ஜெட்லி திருமணமும் பதிவர் சந்திப்பும்
சமீபத்தில் நமது பதிவுலக நண்பர் ஜெட்லிக்கு திருமணம் மிக சிறப்பாக நடந்தது. சுட சுட ஜெட்லி எழுதும் சினிமா விமர்சனங்கள் நீங்கள் நிச்சயம் வாசித்திருப்பீர்கள். திருமண வரவேற்பிற்கு வர சொல்லி ஜெட்லி பேசிய போது எங்களிடையே நடந்த உரையாடல்:
" கல்யாணம் எங்க ஜெட்லி?"
"எக்மோர் ஆல்பர்ட் தியேட்டர் இருக்குள்ள அண்ணே. அதுக்கு பக்கத்தில.. "
" ஏம்பா.. தியேட்டர் வச்சு தான் அடையாளம் சொல்லுவீங்களா? உங்க கடை திருவான்மியூரில் எங்க இருக்கு?"
" தியாகராஜா தியேட்டர் பக்கத்திலே அண்ணே" என ஜெட்லி முடிக்கும் முன் போனிலேயே பெரிதாய் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். " எல்லாம் தியேட்டர் வச்சு தானா?"
இடமிருந்து வலம்: கே.ஆர்.பி செந்தில், உண்மை தமிழன், மயில் ராவணன், சங்கர், கேபிள், சிரிப்பு போலிஸ் ரமேஷ், எறும்பு ராஜ கோபால் & மோகன் குமார்
ஜாக்கி சேகர் பின்னர் வந்தார். அனைவரும் மனம் விட்டு அரட்டை அடித்து அருமையான சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தோம்
கேபிள் & சங்கர் (ஜெட்லி நண்பர் ) தவிர பலரை முதன் முறையாக சந்திக்கிறேன். குறிப்பாக மயில் ராவணனுடன் நிறைய பேச முடிந்தது. நல்ல மனிதர். இன்னும் நிறைய பழக வேண்டும் என எண்ண வைத்தார்.
ஜெட்லி மண வாழ்க்கை வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..
அய்யா சாமி சிந்தனை
பண்டிகை நாளில் சாப்பாடு செஞ்சு மாடியில் வச்சா காக்கா வந்து சாப்பிட மாட்டேங்குது.
சாதாரண நாளில் மாடியில் கோதுமை, பருப்பு ஏதாவது காய வச்சா காக்கா வந்து இறைச்சிட்டு போயிடுது.
என்ன உலகம் சார் இது!!
ரசிக்கும் விஷயம் : சுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம்
கடந்த சில மாதங்களாக காலையில் வீட்டு வேலை செய்து கொண்டே சுப்ர பாதம் & கந்த சஷ்டி கவசம் கேட்கும் வழக்கம் வந்துள்ளது. ஹவுஸ் பாஸ் மூலம் வந்த பழக்கம் என்றாலும் இது நன்றாகவே உள்ளது ! சுப்ர பாதம் & கந்த சஷ்டி கவசம் - இரண்டிலும் குறிப்பிட்ட சில இடங்கள் கேட்கும் போது ரொம்ப உற்சாகமாக இருக்கும். எம். எஸ் அம்மாவின் குரல் தெய்வீகம்!!
அறிவிப்பு
தொடர்ந்து மூன்று வாரங்களாக அடுத்தடுத்து வானவில் மட்டுமே பதிவாக வருகிறது. இவ்வாறு நடப்பது இது முதல் முறையாக இருக்கலாம்.
விரைவில் "வாங்க முன்னேறி பார்க்கலாம்" தொடர் மீண்டும் துவங்குகிறது. இந்த வாரம் புதன் அல்லது வியாழன் இப்பதிவு வெளி வரும். வழக்கம் போல் உங்கள் ஆதரவை தருக. வாரா வாரம் வெளி வருமா என உறுதி சொல்ல முடிய வில்லை. ஆனால் இயலும் போதெல்லாம் எழுதவும், முடிந்தால் புத்தகமாய் கொண்டு வரவும் எண்ணம். பார்க்கலாம்
ரசித்த SMS:
To the question of your life, you are the answer. To the problem of your life, you are the only solution - Albert Einstein.
