Thursday, January 27, 2011

அரசு பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி

சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓர் விழாவில் "தேர்வுக்கு தயார் செய்வதும், தேர்வு எழுதுவதும்" என்ற தலைப்பில் பேச என்னை அழைத்திருந்தார்கள்.

உரத்த சிந்தனை என்ற அமைப்பு சென்னையிலும் பிற ஊர்களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. நல்லோர் வங்கி இதன் மற்றொரு பிரிவு. நல்லோர் வங்கி பெயருக்கேற்ற படி தொடர்ந்து பல நல்ல காரியங்களில் ஈடு படுகிறது.தீபாவளி நேரங்களில் முதியோர் இல்லம் சென்று இனிப்பு, புத்தாடை வழங்கி அவர்களுடன் நேரம் செலவிட்டு வருவது, ரத்த தானம்..இப்படி. உரத்த சிந்தனை மாதா மாதம் மூன்றாவது ஞாயிறன்று சென்னை LLA பில்டிங்கில் ஒரு விழா நடத்துகிறது. இதில் கவியரங்கம், பட்டி மன்றம் என உரத்த சிந்தனை உறுப்பினர்களே பங்கு பெறும் நிகழ்ச்சி இருக்கும். பத்து வருடத்திற்கு மேல் நான் இரு அமைப்புகளிலும் உறுப்பினர். கல்யாணத்திற்கு முன் ஆர்வமாக நிறைய நிகழ்சிகளுக்கு சென்றவன் அதன் பின், மாதா மாதம் செல்வதை வேலை பளுவால் பெரிதும் குறைத்து விட்டேன்.

இருந்தும் புழுதிவாக்கம் நிகழ்ச்சி மாணவர்களுடன் சந்திப்பு என்பதால் நல்லோர் வங்கி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் சம்மதித்தேன். இந்த பள்ளியில் பார்த்த சில வித்யாசமான விஷயங்கள்/மனிதர்கள் உங்களுடன் பகிர்கிறேன்.

தலைமை ஆசிரியர் 

இந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறும் இவர் சொன்னது: " இந்த பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவன், மாணவியும் மிக மிக கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள். பலருக்கு தந்தை இல்லை அல்லது மனைவியை விட்டு ஓடியிருப்பார். குடிகாரனாகவோ, வேலை இன்றியோ இருப்பார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு கேளுங்கள்" என்று சொல்லி விட்டு, மைதானத்தில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு சிலரை அழைத்து கேட்க, ஒவ்வொருவரும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையில் தான் இருந்தார்கள். கேட்கும் போதே மனதை தைத்தது.

"இவர்களில் பலரும் பள்ளிக்கு வருவதும், படிப்பதும் ரொம்ப பெருசுங்க . குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை. எப்படியாவது எல்லாரையும் பாஸ் மார்க் வாங்க வச்சிடனும்னு நாங்க எல்லாரும் எவ்வளவோ கஷ்டபடுறோம். சில பேர் சரியா ஒத்துழைக்க மாட்டேன்கிறான். போன வருடம் பிளஸ் டூவில் 91 சதவீதம் பாஸ் செய்தோம். அடுத்த வருடம் பிளஸ் ஒன்னில் பெயில் ஆன பசங்களை பரவாயில்லைன்னு, ஒரு வருஷம் வீணாக்காம பிளஸ் டூ அனுப்பிட்டோம். அவங்க எல்லாம் பிளஸ் டூவிலும் பெயில் ஆனதால் பாஸ் சதவீதம் குறைஞ்சு 72% ஆகிடுச்சு. இந்த வருஷம் சரியா படிக்கதவங்களை பிளஸ் ஒன்னில் நிறுத்திட வேண்டியது தான்" என்றார்.

முத்து குமார சாமி 

அரசு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தனது கிராஜுவிட்டி பணம் பத்து லட்சத்தை ஏழை குழந்தைகள் படிப்பிற்கு மட்டுமே குடுத்து விட்டார். அதன் மூலம் வருடா வருடம் மாணவர்களுக்கு யூனிபார்ம், நோட்டுகள் போன்றவை வாங்க உபயோகிக்கின்றனர். 


