சென்னை ஸ்பெஷல்: திருவல்லிகேணி : பழைய புத்தக கடைகள்
எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களே பழைய புத்தக கடைகளை விரும்பி செல்கிறார்கள். நானும் கூட தான்... இங்கு பல முறை அற்புத புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும். ஒரு காலத்தில் மூர் மார்க்கட் பழைய புத்தகங்களுக்கு புகழ் பெற்ற இடமாயிருந்தது. தற்போது அவ்வளவு பெரிய பழைய புத்தக சந்தை எங்கும் இல்லை. அதற்கு அடுத்த படி திருவல்லிகேணியில் நிறைய பழைய புத்தக கடைகள் உள்ளன. சேப்பாக் ஸ்டேடியம் அருகே, பீச்சிலிருந்து நடந்து போகும் தூரம் தான். நீங்கள் புத்தக ஆர்வலர் எனில் இந்த கடைகளுக்கு ஒரு முறை சென்று பாருங்கள் நம்ப முடியாத விலையில் அருமையான புத்தகங்களை அள்ளி வரலாம்.
வலை பக்கம் ரசித்தது
என். கணேசன் எழுதிய குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கை தத்துவமும் என்ற பதிவை வாசியுங்கள். படத்தை பற்றியும் அதில் உள்ள வாழ்க்கை தத்துவங்களையும் எளிமையாய் கூறியுள்ளார். படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டதுடன், வாசிக்கும் போதே அந்த தத்துவங்கள் நிறைய சிந்திக்கவும் வைத்தது.
நம்பிக்கை கார்னர்
இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் சொன்னது: " எந்த வேலையாய் இருந்தாலும் ரொம்ப யோசித்து கொண்டிருக்காதீர்கள். முதலில் வேலையில் இறங்கி விடுங்கள். பின் அந்த வேலையே தனக்கு தேவையான விஷயங்களை வாங்கி கொள்ளும்" . எவ்வளவு உண்மை இது!! விஷயங்களை துவங்கும் வரை தான் பிரச்சனை. துவங்கிய பின் யார் யாரோ உதவ எந்த வேலையும் நன்றாக முடிந்து விடுகிறது தானே!!
சந்தேகம்
டாக்டர் படித்தவர்கள் மேலே பல கோர்ஸ்கள் படிக்கிறார்கள். இதில் DGO என்று சொல்கிற Gynacology முடித்தவர்கள் பெரும்பாலும் பெண்களாக தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு வைத்தியம் பார்ப்பதால் என்றாலும், மற்ற பிற நோய்களுக்கு ஆண் டாக்டர்களே பார்க்கிறார்களே! நீங்கள் DGO முடித்த ஆண் டாக்டரை பார்த்திருக்கிறீர்களா? தெரிந்தால் சொல்லுங்கள்..
அய்யாசாமி
அய்யாசாமி இரவகளில் நடுவில் எழுந்தால் நேரம் பார்ப்பதில்லை. இது ஏன் என்று கேட்ட போது நேரம் பார்த்தால் டென்ஷன் ஆகிடுது என்கிறார். மேலும் கிளறிய போது, "நேரம் தெரிந்தால், தூக்கம் கொஞ்ச நேரம் வரா விட்டாலும் காலை வரை இன்னும் ரொம்ப நேரம் விழிக்கனுமா என டென்ஷன் வந்துடுது. இதனால் காலை சூரிய வெளிச்சம் வந்த பின் தான் நேரம் பார்ப்பேன்" என்றார். யோசித்தால், இவர் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்க தான் செய்யுது.
ரசிக்கும் விஷயம் : பசுமை
ரசிக்கும் விஷயம் அவ்வபோது தொடர்ந்து எழுத எண்ணம். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த சில மாதங்களாக வேலை பளு மட்டுமல்லாது ஏதோ சில தேவையற்ற சுமைகள் மனதுள். வாழ்க்கையை நன்றாக என்ஜாய் செய்ய வில்லையோ என்ற எண்ணம் ஒரு பக்கம்.
சென்ற பதிவில் " மேகம்" பற்றி எழுதிய பின், இதே போல் ரசிக்கும் விஷயங்கள் என்னென்ன என பட்டியிலிட்டு பார்த்த பின் தான், வாழ்க்கையில் தொடர்ந்து பல விஷயங்களை ரசித்து கொண்டும், என்ஜாய் செய்து கொண்டும் இருப்பது புரிந்தது. அப்படி பட்டியலிட்ட சில வானவில்லில் தொடரும். நீங்களும் ரசித்தால் " சேம் ப்ளட்" சொல்லலாம்..
