Thursday, May 19, 2011

வானவில்: ஹோம் சுவீட் ஹோம் / வானவில்லில் பதிவர்கள்


டிவி பக்கம்

விஜய் டிவியில் சத்யராஜ் ஹோம் சுவீட் ஹோம் என்ற நிகழ்ச்சி நடத்துகிறார். வெள்ளி, சனி இரவு பத்து முதல் பதினொன்று வரை நடக்கிறது இந்த நிகழ்ச்சி (இந்த நேரம் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? பலரும் பத்துக்கெல்லாம் தூங்க ஆரம்பிப்பார்களே?) இரண்டு அணிகளை வைத்து கொண்டு குட்டி குட்டி விளையாட்டு வைக்கிறார்கள். தூர நின்று பந்தை தூக்கி ஜாடிக்குள் போடுவது, மூக்கால் வெண்டை காயை ஒட்டி அடுத்த மேசையில் கொண்டு போய் வைப்பது போன்ற விளையாட்டுகள்.. ஒரு அணிக்கு மூன்று பேர். விளையாட்டை முடிக்கா விடில் அந்த நபர் அவுட் ஆகி விடுகிறார். மற்றவரை வைத்து அந்த டீம் விளையாட வேண்டும். எல்லாம் ஜெயித்தால் வீடு என்று சொன்னாலும், அதனை வெல்வது மிக கடினமே. வருகிறவர்கள் பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் ரூபாய் போல் தான் வெற்றி பெற்று எடுத்து போகிறார்கள். புரட்சி தமிழன் சத்யராஜ், இந்த நிகழ்ச்சியில் கோட்டும், விக்கும் அணிந்து எல்லோரையும் பார்த்து கேட்கும் கேள்வி " ஆர் யூ ரெடி?"

எங்கள் தெருவில் ஓர் அழகி 

நான் எதிர் பார்த்து காத்திருந்தது கடைசியில் நடந்து விட்டது. என் தெருவில் ஒரு அழகிய பெண்.. அடடா ! கடவுளுக்கு என் கோரிக்கை காதில் விழுந்து விட்டது போலும். ஜெஸ்ஸிகா என்ன அருமையான பெயர் ! விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா பேரும் ஜெஸ்சி தான். அதே பெயரில் இன்னொரு ஜெஸ்சி இங்கே !

அவளை முதல் முறை பார்த்த போதே மனதை பறிகொடுத்து விட்டேன். தெருவில் முதல் வீடு ஜெஸ்சியுடையது. தெருவினுள் நுழையும் போதும், கிளம்பும் போதும் கண்கள் ஜெஸ்சியை தேடுகின்றன. சில நேரம் வெற்றி. பல முறை தோல்வி. ம்ம் அவளுக்கு என்னென்ன வேலையோ?

ஒரு முறை அவள் அப்பாவிடம் பேசும் சாக்கில் அவள் வீட்டுக்கு சென்றேன். "அடடா நீங்களும் தஞ்சாவூரா? அங்கே எங்க?" என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க கண்கள் ஜெஸ்சி மீதே இருந்தது. அவள் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தாள். தூர இருந்து பார்த்து விட்டு வந்து விட்டேன்.

இன்றைக்கு அவளிடம் பேசியே தீருவது என சபதத்துடன் சென்றேன். கேட்டிற்கு வெளியில் இருந்து பார்த்தேன். அவள் மட்டுமே இருந்தாள். என்னை பார்த்த்தாள். ஒரு "யூ" டர்ன் அடித்து முட்டி போட்டவாறே திரும்ப வீட்டிற்குள் ஓடி விட்டாள் அந்த எட்டு மாத ஜெஸ்சி.

இருக்கட்டும். எப்படியும் அவளை என் தோஸ்தாக்கி விடுவேன். !! I love kids sooooo much.

QUOTE HANGER


A busy man will find time for every thing. A lazy man will not find time for anything.

பிடித்த கவிதை தீராத விளையாட்டு

பார்வையாலே பரவசப்படுத்தியதும்
சிரித்தே சிநேகம் செய்ததும்
கூந்தலாலே தூண்டிலிட்டதும்
தென்றலை தீண்ட கற்று கொடுத்ததும்
நலம் விசாரித்தே நம்பிக்கை கொடுத்ததும்
நேற்று காணுமே ! வர வில்லையா?
நேசத்துடன் கேட்டதும்
இப்போது ங்கே சென்றது
பொய்யாக இருந்தோமோ? இருந்தேனா?
பரவாயில்லை
நன்றாகவே
பொழுது போனது.

-சீ. ரகு ( வனம் கவிஞர்கள் எழுதிய MCC கல்லூரியின் கவிதை தொகுப்பில்)

கவிதையை முடிக்கும் போது தெரியும் எள்ளல் சிரிக்கவும், யோசிக்கவும் வைக்கிறது.

அய்யாசாமியும் அயனும் 

இது அய்யாசாமியின் முன்னாள் அபிமான நடிகை தமன்னா நடித்த அயன் அல்ல. நிஜமான அயன் (Iron box ) 

அய்யாசாமி வீட்டில் எப்போதாவது தான் அயன் செய்வார். அப்படி ஒரு முறை தன்னோட பெண் யூனிபார்மை அயன் செய்து முடிச்சிட்டு, அயன் பாக்சை டைனிங் டேபிளில் வச்சிட்டு (சூடு குறைஞ்ச பிறகு எடுத்து உள்ளே வைப்பாராம்!!) டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டார். டைனிங் டேபிள் மேல்புறம் கண்ணாடியால் ஆனது. அயன் பாக்ஸ் சூட்டில் கண்ணாடி உடைஞ்சு போய்டுச்சு!! ஒரு ஓரமா கண்ணாடி உடைஞ்சதால், அதன் மேலே பழ கூடை போல ஏதாவது வச்சு "சமாளிபிகேஷன்" செஞ்சாங்க அவங்க மனைவி. இன்னும் மனுஷன் அந்த கண்ணாடியை மாத்தலை. நீங்க அவர் வீட்டுக்கு போனா, அந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்ணாடியை பாக்கலாம்.

