அய்யாசாமியும் சூப்பர் சிங்கரும்
அய்யாசாமி, டிவியில் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் விஜய் டிவி சூப்பர் சிங்கரும் ஒன்று. சமீபத்தில் ரொம்ப மனம் உடைந்த குரலில் " இனி சூப்பர் சிங்கர் பார்க்க மாட்டேன்" என்றார். ஏன் என்று கேட்டதற்கு சோகம் ததும்ப சொன்னார். " எஸ். மதுமிதாவை எலிமினேட் செஞ்சுட்டாங்கப்பா !"
" இதிலே ரெண்டு மதுமிதா உண்டு. எஸ். மதுமிதா தான் அவுட்டு. இன்னொரு மதுமிதா இன்னும் பாடுது"
" அப்படி என்ன எஸ். மதுமிதா கிட்டே விஷேஷம்?"முகத்தில் ஒளி வர
அய்யாசாமி சொன்னார்: " அந்த பொண்ணு என்ன அழகு! ச்சே ! சான்சே இல்லை! கண்ணு, மூக்கு, முகம் எல்லாமே செம ! தெரியுமா? " என்றவரிடம்
"ஆமாம் அந்த பொண்ணு எப்படி பாடும்"
" யாருக்கு தெரியும்? அந்த பொண்ணு வந்தாலே நமக்கு காதெல்லாம் அடைச்சிடுது !!".
சர்த்தான் !! நான்கு நாள் தாடியெல்லாம் வளர்த்து சோக கீதம் பாடிய அய்யாசாமி, பின் தாடி எடுத்து விட்டு சூப்பர் சிங்கர் பார்க்க ஆரம்பித்து விட்டார். கேட்டால், "எஸ். மதுமிதா நிச்சயம் மறுபடி வந்துடுவா; பார்வையாளராவாவது கூட்டி வந்து உட்கார வைப்பாங்க; நீ வேண்ணா பாரேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.
சட்ட சொல்: வாய் வழி & எழுத்து வழி சாட்சிகள் (Oral &Documentary Evidence)
சாட்சிகளை வாய் வழி & எழுத்து வழி சாட்சி என இரண்டாக பிரிக்கலாம். இரண்டில் கோர்ட் அதிகம் நம்புவது எதை தெரியுமா? எழுத்து வழி சாட்சியை தான்!! மனிதனை சட்டம் கூட நம்புவதில்லை. இதற்கு காரணம் ஒரு மனிதன், அவன் கேட்டதை சொல்லும் போது அதில் கற்பனையும் கலந்திருக்கலாம். அல்லது அவன் வேண்டுமென்றே பொய் சொல்லலாம். ஆனால் ஆவணங்கள் பொய் சொல்வதில்லை. கடிதம், பத்திரங்கள் போன்றவை எழுத்து வழி சாட்சிகள். முடிந்த வரை இவற்றிக்கு தான் நீதி மன்றங்கள் அதிக முக்கிய துவமும், அவை இல்லாத போது, அல்லது போதாத போதே வாய் வழி (மனித) சாட்சிகளையும் கருத்தில் கொள்ளும்.
பார்த்த படம் : தூங்கா நகரம்
பத்திரிக்கை & பதிவர் விமர்சனங்கள் படித்ததனால் அதிக எதிர்பார்ப்பு இல்லை. நாடோடிகள் பாதிப்பில் எடுத்துள்ளனர்.. (புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான்). நண்பர்கள் சேர்ந்து, உயிர் நண்பனின் திருமணத்தன்று அவனை கொல்ல துணிவதாய் காட்டும் போது சற்று விறுவிறுப்பு வருகிறது. இந்த பகுதி மட்டுமே சுவாரஸ்யம். படத்தில் வரும் ஏகப்பட்ட டாஸ்மாக் காட்சிகளை தவிர்த்து இது போன்று மூளையை உபயோகிக்கும் காட்சிகளால் படத்தை நகர்த்தி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் தேறலை. இயக்குனரே ஒரு நண்பன் பாத்திரத்தில் நடித்துள்ளார். ம்ம் அவருக்கு பிளாஷ்பேக்குகள் மேல் என்ன அப்படி ஒரு காதலோ? பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக்.. அதற்குள் இன்னொரு பிளாஷ்பேக்.. என படமே பிளாஷ்பேக்குகளில் நகர்கிறது. லியோனி ஒரு பட்டிமன்ற கேசட்டில் சொல்லுவாரே. " செத்து போயிட்டாருன்னு பார்த்தா ஆவியா வந்து நாலு பாட்டு படிப்பாரு"ன்னு.. அதை மாதிரி க்ளைமேக்சிலும் பிளாஷ்பேக் !! யப்பா முடியலை. கண்ணை கட்டுது!!
