Friday, March 4, 2011

ஹைதராபாத் பயண கட்டுரை நிறைவு பகுதி

ஹைதராபாத் பயண கட்டுரையின் நிறைவு பகுதி இது. விட்டு விட்டு எழுதியதை பொறுத்து கொண்டு வாசித்த நண்பர்களுக்கு நன்றி

முதலாவதாக இரு சிறு வீடியோக்கள். ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்தது.

ஜப்பான் பெண்களின் நடனம்..



இது செட்டிங்குகள் உள்ள இடம். சந்திரமுகி செட்டிங் தொடங்கி பல ராஜா கதைகள் இங்கு தான் எடுக்க படுகின்றன. 



பிலிம் சிட்டியில்   எடுக்கப்பட்ட மற்ற படங்கள் சில:












ஸ்பைடர்மேனும்   சாதாமேனும்           (வலது) படங்களின் சண்டை காட்சி நடக்கும் இடம்
 நாகார்ஜுனா சாகர் அணை

ஹைதராபாத் டூரிசம் காலை ஏழு மணிக்கு ஒரு நாள் டூரில் நாகார்ஜுனா சாகர் அணை அழைத்து சென்று திரும்புகிறார்கள். இதில்தான் சென்றோம்.  அந்த குளிரில் நம்மை ஏழு மணிக்கு வர சொல்லி விட்டு பஸ் மெதுவாக எட்டு மணி வாக்கில் வந்தது. 

அணைக்கு சென்று சேர மதியம் ஆகி விடுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மதிய சாப்பாடிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாப்பிட்டு விட்டு அங்கிருந்த இனிய சூழலை சற்று நேரம் ரசித்து கொண்டிருந்தோம். இங்கு நிறைய மலர்கள் & பட்டர்பிளை  இருக்க, ஐயா சாமி பட்டர்பிளையை வீடியோ எடுக்கிறேன் என கேமராவுடன் திரிந்தார். ம்ஹும் கடைசி வரை அவரால் பட்டர்பிளையை படம் பிடிக்க முடிய வில்லை. 
Dam





இங்கு காத்திருக்கும் நேரம் எங்களுடன் வந்த இரு ஆட்களால் மிக நீடித்தது. சாப்பிடும் நேரத்தில் இவர்கள் இருவரும் அங்கிருந்த பார் ஒன்றில் சென்று புகுந்து விட, பஸ் கிளம்பும் நேரத்தில் வெளியே வந்து விட்டு, பின் நிதானமாக போய் சாப்பிட்டு விட்டு வந்தனர். ம்ம் இப்படியும் மனிதர்கள்! மற்றவர்களை காக்க வைக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்..!  குடி மனிதர்களை எப்படி ஆக்குகிறது!

குடித்த பின் எங்களுடன் பேருந்தில் வந்த கைடை (72 வயது மனிதர்) கிண்டல் செய்தவாரே வந்தனர். அவர் மிக பொறுமையாய் இருந்தார். கைடிடம் பேசிய போது அரசாங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும், கேன்சரில் தன் மனைவியை சமீபத்தில் தான் இழந்தார் என்பதும் தெரிந்தது. அதனை சொல்லும் போதே குரல் கமறி விட்டது. இந்த வயதான காலத்தில் உழைத்து சாப்பிட வேண்டிய நிலை இவருக்கு. ஒவ்வொரு நாளும் டூர் முடிய நள்ளிரவு ஆகி விடுகிறதென்றும் அதன் பின் தன் மகன் வீட்டை போய் தொந்தரவு செய்ய வேண்டி உள்ளது என்று குற்ற உணர்வுடன் சொன்னார் இவர்.
சாப்பிட்ட இடத்திலிருந்து பின் போட்டில் பயணம். அப்போது தான் அணை எவ்வளவு பெரிய இடத்தில கட்ட பட்டுள்ளது என்று புரிகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பல்லாண்டுகள் உழைப்பில் உருவானது இந்த அணை. பாறைகளை பல கிலோ மீட்டர் தூரம் குடைந்து இந்த நீர் தேக்கத்தை உருவாக்கியுள்ளனர்.






