Thursday, December 24, 2009

2009-சிறந்த 10௦ பாடல்கள்+ மற்ற விருதுகள்



2009 - சிறந்த 10 பாட்டுக்கள்:

10.கந்த சாமி - மியாவ் மியாவ் பூனை (குட்டி பசங்களுக்கு கேட்க, நமக்கு பார்க்க பிடிச்ச பாட்டு)
9. த.நா. அ.ல 4077 - ஆத்திச்சூடி
8.ஈரம்- மழையே மழையே
7. ஆதவன் - வாராயோ.. வாராயோ..
6. வேட்டை காரன் - கரிகாலன் காலை போல
5. கண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
4. சர்வம் - சுட்டா சூரியனை
3 . சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி
2. அயன் - விழி மூடி யோசித்தால்
1. நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே

*********

சிறந்த கதை & வசனம்: பாண்டி ராஜ் (பசங்க)



சிறந்த திரை கதை:



சமுத்திர கனி (நாடோடிகள்)

சிறந்த இயக்கம்:

பாண்டி ராஜ் (பசங்க)/
அறிவழகன் (ஈரம்)

சிறந்த இசை அமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (அயன்)/ விஜய் அந்தோனி (நினைத்தாலே இனிக்கும்)

சிறந்த பாடலாசிரியர்:


நா. முத்து குமார் (அயன், சிவா மனசுல சக்தி)


சிறந்த புது முக இயக்குனர்: அருண் வைத்யநாதன் (அச்சமுண்டு அச்சமுண்டு ) (இவர் ஒரு blogger - கொஞ்சம் அந்த பாசம்)

சிறந்த பின்னணி பாடகர்:


கார்த்திக் (விழி மூடி/ ஹசிலி ப்சிலி )

சிறந்த பின்னணி பாடகி: ஜானகி ஐயர் (அழகாய் பூக்குதே)

சிறந்த புதுமுக நடிகர்: விமல் (பசங்க)

சிறந்த புதுமுக நடிகை : அனுஜா ஐயர் (உன்னை போல் ஒருவன்/ நினைத்தாலே இனிக்கும்)

சிறந்த நடிகர்: எனக்கு யாரும் தோணலை. நீங்களே சொல்லுங்களேன்!!

சிறந்த நடிகை :



பூஜா (நான் கடவுள்)

சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) : தமன்னா (அயன்) (ஹலோ.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. கலைஞர் உளியின் ஓசைக்காக "நமக்கு நாமே" திட்டத்தின் படி விருது வாங்கலையா? நாம கூட தலைவிக்கு குடுக்காட்டி வேற யார் குடுப்பா?)

14 comments:

  1. சம்போ (நாடோடிகள்)
    ஒரு வெட்கம் (பசங்க)
    பிச்சை பாத்திரம் (நான் கடவுள்)

    !!!!!

    சரி விடுங்க, உங்களுக்கு பிடிச்ச பாடல்கள் தானே


    //சிறந்த நடிகர்: எனக்கு யாரும் தோணலை. நீங்களே சொல்லுங்களேன்!!//

    'அவருக்கு' யாரும் எதுவும் குடுக்க போறதில்ல நீங்க குடுங்க, கார்க்கியாவது சந்தோஷப்படுவார்

    ReplyDelete
  2. //சிறந்த நடிகர்: எனக்கு யாரும் தோணலை. நீங்களே சொல்லுங்களேன்!//

    மாதவன் (யாவரும் நலம்)!

    ReplyDelete
  3. ம‌ன்னா உங்க‌ள் லிஸ்டில் ஒரு பிழை உள்ள‌து, ப‌ட‌ம்: தநா அல 4777, தநா அல 4077 அல்ல‌ (நான் RTOல‌ வொர்க் ப‌ண்ண‌ல‌ சார்)

    சிற‌ந்த‌ ந‌டிக‌ர்: சூர்யா & ச‌சிகுமார் (அழ‌ற‌/அழ‌வைக்க‌ற‌ சீன்ல‌ ந‌டிச்சா ம‌ட்டும்தான் சிற‌ந்த‌ ந‌டிக‌ர் விருதுன்னு யாரு ரூல்ஸ் போட்டாங்க‌ளோ தெரிய‌ல‌, என‌க்கு அதுல‌ உட‌ன்பாடு இல்ல‌)

    சிற‌ந்த‌ ந‌டிக‌ர் சிற‌ப்பு விருது: ஆர்யா

    ReplyDelete
  4. "அழ‌காய் பூக்குதே" ந‌ல்ல‌ பாட‌ல்தான் But அதுக்காக‌ ‍முத‌லிட‌த்தில்?

    "ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ", "அசிலி பிசிலி"லாம் மிஸ்ஸிங்

    //மியாவ் மியாவ் பூனை (குட்டி பசங்களுக்கு கேட்க, நமக்கு பார்க்க பிடிச்ச பாட்டு) //

    ஹிஹி..சேம் ப்ளட்:)

    ReplyDelete
  5. இந்த லிஸ்ட் எல்லாம் நான் சாய்ஸ்ல விட்டுட்டேன், ஏன் என்றால் எனக்கு இது அவுட் ஆஃப் சிலபஸ்.

    சினிமா பற்றிய ஞானம் கம்மிங்க அதான்.

    ReplyDelete
  6. 1. ஒரு வெட்கம் - பாட்டு + படமாக்கப்பட்ட மழைக்காலம்.

    2. விழி மூடி - இளமையான காட்சிகள் + குரல்.

    3. எக்ஸ்யூஸ் மீ - பீட்டுக்காக.

    ReplyDelete
  7. 2009 சிறந்த புதுமுகப் பதிவர்
    - மோகன்குமார்

    :)

    ReplyDelete
  8. /2009 சிறந்த புதுமுகப் பதிவர்
    - மோகன்குமார்

    :)//

    அண்ணனை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  9. சங்கர் நீங்க சொன்ன மூணுமே நல்ல பாட்டு தான் சந்தேகமே இல்லை. "அவருக்கு" சிறந்த நடிகர் விருது தந்தா கார்க்கி மட்டும் தான் மகிழ்வார். மத்தவங்க உதைப்பார்கள்.

    குறும்பன்: நன்றி. சூர்யா & சசி குமார் தான் நானும் நினைதேன். நிறைய எதிர்ப்பு வரும்னு back அடிச்சிட்டேன்

    ராகவன் சார்- வாங்க வாங்க முதல் வருகைக்கு நன்றி

    பின்நோக்கி- அருமையான பாட்டுக்கள் நீங்க சொன்னவை

    ReplyDelete
  10. எம்.எம்.அப்துல்லா said...

    2009 சிறந்த புதுமுகப் பதிவர்
    - மோகன்குமார்


    அண்ணா ரொம்ப மகிழ்ச்சி.You made my day. (அது சரி எழுதிட்டு அப்புறம் என்னா ஸ்மைலி?)

    கேபில்ஜி: ரொம்ப நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  11. //(குட்டி பசங்களுக்கு கேட்க, நமக்கு பார்க்க பிடிச்ச பாட்டு) //

    ரொம்ப ஓபன் நீங்க!எனக்கு கேட்கவும் பிடிக்கும்.

    ReplyDelete
  12. ஓடோ ஓடோ பாடலுக்கு 5ஆவது இடம். நன்றி :-)

    ReplyDelete
  13. //1. ஒரு வெட்கம் - பாட்டு + படமாக்கப்பட்ட மழைக்காலம்.//

    Adhe adhe... :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...