கதை
Good Vs Evil கதை தான். நல்ல மீடியாவிற்கும் கெட்ட மீடியாவிற்கும் நடக்கும் சண்டை.. நன்மையே இறுதியில் வெல்லும் என்பதில் சந்தேகமா என்ன !
திரைக்கதை, நடிப்பு, இயக்கம்
படத்தின் சுவாரஸ்ய விஷயம் திரைக்கதை தான். ஷங்கர் படங்களில் மாஸாய் சில காட்சிகள் இருக்கும். இன்னும் சொல்லணும் என்றால் முதல்வன் பட இன்டெர்வியூ போலவே இங்கும் ஒரு அமர்க்கள இன்டெர்வியூ காட்சி..
பவர் ஸ்டாரை சரியாய் பயன்படுத்திய படங்களுள் ஒன்று கவண் ! " முட்டா பசங்களுக்குள்ளேயும் எதோ திறமை இருக்கலாம் சார்" என பவர் ஸ்டார் சொல்லும்போது விசில் தூள் பறக்கிறது
முதல் 15 நிமிடமும் இடைவேளைக்கு பின் ஆங்காங்கும் சற்று இழுக்கிறது. Lag !! இருந்தாலும் அது பெரிதாய் தெரியாமல் அடுத்தடுத்து நல்ல காட்சிகள் வந்து காப்பாற்றி விடுகிறது
விஜய் சேதுபதிக்கு முதல் அரை மணி நேரம் கோரமான ஒரு ஹேர் ஸ்டைல். நல்லவேளை விரைவில் நார்மல் லுக்கிற்கு வந்து விடுகிறார். ஹீரோயிசம் அளவாய் தான் வைத்துள்ளனர். வானத்தை வில்லாய் வளைத்தார் என்று புருடா விடலை ... சண்டையும் கூட கிளை மாக்சில் தான் வருகிறது (அதையும் தவிர்த்திருக்கலாம்)
மடோனா - பூசிய உடல்வாகு..மிக மெலிதான ரொமான்ஸ் தான். ஒரே டூயட் உடன் நிறுத்தியது பெரும் ஆறுதல்
படத்தின் மிக சிறப்பான விஷயம் மற்றும் இப்படம் நீங்கள் காண - பரிந்துரைக்க மிக முக்கிய காரணம் 2
முதலில் - படம் முழுதுமே மைண்ட் கேம்ஸ் தான் (தனி ஒருவன் போல) - இத்தகைய படங்கள் இயல்பாய் சுவாரஸ்யம் தந்து விடுகின்றன
இரண்டாவது -விஜய் டிவி, சன் டிவி -இவை நடத்தும் சில நிகழ்ச்சிகளை துவைத்து காய போட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பின் இருக்கும் அரசியல்.. சென்சேஷன் வெறியில் மீடியாக்கள் அடிக்கும் கூத்து இவற்றை சற்று மிகைப்படுதலுடன் இருந்தாலும் (சினிமாவில் அப்போ தான் எடுபடும் ) - கலக்கலாய் எடுத்துள்ளனர்.
கே வி ஆனந்த் படங்கள் பலவும் எனக்கு பிடிக்கும். நடுவில் ஒரு சில படங்கள் சறுக்கினாலும் மீண்டும் இப்படத்தில் நிமிர்ந்துள்ளது மிக மகிழ்ச்சி !
குறைகள்
கே வி ஆனந்தின் ஆஸ்தான நட்சத்திரங்களான நண்டு ஜெகன், போஸ், அயன் பட வில்லன் (அதே ஹேர் ஸ்டைல்) போன்றோர் வருவது பழைய படங்களை நினைவூட்டுகிறது
ஆங்காங்கு வரும் தொய்வை சரி செய்திருக்கலாம்
ராஜேந்தருக்கு ஹைப் அதிகம். அந்த அளவு அட்டகாச பாத்திரம் இல்லை; இருந்தாலும் அவர் செகண்ட் இன்னிங்ஸ் ஆட நிச்சயம் இப்படம் உதவும்
பாடல்கள் வெகு சுமார் (பின்னணி இசை ஓகே)
மொத்தத்தில்
நிச்சயம் ஒரு டீசண்ட் கமர்ஷியல் entertainer.. ஒரு வித்தியாச பின்புலத்துடன் !
Worth a watch !

விஜய் சேதுபதி படம் என்பதால் எப்படியும் பார்த்து விடுவேன்!
ReplyDeleteநல்ல அறிமுகம். படம் பார்க்க முடியாது!
ReplyDelete?
Deleteஓ! உடன் பார்த்து விடுகிறேன். ஆனந்த் படம், மற்றும் நீங்கள் கூறி இருப்பது, என்னை படம் பார்க்க தூண்டுகிறது.
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteஇப்படி விமர்சனம் எழுதறதுக்கு நல்ல மனசு வேணும். நான் எந்த படமா இருந்தாலும், விமர்சனத்தை பொருட்படுத்துவது கிடையாது. சில விமர்சனங்களை படித்து, அதையே உண்மை என நம்பி பார்க்காமல் விட்ட படங்கள் சக்கை போடு போட்டிருக்கு. அதற்காகவே பெரும்பாலும் விமர்சனங்களை பொருட்படுத்துவது கிடையாது. எந்த படத்தையும் நானே பார்த்துவிட்டுதான் முடிவு செய்வேன்.
ReplyDeleteஉங்களது விமர்சனம் இயல்பாய் உள்ளது. வாழ்த்துகள். !