அரை மணி பிரயாணத்துக்கு பின் சென்ற இடத்தில் அணை கட்ட பட்ட தோண்டிய போது கிடைத்த பொருட்கள் கண் காட்சியாக வைத்துள்ளனர். இவை பார்த்து முடித்து விட்டு பின் மீண்டும் பயணித்து பஸ்சுக்கு வந்தோம். 

வரும் வழியில் எட்டிபட்டாளா நீர் வீழ்ச்சி காண கூட்டி சென்றனர். இரவில் நீர் வீழ்ச்சி பார்க்கவே சிரமம். ஆனால் நீர் வீழ்ச்சியில் விளக்குகள் (Light show) போட்டிருந்ததால் சற்று தெரிந்தது. இதன் அருகில் ஒரு முதலை பண்ணை உள்ளதாம். பகலில் வந்தால் பார்க்கலாம் என்றனர். 

நாங்கள் வந்த பஸ் இங்கு பன்க்ச்சர் ஆகி விட, கிளம்ப நெடு நேரம் ஆனது. இருட்டான இடம். நாங்கள் சென்னையில் போகும் வழியில் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிறு டார்ச் தான் பன்க்ச்சர் ஒட்ட உதவியது.

பாரடைஸ் ஹோட்டல்











பாரடைஸ் ஹோட்டல் பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல் என்று கேள்வி பட்டு கிளம்பும் நாளன்று மதியம் சென்று சாப்பிட்டோம். யப்பா!! செவ்வாய் கிழமை.. மதிய நேரம்.. உட்கார இடம் இன்றி காத்திருக்க வேண்டியதாயிற்று.   இத்தனைக்கும் கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடும் அளவு இடம் உள்ளது. சிக்கன், மட்டன் இரண்டுமே வாங்கினோம். செம டேஸ்ட்டி! இங்கு பிரியாணியை படம் எடுக்க முயன்ற போது ஹவுஸ் பாஸ் & பெண் இருவரும் "இதை எல்லாமா போட்டோ எடுப்பார்கள்?" என கிண்டல் செய்து நிறுத்தி விட்டார்கள். :(((

பிர்லா மந்திர் கோயில் 


முழுக்க முழுக்க மார்பில்களால் ஆன அழகான கோயில். இதன் maintenance வியக்க வைக்கிறது. சிறு குப்பை கூட இல்லாமல் அப்படி ஒரு சுத்தம். இது ஒரு பெருமாள் கோயில் ஆயினும் புத்தர், சாய் பாபா, பிள்ளையார் உள்ளிட்ட மற்ற பல கடவுள்கள் சந்நிதியையும் பார்க்க முடிகிறது. ஆங்காங்கு இயேசு, புத்தர் போன்றோர் சொன்ன பொன்மொழிகளையும் காண முடிகிறது. கோயிலினுள் படம் எடுக்க அனுமதி இல்லை. கோயில் மேலிருந்து பார்க்க ஹைதராபாத் முழு வியூ தெரிகிறது.

கோயிலின் மொத்த படிகள் ஏறுவது கிட்ட தட்ட நான்கு மாடி   ஏறுவது போல. இவற்றில் மூன்று மாடி அளவிற்கு ஏற லிப்ட் உள்ளது. இது பலருக்கு தெரியாது. மிக சிலரே உபயோகிக்க பலரும் படி ஏறியே செல்கின்றனர். கோயிலுக்கு வந்தவர்களில் நிறைய தமிழ் குரலை கேட்க முடிந்தது

புத்தர் சிலை உள்ள அந்த ஏரி, பார்குகள் அனைத்தும் இந்த கோயிலுக்கு அருகில் தான் இருப்பதை உணர முடிகிறது. காலை ஏழு மணிக்கு திறக்கும் இக்கோயில் இரவு ஒன்பது மணி வரை திறந்துள்ளது (மதியம் பன்னிரண்டு டு மூன்று மணி வரை திறந்திருக்காது). ஹைதராபாத் செல்வோர் தவறாமல் போகும் இடங்களுள் இதுவும் ஒன்று.

