Friday, June 15, 2012

உணவகம் அறிமுகம்: பிளாமிங்கோ, வேளச்சேரி

ன்னுடன் பணிபுரியும் சேஷாத்ரி அடிக்கடி " பிளாமிங்கோ ஒரு முறை போங்க சார்; நிச்சயம் பிடிக்கும்" என்பார். வேளச்சேரியில் எங்கள் அலுவலகத்துக்கு மிக அருகில் இருந்தும் கூட பிளாமிங்கோ செல்வது பல முறை தள்ளி போனது. நண்பர் ஒருவர் குழந்தை பிறந்தநாள் பார்ட்டி அங்கு நடந்தது. அழைத்திருந்தார். அவசர வேலையால் போக முடியலை.

ஒருவழியாய் பதிவர் ரகுவும் நானும் சமீபத்தில் இங்கு விசிட் அடித்தோம். சென்றது ஒரு வேலை நாளின் மதிய நேரம். புபே தான் சாப்பிடுவது என்பதில் தெளிவாய் இருந்தோம். அன்லிமிடட் புபே சாப்பாடு 170-ரூபாய்.

முதலில் சூப். வெஜிடபிள் க்ளியர் சூப் நன்றாகவே இருந்தது. அப்புறம் நானுக்குள் நுழைந்தோம்.

இது போன்ற அன் லிமிட்டட் சாப்பாடு உள்ள ஹோட்டல்கள் செல்வதானால் காலை எதுவும் சாப்பிட கூடாது. அப்போ தான் மதியம் வரை நல்லா பசி எடுத்து பிச்சு உதறலாம். (போட்ட காசை புல்லா எடுக்க வேணாமா சார்?)

என்னுடன் வந்த ரகு பாத்து பாத்து கொஞ்சமா சாப்பிட்டு கிட்டு இருந்தார். நான் நன்கு அடித்து ஆடினேன்

சாம்பார், ரசம், தயிர் என சரியான சவுத் இந்தியன் சாப்பாடு. இரண்டு காய்கள், அப்பளம், வத்தல் என மானாவாரியாய் இருந்தது.

அனைத்து உணவுகளும் முடித்து விட்டு பாயசம் (சுவீட்) தந்தாங்க பாருங்க. சான்சே இல்லை ! ரகு அதை மட்டும் மூணு தடவை நல்லா சாப்பிட்டார். (இதுக்கு தான் சாப்பாடை கம்மியா சாப்பிடுறதா?) நானோ ஏற்கனவே மயக்க நிலையில் இருந்ததால் கொஞ்சம் பாயசத்துடன் நிறுத்திட்டேன்

அருமையான சுற்றுபுறம். பறவைகள் பறக்கிற மாதிரி சுவர்களில் செய்திருந்தது ரொம்ப அழகா இருந்தது. பிசியான சாலை அருகே கண்ணாடி ஜன்னல் பக்கம் இடம் பிடித்து சாலையையும் வேடிக்கை பார்த்தவாறு அரட்டை அடித்தபடி சாப்பிடலாம்.

வேளச்சேரியின் ஐ.டி. மக்களும் நண்பர்களா, காதலர்களா என சொல்ல முடியாத ஆண்- பெண்ணும் நிறையவே வருகிறார்கள்.

எங்கள் அருகே ஒரு ஜோடி அமர்ந்து சாப்பிட்டது. பதிவுக்காக ஹோட்டலை மொபைலில் போட்டோ எடுக்க,  பெண் வெளியே ஓடி விட்டார்...  வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறாங்க போல.. !
(அருகில் உள்ள படத்தில் கண்ணாடிக்கு வெளியே நிழலாய் ஒரு பெண் உருவம் தெரிகிறதா?)



மேலதிக விபரங்கள்:

எங்கே: சென்னை வேளச்சேரி நூறடி ரோடு ( குருநானக் கல்லூரி டு விஜய நகர் பேருந்து நிலையத்துக்கு நடுவே)

வகை: வெஜிட்டேரியன் மட்டும். Continental and Chinese food also is served.

நேரம்: காலை 11 மணி முதல் இரவு 11 வரை

ரேட் கார்னர்

புபே சாப்பாடு - வார நாளில் Rs- 170 (மதியம் மட்டுமே)

வார இறுதியில் - மதியம் மற்றும் இரவு Rs-250 (சாப்பாடு ஐட்டங்கள் அப்போது அதிகம்)

ஹால்

பிறந்த நாள் பார்ட்டிக்கு ஹால் இலவசம் குறைந்தது 40 சாப்பாடுகள் அவசியம்

மற்ற விழாக்களுக்கு வாடகை ரூ. 3500

வீடுதிரும்பல் பரிந்துரை: நிச்சயம் ஒருமுறை குடும்பம் அல்லது நண்பர்களுடன் சென்று வரலாம் !

