சென்னை ப்ரோக்கன் பிரிட்ஜ் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன்.. ரொம்ப நாள் அது வட சென்னையில் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். இணையத்தில் தேடி பார்க்கும் போது தான் அது பெசன்ட் நகர் பீச்சிற்கு மிக அருகே உள்ளது என தெரிந்தது.
எங்கே இருக்கிறது?
பெசன்ட் நகர் பீச் சென்றுள்ளீர்களா? அதன் ஒரு புறத்தில் KFC மற்றும் திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி கடை உள்ளது; தலப்பா கட்டி கடையை ஒட்டி பீச் அருகிலேயே ஒரு சாலை செல்லும்;கொஞ்ச தூரம் குடிசை பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டும். சரியாக ஒரு கிலோ மீட்டர் அப்படி பயணித்தால் ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜை அடையலாம்.
எப்படி செல்லலாம்?
கார் அல்லது பைக் இரண்டுமே ப்ரோக்கன் பிரிட்ஜ்ஜிற்கு சற்று தூரம்வரை (மிக அருகில்) செல்ல முடியும். பெசன்ட் நகர் பீச்சிலிருந்து நடந்து போனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
எப்போது செல்லலாம்?
பகலில் மட்டும் தான் செல்ல முடியும் ! மாலை நான்கரை அல்லது 5 மணிக்கு மேல் போலீஸ் வந்து இங்கு இருக்க வேண்டாம் என அனுப்பி விடுவதாக சொன்னார்கள் (நாங்கள் சென்ற போது 4 மணி இருக்கும். நான்கரைக்கு கிளம்பினோம்;அன்றைக்கு போலீஸ் அங்கு இல்லை !)
இருட்டிய பின் செல்வது பாதுகாப்பானது இல்லை; அதிகாலை சென்றாலும் கூட வெய்யில் இல்லாமல் நன்கு என்ஜாய் செய்யலாம்
என்ன விசேஷம்?
உடைந்த நிலையில் ஒரு பாலம். எல்லா பக்கமும் கடல் நீர். சற்று தொலைவில் மிக பெரும் கட்டிடங்கள்.. இந்த வித்தியாச சூழலை பார்த்து ரசிக்கவும், குறிப்பாக புகைப்படம் எடுக்கவும் செய்யலாம்....அவ்வளவே !
பாலம் எப்படி உடைந்தது?
1967ல் கட்டப்பட்ட இப்பாலம் -10 வருடங்கள் பயன்பட்டுள்ளது;பின் 1977ல் உடைந்த பின் இதனை கட்ட யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை.
எச்சரிக்கை !
இரவில் செல்லவேண்டாம். சிறந்த நேரம்.. அதிகாலை
பிரிட்ஜ் மேலே ஏற சற்று சிரமமே. ஆண்கள் மற்றும் உயரமான பெண்கள் ஓரளவு முயற்சியுடன் ஏறிவிடலாம். ஏற சிரமப்படுவோருக்கு நண்பர்கள் குனிந்து - என் மேல் ஏறி செல் என உதவுகிறார்கள் !!
பெரிய எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம். எந்த செலவும் இல்லாமல் ஒரு வித்தியாச இடம் .. அவ்வளவே.. !

Sir this place was mentioned in top 10 haunted places in chennai list.. :) looks interesting.
ReplyDeleteஇது வரை தெரியாமல் இருந்தது. ஒரு தடவை செல்ல வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் அங்கே?
ReplyDelete