வானவில்லில் இனி நீங்கள்..

சென்ற வாரம் வானவில் பற்றி கருத்து கேட்டமைக்கு பலரும் தொடருங்கள் என்று கூறியிருந்தீர்கள். நன்றி. பன்னிரெண்டு தலைப்புகள் வைத்துள்ளேன். இவற்றில் ஏதாவது ஐந்து அல்லது ஆறு எடுத்து கொண்டு, மீதம் ஓரிரு புது விஷயம் சேர்த்து, மொத்தம் ஏழு விஷயங்களை வானவில் என எழுதுகிறேன். (மிக அரிதாக ஆறு விஷயங்களுடன் எஸ்ஸாவதும் உண்டு !)

வானவில்லில் அடுத்த பகுதியை எழுத போவது ப்ளாகராகிய நீங்கள் தான் ! "ஒரு கேள்வி இரு பதில்" என்கிற தலைப்பில் புது பகுதி. ஒரே கேள்விக்கு இரு விதமான பதில் ப்ளாகர்களிடம் கேட்டு வாங்கி வெளியிட எண்ணம். ஒரு ஆண் & ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் நன்றாக இருக்கும். கேள்விகள் அவ்வபோது தனி மடலில் உங்களை வந்தடையும். இது உங்கள் ஒத்துழைப்பை பொறுத்தே வெற்றியாகும் ! ஆதரியுங்கள்! நன்றி!!

17 comments:

  1. சூப்பர்! எல்லாப் பகுதியையும் ரசித்தேன்!

    ReplyDelete
  2. ஆர் யு ரெடியில் ஆரம்பித்து ஆர் யு ரெடியில் முடித்திருக்கிறீர்கள்:)!

    வானவில் வழமைபோலவே அருமை.

    ReplyDelete
  3. Let us know whether cute Jessica liked you... :-)))))

    ReplyDelete
  4. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    Share

    ReplyDelete
  5. ஜெஸ்சி :)

    ஊருல எத்தனையோ பேர் இருக்க நான் மட்டும் ஏன் சார் ஜெஸ்சிய லவ் பண்ணேன்.?

    ReplyDelete
  6. //கவிதையை முடிக்கும் போது தெரியும் எள்ளல் சிரிக்கவும், யோசிக்கவும் வைக்கிறது.// உண்மை.

    ReplyDelete
  7. சத்யராஜ் நிகழ்ச்சி.. : பல வருடங்களுக்கு முன்னால், ரமேஷ் பிரபா சன் டிவியில் நடத்தியதுதானே.. புதியது இல்லையே..

    ReplyDelete
  8. "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே - சேலை உடுத்தத் தயங்குறியே” புகழ் சத்தியராஜ்!!

    ஜெஸ்சி - எதிர்பார்த்ததுதான் - ;-))))) அடுத்த முறை பொம்மை, சாக்லேட் வாங்கிட்டுப் போங்க.

    கே-ப: கேள்வி கேக்கிறது ரொம்ப ஈஸி. பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

    அயன் - அது ஏன் சார், எப்பவும் அய்யாச்சாமிதான் எசகுபிசகா எதையாவது செஞ்சுட்டு, அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிறார்? #பழிக்குப் பழி!!

    ReplyDelete
  9. "வர வர அய்யாசாமி பண்றது தாங்க முடியல" அப்படின்னு யாரோ சொல்வது காதில் விழுகிறது.

    வானவில்லின் மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

    *****************
    அப்படியே நம்ம

    இது நல்ல (ஏ)மாற்றம்...!

    படிச்சிப் பார்த்துக் கருத்துச் சொல்லலாமே!

    நன்றி.

    ReplyDelete
  10. ஜெஸ்ஸி சோ க்யூட்

    ரசித்தேன்

    ReplyDelete
  11. வானவில்லின் வண்ணங்கள் அழகு. புதிய மாறுதல்கள்களுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. //மொத்தம் ஏழு விஷயங்களை வானவில் என எழுதுகிறேன்//

    7/G ரெய்ன்போ காலனி?! ;)

    ReplyDelete
  13. Tநன்றி மாதவி
    ***
    ராமலட்சுமி நன்றி
    ***
    சொல்கிறேன் சித்ரா :)) நன்றி
    ***
    நன்றி சரோ
    **
    கேபிள். மகிழ்ச்சி நன்றி
    ***

    ReplyDelete
  14. நன்றி சங்கவி
    ***
    ஜனா சார் நன்றி
    ***
    அப்படியா மாதவா :)) நன்றி
    ***
    நன்றி ஹுசைனம்மா. நம்ம வீட்டில் பல்பு வாங்குவது நான் தான். கேள்வி பதில் பற்றி நீங்க சொன்னது சரிதான்
    **

    ReplyDelete
  15. சக்தி . மகிழ்ச்சி நன்றி
    ***
    நன்றி அமைதி அப்பா
    ***
    வெங்கட் நன்றி
    ***
    சர்புதீன் நன்றி
    ***
    நன்றி ரகு
    **

    ReplyDelete
  16. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...