டிஸ்கி: உணவகம் அறிமுகம் என இந்த பகுதிக்கு பெயர் பரிந்துரைத்த நண்பர் அமரபாரதிக்கு நன்றி ! பெயர் பரிந்துரைததற்கு உங்களுக்கு பரிசு: சென்னை வரும்போது மெயிலில் என்னை தொடர்பு கொண்டால், நல்ல ஒரு ஹோட்டல் சென்று நாம் சாப்பிடலாம் ! பில் நான் தருவேன் நம்புங்க.. !

47 comments:

  1. அறிமுகத்துக்கு நன்றி.

    சென்னைக்கு வரும்போது போயிரலாம்.

    ReplyDelete
  2. உணவகம் பற்றிய தகவல்கள் தருவதன் நோக்கம்நன்று.உணவகம் செல்லவேண்டுமென்ரால் இது போன்ர பதிவுகளுக்குள் சென்று பார்த்து விட்டு உணவகம் சென்று சாப்பிட மிக வசதியாக உள்ளது.மற்றவர்களுக்கும் பரிந்துரையும் செய்யலாம்.நான் கூட உணவகம் என்ற லேபிளில் எழுதி வருகிறேன்.நன்றாக விவரித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  3. ஒரு வேளை சாப்பிட ரூ.170ஆ..? அடேங்கப்பா...

    ReplyDelete
  4. மோகன்,

    சாப்பாடுக்கடைய தொறந்தாச்சா, மெனுல ஐடெம் கம்மியா இருக்காப்போல தெரியுது.

    ஹோட்டலைப்பார்க்கும் போது நல்லா ரிச் லுக்கா இருக்கு,விலை 170 பரவாயில்லை.

    ஃபிளமிங்கோவுக்கு தமிழில் பூநாரை,செந்நாரைனு பேரு ,வெளிநாட்டுப்பறவை.ஹி..ஹி நம்ம தமிழ் அறிவை காட்ட ஒரு வாய்ப்பு.

    ------

    கணேஷ் சென்னையில எல்லாம் விலை ஏறிப்போச்சு நண்பரே, இது போல உணவகம் எல்லாம் அடிக்கடி போக முடியாது.எப்போவாது ஓ.கே.

    ReplyDelete
  5. // பில் நான் தருவேன் நம்புங்க.. ! //

    பில்லத் தர்றது இருக்கட்டும்....
    பில்லுக்கு காசு தருவீங்களா ?

    ReplyDelete
  6. அறிமுகத்துக்கு நன்றி..

    ReplyDelete
  7. rompa naala poganum nu nenaichu konja naal munnadithaan sendren. neenga sonnathu correct.

    ReplyDelete
  8. துளசி கோபால் மேடம்: வணக்கம். நல்லா இருக்கீங்களா? வேளச்சேரியில் உங்கள் சொந்த காரர்கள் யாரோ
    இருக்காங்களே ! அப்போ சென்னை வரும்போது போவது ஈசி தான்; வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. ஸாதிகா: நீங்களும் உணவகம் பற்றி எழுதுறீங்களா? பார்த்ததில்லை கவனிக்கிறேன்

    ReplyDelete
  10. கணேஷ்: Unlimited இல்லையா? அதான் சற்று விலை அதிகம்

    ReplyDelete
  11. வவ்வால்: உணவகம் பற்றி இது ரெண்டாவது பதிவு. முதல் பதிவு தஞ்சை சாந்தி பரோட்டா கடை பத்தி எழுதினேன்

    இந்த விலை (170) பரவாயில்லை என நீங்க சொன்னது ஆச்சரியம் தான்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. மாதவா : கணக்குலே கரக்டா இருப்பே. :))

    அமரபாரதி படிச்சுட்டு சந்தோஷ படட்டுமே தம்பி. சில பொய்கள் தேவை தானே ? :)

    ReplyDelete
  13. அமைதி சாரல்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    ReplyDelete
  14. தன்ஸ்: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  15. அமுதா கிருஷ்ணா said...
    veg only???

