Saturday, October 26, 2019

பிகில் - சினிமா விமர்சனம்

ட்லீ படங்களின் ரசிகனல்ல நான். ஆயினும் பிகில் என்னை கவர்ந்தது. மிக எளிய காரணம். பெண்களுக்கும் கனவு என ஒன்று இருக்கலாம்; அதை அவர்கள் தொடரவேண்டும் - திருமணம், ஆசிட் அட்டாக் போன்ற எதுவும் அந்த கனவுகளுக்கு தடையாய் இருக்க கூடாது என்று தெளிவாய் சொன்ன கருத்து தான் நிச்சயம் படத்தை ஆவரேஜ் என்று சொல்லாமல் "குட்" என்று சொல்ல வைக்கிறது.ரொம்ப சுமாரான முதல் பாதி; வெறித்தனம் பாட்டு அமர்க்களம் என்றால்- அதை படமாக்கிய விதம் - குறிப்பாய் நடனம் இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம் (விஜய் அட்டகாசமாய் ஆடக்கூடியவர்; அவருக்கு  எக்ஸர்சைஸ் செய்யும் வகை ஸ்டெப் எதற்கு !) சிங்கப்பெண்ணே  மற்றும் மாதரே பாடல்கள் படமாக்கம் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

காமெடி என்று எதோ முயற்சிக்கிறார் இயக்குனர். அதுவும் எடுபடலை. இடை இடையே சண்டைகள் வேறு (நிறைய அனாவசியம்)

முதல் பாதி மோசமா என்றால் - வழக்கமான ஸ்டார் படம் (ரஜினியின் பழைய மசாலா படங்கள்) போல தான் இருந்தது.

இடைவேளைக்கு சற்று முன் லேசாக முக்கிய விஷயத்தை தொடுகிறார் இயக்குனர்

செகண்ட் ஹாப் நிச்சயம் என்னை முழுதும் திருப்தி படுத்தியது. குறிப்பாக திருமணம் ஆனபின் வந்து ஆடும் காயத்ரி - ஆசிட் அட்டாக்கில் மீண்டு ஆட வரும்  பெண் இருவர் பகுதியும் சரியான விதத்தில் எமோஷனல் ரீச் ஆகிறது.

பிற்பாதியில் சில ரசிக்க வைக்கும் சீன்கள் வந்த வண்ணம் உள்ளன - டில்லி போலீஸ் ஸ்டேஷனில்  விஜய் செய்யும் அடாவடி  - மேட்ச்கள் (தோற்கும் படி சென்று ஜெயிக்கும் வழக்கமான பாணி எனினும்) ..

படத்திற்கு மிக்ஸட் ரிவியூ வருவதை உணர முடிகிறது. இணையத்தில் அதிகமாய் விஜய் ஹேட்டர்ஸ் முடிந்த பங்கை செய் கிறார்கள். ஆனால் படம் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பிடிக்கும் படம் ஹிட் ஆகவே செய்யும் ..

பாலசோவில் முதன் முறை படம் பார்த்தோம். அட்டகாசமான திரை அரங்கம். தியேட்டர் காம்ப்ளெக்ஸ்  வியக்க வைக்கிறது; ஸ்னேக்ஸ் மிக ரீஸன்பில் விலை; (நாங்கள் வழக்கமாய் செல்லும் PVR -ல் Snacks கொள்ளை விலை.

எலைட் ஆடியன்ஸ். விஜய் வரும்போதும் சரி, ஏ ஆர் ரகுமான் திரையில் வரும்போதும் சரி- எண்ணி நான்கு பேர் கை  தட்டினார்கள்.

அதை விட இன்னொரு விஷயம்: படம் போட்ட பின் பல நிமிடம் சத்தம் தான் வந்தது; திரையில் ஒன்றுமே தெரியலை. மக்கள் சத்தம் போடாமல் அமைதியோ அமைதி காத்தனர்.

டயலாக் எல்லாம் துவங்கிய பின் சிலர் கத்த, நிறுத்தி விட்டு, முதலில் இருந்து படம் போட்டனர் !


பிகில்

அதிக எதிர்பார்ப்பின்றி செல்லுங்கள். நிச்சயம் ஒரு முறை காண தகுந்த படம் தான் !

4 comments:

 1. Sir
  If a movie first half is not good
  How to sustain till the second half.
  Pettai first half was good second half so so.
  Since first half was good . It sustained . If first half not even okayish does the movie prospect gets seriously dented.

  ReplyDelete
  Replies
  1. Exactly. I agree with you 100%

   Delete
  2. Sir your point is very valid; however First half just manages to pass; not too bad. But the director & team gives a better second half and we came home satisfied

   Delete
 2. அருமையான கண்ணோட்டம்

  இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...