சமீபத்தில் திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திண்டுக்கல் மற்றும் அருகே உள்ள அம்பாத்துரை, சின்னாளபட்டி.. காந்தி கிராமம் பற்றி ஒரு பார்வை. !
ரயிலில் சென்றால் திண்டுக்கலுக்கு பின் ஐந்தே நிமிடத்தில் அம்பாத்துரை வருகிறது. சென்னையிலிருந்து செல்லும் ரயில்களில் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே அம்பாத்துரையில் நிற்கிறது. இல்லாவிடில் திண்டுக்கல்லில் இறங்கி பின் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பாத்துரைக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும்.
அம்பாதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமங்கள் சின்னாளபட்டி.. காந்தி கிராமம். அவற்றுக்கு அருகில் உள்ள டவுன் என்றால் அது அம்பாத்துரை தான் !
ரயிலில் நானும் நண்பன் மணியும் சென்றோம். அஞ்சால் அலுப்பு மருந்துக்கு Third ஏ. சி கோச்சில் விளம்பரம் செய்திருந்தனர். "அஞ்சால் அலுப்பு மருந்து ஜலதோஷம்.... உடம்பு வலி..கை கால் உளைச்சல் இவற்றுக்கு ஒரே தீர்வு அஞ்சால் அலுப்பு மருந்து " என்று டிவியில் விளம்பரம் பார்த்து நொந்திருப்பீர்களே அதே மருந்து தான் ! எப்படி தான் Third ஏ. சி யில் பயணம் செய்வோர் இந்த விளம்பரம் பார்த்து கடையில் போய் "அஞ்சால் அலுப்பு மருந்து தாங்க" என கேட்டு வாங்குவாங்கன்னு நம்ம்ம்பி விளம்பரம் செய்தாங்களோ தெரியலை !
ரயிலில் பயணிக்கும் போது நடந்த ஒரு bizarre நிகழ்ச்சி. டாய்லட் சென்ற ஒருவர் கதவை ஒழுங்கா சாத்தலை. அனேகமா லாக் போட்டு பூட்டாம , வெறுமனே சின்னதா திறந்து மூடும் லாக் மட்டும் போட்டுட்டு உள்ளே போனார் போல. காற்றிலோ வேறு யாரோ அதை வெளியிருந்து திறந்து விட, கதவு திறந்து கிடக்கிறது. அடுத்த ஸ்டேஷனில் இறங்க வெளியே வந்த மக்கள் இந்த கொடுமையை பார்த்து விட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி போனார்கள். ரயிலில் அவசரதுக்கு போனாலும் கதவை ஒழுங்கா பூட்டிட்டு போகணும் என்று தெரிஞ்சுக்குவோம் மக்களே !
காலை நேரம் நாங்கள் சென்ற மார்ச் இறுதியிலும் கூட செம குளிராக இருந்தது. இதற்கு காரணம் அருகில் இருக்கும் சிறு மலை தான். .
கொடைக்கானல் மலை அடிவாரத்தில், திண்டுக்கலுக்கும் கோடை ரோடுக்கும் இடையே உள்ளது இந்த ஊர். இந்த ஊரில் இருக்கும் சிறுமலை, ஏலகிரி போல 21 கொண்டை ஊசிகளுடன் கூடிய, சிறிய, அழகிய மலை. இங்கு மலையின் மேலே நல்ல குளிராக இருக்குமென்றும் கூறினர். திண்டுக்கல் மற்றும் அம்பாதுரையில் உள்ள வி.ஐ. பி கள் மலை மேல் நிறைய நிலம் வாங்கி வைத்து, தாங்கள் சென்று தங்க மட்டும் சில கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்துள்ளனராம். மலை மேலே செல்ல அரசு பேருந்து உள்ளது. ஆனால் நாம் சென்று தங்க வேறு லாட்ஜ் எதுவும் கிடையாது. அங்கு கெஸ்ட் ஹவுஸ் வைத்திருக்கும் நபர்களை தெரியுமானால், அவர்கள் மூலம் அங்கு தங்கலாம்.
