Thursday, May 12, 2016

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

"கொலம்பஸ்.. கொலம்பஸ் விட்டாச்சு லீவு" என ஸ்கூல் பசங்க ஜாலியாக இருக்கும் மாசம் இது. இன்னொரு பக்கம் சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தினர்கள் வருகையும் இருக்கவே செய்யும். இப்படி இரண்டு தரப்பையும் திருத்தி படுத்தும் வண்ணம் இந்த லீவில் சென்னையில் எங்கு கூட்டி செல்லலாம் என யோசித்து கொண்டுள்ளீர்களா ? வாங்க இந்த பதிவு உங்களுக்கு தான்..

இதோ சென்னையின் சில தீம் பார்க்குகள் பற்றிய சிறு அறிமுகம் ....

VGP கோல்டன் பீச்

சென்னை தீம் பார்க்குகளில் கம்மியான நுழைவு கட்டணம் கொண்ட இடம். பெரும்பாலான games ரங்க ராட்டினம் டைப் வகை தான். அதாவது மேலே வேகமாய் போய் கீழே வரும் வகை விளையாட்டுகள் !! இது என்னை மாதிரி ஆளுங்களுக்கு சுத்தமா ஒத்துக்காது. ஒரு விளையாட்டு அப்படி ஆடினாலே குமட்டும். தலை சுத்தும். நீங்கள் கூட்டமாக போகும் போது இது போன்ற சிலராவது அப்படி இருப்பர். இங்கு ஸ்பெஷல் அவர்கள் தரும் Family தோசை. செம பெருசு. மற்றும் நுழை வாயில் பக்கத்தில் சிரிக்காமல் நிற்கும் மனிதர். அவர் அருகே நின்று பலரும் சிரிக்க வைக்க முயல, அவரோ அசையாமல் நின்றிருப்பார்.

ரொம்ப சாதாரண தீம் பார்க் இது. Better to avoid!!

அபிராமி மெகா மாலில் ஸ்னோ வேர்ல்ட்

அபிராமி தியேட்டர் காம்ப்ளெக்ஸ், தற்போது ஒரு ஷாப்பிங் மால் ஆகவும் ஸ்னோ வேர்ல்ட் உள்ளிட்ட பல புது விஷயங்கள் உள்ளது. இதில் ஸ்னோ வேர்ல்ட் நாங்கள் guests வந்தால் அவ்வபோது செல்லும் ஒரு இடம். 15 நிமிடம் தான் உள்ளே இருக்க அனுமதி. (அதுக்கு மேல் விட்டாலும் இருக்க முடியாதுங்க). அனைவருக்கும் பனிக்காக கோட், தொப்பி, ஷு போன்றவை தருகிறார்கள் (வெளியே வரும் போது திரும்ப தந்திடனுங்க). முழுக்க முழுக்க ஸ்னோ உள்ள 1500 முதல் 2000 sq. feet வரை உள்ள ஒரு இடம், இங்கு பனி சறுக்கல், மற்றும் குழந்தைகளை வைத்து பணியில் இழுத்து செல்லும் படியான எல்லாம் உள்ளன. இருக்கும் அந்த 15 நிமிடங்களும் செம ஜாலி ஆக நாமும் குழந்தை ஆகி மகிழலாம்.



நிச்சயம் ஒரு முறை சென்று வர கூடிய இடம் ஸ்னோ வேர்ல்ட்.

Website: http://www.abirami.in/snow-world.html

குவீன்ஸ் லேண்ட்

ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் வழியில் அதற்கு சற்று முன் உள்ளது குவின்ஸ் லேண்டு. கிட்ட தட்ட நூறு விளையாட்டுகள் உண்டு. நிறைய ராட்டினம் டைப் விளையாட்டுகள் இருந்தாலும் கூட நாம் என்ஜாய் செய்யும் விதத்தில் மற்ற வகை விளையாட்டுகளும் கூட நிறைய இருக்கவே செய்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டியவை -

ரோப் கார் - மிக உயரத்தில் மெதுவாக செல்லும் இது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். பெரியவர்களுக்கும் தான்.

சுவும்மிங் பூல் - குட்டி குட்டி ஷவர்களுடன் கூடிய சுவும்மிங் பூல் விட்டு குட்டீஸ் நகரவே மாட்டார்கள். க்ளோரின் போட்ட தண்ணீர் என்பதால் உடல் பலருக்கு மிக கருத்து போகும் என்பது மட்டுமே மைனஸ்



இந்த சம்மர் முழுதும் வாரத்தின் பல நாட்கள் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் ஹிந்துவில் இவர்கள் விளம்பரம் செய்வார்கள். அந்த விளம்பர கட்டிங் எடுத்து சென்றால் நம்முடன் வரும் 4 பேருக்கு ஒருவருக்கு 50 ரூ டிஸ்கவுன்ட் தருவார்கள். 8 பேர் செல்கிறீர்கள் எனில் இது போன்ற பேப்பர் கட்டிங் 2 எடுத்து செல்லனும். விளம்பரம் விடாமல் கொடுத்தாலும் அதனை பார்த்து Paper கட்டிங் எடுத்து செல்வோர் மிக குறைவு தான்...

