Thursday, May 31, 2012

ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை

திவர்கள் கேபிள் சங்கர் மற்றும் Scribbling வித்யா வழியில் அவ்வப்போது ஹோட்டல்கள் குறித்து எழுத, நெடு நாளாக நினைத்திருந்தேன். பிற பதிவுகள் எழுதினாலும் ஹோட்டல்கள் குறித்த பதிவு எழுதுவதை மனம் தள்ளி போட்டே வந்தது. எழுத ஆரம்பித்து விட்டால், அவ்வப்போதாவது ஹோட்டல்களை அறிமுக படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் நான்கைந்து ஹோட்டல்கள் பற்றி எழுதி முடித்து, அவை தயாரான பிறகே முதல் பதிவை வெளியிட எண்ணினேன். இப்போ ஆட்டத்துக்கு தயார்.

இந்த பகுதிக்கு " ஹோட்டல் அறிமுகம்" என்று பெயர் வைத்துள்ளேன். வேறு நல்ல பெயர் தோன்றினால் பரிந்துரையுங்கள் நண்பர்களே !

முதல் பதிவாக, நமது ஆல் டைம் பேவரைட் ஹோட்டல்களில் ஒன்றான தஞ்சை சாந்தி பரோட்டாவில் துவங்குவோம்

**********

சாந்தி பரோட்டா !!

சிறுவயது முதல் 25 வருடங்களாக இங்கு பரோட்டா சாப்பிட்டு வருகிறேன்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ளது இந்த சிறிய கடை.  முன் பக்கம் மட்டுமே ரொம்ப வருஷங்கள் கடை இருந்தது. இப்போது அதன் பின் புறமும் ஒரு இடம் பிடித்து அங்கும் இதே கடை எக்ஸ்டன்ஷன் வைத்துள்ளனர்.

காலை கடை இருக்காது. பகல் பதினோரு மணிக்கு மேல் திறப்பார்கள். இரவு 11,12 வரை கடை இருக்கும். எனக்கு தெரிந்து இங்கு தயார் செய்பவை இரண்டே வகை உணவுகள் மட்டும் தான்.

ஒன்று பரோட்டா, மற்றது குஸ்கா.

முழுக்க முழுக்க சைவ ஹோட்டல் இது. குஸ்காவும் சரி,பரோட்டவுக்கான குருமாவும் சரி சைவம் தான் !

80 முதல் 90 சதவீதம் வரை பரோட்டா வியாபாரம் தான். குஸ்கா மீதம் 10 அல்லது 20 % வியாபாரம் இருக்கும்.

பரோட்டா என்பதை விட டால்டா பரோட்டா என்பது தான் சரியாக இருக்கும். பரோட்டாவில் டால்டா மணம் தூக்கும். கொழுப்பு தான் ! வெயிட் போடும் தான் ! ஆனா அந்த டேஸ்ட் இருக்கே .. சான்சே இல்லை.

மூணு அல்லது நாலு பரோட்டா வாங்கி சிறுக சிறுக பிச்சி போட்டுடணும். அது மேலே சூடான குருமாவை ஊற்ற சொல்லணும். பின் சிறிது சிறிதாக மிக மெதுவாய் ருசித்து சாப்பிடணும். நடு நடுவில் மீண்டும் மீண்டும் குருமா கேட்டு வாங்கி சாப்பிட வெட்கமே பட கூடாது.

பரோட்டா இங்கு செம பாஸ்ட் மூவிங் என்பதால் எப்பவும் சூடாக இருக்கும். மேலும் குருமாவும் சூடு என்பதால் சாப்பிடும் போதே வியர்த்து கொட்டும். அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில் பரோட்டா !

பிற ஊர்கள் மாதிரி குருமாவை பெரிய வாளியில் வைத்து கொண்டு, ஊற்ற மாட்டார்கள். எப்போதும் குருமா அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கும். கொதிக்கும் அடுப்பில் டம்ளர் மூலம் எடுத்து தான் அனைவருக்கும் குருமா ஊற்றுவார்கள். இது இந்த கடையின் ஸ்டாண்டர்ட் !