ரசித்த கவிதை
காட்சியில் இல்லையென்றால்
காணாமல் தான் போவாய்
காணாமல் போனதுக்காக
கவலை படுவார் யாருமில்லை
அவரவரே பொறுப்பு
அவரவர் பாத்திரத்துக்கு
எவர் கையையும் எதிர் பாராது
எதுக்காகவும் அலட்டி கொள்ளாது
ஏனென்ற விசாரம் விடுத்து
இருந்து கொண்டே இரு
இருக்கும் வரை இருந்து கொண்டே இரு
எப்படியும்
(எழுதியவர் பெயர் தெரிய வில்லை)
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதற்கான புகைப்பட அட்டை வாங்கவும் பல முறை அலைந்து நொந்து போய் விட்டேன். இதுவரை அதிகாரிகள் சொன்னபடி மூன்று முறை விண்ணப்பம் தந்தும் பெயர் சேர்க்க படவே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பல முறை சென்று கேட்டும், எந்த ரெஸ்பான்சும் இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி தான் நடக்கிறது என்பதை, நான் அலைகிற ஒவ்வொரு முறையும் பலரும் சொல்ல கேட்கிறேன். இந்த விண்ணப்பங்களை நம்மிடமிருந்து வாங்கி தருகிற பள்ளி ஆசிரியர் ஒருவரே மனம் நொந்து சொன்னார்: " இப்படி தான் சார் செய்றாங்க. நாங்க வாங்கி குடுக்க தான் முடியும். பேர் அவங்க தானே சேர்க்கணும். எத்தனை தடவை குடுத்தாலும் சேர்க்க மாட்டேங்கிறாங்க".
காட்சியில் இல்லையென்றால்
காணாமல் தான் போவாய்
காணாமல் போனதுக்காக
கவலை படுவார் யாருமில்லை
அவரவரே பொறுப்பு
அவரவர் பாத்திரத்துக்கு
எவர் கையையும் எதிர் பாராது
எதுக்காகவும் அலட்டி கொள்ளாது
ஏனென்ற விசாரம் விடுத்து
இருந்து கொண்டே இரு
இருக்கும் வரை இருந்து கொண்டே இரு
எப்படியும்
(எழுதியவர் பெயர் தெரிய வில்லை)
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதற்கான புகைப்பட அட்டை வாங்கவும் பல முறை அலைந்து நொந்து போய் விட்டேன். இதுவரை அதிகாரிகள் சொன்னபடி மூன்று முறை விண்ணப்பம் தந்தும் பெயர் சேர்க்க படவே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பல முறை சென்று கேட்டும், எந்த ரெஸ்பான்சும் இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி தான் நடக்கிறது என்பதை, நான் அலைகிற ஒவ்வொரு முறையும் பலரும் சொல்ல கேட்கிறேன். இந்த விண்ணப்பங்களை நம்மிடமிருந்து வாங்கி தருகிற பள்ளி ஆசிரியர் ஒருவரே மனம் நொந்து சொன்னார்: " இப்படி தான் சார் செய்றாங்க. நாங்க வாங்கி குடுக்க தான் முடியும். பேர் அவங்க தானே சேர்க்கணும். எத்தனை தடவை குடுத்தாலும் சேர்க்க மாட்டேங்கிறாங்க".