கோல்கொண்டா கோட்டை
மெயின் சிட்டியிலிருந்து சற்று தொலைவில் (சுமார் 15 கிலோ மீட்டர்) உள்ளது கோல்கொண்டா கோட்டை. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை.  400 அடிகள் மலைமேல் ஏறுவது போல் ஏற வேண்டும். நாங்கள் நல்ல வெயிலில் சென்றதால் முக்கால் வாசி தூரம் மட்டும் ஏறி விட்டு திருப்தி அடைந்து திரும்பி விட்டோம். நான்கு கோட்டைகள் இதற்குள் உள்ளன.

பழைய காலத்தில் பயன்படுத்திய சில அரிய பொருட்கள் சேமித்து பார்வைக்கு வைத்துள்ளனர். மாலையில் நடக்கும் லைட்  ஷோ மிக அருமையாக இருக்கும் என்கின்றனர். 
சின்ன சின்னதாக நிறைய சுவாரஸ்யங்கள் இங்கு உள்ளன. தூரமாக உள்ள இரு சுவரில், ஒன்றிலிருந்து நீங்கள் பேசினால் அது மறு புறம் காது வைத்து கேட்டால் கேட்கிறது.   மற்றொரு குறிப்பிடத்தக்க இடம்..ராஜா மக்களை வந்து சந்திக்கும் இடம். இங்கு நீங்கள் கல்லை எறிந்தால் அது மேலே செல்லாமல் கீழே விழுந்து விடுகிறது. ராஜாவை பாது காக்க இந்த ஏற்பாடாம். 

இங்கு நுழைவு டிக்கட் மிக குறைவு (ஐந்து ருபாய்) என்பதால் ஏழை கல்லூரி காதலர்களின் பூங்காவாகவும் உள்ளது. 

ஹைதை : இன்னும் சில தகவல்கள்

** சென்னையில் பீச்சில் வரிசையாக சிலைகள் இருப்பது போல அங்கு ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகே ஏ..கப்பட்ட சிலைகள் உள்ளன. இந்த ஏரிக்கு நடுவே புத்தர் சிலை உள்ளது. படகில் சவாரி செய்து புத்தர் சிலையை அருகில் சென்று பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் ஏரி நம்ம கூவம் போல கருப்பாக உள்ளதால் நாங்கள் போகலை.

** காரில் செல்லும் போது தொடர்ந்து லோக்கல் எப். எம்.மில் தெலுகு பாடல்கள் கேட்டு கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியமெனில் பெரும்பாலான பாடல்கள் தமிழில் நாம் கேட்டவை தான். அவை தெலுகுக்கும் போயிருக்கின்றன !

**இங்குள்ள ஜூபிலி ஹில்ஸ் மிக பேமஸ். நாகார்ஜுனா, சிரஞ்சீவி, பால கிருஷ்ணா என அனைத்து பெரிய நடிகர்களும் இங்கு தான் வசிப்பதாக எங்கள் டிரைவர் பரவசத்துடன் கூறினார்.