மாமி
நான் சென்னை வந்த போது தங்கிய முதல் இடம் எனது மாமியின் வீடு. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருதய நோயால் அவதிப்பட்ட மாமி சமீபத்தில் மரணமடைந்தார். இதய வால்வ் மாற்றி முப்பது ஆண்டுகள் ஆகி, பின் அதே வால்வில் பிரச்சனை வந்தது. புகழ் பெற்ற மருத்துவரான தணிகாசலம் " ஆப்பரேஷன் செய்தால் பிழைப்பது கடினம்; இப்படியே மருந்து மாத்திரையில் தொடரலாம் " என சொல்லி அதன் பின் 6 அல்லது 7 ஆண்டுகள் இருந்தார்.
எங்கள் ஊரிலிருந்து சென்னை வரும் பலரும் மாமா- மாமி வீட்டை தான் நாடுவார்கள். அனைவருக்கும் அலுக்காமல் சமையல் செய்து அன்புடன் உபசரிப்பார். சிரித்த முகம். இந்த தீபாவளி அன்று வீட்டில் செய்த பலகாரங்களுடன் சென்று பார்த்து விட்டு ஆசீர்வாதம் வாங்கி வந்தேன். அத்தனை உடல் உபாதைகளையும் தாங்கி கொண்டு கடைசி வரை தன் கடமையை செய்தவர். மிக கடுமையான ஒரு நோயுடன், என்றும் தன் கடமையை செய்த, பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் எண்ணாத ஒரு ஜீவன். தன் குழந்தைகள் இருவரும் வாழ்க்கையில் குழந்தை, வீடு என செட்டில் ஆனதை பார்த்து விட்டு (இவர் மகள் எனது சின்ன அண்ணி) நிம்மதியாக இறந்தார்.
இவரை போல் நாமும் கஷ்டங்களையும் வேதனையும் சகித்து கொண்டு புன்னகையுடன் கடமைகளை கடைசி வரை செய்ய வேண்டும் என தோன்றியது. இவர் இறந்த பின் வந்து பார்த்த டாக்டர் தணிகாசலம் சொன்னது: "I have lost a person who was my patient for the last 40 years!!"
கவனித்த விஷயம்
இந்த மரணத்திற்கு வந்திருந்த பல உறவினர்கள், நண்பர்களை கவனித்த போது நாற்பது அல்லது ஐம்பது வயதை தாண்டிய பல அண்ணன்- தம்பிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. தம்பியை யாரென்றே தெரியாத நபர் போல் இருக்கிறார்கள். இது ஏன் என என் அண்ணனிடம் கேட்ட போது " சொத்து பிரிக்கும் போது பொதுவா சண்டை வந்துடும்; அதுக்கு பிறகு பேச்சு வார்த்தை இருக்காது" என சாதாரணமாய் சொன்னார்.
"தம்பி உடையான் படைக்கஞ்சான்" ; " தான் ஆடா விட்டாலும் சதை ஆடும்" என்றெல்லாம் பழமொழிகள் இருக்க, நிஜம் வேறு விதமாய் இருப்பது மனதை தைத்தது.
நல்ல தொக்குப்பு மோகன்.. ஜெட்லிக்கு திருமண வாழ்த்துகள் :)
ReplyDeleteஜெட்லிக்கு திருமண வாழ்த்துகள்..
ReplyDeleteஉங்களை நேரில் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteசந்தோஷம் துக்கம் என கலவையான பதிவு.
ReplyDeleteஉறவுகள் கூடும் விஷயத்தில் தொடங்கி, உறவுகள் பிரிகின்ற வேதனையில் முடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅய்யாசாமி... அதுக்கு என்ன பிடிக்குமோ, அத தேடி இருக்கும்..
ReplyDelete'மாமி' மேட்டர் -- நல்ல மேசெஜு.. உடல் நலம் குன்றினாலும் , தன்னம்பிக்கை குன்றாது போராடவேண்டும்.. அனைவரையும் அன்போடு உபரசிக்க வேண்டும்..
corrigendem...
ReplyDeleteஉபரசிக்க = உபசரிக்க
This comment has been removed by the author.
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு. நன்றி மோகன்.
