பாராட்டு நாணயத்தின் ஒரு பக்கமென்றால் அதன் மறு(எதிர்) பக்கம் பொறாமை.
உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா? உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?
இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.
மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?
ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில் ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா?
இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.
உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?
முதலில் அந்த தீய எண்ணங்கள் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும்.
அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும்.
"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.
அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)
ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.
மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது.
வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.
*************
பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.
பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.
பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.
ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன்.
கடைசி இருவரிகள் கலக்கல்...
ReplyDelete//உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?//
ReplyDeleteஅதெப்படீங்க நெருடலா இருக்கும்.. அவரு, அவரோட தெறமையால முன்னேறியிருந்தா ?
//அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா?//
"ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் " மேலே சொல்ல வேண்டியதில்லை..
//உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?//
அதெப்படீங்க.. அவுங்க ஓலைச்சு முன்னேறினா / வூடு வாங்கினா.. எனக்கு ஏன் பெரிய மூச்சு வரணும்..?
வராதூங்கோ.......வரவேண்டாமூங்கோ..
//வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.//
அருமையான வரிகள்..
//சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? //
வருமானம் அதிகரித்தது.
விலைவாசியோடு..
(கவிதை..?)
//உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில் ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா? //
அது..
//பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். //
கண்டிப்பா.. இன்றைய இந்திய இலங்கை கிரிகெட் மேச்சு ரிசல்டே ஒரு உதாரரணம் (உண்மையிலே முரளிதரன் 800 விக்கெட் எடுத்தது மகிழ்ச்சியை தருகிறது. ஒரே டெஸ்டுல8 விக்கெட்டு எடுப்பது சிரமம் எனத் தெரிந்தும், முன்னரே தனது ஓய்வினை அறிவித்துவிட்டு, இந்த டெஸ்டுல சாதித்தும் காட்டிய வீரரல்லவா ?)
//பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.//
நானும் சிரிப்பேன்.. (என்னைய பாத்து சிரிச்சாக்கூட..)
ஒரு சிறந்த பதிவு.. சபாஷ்..
பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி//
ReplyDeleteநிச்சயமாய் சிறந்த வழி இதுதான்.
ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
ReplyDeleteசென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில் ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா?
.......a successful guideline.
Very nice!
ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன்.
ReplyDelete.... I love this one! TRUE - SO TRUE!
ஆழ்ந்த கருத்துக்களுடன் நல்லதொரு பகிர்வு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையானதொரு பதிவு
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteNice one...
ReplyDeleteNice Post...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகலாநேசன்: நன்றி
ReplyDelete***
மாதவன்: Detailed ஆன விமர்சனத்திற்கு நன்றி
***
நன்றி வெங்கட்.
****
தொடர் ஊக்கத்திற்கு நன்றி அமைதி அப்பா
***
சித்ரா : வாங்க .. சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் நீங்க எட்டி பார்த்ததில் மகிழ்ச்சி
***
சக்தி: நன்றிங்க
***
வித்யா: நன்றிங்க எப்பவும் இப்படி simple ஆ -முடிச்சுடுவீங்க..உங்க ஸ்டைல் அதானோ ?:))
***
கணேஷ் ராம்: முதல் வருகை என நினைக்கிறேன்; நன்றி
அற்புதம்யா. அற்புதமான எளிமையான கருத்துக்கள்.
ReplyDeleteஇது என் முதல் பாராட்டு.
ReplyDeleteஅருமையான கருத்து.
நன்றி.
அமுத பாரதி : தங்களின் மனம் திறந்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற ஊக்கங்கள்தான் தொடர்ந்து எழுத வைக்கும். Thank you very much
ReplyDelete****
ABS TechInd : முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது.//
ReplyDeleteகடைசி வரிகள் மட்டுமல்ல இதுவும் நச். தொடருங்கள்.
//
ReplyDeleteஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன்.
ரொம்பச் சரிங்க....
இது எனக்கு.. ரொம்ப தேவையான அவசியமான ஒன்று, எனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விட்டேன் நன்றி ..
ReplyDeleteஇது எனக்கு.. ரொம்ப தேவையான அவசியமான ஒன்று, எனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விட்டேன் நன்றி ..
ReplyDeleteரெம்ப நல்ல சிந்தனை. தொடரவும் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ரெம்ப நல்ல சிந்தனை. தொடரவும் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்