குஸ்காவும் இங்கு நன்கு இருக்கும் தான். ஆனால் சந்தானம் அருகில் நடிக்கும் புது ஹீரோ மாதிரி பரோட்டா முன்பு குஸ்கா தோற்று விடும். மதிய நேரத்தில் வெறும் பரோட்டா சாப்பிட்டால், முழு சாப்பாடு சாப்பிட்ட உணர்வு இருக்காது என்பதால் சாதம் டைப் உணவான குஸ்காவை நாடலாம். அதை தவிர மற்ற நேரங்களில் பரோட்டா தான்...பரோட்டா தான் ...பரோட்டா தான் ஐயா !

தஞ்சையில் அண்ணன் வீட்டுக்கு போய் சரியாக சாப்பிட வில்லையெனில் அண்ணன் சொல்லுவார்: " சாந்தி பரோட்டாவுக்கு நைசா போயிட்டு வந்திருப்பான்னு நினைக்கிறேன் " (பாம்பின் கால் பாம்பறியும் ! எங்க பரம்பரையே பரோட்டா பிரியர்கள் தான். புது தலைமுறையும் அப்படி தான் இருக்கு )

வாங்க சாந்தி பரோட்டாவின் குறுகலான கடையின் உள்ளே இந்த வீடியோ மூலம் போய் பார்க்கலாம்:****
வீடியோவின் கடைசி பகுதியில் பேருந்து நிலையமும், அன்பு பால் கடையும் தெரியும் !
****
இப்போதெல்லாம் சாப்பிடும் முன்னே எத்தனை பரோட்டா வேண்டுமென டோக்கன் வாங்க சொல்கிறார்கள் அது தான் உறுத்துது. எத்தனை பரோட்டா வேண்டுமென எப்படி முன்பே முடிவெடுப்பது? நான்கு என வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்த பின் மீண்டும் ஒன்று வேண்டுமெனில் கியூவுக்கு போய் வாங்க முடியுமா? (இது போன்ற நேரங்களில் மட்டும் கடை சிப்பந்திகள் டோக்கன் வாங்கு தந்து உதவுவாவர்கள் என நினைக்கிறேன் )

தஞ்சை பற்றி எழுதிய போன பதிவில், நண்பர்/ பதிவர் மணிஜி மலரும் நினைவுகளை இப்படி எழுதியிருந்தார்: " அப்பாவின் பையில் இருந்து காசு காண வில்லையென்றால் அது சாந்தி பரோட்டாவாகியிருக்கும்" !

இது தஞ்சை சிறுவர்கள் பலருக்கும் பொருந்தும்.

தஞ்சை பக்கம் போனால் அவசியம் விசிட் அடியுங்கள் சாந்தி பரோட்டா கடைக்கு !            

பரிந்துரை: மிஸ் பண்ண கூடாத ஹோட்டல் இது ! Value for Money !!      

சமீபத்திய பதிவுகள்:
(ஹோட்டல் அறிமுகம் தொடரும் )

58 comments:

 1. மோகன்ஸ் கஃபே நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
 2. //மூணு அல்லது நாலு பரோட்டா வாங்கி சிறுக சிறுக பிச்சி போட்டுடணும். அது மேலே சூடான குருமாவை ஊற்ற சொல்லணும். பின் சிறிது சிறிதாக மிக மெதுவாய் ருசித்து சாப்பிடணும். நடு நடுவில் மீண்டும் மீண்டும் குருமா கேட்டு வாங்கி சாப்பிட வெட்கமே பட கூடாது. //

  இந்த வரியே போதும் புரோட்டாவை நீங்க எந்தளவுக்க ருசிச்சு சாப்பிட்டு இருப்பீங்கன்னு தெரியுது...