வெள்ளைநிற மீசை/  தலைமுடியுடன் இருப்பவர் முத்து குமார சாமி
அவருக்கு வலப்புறம் இருப்பவர் தலைமை ஆசிரியர் 

நல்லோர் வங்கி மாதம் இரு முறை மாணவர்களுக்கு பயன் படும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அவற்றிற்கு அவசியம் வந்து விடுகிறார் இவர். " கிட்ட தட்ட பத்து பள்ளிகளுக்கு நான் அடிக்கடி சென்று வந்தாலும் இந்த பள்ளியில் தான் நல்ல ரிசப்ஷன் உள்ளது. நல்லோர் வங்கி போன்ற அமைப்பு செய்யும் உதவிகளை முழுமையாய் உபயோகிப்பது இவர்கள் தான்" என்றார் அவர்.

ஓய்வு பெற்ற பணத்தை இத்தகைய விஷயத்துக்கு செலவழிக்க எவ்வளவு நல்ல மனம் வேண்டும்! அவர் இப்போது எப்படி தன் வாழ்க்கையை கழிக்கிறார், தன் மகன்களுடன் உள்ளாரா என்றெல்லாம் கேள்விகள் ஓடினாலும் அதையெல்லாம் அவரிடம் கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை.

பிச்சம்மாள் 

நல்லோர் வங்கியின் மூலம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் திருமதி.பிச்சம்மாள் 67 வயது இளைஞி. பசங்க எல்லாரும் "பாட்டிம்மா" என பாசத்தை பொழிகிறார்கள். ஒவ்வொரு வாரமும் கதை சொல்கிறார். பாட்டு பாடுகிறார். டான்ஸ் கூட ஆடுவாராம்!!

அரசாங்கத்தின் சமூக சேவை பிரிவில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதனால் ஓய்வு பெற்ற பின்னும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளதாக கூறுகிறார். மூன்று பையன்கள், ரெண்டு பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி தனியாக உள்ளதாகவும் கணவருடன் தனியே இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்து என கையால் காபி சாப்பிட்டுட்டு போங்க என மிக அன்பாக சொன்னாலும், மறுபடி ஆபிஸ் செல்ல வேண்டியிருந்ததால் என்னால் செல்ல முடிய வில்லை. நிச்சயம் ஒரு முறை சென்று அவர் கையால் காபி சாப்பிடுவேன்! எங்க மடிப்பாக்கம் தானே!!

இவருடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்த உதவும் மற்றொருவர் திரு. ராம நாதன். இவரும் ஓய்வு பெற்றவர் தான். பிச்சம்மாள், ராம நாதன், முத்து குமார சாமி ஆகிய மூன்று பெறும் ஓய்வு காலத்தை மிக பயனுள்ள முறையில் கழிக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்!

அடுத்து இந்த நிகழ்ச்சியில் சந்தித்த நான்கு மாணவர்கள் பற்றி..

லாவண்யா 

இந்த மாணவியின் தந்தை சமீபத்தில் விபத்தில் மறைந்து விட்டார். தாயார் மட்டுமே. குடும்பம் நடத்துவதே கேள்வி குறியானதால் , நன்றாக படிக்கும் இவள் படிப்பை பாதியில் விடும் யோசனையில் இருந்திருக்கிறாள். இது உரத்த சிந்தனை மூலம் உறுப்பினர்களுக்கு தெரிய வர, என். ஆர். கே என்ற ஆடிட்டர் இவளுக்கு மாதா மாதம் ஐநூறு ரூபாய் தருவதாகவும் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும் கூறி உள்ளார். இவளுக்கு தற்போது பேன்க் அக்கவுன்ட் துவங்க பட்டு மாதா மாதம் பணம் சேர்க்க படுகிறது. விபத்தின் மூலம் தந்தை இறந்ததால் அதன் மூலம் பணம் ஏதும் கிடைக்குமா என்றும் உரத்த சிந்தனை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.

