Tuesday, May 4, 2010

வானவில் -முஹம்மது அமீரும் போளி ஸ்டாலும்

கிரிக்கெட் கார்னர்

T- 20 வேர்ல்ட் கப்பில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் இடையே நடந்த போட்டி. 19 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 191 for 5 எடுத்திருந்தது. அந்த 20-வது ஓவர் முடிவில் ஸ்கோர் என்ன ஆயிருக்கும் என நினைக்கிறீர்கள்? 191 for 5-லிருந்து 20வது ஓவரில் ஆஸ்திரேலியா 191 ஆல் அவுட்!!

முஹம்மது அமீர் என்ற பவுலர் 20-வது ஓவர் பந்து வீசினார். முதல் இரு பந்தில் இரு விக்கட் எடுத்தார். ஹாட் ட்ரிக் பந்து.. விக்கட்டுக்கு வெளியே விழுந்து விக்கட் கீப்பர் கையில் அடைந்தது. ஒரு ரன் எடுக்க முயல ரன் அவுட். நான்காவது பந்தும் அதே போல் பந்து விக்கட் கீப்பர் கையில் உள்ள போதே ரன் எடுக்க முயல ரன் அவுட். 5-வது பந்தில் ரன் இல்லை. ஆறாவது பந்தில் கிளீன் போல்ட். ஒரு ஓவரில் இது வரை 5 விக்கட்டுகள் ஒரு International மேட்சில் வீழ்த்த பட்ட மாதிரி தெரியவில்லை!! Last over….5 Wickets and a Maiden over!!

அன்று பாகிஸ்தான் தோற்றாலும் கூட இத்தகைய அதிசயமான நிகழ்வை Highlights-ல் பார்த்து ஆச்சரிய பட்டு போனேன்.

ஒரு சம்பவம்

சமீபத்தில் எங்கள் ஊரான நீடாமங்கலம் சென்று விட்டு பேருந்தில் தஞ்சை வந்து கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். சாலிய மங்கலம் என்ற ஊரில் ஒரு கணவன், மனைவி கை குழந்தை உடன் ஏறினர். அந்த ரெண்டரை வயது குழந்தையை நான் வாங்கி மடியில் அமர்த்தி கொண்டேன். எனக்கு பக்கத்தில் ஜன்னலோரம் இருந்தவர் எழுந்ததும் நான் ஜன்னலோரம் செல்ல, என் அருகே குழந்தையின் தந்தை அமர்ந்தார். குழந்தையை கூப்பிட அது அவரிடம் போகலை. என்னிடமே இருப்பதாக சொல்லி விட்டது. ஜன்னலோரம் என்பதால் போக மாட்டேன் என நினைக்கிறது என நாங்கள் பேசி கொண்டோம்.


"எந்த ஊர் மொட்டை?" என நான் கேட்க, சாலிய மங்கலம் அருகே திருகருகாவூர் என்ற ஊர் உள்ளதாகவும், இந்த ஊர் கடவுள் பிள்ளை பேருக்கு மிக புகழ் பெற்றது என்றும், தங்களுக்கு தாமதாமாக குழந்தை பிறந்தாதால், வேண்டுதல் நிறைவேற்ற திண்டுக்கலில் இருந்து வருவதாகவும் கணவனும் மனைவியும் மாறி மாறி கூறினர். நான் கேட்டது ஒரே கேள்வி; எவ்வளவு வெள்ளந்தியாக எத்தனை தகவல்கள்!! அதிலும் எங்கள் ஊருக்கு அருகே எனக்கே தெரியாத கோயில் பற்றி அறிமுகம்!!
அடுத்து எங்கள் பின் இருக்கை காலியாக ஜன்னலோரமாக அந்த பெண் அமர்ந்தார். இப்போது அவர் குழந்தையை கூப்பிட அப்பவும் என் மடியை விட்டு நகரலை. எனக்கு ஆச்சரியம். குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆனால் புது குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் என்னிடம் வராது. இந்த குழந்தை ஆச்சரியமாக என்னிடம் ஒட்டி கொண்டது. நான் தஞ்சையில் இறங்கும் போது அந்த குழந்தை அப்பாவிடம் கேட்டது. "அங்கிள் எந்த ஊர்?" "தஞ்சாவூர்மா"   " அவர் நம்ம ஊருக்கு வர மாட்டாரா? "   அடடா!! என்னே அன்பு!! அந்த வெள்ளந்தி தம்பதியும், குழந்தையும் இன்னும் என் நினைவுகளில்.