****
பச்சை நிறத்தில் வயல்கள், புல், மரங்கள் என எதை பார்த்தாலும் மனசு சில நொடிகள் பச்சையில் லயித்து விட்டு மீள்கிறது. பசுமையை பார்ப்பது மனதுக்கு மிக நல்லது செய்யும் என்கிறார்கள். டிவியில் ஏதேனும் நிகழ்ச்சி பார்க்கும் போது கூட பசுமையான காட்சிகள் எனில் உதடு புன்னகை பூசி கொள்கிறது.
மிச்சேல் ஒபாமா
ஒபாமா வருகை குறித்த தகவல்கள்/ அவர் பேச்சு நான் உன்னிப்பாய் கவனித்தேன். நிற்க. அவர் மனைவி மிச்சேல் இளைஞர்கள் இடையே பேசிய சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு:
" நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். எங்களால் வெளி நாடு செல்வது என்பதெல்லாம் நினைக்க முடியாத விஷயம். ஆயினும் நான் பெரிய நிலையை அடைவேன் என நம்பினேன். நீங்களும் பெரிய விஷயங்களை அடைவீர்கள் என நம்புங்கள். கனவு காண்பதும், அதனை அடைய முயல்வதும், உங்களுக்கும் உங்கள் சுற்றி உள்ள உலகிற்கும் மிகுந்த நன்மை பயக்கும். நீங்கள் எது செய்தாலும் அதை சிறந்த முறையில் செய்யுங்கள். நிச்சயம் முன்னேறுவீர்கள். (Aim for excellence in whatever you do; you will succeeed).
me the first..
ReplyDeleteபடிச்சிட்டு அப்புறமா கருத்த சொல்லுறேன்.. ரைட்டா..?
//2nd point " எந்த வேலையாய் இருந்தாலும் ரொம்ப யோசித்து கொண்டிருக்காதீர்கள். முதலில் வேலையில் இறங்கி விடுங்கள்."//
ReplyDeleteஒக்கே படிச்சிட்டேன்.. பாயின்ட் பை பாயின்ட்
1. திருவல்லிக்கேணி புஸ்தகக் கடையா..? எங்க அண்ணன் எந்த ஊருக்குப் போனாலும் பழைய புஸ்தகக் கடையில கண்டிப்பா புக் வாங்குவாரு.... திருவல்லிக்கேனில கூட வாங்கியிருக்காரு.. நா அவரு கூட போயிருக்கேன்.
2. என்னுடைய மேலதிகாரியோட அப்ரோச் இதுதான்..
3. ஆண் DGO .. நா கூட இதைப் பத்தி யோசிச்சிருக்கேன்.. பாத்ததில்லை..
4. அய்யாசாமி புத்திசாலிதான்..
5. இயற்கைய ரசிக்க யாராவது மாட்டேன்னு சொல்லுவாங்களா.
6. //மிச்சேல் ஒபாமா// -- சரியாத்தான் சொல்லுறாங்க..
நீங்கள் DGO முடித்த ஆண் டாக்டரை பார்த்திருக்கிறீர்களா? தெரிந்தால் சொல்லுங்கள்..
ReplyDelete.....தமிழ் நாட்டில் தெரியலைங்க. இங்கே (அமெரிக்காவில்) ஆண்களே அதிகமாய் இந்த துறைக்கு வந்து உள்ளார்கள். அவர்கள் பெண்களை பரிசோதிக்கும் போது, துணைக்கு ஒரு பெண் nurse கூட இருக்க வேண்டும் என்பது மட்டும் அரசாங்க விதி.
வானவில் = சிந்தனை & செய்தி குவியல்.
ReplyDeleteஅருமை.
பிரான்சிலும் சித்ரா சொல்லுவது போலவே!
ReplyDeleteகணவரும் உடன் இருக்கலாம்.
தொகுப்பு அருமை அண்ணா...
ReplyDeleteசெங்கல்பட்டில் ஒரு ஆண் மருத்துவர் இருக்கிறார் எனக்குத் தெரிந்து.
ReplyDeleteபசுமை - 5.30 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக ஜன்னலோர பயணத்தின் போது தெரியும் பச்சை வயல்வெளிகள் ரம்மியமாக இருக்கும்.
எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் ஆண்கள் DGO படிக்க முடியாது. பல வருடங்களாக பிரசவம் பார்க்கவும் அனுமதி கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் (that too only in exception cases).
