Wednesday, July 7, 2010

இன்னும் இரு காதல் கவிதைகள்

மிச்சம்

உன்னை மறக்க
உபாயங்கள் தேடினேன்
கவிதைகளை பட்டமாக்கி
பறக்க விட்டேன்
கடிதங்களை தீக்கு மணமுடித்தேன்
முகத்திலும் தாடியிலும்
முடியை பறிகொடுத்து
முகம் மாறினேன்

சட்டைகளில் சிலவற்றை
தானமளித்தேன்

எஞ்சிய நினைவு பொருட்களை
பரணுக்கு அனுப்பினேன்

எல்லாம் ஆயிற்று..

நீயே சொல்லு

என் மனசை என்ன செய்வது?


                                                                                    விளைச்சல்




ஏதோவொரு நிலத்தில்
அன்பை விதைக்க
அமோக விளைச்சல்
இன்னொரு வயலில்...

18 comments:

  1. ஏதோவொரு நிலத்தில்
    அன்பை விதைக்க
    அமோக விளைச்சல்
    இன்னொரு வயலில்.//

    நல்ல வரிகள்

    ReplyDelete
  2. இரண்டாவது மிக அருமை:)!

    ReplyDelete
  3. முதல் கவிதையில் காதல் தோல்வியின் வேதனை யதார்த்தமாய்...

    தூய்மையான அன்பின் விளைச்சலை இரண்டாவது கவிதையில் உணர்ந்தேன்.

    ReplyDelete
  4. அழகான, ஆழமான வரிகள்....

    ReplyDelete
  5. நீயே சொல்லு

    என் மனசை என்ன செய்வது?

    வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  6. நல்ல கவிதைகள்.. ரசித்தேன்..

    உங்களால் இப்பொழுது எனது வலைப்பதிவினை திறந்து படிக்க முடிகிறதா?

    ReplyDelete
  7. கடிதங்களை தீக்கு மணமுடித்தேன்

    .... :-)

    ReplyDelete
  8. \\ஏதோவொரு நிலத்தில்
    அன்பை விதைக்க
    அமோக விளைச்சல்
    இன்னொரு வயலில்..//


    ஹ்ம்ம் எத்தனை அர்த்தங்கள் உள்ளது ..

    ReplyDelete
  9. நல்ல கவிதைகள். ஆயினும் ஏனோ முதலை விட இரண்டாவது கவிதை பிடித்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. 'அவ‌ங்க‌ள‌' எங்கேயோ ச‌மீப‌த்துல‌ பார்த்திருக்கீங்க‌..ச‌ரியா ;))

    ReplyDelete
  11. முகத்திலும் தாடியிலும்
    முடியை பறிகொடுத்து
    முகம் மாறினேன்

    அன்று முதல் இன்று வரை ....

    ReplyDelete
  12. நீயே சொல்லு

    என் மனசை என்ன செய்வது?

    நல்ல கேள்வி தான் ஆனால் பதில்???

    ReplyDelete
  13. ஏதோவொரு நிலத்தில்
    அன்பை விதைக்க
    அமோக விளைச்சல்
    இன்னொரு வயலில்..

    அருமை அருமை ரசித்தேன்!!

    ReplyDelete
  14. முதல் வருகைக்கும் ப்ளாகை தொடர்வதற்கும் நன்றி சௌந்தர்
    ***
    நன்றி ராம லக்ஷ்மி
    ***
    வாங்க பிரவீன் நன்றி
    ***
    நன்றி சங்கவி
    ***
    தமிழ் உதயம்: குடுத்தாச்சு; குடுத்தாச்சு :))
    ***

    ReplyDelete
  15. மாதவன்: நன்றி; இப்போது போக முடிகிறது. சில நாட்களாகவே ப்ளாகரில் பிரச்சனை என அறிகிறேன்.
    ****
    நன்றி சித்ரா.
    **
    நன்றி ரோமியோ; அந்த கவிதை பற்றி சிறு விளக்கம் தனியே
    ***
    முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி கலா நேசன்
    ***
    வெங்கட் : நன்றி
    **
    ரகு: ஹா ஹா இல்லை; பழைய கவிதைகள் அப்பப்போ எடுத்து ரிலீஸ் செய்றேன்; அவ்ளோ தான்
    **
    சக்தி: தங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  16. விளைச்சல் கவிதை பற்றி:

    நாம் யாரிடமோ அன்பாய் இருக்கிறோம்; அவர்கள் அன்புக்காக ஏங்குகிறோம். ஆனால் அங்கு கிடைக்காத அன்பு வேறு இடத்தில நமக்கு கிடைக்கிறது. இது வெளிப்படையாக கவிதையில் தெரியும் கருத்து. போலவே நாம் யாருக்கோ உதவ, நமக்கு வேறு யாரோ உதவும் தருணங்கள் இருக்கவே செய்கிறது. அதையும் நினைத்தே இந்த கவிதை எழுதினேன். கவிதைகள் அனைத்துமே சுமார் 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை!

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...