சிறுமலைக்கு கீழ் விவசாயம் செய்ய நல்ல சூழல் நிலவுகிறது. எனவே மலையின் கீழ் உள்ள அம்பாதுரையில் பல்வேறு பழம், பூ போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.
திராட்சை தோட்டம் முதன் முதலில் பார்த்தது இங்கு தான். அடடா ! என்ன அழகு !! கொடி போல் வளரும் திராட்சை தோட்டத்தில், கொடி படர ஊன்றப்பட்ட குச்சிகளை தவிர தரையில் எதுவும் இல்லை.
நாளா புறமும் குச்சிகள் இருக்க, அதன் மேல் பசுமையாக கொடிகள்.. ஆங்காங்கு திராட்சைகள். பார்க்கவே அற்புதமாக உள்ளது. திராட்சை தோட்டம் பார்க்காத நண்பர்கள் இந்த வீடியோ அவசியம் பாருங்கள்.
இங்கு கருப்பு திராட்சை தான் சாகுபடி செய்கிறார்களாம். பச்சை திராட்சை சாகுபடி செய்ய செலவு அதிகம் ஆகுமாம். திராட்சை தவிர அவரை, ரோஜா, துளசி (ஆம்... துளசி) இவையும் சாகுபடி நிறையவே நடக்கிறது.
இங்குள்ள பல்வேறு தோட்டங்களிடையே பயணித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த மரத்தை பாருங்கள்
பத்து கை ராவணன் போல் என்ன ஒரு அழகு !
நாங்கள் பார்த்த தோட்டத்தில் சில கின்னி கோழிகள் சுதந்திரமாய் சுற்றி திரிந்தன.
அவை ஏன் வளர்க்கிறீர்கள் என கேட்ட போது, தூரத்தில் ஆள் வந்தாலும் இவை சத்தம் எழுப்பும் என்றும் அப்போது தோட்டத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியே வந்து யார் வந்துள்ளார் என பார்க்கலாம் என்றும் கூறினார். திருட்டு நடக்காமல் தடுக்க இவை உதவுகின்றன !
செல்லும் வழியில் சிடி-க்களை நூலில் கட்டி வயலில் கட்டியிருந்ததை காண முடிந்தது. இவற்றிலிருந்து வரும் வெளிச்சம் பார்த்து விட்டு காக்காக்கள் பழங்களை கொத்தாதாம் ! கிராமத்து மக்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு !
அம்பாத்துரையில் மீன்கள் செம பிரெஷ்-ஆக கிடைக்கின்றன. அருகில் இருக்கும் டேமில் மீன் பிடித்து உடனே ஊருக்கு விற்பனைக்கு வருவதால் விலை குறைவாக ஆனால் புதிதான மீன்கள் எங்கும் கிடைக்கின்றன.
அம்பாதுரையில் ஒரு தோட்டத்தில் உள்ள அழகிய குளம் இது
***********
அம்பாத்துரை மற்றும் அதை சுற்றி நிறைய தோட்டங்களும் காடுகளும் இருப்பதால் மக்கள் மிக சாதாரணமாக வேட்டைக்கு செல்கின்றனர்.
"ஏம்பா நேத்து (வேட்டைக்கு) போனியே? என்ன கிடைச்சுது?" என பரஸ்பரம் விசாரித்து கொள்கிறார்கள். முயல், காட்டு பன்றி போன்றவை வேட்டையில் கிடைக்க, தம் குடும்பத்துக்கு எடுத்து கொண்டு மற்றதை விலைக்கோ, நண்பர்களுக்கோ கொடுத்து விடுகிறார்கள். வெய்யில் காலம் என்றால் விலங்குகள் உள்ளே சென்று பதுங்கி விடும் என்றும் மழை காலத்தில் தான் நன்கு வெளியே வரும், அப்போது எளிதாக வேட்டை ஆடலாம் என்று கூறினர்.