  இதைப்படித்ததும் பசிக்குது அண்ணே...

  ஹோட்டல் அறிமுகம் அருமை...

  ஹோட்டல் அறிமுகம் என்பதற்கு பதில் வேறு ஒரு நச்சுன்னு பெயர் வையுங்க...

  தஞ்சாவூர் போனா நிச்சயம் கடைக்கு போய்த்தான் ஆகனும் இப்பவே எச்சில் ஊறுது....

  ReplyDelete
 3. அடேங்கப்பா.. என்ன்னங்க இது ! தஞ்சை சாந்தி பரோட்டா அவ்ளோ பாப்புலரா? அல்லது மக்கள் ஹோட்டல்கள்
  குறித்த பதிவு என்றாலே விரும்பி வாசிப்பார்களா? வீடுதிரும்பலில் ஏகப்பட்ட கூட்டம் ( ஆன்லைனில் 27 பேர் !)

  ReplyDelete
 4. கேரளாவில் பரோட்டாவுக்கு தடை விதிக்க பட்டிருக்குன்னு படிச்சேன், அதில் ஏதோ விஷத்தன்மை இருக்குன்னு உண்மையா...?

  இல்லை தமிழன்தான் சிக்குனானா...? தமிழ் நாட்டில் அதைபற்றி விழுப்புணர்வு இல்லையா..?

  ReplyDelete
 5. அந்த குஸ்கா எப்படிச் செய்வாங்கன்னு விசாரிச்சு எழுதுங்க ப்ளீஸ்.

  சேலத்தில் ஒரு முறை (40 வருசம் முன்பு) குஸ்கா சாப்பிட்டேன்.

  இன்னொருமுறை சாப்பிட சாந்தி பரோட்டா கடைக்கு வரணும் போல:-)

  ReplyDelete
 6. வாவ் க்ரேட் பாஸ் Reminding me about Many things..,

  ஸ்கூல் படிக்கும் போது எப்போவாது , காலேஜ் படிக்கும் போது அடிக்கடின்னு சாப்பிட்டதெல்லாம் நியாபகம் வருது..,

  நீங்க தஞ்சாவூரா ?? திருவையாறு ஆண்டவர் அசோகா சாப்பிட்டு இருக்கிங்களா அதுவும் ஊர் காரவுங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச டேஸ்ட்...

  ReplyDelete
 7. //அடேங்கப்பா.. என்ன்னங்க இது ! தஞ்சை சாந்தி பரோட்டா அவ்ளோ பாப்புலரா? அல்லது மக்கள் ஹோட்டல்கள்
  குறித்த பதிவு என்றாலே விரும்பி வாசிப்பார்களா? வீடுதிரும்பலில் ஏகப்பட்ட கூட்டம் ( ஆன்லைனில் 27 பேர் !)//

  என்னைய மாதிரி தஞ்சாவூர் காரவுங்க எல்லாம் பேர பாத்ததுமே உள்ள வந்து இருப்பாங்க...

  ReplyDelete
 8. தஞ்சாவூர் போகும் போது சாப்பிடலாம். எங்க வீட்டில் புரோட்டா மட்டும் கடையில் வாங்கி வந்து வீட்டில் நாங்க வைக்கும் வெள்ளை குருமாவுடன் தான் சாப்பிடுவோம்.

  ReplyDelete
 9. மனோ,

  //கேரளாவில் பரோட்டாவுக்கு தடை விதிக்க பட்டிருக்குன்னு படிச்சேன், அதில் ஏதோ விஷத்தன்மை இருக்குன்னு உண்மையா...?//


  தடையா எனத்தெரியாது, ஆனால் பரோட்டா அடிக்கடி சாப்பிடக்கூடாது...ஹி..ஹி ஆனால் நான் சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கேன்... எந்த விஷத்தையும் முறிக்கிற டாஸ்மாக் ம்ருந்து சாபிட்டாச்சு இந்த் விஷம் என்ன செய்யும் :-))

  விஷத்தன்மை என்னனு விரிவா பதிவு போடுறேன். இப்போ ஒரு ஸ்கூப்,

  மைதா மாவு வெள்ளையாக இருக்கணும் என பிளீச் செய்வாங்க, பிளீச்சிங்க் ஏஜெண்ட் ஆக குளோரின், மெதில் புரோமைடு போன்றவை பயன்ப்டுது அதான் விஷம்.இன்னும் சிலது இருக்கு அப்புறம் விரிவா சொல்கிறேன்.