இத்தனை முறை அலைந்தும் எந்த ரெஸ்பான்சும் இல்லா விடில் வேறென்ன செய்ய முடியும்? "இவனுங்க கொள்ளை அடிச்சு சம்பாதிக்க, நாம ஏன் ஓட்டு போடணும்?" என்று வெறுத்து போய் "பேரும் சேர்க்க வேண்டாம்; வோட்டர்ஸ் ஐ. டி யும் வேண்டாம்" என விரக்தியுடன் அமர்வதை தவிர. ("வக்கீலுக்கே இந்த நிலைமையா" என்று கேட்காதீர்கள். கோர்ட் செல்லும் வக்கீல் என்றால் வழக்கு கூட தொடருவார்கள். எனக்கு இருக்கும் வேலைகளில் இதற்கு வழக்கு தொடர்ந்து விட்டு இவர்கள் பின்னே அலைய முடியாது. )
இந்த தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி மாறிய பின், மீண்டும் படையெடுப்பை தொடர வேண்டும். உங்களில் யாருக்கேனும் பெயர் சேர்க்க சரியான வழி தெரிந்தால் சொல்லுங்கள்.
இந்த தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி மாறிய பின், மீண்டும் படையெடுப்பை தொடர வேண்டும். உங்களில் யாருக்கேனும் பெயர் சேர்க்க சரியான வழி தெரிந்தால் சொல்லுங்கள்.
கிரிக்கெட் கார்னர்
உலக கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்து காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. இதில் வலுவான அணிகள் வெல்லவே வாய்ப்புகள் அதிகம்.
செமி பைனல் செல்ல வாய்ப்புள்ள அணிகள்:
பாகிஸ்தான் (மேற்கு இந்திய தீவை தோற்கடித்து .. )
தென் ஆப்ரிக்கா ( நியூசிலாந்தை தோற்கடித்து .. )
இலங்கை ( இங்கிலாந்தை தோற்கடித்து .. )
இந்தியா Vs ஆஸ்த்ரேலியா ஆட்டம் தான் எப்படி முடியமென சொல்ல முடிய வில்லை. ஆஸ்த்ரேலியா பவுலிங் & பீல்டிங்கில் சிறந்து விளங்கினாலும், பேட்டிங்கில் சற்று வழிகிறார்கள். இந்தியாவோ பவுலிங் & பீல்டிங்கில் மட்டுமல்ல கடைசி பத்து ஓவர்கள் விளையாடுவதிலும் முன்னேற வேண்டியுள்ளது. இந்த மேட்ச் பற்றி சித்து சொன்னார்:" உலக கோப்பை Charity-க்காக நடத்த வில்லை. நம்ம ஊரானா அஹமதாபாதில் நடக்கிறது மேட்ச். பிட்ச் ஸ்பின் எடுக்கிற மாதிரி தயார் செய்ய வேண்டும். அப்போது தான் கொழும்புவில் பாகிஸ்தானிடம் தோற்ற மாதிரி ஆஸ்த்ரேலியா தோற்கும்" உண்மை தான்! ஆஸ்த்ரேலியா அணியில் சரியான சுழற் பந்து வீச்சாளரும் இல்லை. இந்நிலையில் பிட்ச் ஸ்பின் எடுத்தால் நன்றாக இருக்கும். இந்த புதன் முதல் சனி கிழமை வரை காலிறுதி ஆட்டங்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் !
ஜப்பான் !!
ஜப்பான் பற்றி கேள்வி படும் விஷயங்கள் அந்த நாட்டின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்துகிறது. பூகம்பம் நடந்த அன்று ரயில்கள் ஓடாமல் லட்சகணக்கான மக்கள் சாலையில் சென்றுள்ளனர். எப்படி தெரியுமா? சாலை ஓரத்தில்... வரிசையாக... அமைதியாக ! நம் ஊரில் பெரிய தலைவர் இறந்தால் முதலில் கடைகளை உடைத்து கொள்ளை அடிப்பார்கள். ஜப்பானில் பலரின் உடமைகள் தெருவில் கிடந்தும், ஒரு இடத்தில கூட மற்றவர் பொருளை யாரும் அபகரிக்க வில்லை. வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல ஒரு மிக பெரும் இயற்கை பேரழிவை எப்படி எதிர் கொள்வது என்பதையும் ஜப்பானியர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டும்.
பாட்டைக் கேளுங்கய்யான்னா.. ஹி..ஹி.. எனக்கும் ரொம்பத்தான் வருத்தம்.
ReplyDeleteடூயட் ரவுண்ட்ல ஏதோ ஒரு பையன் தனக்கு பதிலா வேற ஒரு பொண்ணோட பாடினான் கோச்சிக்கிட்டா மாதிரி காமிச்சாங்களே. அந்தப் பொண்ணு தான இது?
