Wednesday, December 29, 2010

2010: சிறந்த பத்து பாடல்கள்

இந்த வருடத்தின் சிறந்த பத்து பாடல்களின் தொகுப்பு. இது என் ரசனை சார்ந்து அமைந்ததே. உங்களின் ரசனை நிச்சயம் மாறுபடலாம்.

(சென்ற ஆண்டு : 2009-ன் சிறந்த பாடல்கள் தொகுப்பு  பற்றிய பதிவு இதோ)

எந்த வித ரேங்கிங்கும் (No: 1, No: 2) இல்லாமல் பிடித்த 10 பாடல்கள்...

பூக்கள் பூக்கும் தருணம் (மதராச பட்டினம்)
இசை: G.V.  பிரகாஷ் குமார்

(பாடியவர்கள்: ஹரிணி ரூப் குமார் ஆண்ட்ரியா)

கஜலில் ஆரம்பித்து ஹிந்துஸ்தானி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணிக்கும் பாடல். சந்தேகமே இன்றி இந்த வருடத்தின் சிறந்த மெலடிகளில் ஒன்று. படமாக்கப்பட்ட விதமும் கவிதை. பாடலுக்கான குரல்கள் சரியான தேர்வு.

"நேற்று தேவை இல்லை. நாளை தேவை இல்லை. இன்று இந்த நொடி போதுமே" .

"எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து இன்று ஈர மழை தூவுதே . "

காதலை சொல்லும் அற்புத வரிகள்..

கஜலில் இயல்பாய் இருக்கும் சோகமும் அழகும் உயிர்ப்போடு இந்த பாடலில்..



இதுவரை இல்லாத உணர்விது (கோவா)

இசை: யுவன் ஷங்கர் ராஜா (பாடியவர்கள் ஆண்ட்ரியா & அஜீஷ்)

மற்றொரு அற்புதமான டூயட் பாடல். காதலை முதலில் சொல்வதில் ஆண்/ பெண் இருவருக்கும் உள்ள தயக்கம் இப்பாடலின் கரு. பாடலில் மெட்டு ஒரே சீராக இல்லாமல் சற்று மாறி கொண்டே இருப்பது கூட துடிக்கும் அவர்கள் மன நிலையை தான் உணர்த்துவதாக தோன்றுகிறது (அடடா குறீயிடெல்லாம் புரிய ஆரம்பிச்சுடுச்சே!! இலக்கிய வாதி ஆகிடுவோமோ?) சூப்பர் சிங்கர் ஜெயித்த அஜீஷ் பாடிய முதல் பாடல் ! முதல் பாட்டே அவருக்கு அருமையான பாட்டாக அமைந்து விட்டது. (என்ன ஒன்னு .. படம் ஓடலை; அதுக்கு அவர் என்ன செய்வார் பாவம்).


வா வா நிலவை பிடிச்சு தரவா (நான் மகான் அல்ல) 
இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: ராகுல் நம்பியார் 

நல்ல மெட்டு, பீட், அருமையான வரிகள் என அனைத்தும் அருமையாய் அமைந்த பாடல் இது. முதல் சரணத்துக்கு முன் வரும் ப்ளுட் இசை யுவனின் தந்தை ராஜாவை நினைவு படுத்துகிறது. (இது பாராட்டு தான்!!) 

கவலை நம்மை சில நேரம் கூறு போட்டு கொண்டாடும். .
தீயினை தீண்டி வாழும் போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் ...

இவை மட்டுமின்றி இன்னும் பல வரிகளும் அருமை. (இதே படத்தில் இறகை போலே பாடல் கூட நல்ல மெலடி தான்) 

காதல் அணுக்கள் (படம்: எந்திரன்)

இசை: A.R. ரஹ்மான்
(பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ்)

எந்திரனில் சில பாடல்கள் அருமை. என்றாலும் ஒரே பாட்டு சொல்லனும்னா பல காரணங்களால் காதல் அணுக்கள் பாட்டு வந்துடுது. முதலாவதா அறிவியல் வார்த்தை/ உண்மைகளால் எழுதிய இந்த பாட்டின் பின்னணி.   ஆண் குரல் (விஜய் பிரகாஷ் ) இது வரை கேட்காத ஒரு குரலா இருக்கு. படமாக்கப்பட்ட இடமும் இது வரை பார்க்காத அட்டகாசமான லொகேஷன். ரஜினியில் ஸ்டைல் & ஐஸ்வர்யா ராய் கிரேஸ் இவை பாடலை பார்க்கும் போதும் ரசிக்க வைக்கின்றன. இந்த பாட்டு பிடிக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஸ்ரேயா கோஷல் !!

ஜில்லா விட்டு படம்: ஈசன்

(இசை ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்: தஞ்சை செல்வி)


இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் இன்னும் பார்க்க வில்லை. பார்த்தால் பிடிக்குமோ இல்லையோ தெரியலை. தமிழ் படத்தின் mandatory குத்து பாட்டாக எடுக்க பட்டுள்ளதாக படித்தது உறுத்துகிறது.