இந்த ஊரிலேயே தயாரிக்கப்படும் குளிர் பானம் "காதலோ". இதனை ஊர் மக்கள் காதலோ என சொல்லாமல், "லவ்வோ" என சொல்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரோட்டின் மேல் இந்த ஊர் அமைந்துள்ளதல்லவா? இந்த ரோடு சில வருடங்களுக்கு முன் தான் தங்க நாற்கர சாலை ஆகியுள்ளது.
இதன் பின் நிலங்களின் விலை இங்கு கிடு கிடு என ஏறிவிட்டதாம். முன்பு ஐந்து லட்சத்துக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலங்கள் மூன்று வருடங்களில் 75 லட்சம் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ! இதிலிருந்து அறியும் நீதி: உங்களுக்கு தெரிந்து எங்கேனும் நேஷனல் ஹை வே வர போகிறது எனில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டால் அடுத்த சில ஆண்டுகளில், ஹை வே வந்த பிறகு பல மடங்கு லாபம் ஈட்டி விடலாம் !
****************
அதீதம் ஏப்ரல் 13 இதழில் வெளியானது !
****************
அடுத்த நிறைவு பகுதியில் :
திண்டுக்கல் பெயர் காரணம்
காந்தி கிராமம் - ஒரு "மாதிரி" கிராமம்
புடவைக்கு புகழ் பெற்ற சின்னாளபட்டி
கே. ஆர் விஜயாவுக்கு ஏரோபிலேன் வாங்கி தந்த தொழிலதிபர்
****************
டிஸ்கி: நண்பர்களே நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு சத்யம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் குறித்த விவாதத்தில் நானும் பதிவர் சிவகுமாரும் பங்கேற்கும் நிகழ்ச்சியை அவசியம் கண்டு, தங்கள் கருத்துகளை பகிருங்கள்

செல்லும் வழியில் சிடி-க்களை நூலில் கட்டி வயலில் கட்டியிருந்ததை காண முடிந்தது.//
ReplyDeleteஇதே போல எங்க ஊர்ப்பக்கம் பழைய ஆடியோ கேசட்ல டேப் இருக்குமே அதை பிரிச்சு வயலை சுத்தி கட்டி விட்டுடுவாங்க காத்துல விர்ர்ர்ர்ர்ருனு சத்தம் வரும்,அதுக்கு பயந்து பறவைங்க வராது,//
நீங்க சொல்றது சரிதாங்க,,,
கிராமத்து மக்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு !
வணக்கம் சார், எங்க ஊருக்கு ட்ரிப் அடிச்சிருகிங்க. சின்னாளபட்டி நம்ம ஊருங்க. அது கிராமம் இல்லைங்க. தேர்வுநிலை பேரூராட்சி. அம்பாத்துரையை விட பெரிய ஊருங்க.
ReplyDeleteகாதலோ என்ற லவ்வோ கம்பெனி நம்ம வீட்டுக்கு பக்கத்துல தான் தயாரிக்கறாங்க. நம்ம வீட்டுக்கு லேண்ட்மார்க் லவ்வோ கம்பெனி தானுங்க.
ReplyDeleteதிண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரோட்டின் மேல் இந்த ஊர் அமைந்துள்ளதல்லவா? இந்த ரோடு சில வருடங்களுக்கு முன் தான் நேஷனல் ஹை வே ஆகியுள்ளது.///
ReplyDeleteதிண்டுக்கல்/மதுரை மெயின் ரோட்டில் இருக்குதுங்க. எப்பவோ நேஷனல் ஹைவே (NH-7) ஆயிருச்சு. ஆனா மூணு வருசத்துக்கு முன்னாடி தான் தங்க நாற்கர சாலையாய் மாறிச்சு.
அம்பாதுரை பக்கம் எப்பவுமே மெகா மூட்டம் சூழ்ந்து பார்க்க அழகாக இருக்கும்ங்க
ReplyDeleteமணக்கும் மல்லிகைத் தோட்டத்தை கணக்குல விட்டுட்டிங்க??????????