வாரம் ஒரு சட்ட சொல் – Sweat Equity Shares

ஒரு புது நிறுவனம் துவங்கும் போது பலரும் பல விதத்தில் உதவுவர். அவர்களில் எல்லோருக்கும் fees பணத்தால் தான் தர வேண்டும் என்பதில்லை. சில நேரம் அவர்கள் உழைப்பிற்காக நிறுவனத்தில் ஷேர்கள் தரலாம். அதற்கு அவர்கள் பணம் தர தேவையில்லை. இதனை தான் Sweat equity shares என்கின்றனர்




நம்ம சசி தரூரின் தோழி சுனந்தாவிற்கு இப்படி தான் கொச்சி அணி Sweat equity ஷேர் தந்து பிரச்னைக்குள்ளானது. சுனந்தா அப்படி என்ன contribution செய்தார் என்பது ஓர் பதில் தெரியா கேள்வி; மேலும் நிறுவனம் துவங்கி ஒரு ஆண்டு கழித்தே இத்தகைய Sweat equity shares - issue செய்யலாம் என்ற விதி மீற பட்டது வெட்ட வெளிச்சம் ஆனது. இவை சசி தரூர் மற்றும் சுனந்தா இருவரும் பிரச்சனையில் மாட்ட காரணமானது

அய்யா சாமி

அய்யா சாமி முக்கிய வேலையாக அதி காலை எழ வேண்டும் என்றால், அலாரம் கிளாக் , மொபைல் என ரெண்டுக்கும் மேற்பட்டவற்றில் அலாரம் வைப்பார். ("ஒன்னு அடிக்கேலேன்னா என்ன பண்றது?") இப்படி வச்சும் அன்னிக்கு நிம்மதியா தூங்குவாருங்குறீங்க ?? .. ம்ஹும்..இதில் காலையில் அவசரமா கிளம்பும் போது ஒவ்வொன்னா அடிக்க, அதை வந்து வந்து ஆப் செய்வது வேறு தனி வேலை..

சமீபத்து SMS:

One side love is possible, but one side friendship is impossible – Shakespeare


வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்


சென்னையில் சூப்பரான போளி சாப்பிட ஒரு சிறந்த இடம் : வெங்கடேஸ்வரா போளி ஸ்டால். T. நகர் துரைசுவாமி சப்வே வழியே மேற்கு மாம்பலம் செல்லும் போது சப்வே முடிந்து இடது புறம் திரும்பினவுடன் இருப்பது தான் ஒரிஜினல் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால். இதே பெயரில் இன்னும் நிறைய கடைகள் வந்தாலும் அவற்றில் போலி போளி கடைகள் தான். இந்த கடையில் சென்று நீங்கள் க்யூவில் தான் போளி வாங்க முடியும். போளி மட்டுமல்லாது மற்ற snacks-ம் கூட செமையாக இருக்கும். இதுவரை சாப்பிடாதவர்கள் ஒரு முறை சென்று பாருங்கள். அடுத்த முறை என்னை நேரில் பார்க்கும் போது நன்றி சொல்வீர்கள்!

P.S: "முன்னேறி பார்க்கலாம்" தொடர் அடுத்த பகுதி இந்த வாரம் வியாழன் அன்று இரவுக்குள் வெளி வரும்.

17 comments:

  1. தமிழ் கமெண்ட்ரி கேட்டு எவ்ளோ நாளாச்சி?:))

    Sweat Equity Shares சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்க..:))

    வழக்கம்போலவே வாவி - அருமை.:)

    ReplyDelete
  2. வானவில் என்கிற பெயருக்கு ஏற்றவாறு கலந்து கட்டி அடிச்சி இருக்கீங்க .. அருமை :-)

    ReplyDelete
  3. //சமீபத்தில் எங்கள் ஊரான நீடாமங்கலம் சென்று விட்டு பேருந்தில் தஞ்சை வந்து கொண்டிருந்தேன்//

    நீங்கள் நீடாமங்கலமா? நான் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தியா செல்லும்போதெல்லாம் நீடாமங்கலம் செல்வது என் வழக்கம்.

    போன வருடம் மூன்று முறை போனேன்.

    ReplyDelete
  4. நா கூட பேப்பருல பாத்தேன்.. லாஸ்ட் ஓவர்ல 0 ரன், 5 விக்கெட்.. அதுவும் ஆஸ்திரேலியா பாட்டிங்கள.. ஆச்சர்யந்தான்

    ஒரு வேலை, நீங்க ரஜினி மாதிரியோ? . கொளந்தங்க ரொம்ப உங்கள விரும்புராங்களே

    'Sweat Equivity' இதன் அர்த்தத்தை 10 தினங்களுக்கு முன், பேப்பரில் பார்த்தேன்.

    அய்யாசாமி சேஷ்ட்டை தாங்கலீங்கோ.