அருள் அரசு

பேச்சு போட்டியில் பேச வந்த அருள் அரசு பேசும் முன்னும், பேசும் போதும், பேசிய பின்னும் அனைத்து மாணவர்களின் கை தட்டல்களை வாங்கினான். அற்புதமான பேச்சு !! என்ன ஒரு தெளிவு! எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளான்! பயமே இல்லை.இவன்  பேசும் போது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அருகிலிருந்த தலைமை ஆசிரியர், என் மனம் படித்த மாதிரி " எந்த பள்ளியில் எந்த போட்டிக்கு போனாலும் முதல் பரிசு வாங்கிடுவான் சார்" என்றார். " நல்லா படிப்பானா சார்" என்றேன். " இந்த வருடம் பிளஸ் ஒன். அடுத்த வருஷம் ஸ்டேட் ரேன்க் வருவான்னு எதிர் பாக்கிறோம்"

அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..

ஜெய லட்சுமி 

ஜெயலட்சுமியின்  தாயார் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து  ஜெயலட்சுமியை   படிக்க வைக்கிறார்.  ஜெய லட்சுமி தொடர்ந்து அனைத்து வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறும்  மாணவியாக இருக்கிறாள். அன்று நடந்த பேச்சு போட்டியிலும் அழகாய் பேசி பரிசு வாங்கினாள். ஆக்ரோஷமாய் பேசி முடித்து விட்டு கையோடு போய் பள்ளி பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு தரையில் வந்து அமர்ந்த இவள் கனவு " ஐ. ஏ. எஸ்" ஆவது ! பதினொன்றாவது படிக்கும் இவள் பார்க்க எட்டாம் வகுப்பு மாணவி போல் உள்ளாள் ( Malnutrition).

ராஜேஸ்வரி

சில நேரம் நிஜம் கதைகளை விட சுவாரஸ்யமானது.

ராஜேஸ்வரி குடும்பத்துக்கு வீடு இல்லை. வாடகை குடுக்கும் வசதியும் இல்லை. பள்ளியிலேயே வாட்ச் மேன் போல தங்கி கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. நான் பேசி கொண்டிருக்கும் போது கூட, தூரத்தில் வெட்ட வெளியில் இவர்களின் அடுப்பு எரிந்து கொண்டிருந்ததை கவனித்தேன். இந்த நிலையிலும் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண் வாங்கியிருக்கிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருக்கிறார்.

இந்த வருடம் முதல், பள்ளியில் அறிமுக படுத்தப்படும் "வருடாந்திர சிறந்த மாணாக்கன்" விருது இந்த வருடம் பள்ளியையே வீடாய் கொண்ட ராஜேஸ்வரிக்கு தான் கிடைக்க உள்ளது !

நான் பேசும் போது ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து இந்த நிலைக்கு என்னால் வர முடியும் என்றால், சென்னையிலிருக்கும் உங்களால் இன்னும் நன்கு வர முடியும் என்று பேசினேன். (எனது பேச்சிற்கு பாய்ண்டுகள் நண்பர்கள் சிலரிடம் கேட்டேன். நல்ல சில கருத்துகள் தந்து உதவிய ராமலட்சுமி & தேவ குமாருக்கு நன்றி.)

மாணவனாக நான் செய்த தவறுகள், அவற்றில் கற்ற பாடங்கள் ஆகியவையும் பகிர்ந்தேன். பரீட்சைக்கு தயார் செய்வது மற்றும் எழுதுவது குறித்து சில குறிப்புகள் தரப்பட்டது. இறுதியில் பேசியதிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச்சை முடித்தேன்.

மொத்தத்தில் இது ஒரு நெகிழ்வான, நிறைவான விழாவாக இருந்தது.

இது சம்பந்தமான இன்னொரு பதிவு:  அரசு பள்ளியில் பேசியது என்ன 

54 comments:

  1. ரொம்ப நெகிழ்வா இருக்கு மொத்த கட்டுரையும் படிச்சா..சைலண்டா பல வேலைகள பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.முடிஞ்சா ஒருமுறை அந்த பள்ளிக்கு போய் வரலாம் நண்பரே.