  ReplyDelete
 10. புதுப்பகுதிக்கு வாழ்த்துகள்!!

  பரோட்டா சுவையானதுதான். எப்பவாவது ஒருதரம் (தஞ்சைக்குப் போகும்போது மட்டும்) சாப்பிட்டா ஓக்கே. :-))))

  ஏன்னா, மைதாவில் சத்துகளும் ஏதுமில்லை; உடல் எடையையும் கூட்டிவிடும். ஸாஃப்ட்னஸ்க்காக சோடா உப்பும் நிறைய சேர்ப்பாங்க.

  அமீரகத்திலும் சில மலையாளிக்கடைகளில் கோதுமை பரோட்டாவுக்கு மாறிட்டாங்க.

  ReplyDelete
 11. parotta paththi naan eluthanumunnu ninaisirunthen...

  munnaadi nenga eluthi naakula jalam ura vassitinga........

  nalla pathivu....thodarungal...

  peru vera maathidunga....

  ReplyDelete
 12. சின்ன திருத்தம்,

  மைதாவில் பிளீச்சிங் ஏஜெண்டாக குளோரின், உடன் பயன்படுவது பென்சைல் பெராக்சைடு, மெதில் புரோமைடு பூச்சி புடிக்காம இருக்க பயன்ப்டும் இரசாயணம். ஆனால் இந்த இரசாயணம் எல்லாம் மைதாவில் இருக்கு.

  எல்லாம் நினைவில் இருந்து எழுதுவதால் எது எதுக்கு பயன்படுதுனு சில சமயம் குழம்பிடுது ..ஹி.ஹி..!

  ReplyDelete
 13. ஹோட்டல் என்றால் தங்கும் இடம் என்றே அர்த்தம்.  நாம் அதை சாப்பிடும் இடம் என்று உபயோகிக்கிறோம்.  உணவகம் அறிமுகம் என்ற பெயர் எப்படி? விலையையும் எழுதலாமே.  மற்றபடி பரோட்டா மிக மிக கெடுதலான ஒரு உணவு.

  ReplyDelete
 14. புதிய பகுதி நிஜமாகவே மிகவும் சுவையாக இருக்கிறது! அதனால்தான் கூட்டம் அதிகம் போலிருக்கிறது! இரண்டு நாட்களில் தஞ்சைக்குக்கிளம்புகிறேன். போனதும் சாந்தி கடை பரோட்டா வாங்கி விட வேன்டியது தான்!
  ஏனென்றால் எங்களின் உணவகத்தின் பரோட்டா மிகவும் பெயர் பெற்றது. அந்த அளவு மிருதுத் தன்மையை ஊரில் எப்போதும் தேடுவது வழக்கம். அவசியம் வாங்கிப் பார்க்கிறேன்!!!

  புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. நண்பர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு போகும் போது இரவு போய் சேர நேரமாகிவிட்டதால் லாட்ஜுக்கு அருகிலுள்ள இந்த ஹோட்டலில் சாப்பிட்ட ஞாபகம் வீடியோவில் பார்க்கும் போது ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 16. குஸ்கா என்றால் என்ன? சைவ ஹோட்டலில் கிடைக்குமா?

  ReplyDelete
 17. Anonymous7:22:00 PM

  மோகன்...

  நான் சுத்த அசைவங்க...அடுத்த அறிமுகத்தில பார்க்கலாம்..