ReplyDeleteமாதவன்: மிக்க நன்றி. உங்களை மாதிரி இப்படி அலசி பின்னூட்டம் இடுபவர்கள் அரிது, மறுபடி நன்றி
ReplyDelete**
தகவலுக்கு நன்றி சித்ரா
**
பட்டர்பிளை சூரியா: ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. ரசித்து பாராட்டியமைக்கு நன்றி
**
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்
**
மிக்க நன்றி பாலாஜி சரவணா
**
நன்றி வித்யா.
**
தகவலுக்கு நன்றி ஆதி மனிதன்
பசுமை எப்போதுமே ரசிக்க வைக்கிற ஒரு விஷயம்.
ReplyDeleteதில்லியில் டி.ஜி.ஓ. படித்த சில ஆண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை. ஆண் மருத்துவர்களிடம் செல்ல இந்தியாவில் அத்தனை வரவேற்பு இல்லை என்பதாலேயே ஆண் மருத்துவர்கள் இந்தத் துறையிலே குறைவு.
ஆண் கைனகாலஜிஸ்டுகள் இங்கே அபுதாபியிலும் சிலர் உண்டு. அதுவும் அரேபியர்கள்தான்!! சவூதியில் 1982லேயே ஒருவர் இருந்தார்.
ReplyDeleteஇரவில் விழிப்பு வந்தால் நானும் நேரம் பார்க்கமாட்டேன். ஒருவேளை மணி 4 என்றால், ‘அய்யோ, இன்னும் ஒன்றரைமணி நேரம்தான் தூங்கமுடியுமா’ என்ற டென்ஷனில் அந்த ஒன்றரைமணி நேரமும் தூக்கம் வராது!!
பசுமைக்கு ஓட்டு. மேகங்களை ரசிப்பதோடு படம் பிடிப்பதும் எனக்குப் பிடித்தமான ஒன்று.
ReplyDeleteநல்ல தொகுப்பு.
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்...
ReplyDelete//துவங்கும் வரை தான் பிரச்சனை. துவங்கிய பின் யார் யாரோ உதவ எந்த வேலையும் நன்றாக முடிந்து விடுகிறது தானே!!//
ReplyDeleteமைண்ட்ல வெச்சுக்கறேன்
பலதரப்பட்ட செய்திகளை அருமையாக தொகுத்துள்ளீர்கள். பசுமை எனக்கும் பிடித்த ஒன்று. பிரயாணத்தின் போது ஜன்னலோரம் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பேன்.
ReplyDeleteஅப்போ ஸ்டார்ட்டிங் ட்ரபிள் நிறைய பேருக்கு இருக்கு..:))
ReplyDeleteகலக்கல் வில்! :)
ReplyDeleteதகவலுக்கு நன்றி வெங்கட்
ReplyDelete**
ஹுசைனம்மா: சரியா சொன்னீங்க. நன்றி
**
நன்றி ராமலட்சுமி; பசுமைக்கென நீங்க நிறைய புகை படங்கள் உங்கள் ப்ளாகில் போட்டுள்ளீர்களே. பார்த்து/ரசித்துள்ளேன்
**
வாங்க சங்கவி; நன்றி
**
ரகு: ரைட்டு
**
கோவை டு தில்லி: நன்றி
**
மிக்க நன்றி ராதாக்ருஷ்ணன் சார்
ReplyDelete**
தேனம்மை மேடம்: ஆம். அப்படி தான் தெரிகிறது
**
நன்றி ஷங்கர்
வணக்கம் அண்ணா.
ReplyDeleteஎஸ்.எம்.எஸ்க்கு நன்றி.
நன்றி அப்துல்லா
ReplyDeleteகதம்பமாக இருக்கிறது.!
ReplyDeleteஅத்தனையும் மணக்கிறது !!
அன்புடன்,
”ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/
there is no rule as such...that males are prohibited to learn obstetrics and gynaecology. infact the authority in this subject, dr.ramaswamy& lakshmanaswamy mudaliar, dr.shaw,dr.dutta are all males. We read their books only.many male friends of mine are O&g specialists.In other states of India we find male O&G specialists in equal numbers.An interesting info. the first female O&G specialist is Dr.madam.Windy savage, in this century only.at her times they thougt women are not fit for O&G speciality.She had to face lot of hurdles among her male colleagues.A doctor is genderless... noone can ever put such rules on doctors. thanks for the opportunity to share.
ReplyDelete