    ***
    Yes Madam. Pure Veg hotel

    ReplyDelete
  16. நல்ல அறிமுகம். வேளச்சேரி உறவினர் வீடு வரும்போது ஒருமுறை உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான்!

    ReplyDelete
  17. மோகன் சார்!

    தோழர் வவ்வால் உங்களுக்கும் பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டாரா? சனிபகவான் உங்க மேலே உக்கிரமான கோபத்துலே இருக்காருன்னு அர்த்தம். ஏற்கனவே கேபிள் நொந்து நூடுல்ஸ் ஆகிப்போயிருக்கிறாரு :-)

    ReplyDelete
  18. என்னது...வெஜ் மட்டும்தானா...செல்லாது...செல்லாது..

    ReplyDelete
  19. //பில் நான் தருவேன் நம்புங்க.. !//

    பில்லுக்கு காசு யார் தருவாங்க :))

    ReplyDelete
  20. Anonymous7:01:00 PM

    அறிமுகத்துக்கு நன்றி மோகன்...

    நமக்கு நல்ல Authentic செட்டிநாடு உணவகமா பார்த்து பரிந்துரை செய்யுங்களேன் சாவகாசமாய்...

    ReplyDelete
  21. ஸ்ரீராம். said...

    வேளச்சேரி உறவினர் வீடு வரும்போது ஒருமுறை உள்ளே நுழைந்து விட வேண்டியதுதான்!
    **
    வேளச்சேரி வரும்போது எங்க ஆபிசுக்கும் வாங்க. மீட் பண்ணிடுவோம்

    ReplyDelete
  22. யுவா: வவ்வால் அப்பப்போ திட்டினாலும் நம்மக்கிட்டே நட்பா தான் இருக்கார். பாக்கலாம்

    ReplyDelete
  23. கோவை நேரம்: வாங்க யூத் சார். நான் வெஜ் ஹோட்டல் சீக்கிரமே சொல்றேங்கன்னா

    ReplyDelete
  24. அரவிந்தன்: அதெல்லாம் கண்டுக்க படாது :))

    ReplyDelete
  25. ரெவரி சார் :நிச்சயம் சொல்கிறேன் Thanks for your visit

    ReplyDelete
  26. நல்ல அறிமுகம். சென்னை உணவகங்கள் லிஸ்ட் அதிகமான உங்களுக்குத் தான் கஷ்டம் மோகன். நான் சென்னை வந்தா எத்தனை ஹோட்டலுக்குக் கூப்பிட்டு போவீங்க :)

    ReplyDelete
  27. லக்கி,

    ஹா ..ஹா என்னை கலாய்ச்சுட்டாராம் :-))

    ராகு காலம், எமகண்டம், சனி, ராகு ,கேது, நவக்கிரகம், சூலம்,மூலம்னு அறிவாலய இளைய ஆதினம் பேசுவதில் வியப்பில்லை, ஏன் எனில் அறிவாலய மஹா சன்னிதானமே மஞ்சள் மகிமையை போற்றி மஞ்சள் துண்டு மகானாக வலம் வரும் போது இளைய ஆதினம் மட்டும் என்ன செய்வாராம் :-))

    அது என்ன கேபிள்ஜியை மட்டும் சொல்லிக்கிட்டு எல்லாரும் என்னால நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாங்கன்னு சொல்லிட்டே போகலாம் ,நான் ஒன்றும் நினைக்கப்போவதில்லை.ஒரு கொலை ஒலக நாதனும்,ஆறு கொலை ஆறுமுகம் என்றாலும் செய்தது கொலை தான், தண்டனையும் ஒன்றே தானே :-))

    ஒருத்தர் பதிவை நேரம் ஒதுக்கி படித்து ,பின்னூட்டம் இட ஒரு மனசு வேண்டும், எப்போதும் பாராட்டிக்கொண்டேயிருந்தால் அதில் போலித்தனம் தான் இருக்கும். உண்மையை சொன்னால் என்னை போல பொல்லாப்புக்கு தான் ஆளாகணும் என்றால் ,நான் வருத்தப்படப்போவதில்லை,எப்போதும் சரியை சரி என்றும் தவறை தவறென்றும் சொல்லத்தான் எனக்கு தெரியும்.