ReplyDeleteப்ளாஷ்பேக்:))))
//வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல ஒரு மிக பெரும் இயற்கை பேரழிவை எப்படி எதிர் கொள்வது என்பதையும் ஜப்பானியர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டும்.//
ReplyDeleteஉண்மைதான் சார்.
Japanese are really great. The Toyota company started their operations the next day after the big Tsunami hit the mainland Japan.
ReplyDeleteகவிமை அருமை...
ReplyDeleteஅண்ணே, எனக்கென்னமோ இலங்கை - இங்கிலாந்து ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்னு தோணுது!
ReplyDeleteவானவில் வழக்கம் போல வர்ணம்! :)
அய்யாசாமியும் வழியும் சாமியா ?
ReplyDelete//(எழுதியவர் பெயர் தெரிய வில்லை)//
'அவர்'(கூட) பெயர் சொல்ல விருப்பமில்லாதவரோ ?
//வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்
//
ம்ம்.. இதுல எப்படி தப்பு நடக்குதோ தெரியலை..
சிஸ்டமேடிக்க இருந்தாதான் சரிப் படும்.
//செமி பைனல் செல்ல வாய்ப்புள்ள அணிகள்://
1) WI (like --- see 3 below)
2) SA
3) More chance for SL but England may surprise everyone
4) hmm.. Aus not in proper form compared to Ind.
So, we wait 'fingers crossed'..!!
//வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல ஒரு மிக பெரும் இயற்கை பேரழிவை எப்படி எதிர் கொள்வது என்பதையும் ஜப்பானியர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டும்.//
ReplyDeleteகற்று கொள்ள வேண்டும்!!
நிறைய விசயங்களைக் கலவையாகத் தந்திருக்கீங்க..
ReplyDeleteடி.வி புரோகிராம் எல்லாம் இப்போ அப்டிதான் ஆயிடுச்சு.. :-)..
ரசித்த கவிதை நன்று.
ReplyDeleteஜப்பான் ஜப்பான்தான். இதையும் கடந்து காண்பிப்பார்கள்.
உலக கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றதாக சரித்திரம் இல்லை, சரித்திரத்தை மாற்றுவார்களா? இல்லை மண்ணை கவ்வுவார்களா?
ReplyDeleteநான் மொதல்ல விலாசம் மாற்றலுக்காக விண்ணப்பித்தேன். கொஞ்ச நாள் கழித்துக் கேட்டால் எதுவும் வரலைங்க என்று சொன்ன அந்த பள்ளி ஆசிரியர் புதுசாவே அப்ளை பண்ணிடுங்க என்றார். 2 வாரத்தில் ஐடி கார்ட் வந்துவிட்டது!!
ReplyDeleteவக்கீல் சார் RTI ட்ரை பண்றீங்களா?
:))
http://www.elections.tn.gov.in/FORMS/informationact.pdf
வானவில் வழமை போல வண்ணமயம்! அய்யாசாமி – ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை! ஜப்பான் – இதையும் பொறுமையாகக் கடந்து முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி மோகன்.
ReplyDeleteஜப்பான் விஷயங்கள் எண்ணி எண்ணி ஆச்சர்யப் படும் விஷயங்களாக இருக்கின்றன. அவர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன.
ReplyDelete\\madhu said...
ReplyDeleteஉலக கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றதாக சரித்திரம் இல்லை\\
1987 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்தரேலியாவை வென்றிருக்கிறது.
நம்ம ஆட்கள் ஐம்பது ஓவர் பேட் பண்ணவே சிரமப்படுகிறார்கள். சேஸிங் என்றால் கூட ஒப்புக்கொள்ளலாம். first batting இல் இந்தத் தடவு தடவுகிறார்கள்.
ஏனோ சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 kind of நிகழ்ச்சிகளை நான் விரும்புவதேயில்லை. ஆரம்பித்த புதிதில் சில வாரங்கள் பார்த்ததோடு சரி. ஜட்ஜ்கள் தரும் கமெண்ட்கள் சில சமயம் எரிச்சலூட்டுகின்றன.