பாடலில் உள்ள பெண்ணின் கதை & சோகம் நிஜம் போலவே உணர வைக்கிறது. அருமையான கிராமத்து இசை, புது குரல், முக்கியமாய் பாடலின் வரிகள் இவற்றால் நினைவில் நிற்கும் பாடல்..

ஏய் துஷ்யந்தா (படம்: அசல்) இசை: பரத்வாஜ் 
பாடியவர்கள் குமரன், சுர்முகி
இந்த பாடல் எப்படி இந்த லிஸ்டில் வந்தது என சிலர் ஆச்சரிய படலாம். ஒரே காரணம் பழைய " பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலை சில இடங்களில் ரீமிக்ஸ் செய்தது தான் ! துவங்கும் போதே அந்த பாடலின் ஹம்மிங் தான் உபயோகித்துள்ளனர். மேலும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் வரும் இடங்கள் அனைத்தும் இனிமை. பாடலை திரையில் பார்க்கும் போது இப்படத்திற்காக இளைத்த பாவனா செம கியூட்.. (ஹி..ஹி..)

துளி துளி மழையாய் வந்தாளே.. (படம்: பையா)
இசை: யுவன் ஷங்கர் ராஜா (பாடியவர்: ஹரிசரண்)

மழையும் காதலும் கலந்த இப்பாடல் இந்த வருடத்தின் சிறந்த சோலோ மெலடிகளில் ஒன்று. மழை பாடல்களுக்கென்று ஒரு அழகு உண்டு. அதை இந்த பாடலிலும் காண முடியும். காதலியின் வருகையை மழையின் வருகையோடு ஒப்பிடுவது நைஸ்.

மெட்டு, இசை, பாடிய விதம் எல்லாம் ரொம்ப எளிமையாக இருந்தாலும் என்னவோ ஒன்று இந்த பாடலை ஈர்க்க வைக்கிறது.

ஜிங்கு சிக்கா (படம்: மைனா) 
இசை: இமான்

பாட்டில் அடிக்கடி வரும் "ஜின்க் சிக்கா" வும் ரீப்பிட்டாகும் இசையும் இனிமை. பாடலை  படமாக்கிய  விதமும் - அந்த பஸ், சாதாரண மனிதர்கள் , வெளியே உள்ள பசுமை, என ரசிக்கும் படி இருந்தது. இதே படத்தில் "கையை பிடி" பாடலும் கேட்பதற்கு ரொம்ப சுகமான பாடல் தான்

ஹோசன்னா & மன்னிப்பாயா (விண்ணை தாண்டி வருவாயா) 
இசை: A.R. ரஹ்மான்      

உண்மையில் இந்த இரண்டு பாடல்களில் ஒன்றை மட்டும் சொல்ல ரொம்ப சிரமமாய் இருக்கு. ஹோசன்னா ரொம்ப ஸ்டைலிஷ் பாடல் என்றால் மன்னிப்பாயா அதன் உணர்வுகளால் மனதை தொடுகிறது. மன்னிப்பாயாவில் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என திருக்குறள் கேட்கும் போது மனது நெகிழ்கிறதென்றால், ஹோசன்னா நடுவில் ஆங்கில வரிகள் டான்ஸ் ஆட தோன்றுகிறது.

பாடல் வரிகளிலும் ரெண்டு பாடலும் போட்டி போடுகின்றன.

" ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே! என மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே.."

"ஒரு நாள் சிரித்தேன்.. மறு நாள் வெறுத்தேன்.. உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே"

இப்படி ரெண்டு எதிர் எதிர் பாடல்களை ஒரே படத்தில், ஒரே உணர்வின் பின்னணியில் வைத்த ரகுமானுக்கு வந்தனம்!!

காதல் வந்தாலே (சிங்கம்) இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

எப்போது கேட்டாலும் எழுந்து ஆட வேண்டும் போல் தோன்ற வைக்கும் பாடல். இதனை எழுதும் போது கூட இந்த பாடல் ஒலித்து கொண்டிருக்க, பின்னங்கால்கள் தாளம் போட்டு கொண்டிருக்கின்றன.

பாடலை என்னெனவோ கேமரா டிரிக் (ஹைட்! ஹைட்! ) செய்து எடுத்திருந்தாலும் சூரியாவை யார் பார்த்தது??  அனுஷ்கா அம்மணி உதட்டை சுழித்து கண் அடித்தது சன் டிவி புண்ணியத்தில் இன்னும் நினைவிலேயே உள்ளது. இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று அந்த கண்ணடி :))

உங்களது விருப்ப பாடல் இதில் இருந்ததா? இருந்தால் சொல்லுங்கள். இல்லா விடில், உங்களுக்கு எந்த பாட்டு இந்த வருடம் பிடித்தது. பகிருங்கள்.   

18 comments:

  1. என் சாய்ஸில் சிலப் பாடல்கள் இந்த லிஸ்டில் வருகின்றன.