  எனக்கு ஆள் டைம் FAVORITE அஞ்சப்பர் தாங்க...

  அங்க சாப்பிடவே எழு மணி நேரம் வண்டி ஒட்டி சென்ற காலமெல்லாம் உண்டு...

  ReplyDelete
 18. நாவில் உமிழ்நீர் உருவாக்கும் புதிய பகுதி சூப்பர். :))

  தொடருங்கள் மோகன். சாப்பிட ரெகுலரா வந்துடுவோம்ல... !

  உங்கள் முந்தைய பதிவுகள் இனிமேல் தான் படிக்க வேண்டும் ஒவ்வொன்றாய்.....

  ReplyDelete
 19. தஞ்சாவூர் சாந்தி கடை புரோட்டா நானும் 1985 முதல் இன்றுவரை தஞ்சை போகும்போது சாப்பிட்டு வருகிறேன். பதிவு சுவையாக இருந்தது. சூடான புரோட்டாவுடன் சூடான குருமா இவற்றுடன் சூடு இல்லாமல் வைக்கும் கொத்தமல்லி புதினா துவையலை விட்டுவிட்டீர்கள். அந்த துவையல்தான் இன்னும் இரண்டு புரோட்டாவை உள்ளே தள்ளு என்று கட்டளையிடும்.
  -தி.நெடுஞ்செழியன்

  ReplyDelete
 20. எனக்கு பிடிக்காது இந்த தேங்காய் குருமா:)

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. மைதா, டால்டா இரண்டுமே நம் உடல் நலனுக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு. [பின்னூட்டத்தில் ஏற்கனவே காரணத்தை அருமையாக சொல்லிவிட்டார்கள்] Therefore,ஆசைக்கு எப்பவாவது சாப்பிட்டுவிட்டு இதை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.

  ReplyDelete
 23. நீங்க ரசிச்ச ருசியைப் பகிர்ந்துக்கிட்டது அருமை.

  ReplyDelete
 24. மோகன்,

  உங்க பரோட்டா சூடா சுவையாத்தான் இருக்கு ,நாஞ்சில் மனோ பத்த வச்சத அப்படியே தொடர்ந்து நானும் பத்த வச்சு இப்போ பரோட்டா ரகசியம்னு ஒரு பதிவும் போட்டுட்டேன், மைதாவின் பக்க விளைவுகளை அதில் சொல்லியுள்ளேன் , முடிந்தால் பார்க்கவும்.நன்றி!

  பரோட்டா ரகசியம்!

  ReplyDelete
 25. ஹோட்டல் அறிமுகம் அவசியமான பதிவு. அருமை. உங்கள் எழுத்து நடை அருமை.
  விருதுநகரில் பர்மா ஹோட்டல் புரோட்டாவிற்கு ஃபேமஸ்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. //மூணு அல்லது நாலு பரோட்டா வாங்கி சிறுக சிறுக பிச்சி போட்டுடணும். அது மேலே சூடான குருமாவை ஊற்ற சொல்லணும். பின் சிறிது சிறிதாக மிக மெதுவாய் ருசித்து சாப்பிடணும். நடு நடுவில் மீண்டும் மீண்டும் குருமா கேட்டு வாங்கி சாப்பிட வெட்கமே பட கூடாது.//

  அனுபவித்து சாப்பிட்டதை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்:)!

  புதிய பகுதிக்கு வாழ்த்துகள்!

  மைதா ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் எப்போதாவது பரோட்டோ ஓகே:)!

  ReplyDelete
 27. அட என்ன சார் ஹோட்டலை அறிமுகப்படுதிரீங்கன்னுட்டு எல்லோருக்கும் பிடிச்ச புரோட்டவை அறிமுகப்படுத்தியது மட்டும்ல்லாமல் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று நாக்கில் எச்சில் ஊறும்படி வர்ணிக்கிறீர்கள் இது உங்களுக்கே நல்லா இருக்கா சார் . ஸ சரி அப்படியே நாலு புரோட்டா பார்சல் வாங்கி அனுப்பிடுங்க மறக்காம

  ReplyDelete
 28. தமிழ் மணம் சூடான இடுகையில் :No: 2-வாக இந்த இடுகை

  வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்

  சூடான இடுகைகள்

  இன்று


  பவர் ஸ்டாருக்கு இவ்வளவு பவரா?...

