Sunday, July 24, 2011

சென்னை அரசு பள்ளி: அதிரடியாய் ஒரு விழா: படங்களும் வீடியோவும்

சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு பள்ளியில் பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி  அவர்களுக்கு பரிசுகள் தந்தோம். அவர்கள் ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களை வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் மட்டும் வெவ்வேறு பிரிவுகள் இருப்பதால் ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று பரிசாக ஒன்பது பரிசுகள் தரப்பட்டன.

நண்பர்கள் வழக்கறிஞர் அமுதன், காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் கிருத்திகா, குமரன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் நண்பர் தெய்வ சிகாமணி, மற்றும் நான் விழாவிற்கு சென்றிருந்தோம்.

விழாவில் எடுத்த புகை படங்களும் சிறு வீடியோவும் உங்கள் பார்வைக்கு

                                     
                      தினசரி காலை Prayer-ல் தியானம் செய்யும் மாணவர்கள்  

    எங்களை அறிமுகபடுத்தி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பேசுகிறார்.

        நண்பர்/ வழக்கறிஞர் அமுதன் மாணவர்களிடையே பேசுகிறார்
***
நான் பேசியதன் வீடியோ வடிவம் இதோ. நம்ம குரல் விண்ணை தாண்டி வருவாயா படத்து கணேஷ் மாதிரி கர கரன்னு இருக்கும். குரல் சரியா கேட்கலைன்னா சவுண்ட் கூட வச்சி கேட்கலாம் .  




மேலே உள்ள படத்தில் ஜெயலட்சுமி பதினோராம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தமைக்கு பரிசு வாங்குகிறார். ஜெயலட்சுமி
குறித்து சென்ற முறை எழுதி, அதனை வாசித்த அரசு என்கிற முகம் தெரியாத நண்பர், ஜெயலட்சுமிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

இப்போதெல்லாம் காலை அலுவலகம் செல்லும் நேரங்களில் சில முறை பள்ளி சென்று கொண்டிருக்கும் ஜெயலட்சுமியை பார்ப்பேன். எப்போது என்னை பார்த்தாலும் தன் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆசிரியருக்கு வைப்பது  போல் ஒரு சல்யுட் வைப்பார். " சார் நல்லா இருக்கீங்களா?" என நான் பேசு முன் கேட்பார். பதிலுக்கு "நல்லா படி" என வழக்கமான அறிவுரையை சொல்லி விட்டு கிளம்புவேன்


   மாணவன் ஒருவருக்கு நண்பர் தெய்வசிகாமணி பரிசு வழங்குகிறார்.

11-ஆம் வகுப்பில் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்ற அருள் அரசு கிருத்திகாவிடம் பரிசு வாங்குகிறார். இவர் பேச்சு போட்டியில் மாநில அளவில் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.

வலது கோடியில் கையை கட்டிய படி நிற்கும் பள்ளி இயற்பியல் ஆசிரியர் திரு. ரவி அவர்கள் தான் இந்த விழா நடத்த உறுதுணையாய் இருந்தவர்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்படுகிறது 

குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது இந்த விழா. (அப்பாடா !!அதிரடி என்கிற பதிவின் தலைப்புக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு. எல்லாம் உங்களை உள்ளே வர வைக்க தான்!! ) விழா முடிந்ததும் தலைமை ஆசிரியரும் ரவி சாரும் எங்களிடம் " தொடர்ந்து வந்து மாணவர்களை ஊக்குவியுங்கள்; இவர்களுக்கு இந்த encouragement தான் தேவை" என்றனர்.

வருகிற சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்துடன் இணைந்து இதே பள்ளியில் ஜூனியர் அச்சீவர் என்கிற நிகழ்ச்சி (தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக) ஏற்பாடு செய்துள்ளோம். ஜூனியர் அச்சீவர் பற்றி ஒரு   பதிவு படங்கள் மற்றும் வீடியோவுடன் கூடிய  விரைவில் எதிர்பாருங்கள் !

காலை நேரம். அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் என்பதால் அதிக நண்பர்களை அழைக்க வில்லை. வருடா வருடம் இதுபோல முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்பது ஆசை. ம்..பார்க்கலாம் !