ReplyDeleteதிரு.ஜெட்லி தம்பதிக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவை
படித்துக்கொண்டு வந்த பொழுது கடைசியில் தாங்கள் எழுதிய விஷயம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. அது, 'அண்ணன்- தம்பிகள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை' என்பதுதான். சற்று நேரத்துக்கு முன்புதான் இது குறித்து ஒரு பதிவு போட்டேன். அவசியம் படித்துப் பார்க்கவும்.
http://amaithiappa.blogspot.com/2010/11/blog-post_22.html
நன்றி.
//பண்டிகை நாளில் சாப்பாடு .. காக்கா வந்து சாப்பிட மாட்டேங்குது.//
ReplyDeleteஅதுக்கும் டிரெடிஷனல் ஃபுட் வெறுத்து, ஃபாஸ்ட் ஃபுட்தான் பிடிக்குதுபோல!! ;-))
மாமி - இம்மாதிரி மனிதர்கள்தான் பலருக்கும் ஊக்கமாக, உதாரணமாக அமைகிறார்கள். சிறந்த மருத்துவர் கிடைத்ததும் பாக்கியம்.
சொத்து - அண்ணந்தம்பி மனத்தாங்கல் - ஈகோ - என்ன சொல்ல? பெரியவர்கள் நல்லவிதமாக இருக்கும்போதே சரிசமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவது மூலம் ஓரளவு பிரச்னையைத் தவிர்க்கலாம்.
ஜெட் லீக்குத் திருமண வாழ்த்துகள்.
ReplyDeleteமகிழ்ச்சி,சோகம்,விரக்தி நல்ல கதம்பக் கலவை.உலகமெ இவ்வளவுதான்.
நன்றி ராமசாமி கண்ணன் & கலாநேசன்.
ReplyDelete**
ஜாக்கி: உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.
**
வித்யா: ஆம். இந்த வாரம் சந்தோசம் துக்கம் இரண்டும் கலந்து இருந்தது. அதுவே பிரதிபலித்துள்ளது
**
பெயர் சொல்ல: நன்றி. அப்படி பிளான் செய்து எழுதலை. திருமண நிகழ்வுக்கு அடுத்து துக்க சம்பவம் வேண்டாமே என சற்று தள்ளி எழுதினேன். மாமி பற்றி பதிவு செய்யாமல் போக கூடாது என்றும் தோன்றியது.
**
மாதவன்: நன்றி. நீங்க எழுதியதை ஹவுஸ் பாஸ்கிட்டே காட்டினா சட்னி தான்.. யாரா? யாரோ! :))
ReplyDelete**
நன்றி வெங்கட்.
**
நன்றி அமைதி அப்பா: ஆச்சரியம் தான் இருவரும் இது பற்றி இன்று எழுதியது.
**
ஹுஸைனம்மா: நன்றி; அம்மா அப்பா பிரித்து கொடுத்து விட்டால், சொத்து இல்லாத மனிதர்களை மதிக்க மாட்டார்கள் என நினைக்கிறார்கள். எனவே அவர்கள் உயிருடன் இருக்கையில் பிரிப்பதில்லை. குறைந்தது யாருக்கு என்ன சொத்து என்றாவது சொல்லி விடலாம்.
**
நீண்ட நாளுக்கு பின் வந்தமைக்கு நன்றி வல்லிசிம்மன் அவர்களே!
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.....
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர் ஜெட்லிக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாக்காய்க்கு என்ன பிடிக்குதோ:)? ஹுஸைனம்மா சொல்றதும் சரியாத் தோணுது.
மாமிக்கு என் வணக்கங்கள்.
கவனித்த விஷயம் பரவலாக நடக்கிறதுதான் :(!
தொகுப்பு நன்று.
வாங்க சரவணா; நலமா?
ReplyDelete**
ஜெட் லி & சதீஷ் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
**
நன்றி ராம லட்சுமி. பல விஷயம் பற்றியும் கருத்து சொன்னது மகிழ்ச்சி
ஜெட்லிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete40 வருடங்கள் இருதய நோயுடன் போராடியவர் மிகவும் தைரியசாலிதான்.