  ரஹீம் கஸாலி


  ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை

  மோகன் குமார்

  ReplyDelete
 29. நன்றி மன்னை மைனர் ( எ) RVS

  ReplyDelete
 30. மகிழ்ச்சி சங்கவி. உணவகம் அறிமுகம் என பெயர் மாற்றம் செய்ய உத்தேசம். இன்னும் நல்ல தலைப்பு வந்தாலும் மாத்திக்கலாம்

  ReplyDelete
 31. மனோ உங்கள் பின்னூட்டம் காரணமாய் வவ்வால் தனி பதிவே போட்டுட்டார். பின்னூட்டத்திலும் விரிவா சொல்லிருக்காங்க.

  ReplyDelete
 32. துளசி மேடம்: முயற்சி பண்றேன் தஞ்சை நீங்க சரியா சுத்தி பாக்கலை என எழுதிய நினைவு. ஒரு முறை தஞ்சை பக்கம் வாங்க

  ReplyDelete
 33. ...αηαη∂.... said...


  நீங்க தஞ்சாவூரா ?? திருவையாறு ஆண்டவர் அசோகா சாப்பிட்டு இருக்கிங்களா


  நான் தஞ்சை அருகில் உள்ள நீடாமங்கலம். அண்ணன் மற்றும் பெற்றோர் தஞ்சையில் தான் உள்ளனர்.


  அந்த அல்வா கடை கேள்விபட்டுள்ளேன். சாப்பிட்டதில்லை. அடுத்த முறை முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 34. அமுதா மேடம்: பரோட்டா கடையில் வாங்கிட்டு வீட்டில் குருமா செய்வது நல்ல டெக்னிக்., நாங்களும் செய்து பார்க்கலாம்

  ReplyDelete
 35. தனி பதிவுக்கு நன்றி வவ்வால்

  ReplyDelete
 36. அமர பாரதி: மகிழ்ச்சி உணவகம் அறிமுகம் பெயர் நல்லாருக்கு. அதையே வைக்கிறேன் இதை விட வேறு நல்ல பெயர் வந்தால் பார்க்கலாம்

  ReplyDelete
 37. நன்றி வல்லதான் தஞ்சை பற்றி நீங்களும் நிறைய எழுதுகிறீர்கள் தொடருங்கள்

  ReplyDelete
 38. ஹுஸைனம்மா said...

  பரோட்டா சுவையானதுதான். எப்பவாவது ஒருதரம் (தஞ்சைக்குப் போகும்போது மட்டும்) சாப்பிட்டா ஓக்கே. :-))))

  ********

  அடேங்கப்பா: எவ்ளோ உரிமையா சொல்றீங்க? அன்புக்கு நன்றி. நான் மாசம் ஒரு முறை தான் சாப்பிடுறேன் ; ஓகே?

  ReplyDelete
 39. மனோ மேடம்: இந்தியாவில் தான் இப்போது உள்ளீர்களா? தஞ்சை சென்றால் அவசியம் இங்கு முயற்சியுங்கள்

  ReplyDelete
 40. மன்சூர் ராஜா: அப்படியா? மகிழ்ச்சி

  ReplyDelete
 41. நம்பள்கி said...

  குஸ்கா என்றால் என்ன? சைவ ஹோட்டலில் கிடைக்குமா?