** ஆட்டோவிற்கு மினிமம் 15 ரூபாய் வாங்குகிறார்கள் (சென்னையில் முப்பது!) ஆட்டோகள் கண்டிஷன் மோசமாக உள்ளது (வருஷா வருஷம் FC வாங்க வேண்டியதில்லை என்றார் ஒருவர். உண்மையா தெரியலை)
** ஜூனியர் காலேஜ் என நிறைய பார்க்க முடிகிறது. தமிழகத்தில் படிக்கும் +1, +2  அங்கு இவ்வாறு அழைக்க படுகிறது. இவற்றில் தனியாரும் உண்டு என்பதோடு நிறைய பேர் அரசாங்க அனுமதி ( Recognition ) இன்றியும் நடத்தி, பிரச்சனை நிறைய வருவதாக சொன்னார்கள்

**ஹைதையில் சாலைகள் அற்புதமாக உள்ளன. சென்னை போல் டேமேஜ் ஆன ரோடுகள் அநேகமாய் பார்க்கலை. நிறைய ஓவர் பிரிட்ஜுகள் உள்ளன. குறிப்பாய் மேதி பட்டினம் அருகே உள்ள ஓவர் பிரிட்ஜு 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது. விமான நிலையத்திலிருந்து ஊருக்கு செல்ல இது உதவுகிறது. ஹைதை விமான நிலையம் மிக மிக அழகானது என்றனர். பார்க்க வில்லை.

** எங்கள் நான்கு நாள் சுற்று பயணம் நல்ல படியாக முடிந்தது. நான்கு நாள் அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் மிக சரியாக இருந்தது. சென்ற நேரமும் (டிசம்பர்) மிக சரியான நேரம். நல்ல சாப்பாடு, அருமையான இடங்கள், சந்தித்த சில நல்ல மனிதர்கள், நினைவில் சுமக்க பல இனிய நினைவுகள் வேறென்ன வேண்டும் நான்கு நாள் சுற்றுலாவில்?
(ஹைதை பயணம் முடிந்தது !)

21 comments:

  1. ஹைதராபாத் போகனும் போல இருக்கு..

    அருமையான பயணக்கட்டுரை...

    ReplyDelete
  2. பேரடைஸ் பிரியாணி ருசிச்சிட்டீங்களா!! வெரி குட். அந்த ருசி எங்கேயும் கிடைக்காது. நல்ல ரவுண்ட் அப் தான் போல. சென்னை சாலைகளுக்கு ஹைதை சாலைகள் பெஸ்ட் என்பது என் எண்ணமும். (எனக்கும் அயித்தானுக்கும் இங்க தான் பிரச்சனையே :)) )

    சென்னையில் மேம்பாலங்கள் கட்டிய பின் அந்த இடமே அசிங்கமாக இருப்பது போல இருக்கும். இங்கே மேம்பாலங்கள் அழகு.

    அடுத்த வாட்டி வந்த கண்டிப்பா மெயில் அனுப்புங்க. உங்க தங்கமணிக்கு இங்கே என்னென்ன பர்ச்சேஸ் செய்யலாம்னு லிஸ்ட் அனுப்பறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உங்கள் கூடவே நாங்களும் வந்த மாதிரி இருந்துச்சு....God willing, அடுத்த இந்தியா ட்ரிப்ல எப்படியும் விசிட் பண்ணனும்னு ஆசை வந்துடுச்சு. :-)
    Paradise பிரியாணி பற்றி இப்பொழுதுதான் ஒரு ஆந்த்ரா நண்பர் சொல்லி கொண்டு இருந்தார்.... இங்கே பதிவில் பார்த்த பின் தான் அதன் பெருமை இன்னும் தெரிஞ்சுது.

    ReplyDelete
  5. ஹைதை சென்று வரும் ஆவலைப் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கும் இத்தொடர் கட்டுரை. கோல்கொண்டா கோட்டை அழகு. அவசியம் போகணும் ஃபோட்டோ எடுப்பதற்காகவே:)!

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு மோகன்.

    பெஞ்சில் நண்பருடன்(?) அமர்ந்திருக்கும் புகைப் படத்தை வீடியோவாக பகிர்ந்திருக்கலாம். :-(

    :-)

    ReplyDelete
  7. பாருங்க, கீழ உங்களோடு இருக்கிற ஸ்பைடர் மேன் கூட மேல இருக்கிற உங்களைதான் பார்த்தபடி இருக்கிறார். கீழதான் நீங்க சாதா மேன்.