ReplyDeleteதிராட்சை தோட்ட வீடியோ அருமை
ReplyDeleteசின்னாளபட்டி சுங்கடி தயாரிப்புகள் பற்றி பார்க்கலாம் எவ்வளவு வெயில் அடித்தாலும் மாலை ௫ மணிக்குமேல் குளிர்த்த காத்து வீசும்
ReplyDelete+2 கு பிறகு இன்ஜினியரிங் சேர நுழைவு தேர்வு எழுத வேண்டும் அப்போ காந்தி கிராம பல்கலை சென்றேன் , dd எடுக்க சொன்னார்கள் , அதனால் வாடகை சைக்கிள் இல் அம்பாத்துரை சென்றேன் , அனால் வழி தவறி நெடுதுஉரம் சென்றேன் பிறகு ஒரவர் சொன்னார் அம்பாத்துரை முன்னாடியே உள்ளது என்று , திரும்பவும் வந்தேன் அதன்பிறகு தத் எடுத்து பல்கலைக்குள் சென்றால் அதுவும் வெகு தூரம் , அன்று சாப்பிட கூட முடியவில்லை , அதனால் தான் அமபாதுரை இன்னும் மனதில் இருக்கிறது , எனது சொந்த உஊர் பழனி , பதிவிற்கு நன்றி
ReplyDeleteஅருமை மோகஞ் ஜி..
ReplyDeleteசிறுமலைக்கு போயே ஆக வேண்டும் என்ற தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
நன்றி
எங்க ஊர்ககு விருந்துக்கு வந்த மதுரைகாரரு பெட்டிகடையில ஒரு பிகரு இருக்கிற கடையில லவ்வோ இருக்கான்னு கேட்க....அந்த பெண் முறைக்க....ஹஹஹ!
ReplyDeleteஅழகான புகைப்படம் நல்ல கட்டுரை
அந்த மதுரைகாரர் யார்ன்னு நான் சொல்லமாட்டேன்.....
சிறுமலை பற்றி ஒரு பத்திரிக்கையில் படித்து விட்டு கட் பண்ணி வைத்திருக்கிறோம். இப்போது இந்த பதிவை படித்ததும் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது.
ReplyDeleteதிராட்சை தோட்டம் பிரமாதம்.
நல்ல பகிர்வு.... சிறுமலை பார்க்க நினைத்திருக்கும் ஓரிடம்.... :
ReplyDeleteதிராட்சைத் தோட்டம், கின்னி கோழி என கலக்கல் காணொளி... அது சரி. நடுவில் உங்கள் குரல் வருகிறதே... திராட்சை எதும் தொட்டீங்களோ :))))
அவசரமாப் படிச்சதுல என் பேருல ஒரு ஊர் இருக்குதுனு ஆச்சரியமா போச்சுங்க!
ReplyDeleteநான் திராட்சை சாப்பிட்டிருக்கேனே தவிர... திராட்சைத் தோட்டத்தை இதுவரை பார்த்ததேயில்ல... இப்ப பாத்து சந்தோஷப்பட்டேன். Share பண்ணிக்கிட்ட உங்களுக்கு என்னோட Thanks!
ReplyDeleteஒவ்வொரு விடுமுறைக்கும் திண்டுக்கல் தான் போவோம்.ஊரினை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும்.ஆனால் ஊருக்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம்.திராட்சை தோட்டம் வத்தலகுண்டு, கம்பம் பகுதியில் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteகோகுல் said
ReplyDelete//இதே போல எங்க ஊர்ப்பக்கம் பழைய ஆடியோ கேசட்ல டேப் இருக்குமே அதை பிரிச்சு வயலை சுத்தி கட்டி விட்டுடுவாங்க காத்துல விர்ர்ர்ர்ர்ருனு சத்தம் வரும்,அதுக்கு பயந்து பறவைங்க வராது//
அட ! சூப்பர் கோகுல், கிராமத்து ஆட்கள் என்னமா யோசிக்கிறாங்க !