நல்ல விஷயம் என்னவெனில் ஒவ்வொரு ரைடுக்கும் தனி தனியே பணம் வாங்குவதில்லை; மொத்தமாய் வாங்கி விடுகிறார்கள். எல்லா ரைடுக்கும் பணம் தருவதால், காலை 9 மணிக்கு சென்றால் தான் பெரும்பான்மை விளையாடி விட்டு மாலை திரும்ப முடியும் 

இதுவரை செல்லாவிடில் நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம்

Website: http://www.queenslandamusementpark.com/

கிஷ்கிந்தா

இது அடிப்படையில் ஒரு வாட்டர் தீம் பார்க். சென்னை குற்றாலம் என்ற பெயரில் குற்றாலம் போலவே ஒரு செட் தயார் செய்துள்ளனர். பார்க்க அப்படியே குற்றாலம் போல இருந்தாலும், தண்ணீர் என்றாலே - க்ளோரின் போட்டுடுறாங்க. அதை பொறுத்து கொண்டால் (கூடவே கூட்டத்தையும் தான்) என்ஜாய் செய்யலாம்

நிறையவே வாட்டர் சார்ந்த விளையாட்டுகள் தான் அதிகம் உண்டு. விளையாட்டுகளுக்கு ஆங்காங்கே பணம் வாங்குகிறார்கள். இதனால் செலவு அதிகம் என்பதோடு நேரமும் அதிகமாகிறது

Website: http://www.kishkinta.in/

MGM DIZZEE WORLD

கிட்டத்தட்ட VGP அமியூஸ் மென்ட் பார்க் கான்செப்ட் தான். ஆனால் அதனை விட பராமரிப்பு நன்கிருக்கும். ராட்டினம் டைப் ரைட்கள் தான் அதிகம் என்பதால் எங்களது விருப்ப லிஸ்டில் இது எப்போதும் இருப்பதில்லை

Website: http://mgmdizzeeworld.com/

***********
இங்கு குறிப்பிட்டுள்ளவை நான் நேரடியே சென்று வந்தவை மட்டுமே. இவை தவிர EVP தீம் பார்க் உள்ளிட்ட இன்ன பிற இடங்கள் சென்றதில்லை. நான் தவற விட்டவை நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் !

9 comments:

  1. குயின்ஸ்லேண்ட் சென்றிருக்கிறேன்... மறக்கமுடியாத அனுபவம்.....

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டிங்கபோல்..

    கோல்டன் பீச் தவிர வேறஎதுக்கும் நான் இன்னும் போகல...


    நல்லது...

    ReplyDelete
  3. குயீன்ஸ் லேன்ட் என்னோட சாயிஸ் சார்.. கொடுத்த பணத்துக்கு முழுசா என்ஜாய் செய்யலாம்..

    இது தவிர... ECR ரோடு ல.. இருக்கற ஒரு இடம் "தக்ஷன் சித்ரா"...இதில் தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வீடு மாதிரிகளும் முக்கிய தொழில்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ளே சென்று பார்வையிடலாம்..

    ReplyDelete
  4. ரொம்ப நாள் முன்னாடி கோல்டன் பீச் போயிருக்கேன்! குயின்ஸ்லேண்ட் நல்லாயிருக்கும்னு கேள்விப் பட்டு இருக்கேன்! மத்ததெல்லாம் பார்த்தது இல்லை! இயற்கையான அருவிகள் வாசஸ்தலங்கள் முன் இவை ரொம்ப வேஸ்ட்டுன்னு தோணுது!

    ReplyDelete
  5. There is one advantage in kishkintha, they will allow outside foods, but others not doing so.............

    ReplyDelete
  6. சென்னை வந்தால் ஒரு வேளைக்கு மேல் இருப்பதில்லை.....

    அடுத்த முறை வரும்போது உங்களோட தான் எல்லா இடத்துக்கும் போகணும். கூட்டிட்டு போக நீங்க தான் ஃப்ரீயா இருக்க மாட்டேங்கறீங்க! :)

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  8. கிஷ்கிந்தா போய் வந்திருக்கோம். பசங்களுக்கு எப்பவுமே தண்ணீர்னா குஷிதானே! அதனால நல்லா எஞ்சாய் பண்ணோம். எல்லாம் சரி, விடுமுறை முடியுற டைம்ல பதிவிட்டுருக்கீங்களே!

    ReplyDelete
  9. Woww!!!!
    Nice places are listed here,
    Check out some more places here Best places to visit in Chennai

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...