    மேல, நீங்கதான் சூப்பர் மேன்! :-)

    ReplyDelete
  8. அட எழு குண்டல வாடா.......
    ஹைதராபாத் நானும் சுத்தி பாத்துட்டேன் உங்க கூடவே....

    ReplyDelete
  9. ஹை...ஹை!!! ஹைதை பயணக் கட்டுரை அருமை. ;-)))

    ReplyDelete
  10. சின்ன வயதில் சென்று வந்த ஞாபகங்களை கிளறிவிட்டது பதிவு. உங்களுடம் சேர்ந்து நாங்களும் ஹைதையை சுத்திப் பார்த்த உணர்வு:)

    ReplyDelete
  11. நான் ஹைதை போனதில்ல இந்த தொடரை படித்ததும் கண்டிப்பா போகணும்னு தோணுது அண்ணா!

    ReplyDelete
  12. Anonymous11:48:00 AM

    ஹைத்ராபாத் பிரியாணி சிக்கன் பத்தி எழுதுங்க தல..

    ReplyDelete
  13. 10 வருடம் முன்னால் போனது. இன்னொரு முறை போகணும் என்ற ஆவலை தூண்டியது பதிவு.

    ReplyDelete
  14. நான்கு நாள் பயணத்தை மறக்க முடியாதபடி பதிவிட்டுள்ளீர்கள். எங்கள் குடும்பம் ஹைதராபாத் செல்லும்போது ஒரு முறை உங்கள் பதிவை மறுபடி படித்துக் கொள்வேன் - for reference.

    Thanks for sharing.

    ReplyDelete
  15. //கடைசி வரை அவரால் பட்டர்பிளையை படம் பிடிக்க முடிய வில்லை.//

    அதான் ப‌க்க‌த்துலேயே உட்கார்ந்து எடுத்திருக்கீங்க‌ளே ;)

    ReplyDelete
  16. சங்கவி: நன்றி; முடியும் போது சென்று வாருங்கள்
    **
    புதுகை தென்றல் : அன்பிற்கு நன்றி மேடம்; அடுத்த முறை வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்
    **
    சித்ரா: நன்றி சென்று வாருங்கள்; பிலிம் சிட்டி தவற விட கூடாத இடம்
    **
    நன்றி ராம லட்சுமி; புகைபடங்கள் எடுக்க கோல்கொண்டா சரியான இடம் தான்
    **
    //பா.ராஜாராம் said...

    பெஞ்சில் நண்பருடன்(?) அமர்ந்திருக்கும் புகைப் படத்தை வீடியோவாக பகிர்ந்திருக்கலாம். :-(

    ராஜா ராம் உம்மா குசும்பு வர வர கூடிகிட்டே வருது!

    ReplyDelete
  17. நன்றி நாஞ்சில் மனோ
    **
    நன்றி RVS
    **
    வித்யா: நன்றி. மகிழ்ச்சி
    **
    நன்றி பாலாஜி; முடியும் போது சென்று வாருங்கள்
    **

    ReplyDelete
  18. சதீஷ் குமார்: நன்றி. பிரியாணி பத்தி எழுதிருக்கேனே !!
    **
    அமுதா கிருஷ்ணா: நன்றி மேடம்
    **
    மாதவி: மிக மகிழ்ச்சி; முன்பு ஒரு முறை நண்பர் கூர்க் சென்ற போது பதிவை எடுத்து வாசித்து விட்டதாக சொன்னார். விரிவாய் எழுதியதன் காரணம் அதுவே. நன்றி
    **
    ரகு: ரைட்டு :-) நன்றி

    ReplyDelete
  19. முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லை எனினும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  20. ஹைதை பயணக்கட்டுரை அருமை.

    ReplyDelete
  21. Dear Sir,
    You missed one of the wonderfull salajung museum at hyderabad

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...