கல்யாணங்களில் அழையா விருந்தாளி
எல்லா கல்யாணங்களுக்கும் அழைக்காமலே செல்கிறார் சந்தோஷ் என்கிற மனிதர். ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் இவருக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. ஏன் தெரியுமா? விடை கொஞ்ச நேரத்தில்.....
வானவில்லில் மாற்றங்கள்
வர வர வானவில் ஒரே மாதிரி இருப்பதாக தோன்றுகிறது. வழக்கமான பகுதிகளே வாரா வாரம் வருவதாக எண்ணம். இந்திய/ தமிழக அரசியல் மிக உன்னிப்பாக கவனித்து, தெளிவான கருத்து இருந்தாலும், அது பற்றி இங்கே எழுதுவதில்லை. போலவே சர்ச்சைக்குரிய பல விஷயங்களை தொடுவதே இல்லை. " எழுத வேண்டாம்" என ஒதுக்கி வைத்திருப்பவை நிறைய... இதனால் எழுதுகிற விஷயங்கள்/ தலைப்புகள் சற்று குறைந்து விடுகிறது.
பார்த்த படம் விடாமல் பகிர காரணம், அவற்றை இங்கு பதிந்து வைப்பது பின்னர் வாசிக்க உதவும். நீங்களும் அந்த படம் பார்க்கலாமா , வேண்டாமா என முடிவெடுக்க ஓரளவு பயன்படக்கூடும்.
வானவில்லில் எத்தகைய மாற்றங்கள் செய்யலாம்? எவை பற்றி எழுதலாம்? அவசியம் சொல்லுங்கள்.(உடனே சட்டம் என ஆரம்பிக்காதீர்கள். எப்பவும் தான் அதையே பத்தி யோசிக்கிறேன் .. இங்கேயாவது கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்) எனக்கும் சில புதிய பகுதிகள் பற்றிய யோசனைகள் உள்ளது. பின்னர் சொல்கிறேன்.
டிவி பக்கம் : மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் சிறு பார்வை
* கலைஞர் டிவியில் மே தின சிறப்பு பட்டி மன்றம். லியோனி தலைமை என்பதால் பார்க்க உட்கார்ந்தால், முதல்வர் வந்த நிகழ்ச்சி என்பதால் பாதி நேரம் அவரையே பாராட்டி நம்மை tired ஆக்கிட்டாங்க ! அட போங்கப்பா!
* சன்னில் வேட்டைக்காரன் (ஓடுங்க ! ஓடுங்க !) மாலை தில்லாலங்கடி (வடிவேலு காமெடிக்காக வீட்டில் சிலர் பார்த்தனர்)
கலைஞரில் காலை அங்காடி தெரு (ஒரு முறை பார்க்கலாம். மறுபடி மறுபடி பார்த்து விம்மி விம்மி அழ முடியுமா?)
விஜய்யில் சிறுத்தை : கார்த்தி அண்ட் சந்தானம் காமெடிக்காக முதல் பாதி கொஞ்சம் பார்த்தோம்
* காபி வித் ஜீவா என "கோ" பட குழு விஜய்யில் பேசினார்கள். பியா அடித்த அடியில் ஜீவாவிற்கு வாட்ச், சட்டை உள்ளிட்ட பல பொருட்கள் உடைந்தது என்கிற சரித்திர முக்கிய சம்பவத்தை பதிவு செய்தார்கள். மேலும் மலை மேல் பாடல் காட்சி எடுத்த போது சூறாவளி அடித்து, 18 பேர் உயிர் தப்பிய கதையையும் பகிர்ந்தார்கள். "எனது அடுத்த படத்தில் கார்த்திகா நடிக்கணும்னா.." என இயக்குனர் ஆனந்த் காமெடி கண்டிஷன் போட்டார். (அடுத்த படத்திலுமா?? நாங்க... தி பாவம்)
* இரவு விஜய் நீயா நானாவில் "அலுவலகம் மற்றும் பள்ளியில் நிறைய லீவ் எடுக்கலாமா கூடாதா" என பேசினார்கள். அதென்னங்க வர வர நீயா நானா இரவு ஒன்பது மணி முதல் 11 .30 வரை போகுது !! பொதுவா கொஞ்சம் கொஞ்சம் பாத்துட்டு ஆப் செய்து விடுவேன். அன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆடியமேட்ச் இருந்ததால் மாறி மாறி பார்த்தேன். அதனால் தான் 11 .30 வரை நிகழ்ச்சி உள்ளது தெரிந்தது ! எட்டு மணி நேர வேலையை பற்றி டிவியில் உள்ள கோபிநாத் போன்றவர்கள் பேசலாமா? அங்கு பதினாறு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் தினம் வேலை வாங்குகிறார்களே !