    ஆங் அத எப்படி சொல்றதுன்னா ... தமிழ் எனக்கு பரிச்சியமான மொழி ஆனாலும் சமயத்தில் வார்த்தைகள் சிக்கிடுது ...ம்ம் இப்படி சொல்லலாம்

    ...."பின்னூட்டம் போடுறவன் மனுஷன் , பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுறவங்க பெரிய மனுஷன் "

    ,நான் மனுஷன் ,மோகன் பெரிய மனுஷன். உங்களை நீங்களே யார் என கண்டுப்பிடித்துக்கொள்ளவும் :-))

    சொ.செ.சூனியம் ஆச்சேன்னு ஃபீலாக வேண்டாம் லக்கி "ஆல் இஸ் வெல்"

    --------

    மோகன்,

    //யுவா: வவ்வால் அப்பப்போ திட்டினாலும் நம்மக்கிட்டே நட்பா தான் இருக்கார். பாக்கலாம்//

    நான் எங்கே திட்டினேன், இப்படி செய்திருக்கலாம், இன்னும் நன்றாக வரும் என்பதாக தான் சொல்கிறேன், ம்ம் நல்லதுக்கே காலமில்லை,அனைவரும் புகழ்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள்.

    எப்பொழுதும் பாராட்டும் நண்பனை விட குறை சொல்லும் எதிரி மேலானவன் என சீனப்பழமொழி இருப்பதாக ஒரு கேள்வி.

    நான் எப்போதும் கருப்பு அல்லது வெள்ளையில் சொல்லிவிடுவேன் ,பூசி மொழுகி சாம்பல் தூவுவதில்லை. அது திட்டலாக படுகிறது மக்களுக்கு. இந்த நிலையில் நக்கீரன் பொறந்த பூமினு ஒரு வெற்றுப்பெருமை தமிழனுக்கு, எவனாது லேசா குற்றம் சொல்லிட்டாலும் "சனி பகவன்" என பாராட்டு மடல் வேறு :-))

    இனிமே எல்லாருக்கும் ஒரே வரியில் கலக்கல் பகிர்வு,த.ம.2012 னு போட்டுற வேண்டியது தான் :-))

    ReplyDelete
  28. வவ்வால்: புலவர்களுக்குள் சண்டை தேவை தான் அது சச்சரவாக மாறி விட கூடாது ( சண்டைக்கும் சச்சரவுக்கும் என்ன வித்யாசம்னு தெரியாது, திருவிளையாடல் டையலாக். சின்ன வயதில் இருந்து கேட்டு மனப்பாடம் ஆகிடுச்சு)

    லக்கி நேரில் பார்த்து பேசினா செம சாப்ட். எழுத்தில் தெறிக்கும் கோபம் நேரில் கொஞ்சமும் தெரியாது.

    வவ்வால்: நீங்க யாருன்னு சொன்னா நேரில் எல்லாரும் மீட் பண்ணலாம்

    நீங்க த. ம 2012 எல்லாம் போட வேணாம்; உங்க வழக்கப்படி இருங்க !

    ReplyDelete
  29. //என்னுடன் வந்த ரகு பாத்து பாத்து கொஞ்சமா சாப்பிட்டு கிட்டு இருந்தார். நான் நன்கு அடித்து ஆடினேன்//

    கொஞ்சமா சாப்பிட்டாதான் எல்லா வெரைட்டியும் சாப்பிட முடியும். அது மட்டுமல்லாமல், சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் போய் தூங்கிடக்கூடது இல்லியா?

    //! ரகு அதை மட்டும் மூணு தடவை நல்லா சாப்பிட்டார். (இதுக்கு தான் சாப்பாடை கம்மியா சாப்பிடுறதா?) நானோ ஏற்கனவே மயக்க நிலையில் இருந்ததால் கொஞ்சம் பாயசத்துடன் நிறுத்திட்டேன்//

    அது குட்டி bowl :(

    உண்மையாவே அந்த பாயசம் செம்மம்ம்ம! மூணு என்ன? இன்னும் கூட ரெண்டு ரவுண்டு அடிச்சிருக்கலாம்....ஆபிஸ் ஆபிஸ் ஆபிஸ் :((

    ReplyDelete
  30. //பதிவுக்காக ஹோட்டலை மொபைலில் போட்டோ எடுக்க, பெண் வெளியே ஓடி விட்டார்... வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறாங்க போல.. !
    (அருகில் உள்ள படத்தில் கண்ணாடிக்கு வெளியே நிழலாய் ஒரு பெண் உருவம் தெரிகிறதா?) //

    நீங்க இருக்கீங்களே.... ;)))

    ReplyDelete
  31. நன்றி மோகன் குமார். பதிவு சிறியதாக இருப்பது போல தோன்றுகிறது. நிச்சயம் சென்னை வரும் போது தொடர்பு கொள்கிறேன். நல்ல உணவகம் சென்று உணவருந்துவோம்.