நல்லதொரு நிகழ்வு ஜெட்லி கல்யாணம்.
ReplyDeleteஉங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்களும் ‘ஜிம்’ போறோம்ல :) பகிர்வுக்கு நன்றிண்ணே.
ஜெட்லிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteதல நீங்க கலக்குங்க, விரைவில் புத்தகம் எதிர்பார்க்கிறேன், வாழ்த்துகள்
நண்பர் ஜெட்லி தம்பதிக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் மாமியின் வாழ்வின் நிகழ்வை படித்த போது மனம் நெகிழ்ந்து.
ஜெட்லிக்கு திருமண வாழ்த்துகள்.
ReplyDeleteசந்தோஷம் துக்கம் என கலந்து வேதனையில் முடித்திருக்கிறீர்கள்.
அருமையான சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தோம் //
ReplyDeleteசொல்ல வந்தது இதைத் தானே. டக்குன்னு சொல்லாம, என்னது இது சின்னப் புள்ளத்தனமா...
சாப்பாடு செஞ்சு மாடியில் வச்சா காக்கா வந்து சாப்பிட மாட்டேங்குது.//
காக்கா வந்து சாப்பிட்டுப் போய்ட்டா அப்புறம் அய்யாச்சாமி என்ன சாப்பிடறது..
சுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம் //
அப்படியே மகிஷாசுர மர்த்தினியும் சூரசம்ஹாரமும் கேட்டுப் பாருங்க. பொருத்தமா இருக்கும்.
வாங்க முன்னேறி பார்க்கலாம் //
ப்லாக் லே-ஔட் மாத்தப் போறீங்களா, ஏணியெல்லாம் வெச்சு.
மாமியின் பிரிவிற்கு என் அனுதாபங்கள் மோகன். ஒருவரின் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றென்றாலும் மற்றவர்களுக்கு அது தரும் பாதிப்பு மிக அதிகம்.
ReplyDeleteநன்றி பின்னோக்கி; ஆம். மாமி நோயையும் மரணத்தையும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ReplyDelete**
வாங்க மயில் ராவணன்: என்னது ஜிம்மா? அசத்துங்க. இந்த நல்லது நடக்க நாம் அன்று இது பற்றி பேசியதும் சிறு காரணம் என மகிழ்ச்சி; தொடர்ந்து செல்லுங்கள்
**
வாங்க முரளி; புத்தகம் வெளி வரும். ஆனால் எப்ப வெளியிடுவது என டார்கெட் வச்சிக்கிட்டு டென்ஷன் செய்து கொள்ள விரும்பலை. அலுவல் டென்ஷனே போதும். புத்தக வெளியீடை நிதானமா செய்யலாம்.
**
புதுவை சிவா: நன்றி. நீங்களும் ஈர மனம் படைத்தவர் என நினைக்கிறேன், அதனால் தான் இது படித்து நெகிழ்ந்திருப்பீர்கள்
**
நன்றி குமார்
**
வாங்க விக்கி; பார்மில் இருக்கீங்க. அடிச்சு ஆடுறீங்க
நல்ல தொகுப்பு
ReplyDeleteசந்தோஷ சந்திப்பு ...
ReplyDelete//முரளிகுமார் பத்மநாபன் said...
ReplyDeleteஜெட்லிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
தல நீங்க கலக்குங்க, விரைவில் புத்தகம் எதிர்பார்க்கிறேன், வாழ்த்துகள்
//
அதேதான்.
நன்றி ராதா கிருஷ்ணன் சார்.
ReplyDelete**
நன்றி செந்தில்; உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
**
அட நரசிம்!! அப்பப்ப வாங்க சாரே!!
kandha sashti kavacham ms subbulakshmi paadiyathillai...
ReplyDeletesoolamangalam sisters..
திரு. ஜெட்லி அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
பண்டிகை நாளில் சாப்பாடு செஞ்சு மாடியில் வச்சா காக்கா வந்து சாப்பிட மாட்டேங்குது.
ReplyDeleteசாதாரண நாளில் மாடியில் கோதுமை, பருப்பு ஏதாவது காய வச்சா காக்கா வந்து இறைச்சிட்டு போயிடுது.
என்ன உலகம் சார் இது!!
super joke!