22 comments:

  1. நற்சிந்தனை... சிறந்த செயலாக்கம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது இந்த விழா. (அப்பாடா !!அதிரடி என்கிற பதிவின் தலைப்புக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு. எல்லாம் உங்களை உள்ளே வர வைக்க தான்!! ) //


    ஹா ஹா ஹா ஹா ஹா நடத்துங்க மக்கா....

    ReplyDelete
  3. உன்னை என் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன், மோகன்!

    ReplyDelete
  4. பரிசு வழங்கும் அக்காவின் படத்துக்கு நன்றி!. :-)

    ReplyDelete
  5. மகிழ்ச்சியும் பாராட்டுக்களும். பரிசு பெற்ற மாணவருக்கு வாழ்த்துக்கள். மற்ற மாணவருக்கும் இது உத்வேகத்தைத் தரும். தொடரட்டும் தங்கள் குழுவின் சேவை.

    ReplyDelete
  6. நல்ல சிந்தனையும், செய்ல்பாடும் மோகன். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  7. வாழ்க! வளர்க!!

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்
    தொடரட்டும் இந்த நற்பணி

    ReplyDelete
  9. Impressive and my best wishes

    ReplyDelete
  10. அதிரடியாய் ஒரு விழா: பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. 'நன்பேண்டா நீ' அப்படி சொன்னா மரியாதை இல்லை..
    அதனால
    'நண்பர் சார்' நீங்கன்னு சொல்லிக்கிறேன்..

    Good work.. I wish such works are continured..

    ReplyDelete
  12. நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நற்சிந்தனைகள் என்ற அளவில் நிறுத்தாமல் அதற்கு அருமையாக செயல் வடிவம் கொடுத்து வரும் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. //மனோ சாமிநாதன் said...

    நற்சிந்தனைகள் என்ற அளவில் நிறுத்தாமல் அதற்கு அருமையாக செயல் வடிவம் கொடுத்து வரும் //

    என் வியப்பும் இதே!! மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்க இறைவனருளோடு.

    ReplyDelete
  15. அருமையாக இருக்கு மோகன் குமார். குழந்தைகளை ஊக்குவிப்பது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. மாணவர்களைப் பாராட்டிப் பரிசு கொடுப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.

    தங்களுக்கும், தங்கள் நண்பர்களுக்கும் பாராட்டும் நன்றிகளும்.


    உங்களோட நல்ல செயல்களுக்கு எங்களைப் போன்றவர்கள் என்றும் துணை நிற்போம்(சும்மா, இப்படி பின்னூட்டம் போடுறது மட்டும்தான்!).

    தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  17. நன்றி யூர்கன் க்ருகியர்
    **
    நாஞ்சில் மனோ : நன்றி
    **
    பெசொவி : மகிழ்ச்சி. நன்றி
    **

    RVS : நன்றி அக்கா பேசும் வீடியோ ஜூனியர் அச்சீவர் நிகழ்ச்சி பற்றி எழுதும் போது வெளியாகும்
    **

    ReplyDelete
  18. நன்றி ராமலட்சுமி
    **
    வெங்கட்: நன்றி
    **
    ராம்ஜி யாஹூ: அதிசயமாய் நம்ம பக்கம். நன்றி
    **
    மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி மாதவி மேடம்

    ReplyDelete
  19. நன்றி கோபி
    **
    இராஜராஜேஸ்வரி : நன்றி மேடம்
    **
    மகிழ்ச்சியும் நன்றியும் மாதவா
    **
    ஸ்ரீராம்: நன்றி

    ReplyDelete
  20. மனோ மேடம் & ஹுசைனம்மா: தங்கள் பாராட்டும் வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும், மிக்க மகிழ்ச்சி நன்றி
    **
    நன்றி ராம்வி மேடம்
    **
    அமைதி அப்பா:நன்றி பின்னூட்டம் போடுவது மட்டுமில்லாமல் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்தும் ஆதரவு தெரிவிக்கலாம் (Moral support)

    ReplyDelete
  21. // பின்னூட்டம் போடுவது மட்டுமில்லாமல் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்தும் ஆதரவு தெரிவிக்கலாம் (Moral support)//

    நிச்சயமாக வர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...