    ReplyDelete
  32. நன்றி மோகன் குமார். பதிவு சிறியதாக இருப்பது போல தோன்றுகிறது. நிச்சயம் சென்னை வரும் போது தொடர்பு கொள்கிறேன். நல்ல உணவகம் சென்று உணவருந்துவோம்.

    ReplyDelete
  33. அருமையான பதிவு.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. ரகு said:

    நீங்க இருக்கீங்களே.... ;)))
    ********

    ரகு : ஒரு ரிப்போர்டர் மாதிரி எழுதலாம்னா விட மாட்டீங்களே :))

    ReplyDelete
  36. அமரபாரதி: நன்றி சென்னை வரும்போது சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்

    ReplyDelete
  37. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  38. ஃபிளமிங்கோ கொஞ்சம் க்வாலிட்டி குறைஞ்சிட்டா மாதிரி எனக்கொரு ஃபீலிங்.

    பெசண்ட் நகரில் இருந்த கிளையை மூடிவிட்டார்கள்.

    வேளச்சேரியில் நளாஸ், குமரகம், எல்லாம் ட்ரை பண்ணுங்க. நல்லாருக்கும்,

    ReplyDelete
  39. மோகன்,

    சச்சரவு என்றால் மனஸ்தாபம், வீண் விவாதம்,சத்தம்னு இடத்திற்கு ஏற்ப பொருள் வருது.

    இங்கே யாரு சண்டை சச்சரவு போடுறாங்க, உரையாடுறாங்க, கொஞ்சம் பலமா இருக்குனு வேண்டுமானால் சொல்லிக்கலாம்.

    இதை எல்லாம் சண்டை ,சச்சரவுனு சொன்னால் உண்மையான சண்டை சச்சரவுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் :-))

    என்னாத்த கோபம் தெறிச்சு எரிச்சுதோ, என்னோடது எல்லாம் முரண்பாடுகளின் மீதான ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். மற்றபடி தனிப்பட்ட நபர்களின் மீது அல்ல. மூட நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டு .நல்ல நேரம் பார்க்கிறப்போ இது மட்டும் மூட நம்பிக்கை இல்லையா என சொல்லாமல் இருப்பதில்லை, அது போலவே இதுவும்.

    ஹி...ஹி நாம எப்போதும் வழக்கப்படித்தான் இருப்போம், பார்க்கிறவங்க பார்வை தான் காலத்திற்கு ஏற்ப மாறுது :-))

    --------
    //இந்த விலை (170) பரவாயில்லை என நீங்க சொன்னது ஆச்சரியம் தான் //

    வேற வழி நான்கைந்து தடவை இது போல உணவகத்தின் விலையைக்கேட்டப்பிறகு சென்னையில் இதுவே பரவாயில்லைனு சொல்லிக்க வேண்டிய நிலைமை ஆகிடுச்சு.

    நீலாங்கரையில் ரத்னா கபேயின் ஏ.சி ரெஸ்டாரண்ட் இருக்கு சகாயமான விலையில் இருக்கும்னு பார்த்தால் ஒரு ஆள் டிபன் சாப்பிட்டாலே மினிமம் 150 வருது பில் அவ்வ்வ்!

    அன்லிமிட்டட் மீல்ஸ் 170 பராவாயில்லை தானே.ஆனால் மீல்ஸ் தான் பட்ஜெட்க்கு சரியா வரும் டிபன் சாப்பிட போனால் கையை சுடுது(டிபன் விலைகள்,)

    நான் கை ஏந்தி பவன் போறேன்னு இப்போ புரிஞ்சு இருக்குமே :-))

    ReplyDelete
  40. பதிவும் பின்னூட்டங்களும் சூப்பர்.

    ReplyDelete
  41. நல்ல அறிமுகம்
    அவசியம் அடுத்த வாரம் சென்னை
    வரும் போது ஒரு பிடி பிடித்துவிடவேண்டியதுதான்

    ReplyDelete
  42. சமைப்பதைவிட சாப்பிடுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. அது வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்

    ReplyDelete
  43. அடுத்த முறை சாப்பிட்டுப் பாத்துடவேண்டியதுதான்

    ReplyDelete
  44. This is my first comment.

    I am living in Madipakkam, but I didn't know about this hotel. Thanks for your post. All posts are good.

    Ragav

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...