ReplyDeleteநம்மாட்களின் பவுலிங்கை நினைத்தால்....:(
பாவிங்களா! சச்சினுக்கு கடைசி வேர்ல்ட் கப்ங்கறதை மனசுல வெச்சுக்கோங்கடான்னு கத்தணும் போலயிருக்கு
மோகன் குமார் said...
ReplyDelete//சார் இன்று தான் உங்கள் ப்ளாக் பார்க்க பெற்றேன். அருமை. மிக மகிழ்ச்சி. நான் தஞ்சையை சேர்ந்தவன். திருச்சியில் படித்தேன். அப்போது BHEL அருகே தங்கியிருந்தேன். என் அக்கா மருத்துவராக இன்னும் கணேச புரத்தில் தான் உள்ளார். தங்கள் ஓய்வு காலத்தில் பதிவுகள் மூலம் தங்கள் அனுபவங்களை நகைச்சுவை உடன் பகிர்வது மிக மகிழ்ச்சி. வாழ்த்துகள்
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com//
தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராடுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், நண்பரே.
தாங்கள் BHEL பக்கம் தங்கியிருந்ததாகவும், தங்கள் சகோதரி அங்கே கணேசபுரத்தில் இப்போதும் மருத்துவராக உள்ளதாகச் சொல்வதும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நான் பணிஓய்வு பெற்றபிறகு BHEL பக்கம் கடந்த 2 வருடங்களாக அதிகம் செல்வதில்லை. திருச்சி டவுனில் ஒரு அடுக்குமாடி வளாகத்தில் வாழ்ந்து வருகிறேன். ஏதோ கொஞ்ச நாட்களாக ஒரு பொழுது போக்கிற்காகவும், ஆத்ம திருப்திக்காகவும், ஏதோ கொஞ்சம் எழுதி வருகிறேன்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் அளித்துச் செல்லுங்கள்.
உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்/ஆசிகள்.
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
March 22, 2011 4:57 AM
அய்யாசாமி ரொம்ப வழியற மாதிரி தெரியுதே.. அதுவும் பப்ளிக்கா.. வீட்ல இந்தப் பதிவு படிக்கலையோ? :-(((
ReplyDeleteஜப்பான் - ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது. பொதுவாகவே இயற்கைச் சீற்றத்தின்போது திருடர்கள், போராட்டங்கள் என்று ஒழுங்கீனங்கள் எதுவும் இல்லாமல்... மதிப்பு கூடுகிறது.
கேபிள்: நீங்களுமா? ரைட்டு
ReplyDelete**
வித்யா: ஆமுங்கோ . டேங்க்ஸ்
**
நன்றி அமைதி அப்பா
**
உண்மை தான் ஆதி மனிதன். நன்றி
**
நன்றி சங்கவி
பாலாஜி சரவணா: இங்கிலாந்து மேட்ச் எல்லாமே விறுவிறுப்பா தான் போகுது. ஆனாலும் மேட்ச் இலங்கையில் நடப்பதால் பிட்ச் காரணமாய் அவர்கள் எளிதில் வெல்வார்கள் என நினைக்கிறேன்
ReplyDelete**
விரிவான அலசலுக்கு நன்றி மாதவா
**
நன்றி மாதவி
**
பாபு நன்றி
**
நன்றி ராமலக்ஷ்மி
மது: இதுவரை உலக கோப்பையில் ஒன்பது முறை ஆஸ்திரேலியா உடன் ஆடி உள்ளோம். அதில் மூன்றில் வென்றுள்ளோம். ஆறில் தோற்றுள்ளோம் (நன்றி Cricinfo.com) தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDelete**
வெங்கட்: ஆம்; ஜப்பான் மக்கள் இதையும் கடந்து வருவார்கள். கருத்துக்கு நன்றி
**
நன்றி ஸ்ரீ ராம்
**
கோபி ராம மூர்த்தி: ஆமாங்கோ தேன்க்சுங்கோ
**
ரகு: நம்ம பவுலர்கள் பற்றி நீங்க எழுதியதை மிக ரசித்தேன் நன்றி
**
வை. கோ சார்: வணக்கம் நன்றி
**
ஹுசைனம்மா: நன்றி மேடம்
ஷங்கர்: மன்னிக்க உங்களை மிஸ் பண்ணிட்டேன். ம்ம் RTI கூட யோசிக்க வேண்டியது தான். நல்ல ஐடியா. நன்றி
ReplyDelete