Monday, July 5, 2010

ஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள் (பாகம் 2)

முதல் பாகம் இங்கே

நன்றி: அப்பலோ மருத்துவ மனை

1. கோபம் இதய நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. கோபத்தை தகுந்த counseling மூலம் குறைப்பதால் அதனால் வரும் தீங்கு ( stress ) 70 % குறைகிறது.


2. நம்பிக்கை உங்கள் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யும். மத நம்பிக்கை உள்ளவர்கள், அந்த நம்பிக்கை இல்லாதவர்களை விட 8 முதல் 10 வருடங்கள் அதிகம் வாழ்கின்றனர்.

3. வருடாந்திர உடல் பரிசோதனை நல்ல ஆயுளுடன் வாழ அடிப்படை தேவையாகும்.

4. உங்கள் வார நாட்களை அலுவலதிற்காக செலவிடும் நீங்கள் உங்கள் வார இறுதி நாட்களை குடும்பத்திற்காக செலவிடுங்கள்.

5. வார நாட்களிலும், பகலில் நீங்கள் செய்ய வேண்டியதை உங்கள் அலுவல் முடிவு செய்தாலும், மாலை வேளையில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

6. மிகவும் பணி சுமை உள்ள வேலை எனில் உங்களுக்கு ஓய்வான விடுமுறை தேவை. தொடர்ந்து ஒரே வித வேலை செய்பவர்களுக்கு மலை ஏற்றம் (trekking) போன்ற அதிக செயல்பாடுகள் உள்ள விடுமுறை தேவை.
7. வருடத்திற்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று வார விடுமுறை எடுப்பது உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் உடல் நலனுக்கும் நல்லது.

8. உங்கள் வேலை ஒன்று உங்களை திருப்தி படுத்தும். அல்லது சோர்வாக்கும். 50 % க்கும் மேற்பட்டோர் வேலை சார்ந்த மன சுமையால் அவதி படுகிறார்கள்.

9. அலுவலகத்தில் மிக அதிக திட்டு வாங்குபவர், அதிக அளவு sick leave எடுக்கிறார்.

10. மன சுமை தரும் வேலைகள் இதயத்திற்கு அதிக தீங்கு தருகின்றன. உங்கள் வேலை உங்களை தொடர்ந்து துன்புறுத்தினால், அதிலிருந்து மாறுவதே நல்லது.

11. நீங்கள் செய்யும் சிறு நல்ல செயல்களுக்காக உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். வேறு யாரும் அதனை செய்ய போவதில்லை.


12. தினம் 8 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். குறைவாக தூங்குவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகம். தினம் குறிப்பிட்ட நேரம் தூங்க சென்று குறிப்பிட்ட நேரம் விழிப்பது நல்லது.

13. கோபத்துடன் தூங்க செல்லாதீர்கள்.

14. இசை இதயத்திற்கும் மனதிற்கும் நல்லது. அது மன சுமையை குறைக்க வல்லது.

15. மன சுமை இருக்கும் போது நீண்ட பெருமூச்சு விடுங்கள். ஒரு மணிக்கு ஒரு முறை சிறிது தூரம் நடப்பது அலுவலக சுமையை குறைக்க உதவும்.

16. பூக்கள் , செடிகள், மீன் தொட்டி இவையும் stress குறைக்க உதவும்.

17. இதய நோய்களில் மூன்றில் ஒரு பங்கு சிகரட் குடிப்பதால் வருகிறது. சிகரட்தில் நம் உடலுக்கு தீங்கு செய்யும் பொருட்கள் 4000 உள்ளன!! சிகரட் குடிப்போருக்கு இருதய நோய் மற்றும் கேன்சர் வர வாய்ப்பு அதிகம்.

18. ஒவ்வொரு ஒரு மணி நேரம் நடப்பதன் மூலம் உங்கள் வாழ் நாள் ஒரு மணி நேரம் நீட்டிக்கபடுகிறது.

19. விளையாட்டு உடலில் உள்ள வியாதிகளுடன் எதிர்த்து போரிட உதவுகிறது.