அய்யாசாமி தத்துவம்
"நான் பாக்கிற எல்லா மனுஷங்களையும் சமாளிச்சு நடந்துடுவேன்.. அவங்க எவ்வளவு தான் கடுமையான ஆளுங்களா இருந்தாலும் அவர்களிடம் எப்படி நடந்துக்கணும் என்பது இயல்பா வந்துடும். ஆனா என்னால் சமாளிக்க முடியாத, எப்பவும் கஷ்டபடுத்தும் ஆள் ஒருத்தர் உண்டு.. அது.. நான் தான் ! முடியல !! "
டைம்ஸ் ஆப் இந்தியா ..மிக மலிவு விலையில்
டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருட சந்தா கட்டி வாங்கி வருகிறேன். இப்போது மூன்றாம் ஆண்டுக்கும் சந்தா கட்டினேன். வருடம் முன்னூறு ருபாய் மட்டுமே. (அதாவது மாதம் 25 ரூபாய்). மாதா மாதம் அந்த பேப்பரை வெயிட்டுக்கு போட்டாலே 25 ரூபாய் கிடைத்து விடுகிறது ! கிட்ட தட்ட இலவசமாய் படிக்கிற மாதிரி தான் இருக்கு ! பேப்பரும் தின தந்தி மாதிரி சுவாரஸ்யமாய் தகவல் தருகிறார்கள். ஆங்கிலம் கற்காதவர் கூட கற்று கொள்ள இந்த பேப்பர் நல்ல துவக்கமாய் இருக்கும். உங்களுக்கு புதிதாய் ஆங்கில பேப்பர் வாங்கும் யோசனை இருந்தால், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி பரிசீலியுங்கள். உங்கள் தெருவில் பேப்பர் போடுபவரை கேட்டாலே அவர் ஆண்டு சந்தா பற்றி சொல்வார்.
அந்த அழையா விருந்தாளி
திருமணங்களுக்கு அழைக்காமலே சென்றாலும் சந்தோஷ் பாஜ்பாய் வரவேற்கப்பட காரணம் அவர் செல்கிற விஷயம் தான் !! ஒவ்வொரு திருமணத்திலும் தம்பதிகளை வைத்து புது மரக்கன்று நட வைக்கிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசு அதிகாரியான இவர் இதுவரை ஆயிரம் திருமணங்களுக்கு மேல் இவ்வாறு செய்துள்ளார். சொந்த பணத்தில் எட்டாயிரம் மர கன்றுகள் நட்டுள்ளார் இவர். மேலதிக தகவலுக்கு இங்கே பாருங்கள்.
QUOTE HANGER
If you want happiness for lifetime learn to love what you do.
அழையா விருந்தாளி வாழ்க:)!
ReplyDeleteஅய்யா சாமி தத்துவம் அசத்தல்.
பல வருடங்களாக TOI-தான் வாங்கி வருகிறோம். ஆண்டுச் சந்தா புதிய தகவல்.
வானவில் தொடரட்டும்:)!
:)
ReplyDeleteதிரு பாஜ்பாய் அவர்களின் சேவை மகத்தானது.
ReplyDeleteகோட் ஹாங்கர் - அட இது நல்லா இருக்கே...
ஓஹ் அப்ப வானவில்லில் எக்ஸ்ட்ரா வண்ணங்கள் சேரப் போகிறதா?
ReplyDeleteவெயிட்டிங் ஃபார் நியூ வெர்ஷன்:))
//எத்தகைய மாற்றங்கள் செய்யலாம்//
ReplyDeleteஃபீஸ் தருவீங்கன்னா, ஆலோசனை ரெடி!! ;-))))
//என்னால் சமாளிக்க முடியாத, எப்பவும் கஷ்டபடுத்தும் ஆள் ஒருத்தர் உண்டு.. அது.. நான் தான் //
சிரிக்க வைச்சாலும் அது உண்மைதான்!! அட, நான் உங்களச் சொல்லல. சில விஷயங்களில் மற்றவர்களைக் கண்டிக்கும் நான், அதே விஷயத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள சிரமப்படுகிறேன். (உம்: கோபம்):-((((
ஒரு பத்திரிகையின் தரம் நல்லாருக்கு; செய்தி நல்லாருக்கு; அப்படின்னெலாம் விளம்பரம் பண்றதவிட, எடைக்குப் போட்டா, கட்டின சந்தா தொகை திரும்பி கிடைச்சுடும்னு வாங்க்ச் சொல்ற இந்த டிரிக் நல்லாருக்கே!! ToIக்கு இந்த அடியாவைச் சொல்லி, கட்டணம் வாங்கிக்கோங்க!! :-))))
//பேப்பரும் தின தந்தி மாதிரி // இதுமட்டும்தான் இடிக்குது!! :-))))
// நான் பாக்கிற எல்லா மனுஷங்களையும் சமாளிச்சு நடந்துடுவேன்.. அவங்க எவ்வளவு தான் கடுமையான ஆளுங்களா இருந்தாலும் அவர்களிடம் எப்படி நடந்துக்கணும் என்பது இயல்பா வந்துடும். ஆனா என்னால் சமாளிக்க முடியாத, எப்பவும் கஷ்டபடுத்தும் ஆள் ஒருத்தர் உண்டு.. அது.. நான் தான் ! முடியல !!//
ReplyDelete:-))
good!