  ***


  இது பிரியாணி போன்ற உணவு தான். குஸ்கா என்பது முழுக்க வெஜ்ஜிடேரியன் தான். இந்த ஹோட்டல் சைவ ஹோட்டல் தான். சில சைவ ஹோட்டலில் கிடைக்கும். பல இடத்தில் சிக்கன் பிரியாணியில் சிக்கன் இல்லாமல் அதை குஸ்கா என்கின்றனர்

  ReplyDelete
 42. ரெவரி: ஓகே சார். நிச்சயம் நான் வெஜ் ஹோட்டல்களும் இடம் பெறும்

  ReplyDelete
 43. நன்றி வெங்கட்; விடுமுறை முடிந்து தில்லி போயிட்டீங்களா?

  ReplyDelete
 44. பார்வைகள் said:

  //கொத்தமல்லி புதினா துவையலை விட்டுவிட்டீர்கள். //

  என்னங்க சொல்றீங்க? இப்போ கூட போனேன்.. அப்படி ஒரு சட்னி அங்கு வைப்பதே இல்லை. நீங்க வேற ஹோட்டலுடன் confuse செய்து கொண்டீர்களோ?

  ReplyDelete
 45. குடுகுடுப்பை said...

  எனக்கு பிடிக்காது இந்த தேங்காய் குருமா:)

  பிடிக்காமல் இருந்தா நல்லது குடுகுடுப்பை :))

  ReplyDelete
 46. தாஸ்: உண்மை தான். அளவோடு (பரோட்டா) சாப்பிட்டு வளமோடு வாழ்வோம்

  ReplyDelete
 47. நன்றி அமைதி சாரல்

  ReplyDelete
 48. நன்றி ரத்னவேல் சார்: விருதுநகர் பர்மா ஹோட்டல் சாப்பிட பாக்குறேன்

  ReplyDelete
 49. ராமலட்சுமி: அக்கறைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 50. தனபால் சார்: மகிழ்ச்சி

  ReplyDelete
 51. அவர்கள் உண்மைகள்: தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தந்தது

  ReplyDelete
 52. சாந்தி பரோட்டா கடை பற்றி தஞ்சை நண்பர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை. எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை பரோட்டா.(என் வயிற்றிற்கு ஒத்துக்கொள்ளாது) எதிரில் உள்ள அன்பு கடையில் பன்ங்கல்கண்டு பால் பல முறை இரவில் பருகியுள்ளேன். அற்புதம். தெற்க்கு வீதியில் உள்ள கை ஏந்தி பவனில் சாப்பிட்டு இருக்கீங்களா? அருமையாக இருக்கும். அதே போல் மெடிகல் காலேஜ் 2ம் கேட் எதிரே கண்ணன் மெஸ்ஸில் தோசை அபாரம்.

  ReplyDelete
 53. உண்மையிலேயே பசிக்குது...அடுத்த முறை தஞ்சாவூர் வந்தால் நிச்சயம் அங்கு வரலாம். அதற்குள் "வெண்பா' விடம் ஒரு கேட்லாக் வாங்கிடனும்.

  ReplyDelete
 54. நான் கடைசி இருமுறை சாந்தி பரோட்டாக் கடைக்கு சென்று திருப்தி இல்லாமல் திரும்பினேன்.ஒரு முறை குருமா அடிபிடுத்த வாடையால் குமட்டல் வந்தது.கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் முறை இட்டேன்.பலனில்லை.மறுமுறை சில்லறை இல்லை என்று நூறு ரூபாயை தூக்கிப் போட்டார்,மேலும் அவர்கள் சாப்பிட பீங்கான் பிளேட்மட்டுமே பயன் படுத்துகிறார்கள்,அதல் மேல் பேப்பர்எதுவும் படுவதில்லை அதை லேசாக அலம்பி விட்டு அடுத்தவர்களுக்கு அதிலேயே உணவு பரிமாறுகிறார்கள்.அதனால் இரண்டு வருடங்களாக நான் இந்த கடைப் பக்கம் செல்வதே இல்லை.மன்னார்குடி அன்வர் கடைதான் செல்கிறேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...