    அடுத்த முறை வரும்போது, வெங்கடேஸ்வர போளி('லி' அல்ல) யோடு வாங்க..

    ReplyDelete
  5. எல்லா விசயங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. தகவல் கதம்பம். அருமை.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு மோகன். முக்கியமா அந்த குழந்தை. சாலியமங்கலம் நிறைய தடவை போயிருக்கேன். அழகான ஊர், அன்பான மக்கள். பல வருஷமா தஞ்சாவூரை ரொம்பவே மிஸ் பண்றேன்.

    ReplyDelete
  8. சுட சுட தாங்கள் தந்த கமெண்டுக்கு நன்றி ஷங்கர்.
    ***
    நன்றி ரோமியோ; சௌக்கியமா இருக்கீங்களா?
    ***
    உலகநாதன்: அப்படியா? நன்றி; அடுத்த முறை நீடாமங்கலம் வரும் போது சொல்லுங்கள்.
    ****
    மாதவன்: நிச்சயம் வாங்கி வந்தால் ஆச்சு; அன்பிற்கு மிக்க நன்றி
    ***
    ராமசாமி கண்ணன்: நன்றி
    ***
    ***
    நன்றி சித்ரா.
    ***
    சரவணா: நன்றி. எங்க ஊர் பக்கம் வந்திருக்கீங்களா? மகிழ்ச்சி

    ReplyDelete
  9. //Last over….5 Wickets and a Maiden over!!//

    ஆச்சர்யமா இருக்கு. நிறைய கிரிக்கெட் செய்திகள் வருவதால் படிக்காமல் விட்டுப்போன ஓன்று. நன்றி.

    //இப்போது அவர் குழந்தையை கூப்பிட அப்பவும் என் மடியை விட்டு நகரலை. எனக்கு ஆச்சரியம். குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்.//

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பார்கள்,


    //One side love is possible, but one side friendship is impossible – Shakespeare//

    நல்ல எஸ்.எம்.எஸ்.

    மொத்தத்தில் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  10. //ஒரு ஓவரில் இது வரை 5 விக்கட்டுகள் ஒரு International மேட்சில் வீழ்த்த பட்ட மாதிரி தெரியவில்லை//

    ஆம். இது புதிய உலகசாதனைதான்.

    வானவில் வழக்கம்போலவே கலர்ஃபுல்

    ReplyDelete
  11. பஸ் பிரயாணம் நல்லா இருந்தது படிக்க!

    ReplyDelete
  12. வானவில் - அருமை. பஸ் பிரயாணம் பற்றிய தகவல் நன்றாக இருந்தது.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  13. நான் அந்த‌ மேட்ச் பார்க்க‌வேயில்ல‌, ஒரே ஓவ‌ர்ல‌ 5 விக்கெட்னு ம‌ட்டும் கேள்விப்ப‌ட்டேன். பால் பை பால் க‌மெண்ட்ரி குடுத்த‌துக்கு ந‌ன்றி

    வேள‌ச்சேரியில், விஜ‌ய‌ ந‌க‌ர் அருகில், உடுப்பி கிருஷ‌ணா போளி ஸ்டால்னு ஒண்ணு இருக்கு. ஆஃபிஸில் இருந்து உங்க‌ளுக்கு 5 நிமிஷ‌ம்தான் ஆகும். அங்கேயும் ந‌ல்லாயிருக்கும், ஒரு நாள் ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ :)

    ReplyDelete
  14. கிரிக்கெட் தகவலுக்கு நன்றி.

    “ஸ்வெட் ஈக்விடி ஷேர்” - இதான் பிரச்னை பெரிசானதுக்குக் காரணமா? நான்கூட ஷேர் வாங்கினா ஏன் தப்புன்னு சொல்றாங்கன்னு யோசிச்சேன்!!

    ReplyDelete
  15. Anonymous3:02:00 PM

    ட்20 ஹைலைட் பாக்கறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. நானும் அந்த PAK vs AUS மேட்ச் பார்த்தேன்.. இது உலக சாதனைன்னு நினைக்கிறேன்..

    சம்பவம் அருமை.. சில பயணங்கள் மறக்கமுடியாத அறிமுகங்களையும் அனுபவங்களையும் தருகிறது..
    என்னோட பயண அனுபவம் ஒன்ன எழுதியிருக்கேன்..
    http://anbudan-mani.blogspot.com/2009/10/blog-post.html
    முடிஞ்சா வாசியுங்கள்..


    அய்யாசாமி தி கிரேட்.. ஹி.. ஹி..

    ReplyDelete
  17. i remembered that store and love it, i used to live that street 10 years ago and my friends live same building. That building owner used to compliant about that boali store, because of messed up.

    thanks
    makdns.blogspot.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...