20. உடற் பயிற்சி மகிழ்வான சுரப்பிகளை உடலில் சுரக்க வைக்கிறது. உடலை அழகாக வைத்திருக்கவும் நலமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

21. தொடர்ந்து உடற் பயிற்சி செய்பவர்கள் ஹார்ட் அட்டக்கை எதிர் கொண்ட பின்னும் வாழ்கிறார்கள். உடற் பயிற்சி இருதயம் உள்ளிட்ட அனைத்து தசைகளையும் உறுதி செய்கிறது.

22. 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்வது இதயத்துக்கு நல்லது.

23. தினம் செய்யும் வீட்டு வேலைகள் (தோட்ட வேலை, படியேறுவது,etc ) ஹார்ட் அட்டக் வருவதற்கான வாய்ப்பை பாதியாக குறைக்கும்.

24. அதிகம் நடக்காமல், வேலை செய்யாமல் ஒரே இடத்தில இருப்பது சிகரட் புகைப்பது போன்ற கெடுதல் இதயத்திற்கு செய்யும்.

25. உடல் குறித்து நீங்கள் எடுக்கும் நல்ல தீர்மானங்களை தள்ளி போடாதீர்கள். உடன் துவங்குங்கள்.

12 comments:

  1. மிகவும் பயனுள்ள குறிப்புகள், நன்றி மோகன்!
    நீ சொல்லியிருக்கிறத பாத்தா, நான் எப்படியும் இன்னும் நூறு வருடங்களுக்கு வாழ்வேன், போலிருக்குதே! :-)

    ReplyDelete
  2. மிக நல்ல பகிர்வு. இது போன்ற விஷயங்களை எத்தனை முறை எத்தனை பேர் பகிர்ந்து கொண்டாலும் நல்லது என்பேன். நாம் அசட்டையாக ஒதுக்கியவை மறுபடி கண்ணில் படுகையில் சிந்திக்க வைக்கும். தொடருங்கள் மோகன் குமார்.

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான பகிர்வு..! அனைத்து குறிப்புகளும் பயனுள்ளவையே..! பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  4. நன்றி பெயர் சொல்ல.. அப்போ நீங்க இதில் பல விஷயம் ஏற்கனவே செய்கிறீர்கள் போல.. மிக நல்லது..
    ***
    ராம லக்ஷ்மி நன்றி.. மொத்தம் 90குறிப்புகள் அப்போலோ மருத்துவமனை வலை பக்கத்தில் போட்டிருந்தார்கள். அதில் கிட்டத்தட்ட பெரும்பாலும் எழுதி விட்டேன். எனவே இந்த தலைப்பில் தொடர முடியாது. இது போன்ற உபயோகமான தகவல் வாசித்தால் பகிர்கிறேன்..
    ***
    நன்றி பிரவீன்

    ReplyDelete
  5. நல்ல பல பயனுள்ள தகவல்கள்.
    நன்றி சார்.(ஊருக்குச் சென்றதால், உங்கள் வலைப்பூவைத் தொடர முடியவில்லை)

    ReplyDelete
  6. நல்ல தகவல் சொல்லிருக்கிங்க, நானும் என் பதிவுல உடல் நலத்தை பற்றி சொல்லிருக்கேன் நான் கேட்பவர்தான் யாரும் இல்லை....

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. அருமையான பயனுள்ள பகிர்வு!

    சகோதரி ராமலக்ஷ்மி சொல்வதுபோல இந்த மாதிரி தகவல்களை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றைப் படித்து எத்தனையோ பேர் தங்களை சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்!!

    ReplyDelete
  10. நன்றி அமைதி அப்பா, குரு , பனி துளி சங்கர்.

    ReplyDelete
  11. //மனோ சாமிநாதன் has left a new comment on your post "ஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள் (பாகம் 2)": //

    அருமையான பயனுள்ள பகிர்வு!

    சகோதரி ராமலக்ஷ்மி சொல்வதுபோல இந்த மாதிரி தகவல்களை எத்தனை முறைகள் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றைப் படித்து எத்தனையோ பேர் தங்களை சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்!!


    ****
    நன்றி மனோ மேடம்

    ReplyDelete
  12. //இசை இதயத்திற்கும் மனதிற்கும் நல்லது. அது மன சுமையை குறைக்க வல்லது.//

    ச‌ரியாச் சொன்னீங்க‌..தின‌மும் இர‌வில் தூங்கும்முன் கொஞ்ச‌ நேர‌ம் பாட‌ல்க‌ள் கேட்ப‌தை தொட‌ர்ந்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...