//இந்திய/ தமிழக அரசியல் மிக உன்னிப்பாக கவனித்து, தெளிவான கருத்து இருந்தாலும், அது பற்றி இங்கே எழுதுவதில்லை.//
ReplyDeleteநல்ல விஷயம்தான். நாம் ஏதாவது எழுதிவிட்டு விபரீதமான கமென்ட் வந்து அதைப் பார்த்து எரிச்சல் அடைய வேண்டியதில்லை.
நானும் அரசியல் பதிவை நேரடியாக பொருள் கொள்ள இயலாதவாறு எழுதி வருகிறேன்.
*****
//எவை பற்றி எழுதலாம்? அவசியம் சொல்லுங்கள்.//
அந்த வாரத்தில் உங்களைப் பாதித்த நிகழ்வுகளையும் அதற்கான தீர்வுகளையும் எழுதலாம்.
நீங்கள் குறிப்பிடும் கடைகள், சுற்றுலாத் தளங்கள், தியேட்டர் மற்றவை... அவசியம் தொடரவும்.
********
//வருடம் முன்னூறு ருபாய் மட்டுமே.//
ஆமாம், நாங்களும் கடந்து மூன்று வருடங்களாக இந்தச்சலுகையை அனுபவித்து வருகிறோம். அதுவும் முதல் வருடம் ஒரு பேக் இலவசமாகக் கொடுத்தார்கள்.
************
//மாதா மாதம் அந்த பேப்பரை வெயிட்டுக்கு போட்டாலே 25 ரூபாய் கிடைத்து விடுகிறது//
"வீட்டிற்கு பேப்பர் போடுபவருக்கு மாதம் முப்பது ரூபாய் கொடுக்கிறார்களே, அதற்குக்கூட இந்தப் பணம் பத்தாதே?" என்று வசூல் செய்யும் ஏஜெண்டிடமே விசாரித்தேன்.
அதற்கு அவர்,"அவர்கள் இத்தனை சந்தாதாரர்கள் எங்களிடம் உள்ளார்கள் என்று கணக்குக் காட்டி, சலுகை அடைந்து கொள்வார்கள்" என்றார்.
எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. உங்களுக்கு?!
*****
வானவில் மிளிரட்டும்!
நல்லா இருக்கு. வானவில் மேலும் மெருகுற வாழ்த்துக்கள். ;-))
ReplyDeleteடைம்ஸ் ஆப் இந்தியா பற்றி இன்னும் சில நண்பர்கள் கூட இதே அபிப்ராயம் சொன்னார்கள்.
ReplyDeleteதமிழ்நாட்டிலும் மரங்கள் நடும் சேவைகள் ஏதாவது ஒரு வகையில் நடந்தால் நல்லது.
வானவில் - ரசிகனின் விமர்சன தொகுப்பு.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி. உங்கள் ஊரிலும் டைம்ஸ் சந்தா பற்றி விசாரித்து பாருங்கள்.
ReplyDelete**
வாங்க ஷர்புதீன். நன்றி
**
நன்றி வெங்கட்.
**
வித்யா: நன்றி. புது டாபிக்கிற்கு ஐடியா தரலாம்ல? :))
**
ஹுசைனம்மா :நன்றி. ஐயா சாமி போலவே பலரும் உணர்வதாக அறிகிற போது, சற்று releif ஆக உள்ளது. எழுத்து மனசுமையிறக்க உதவுகிறது பாருங்கள்
நன்றி ராஜாராம்
ReplyDelete**
விரிவான அலசலுக்கு நன்றி அமைதி அப்பா. நீங்கள் சொன்ன யோசனைகளை கருத்தில் கொள்கிறேன்
**
நன்றி RVS
**
நன்றி ஸ்ரீ ராம்
**
சித்ரா நன்றி