவு தெளிவு படுத்திற்று. உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட பதிவர்கள் போல் வாழ்க்கையில் எங்கும் உண்டு. இந்த மாதிரி நிகழ்வுகளிலிருந்து யார் நண்பர் என்று தெரிந்துகொள்ளலாம்.
எதையும் எடுத்துச் செய்பவர்கள் - அதுவும் பொது நிகழ்ச்சிகள் - இந்த இக்கட்டை சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. டொனேஷன் என்று போனாலே சிலர் இயலாது என்று நிறுத்திக் கொள்வார்கள், சிலர் அவநம்பிக்கையோடு புத்திமதி சொல்வார்கள். அதனாலேயே சென்ஸிடிவ் மக்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடிவதில்லை. உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் செலவுக்கு வேண்டிய பணத்தைத் தான் சேகரித்திருக்கிறீர்கள். செல்வுக் கணக்கும் வெளியிட்டிருப்பதாக அறிகிறேன். இனி மனத் துயர் கொள்ளாதீர்கள்.
ஒரு சந்தேகம்: விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகள் வலைத்தளங்களிலிருந்து பிரசுரம் செய்கின்றன, அதிலும் விகடன் பதிவர்களை அறிமுகப் படுத்தியதில் முன்னணி இடம் பிடித்தது. அவர்களை நீங்கள் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அணுகியிருக்கலாம் - ஒருவேளை செய்தீர்களோ!
மீண்டும் இந்த சந்திப்பை முனைப்புடன் நடத்திய உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
-ஜெகன்னாதன்