பிரகாஷ்: தங்கள் விரிவான கமண்டுகளுக்கு மிக்க நன்றி. தங்க நாற்கர சாலை - நீங்கள் சொன்ன பிறகு மாற்றி விட்டேன். இது உங்கள் ஊர் என தெரியாது
ReplyDeleteகோவிந்தராஜ் சார்: சுங்குடி புடவைகள் பற்றி நான் நேரில் பார்க்க முடியலை. தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteAnalyser : உங்கள் அனுவத்தை பகிர்ந்தமிக்கு மிக நன்றி நண்பரே ! இது போன்று எப்போதோ வரும் நண்பர்கள் மிக ஆச்சரியம் தருகிறார்கள்
ReplyDeleteமகிழ்ச்சி + நன்றி காவேரி கணேஷ்
ReplyDeleteஅட சுரேஷ் நீங்களும் திண்டுக்கல்லா? தெரியாமல் போச்சே? கமண்டுக்கு நன்றி
ReplyDeleteகோவை2தில்லி மேடம் : சிறுமலை மேல் நாங்கள் கூட போகலை. முடிந்தால் நீங்கள் குடும்பத்துடன் ஒரு முறை சென்று வாருங்கள்
ReplyDeleteவெங்கட்: நன்றி சிறுமலை சென்று வாருங்கள்; ரசிப்பீர்கள்
ReplyDeleteஅப்பாதுரை / அம்பாதுரை : அடடா ஆமாங்க. :))
ReplyDeleteநிரஞ்சனா : நன்றிங்கோ
ReplyDeleteஅமுதா: அட வாங்க மேடம் ரொம்ப நாள் கழித்து வந்துருக்கீங்க. அடுத்த முறை போகும் போது முடிந்தால் திராட்சை தோட்டங்கள் மற்றும் சிறுமலை பாருங்கள்
ReplyDeleteவா.கோவிந்தராஜ், said...
ReplyDeleteசின்னாளபட்டி சுங்கடி தயாரிப்புகள் பற்றி பார்க்கலாம் எவ்வளவு வெயில் அடித்தாலும் மாலை ௫ மணிக்குமேல் குளிர்த்த காத்து வீசும்///
இவரு சின்னாளபட்டி மருமகன்....
Hai Mohan,
ReplyDeleteI used to get automatic mail for your new posts, but last 3, 4 post I am not getting any mails. Is it problem with my side or you have changed any settings ? ( sorry for typing in English).
I love to read you post after Anandha Vikatan. Good keep it up !!.
Thanks
Arun Prasath J
sirumalai oru arumaiyana oor
ReplyDeleteadhu ennnoda sontha oor than anga varudathuku oru murai nanga povom anga enaku sontha vedu iruku sirumalaila irunthu 8 mayil thooram pokanum nadandhu than pokanum romba sandhosama irukum anga pokum podhu antha antha idathu peru thalaikada nu sollu vanga
anga mariyammam kovil iruku antha oru ku oru kavval theivam adhu ninachthu nadakum romba varudama anga tha sami irukunu namburanga thimithi pongal akinichatti eadupanga nanaum romba sakthi vaintha amman adhu
romba sandhosama iruku ungakita share panninadhu
thanks
M.Senthil kumar
திரு. செந்தில் குமார். உங்கள் ஊர் பற்றி நீங்கள் பகிர்ந்தது மிக மகிழ்வை தருகிறது. நன்றி !
ReplyDeleteபசுமையான பயண அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது. நல்லதொரு பதிவு! வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது உயிர் சுவாசம் பெற்ற ஊர் திண்டுக்கல் சென்று வந்தமைக்கு நன்றி .அருமையான நடையில் ஒரு ஆய்வு பதிவு .தொடர வாழ்த்துகள்
ReplyDeleteஅம்பாத்துறை பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
சிறுமலை கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இல்லை. மதுரைக்கும் திண்டுக்கலுக்கும் ஒரு நேர் கோடு வரைந்தால் அதன் மைய புள்ளி சிறுமலையாக இறுக்கும்(தோராயமாக). சிறுமலையில் பழையூர், புதூர், அகஸ்தியர்மலை, தென்மலை போன்ற ஊர்கள் உள்ளன. சில ஆண்டுகள் முன் விடுதலை புலிகளின் பயிற்சி இடமாகவும் சிறுமலை இருந்தது அந்த இடத்தை புலிப்பாறை என்று சொல்வர்.
ReplyDelete