    புத்தாண்டு வாழ்த்துகள்:)

    ReplyDelete
  2. நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே உள்ளது. எனக்கும் பிடித்தமான பாடல்களாகவே உணர்கிறேன். பகிர்வுக்கு நன்றி. இனிய முன்கூட்டிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  3. நல்ல நல்ல பாடல்கள் தேர்வு செஞ்சிருக்கீங்க அண்ணே!
    அந்தக் கடைசிப் பாடல் மட்டும் ( சிங்கம் ) என்னோட லிஸ்ட்ல வராது
    தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே, அந்தப் பாட்டக் கேக்கும் போது கொலைவெறி தான் வருது ;)

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு....

    ReplyDelete
  5. பாடல்களை ரசனையுடன் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். எல்லாப் பாடல்களும் எனக்குப் பரிச்சயமில்லை என்றாலும் கடைசிப் பாட்டின் துள்ளலான இசைக்கு ஒரு ஓட்டு:)!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்ல பாடல்கள் தேர்வு.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. முதல் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...

    நல்ல தொகுப்பு

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு மோகன் சார்.

    அசல், மைனா, சிங்கம் தவிர்த்து மற்ற பாடல்கள் எனக்கும் மிகப் பிடித்தவையே.

    ஈசனின் ஜில்லா விட்டு ஜில்லா பாடலை அவசியம் பாருங்கள்.

    ReplyDelete
  9. நல்ல பாடல்களின் தேர்வு. நிறைய பாடல்கள் எனக்கும் பிடித்தவையே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எனக்கு இப்பொழுது பாடல் கேட்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. என்ன காரணமென்று தெரியவில்லை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. துஷ்ய‌ந்தா பாட்டு முத‌ல் முறை கேட்ட‌போது ரொம்ப‌வே எதிர்பார்த்தேன். பிக்ச‌ரைசேஷ‌னில் ப‌டு சொத‌ப்ப‌ல் :(

    வி.தா.வ‌....'ம‌ன்னிப்பாயா'வோடு என‌க்கு 'ஆரோம‌லே'வும் மிக‌வும் பிடித்திருந்த‌து. அதுவும் கிடாரில் ஆர‌ம்பிக்கும் இசை....அது ஒரு சொர்க்க‌ம்!

    //இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று அந்த கண்ணடி //

    ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அந்த‌ ஒரு காட்சிக்காக‌வே ப‌ட‌த்தை பார்த்தேன் :)

    ReplyDelete
  12. வித்யா நன்றி; எந்த பாட்டுன்னு சொல்லிருக்கலாம் :))
    **
    **
    வாங்க பிரவீன். நன்றி
    **
    நன்றி பாலாஜி சரவணா;Tastes always differ. No problem.
    **
    சங்கவி: நன்றி
    **
    ராம லட்சுமி: நன்றிங்கோ
    **

    ReplyDelete
  13. நன்றி வெங்கட்
    **
    சரவண குமார்: நன்றி நிச்சயம் பார்க்கிறேன்.
    **
    நன்றி கோவை டு தில்லி மேடம்
    **
    அமைதி அப்பா: நன்றி
    **
    ரசனையான பாடல்கள் & சம்பவம் (கண்ணடிக்காக சிங்கம் படம் பார்த்தது) பகிர்ந்தீர்கள் ரகு. :))

    ReplyDelete
  14. பிரியமுடன் ரமேஷ் நன்றி
    **
    புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள் இப்போது சொல்லாததன் காரணம் ... இந்த வருடம் முடியும் முன் என்னிடமிருந்து இன்னும் ஒரு பதிவு வரலாம்; அப்போ சொல்லலாம்னு நினைத்தது தான். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. //இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று அந்த கண்ணடி//

    Same blood :)

    ReplyDelete
  16. பூக்கள் பூக்கும் தருணம்,வா வா நிலவை பிடிச்சு தரவா,மன்னிப்பாயா,

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்
    நல்லதொரு தொகுப்பு.

    2010-ன் சிறந்த 20 பாடல்கள்

    ReplyDelete
  17. தெரிவு செய்த அத்தனை பாடல்களும் அருமையானவை ..........உங்களுக்கு இனிய புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மோகன் ஜி...

    இந்த லிஸ்ட்ல நான் கேட்டது மூன்று படத்தின் பாடல்கள் தான்.

    1) தலைவரோட “எந்திரன்”

    2) சிங்கம்

    3) விண்ணை தாண்டி வருவாயா (படம் பார்க்கவில்லை)

    எந்திரன் எந்த அளவு ஹிட்னு எல்லாருக்கும் தெரியும்...

    சிங்கம் கூட ஹிட் தான்.. துள்ளிசையால் அந்த பாடல் ஹிட் ஆனது...

    ஹாரிஸ் ஜெயராஜ் விட்டு பிரிஞ்சுட்டாரே, கவுதம் மேனன் படத்துல இனிமே பாட்டு ஹிட் ஆகுமான்னு நெனச்சேன்... ஆனா, அந்த ஹோசன்னா பாட்டு நிஜமாவே சூப்பர்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...