    ReplyDelete
  2. very beautiful and eye opening.thank you.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் மோகன். ரொம்ப சந்தோஷமா இருக்கு..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. let me know the bank account number for jeyalakshmi. I will send 1000 rupees every month for her studies.

    ReplyDelete
  6. நன்றி மரா. அவசியம் பள்ளிக்கு செல்வோம்
    **
    டாக்டர் வடிவுக்கரசி: மிக்க நன்றி
    **
    மகிழ்ச்சியும் நன்றியும் கேபிள்
    **
    நாகசுப்ரமணியம் : நன்றி

    ReplyDelete
  7. திரு Cottongrower , தங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உதவ எண்ணும் உங்கள் நல்ல மனம் போற்றுதற்கு உரியது

    90030 12871 என்ற எனது தொலைபேசி எண்ணுக்கோ snehamohankumar@yahoo.co.in என்ற எனது இ மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளுங்கள். பேசுவோம். அவசியம் அவளுக்கு உதவி செய்வோம்.

    ஜெயலட்சுமிக்கு இதுவரை பேங்க் அக்கவுன்ட் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் மாதா மாதமோ அல்லது ஒரே முறை தாங்கள் விரும்பும் பணமோ அனுப்ப வேண்டுமெனில் இதற்காக அவளுக்கு அக்கவுன்ட் ஓபன் செய்ய வேண்டும். (நான் எழுதியுள்ள மற்றொரு பெண்ணான லாவண்யாவிற்கு இப்போது ஒருவர் உதவுவதால், அதற்காக அக்கவுன்ட் ஆரம்பித்தார்கள்)

    அவசியம் என்னை தொலை பேசி அல்லது இ மெயில் முகவரிக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி

    ReplyDelete
  8. தங்களது இந்த பகிர்வு கண்டு நெகிழ்ச்சி. இன்று மாலை 08.00 மணிக்கு மேல் உங்களுடன் பேசலாமா? என்னால் முடிந்ததைச் செய்ய விழைகிறேன்.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  9. நெகிழ்வான பதிவு..
    உங்கள் பணி தொடந்து நடக்கட்டும்..

    ReplyDelete
  10. அரசுப் பள்ளிகளுக்கு உதவும் தங்களுக்கு எனது வணக்கங்கள்.

    நாங்களும் எங்கள் 'விழுதுகள்' அமைப்பு மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முடிந்ததைச் செய்து வருகிறோம்.

    அனைவரும் முயன்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகுந்த வெற்றி பெறுவார்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. நான் அறிந்த வரையில், இது மாதிரியான நல்ல உள்ளங்களை ஒன்றிணைத்து ஒரு இயக்கமாக செயல்படுத்தும் திறனும், மனதும் தங்களுக்கு உள்ளது. அதன் முதல் படிதான் இது.

    மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

    ReplyDelete
  12. பல்வேறு நல்ல உள்ளங்களை ஒரே பதிவில் அறிமுகப் படுத்திவிட்டீர்கள். பல்வேறு தகவல்கள், குறிப்பாக மாணவர்களின் தந்தை ஓடிவிடுவது, தாயார் கஷ்ட்டப்பட்டு படிக்க வைப்பது.

    முத்து குமார சாமி, பிச்சம்மாள், என். ஆர். கே என்ற ஆடிட்டர், தலைமை ஆசிரியர் போன்ற நல்ல மனிதர்களை வணங்கி மகிழ்கிறேன்.

    ஜெய லட்சுமியின் கனவு நிறைவேறவும்,
    அருள் அரசு முதல் மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்.

    நல்லோர் வங்கி - மிக அற்புதமான பெயர்! அதன் ஆங்கில பெயர் என்ன?(வைத்திருபார்கள் என்று கேட்கிறேன்)

    ReplyDelete
  13. நல்ல விஷயங்கள் தெரிந்துகொண்டதிலேயே மிக்க மனநிறைவு ஏற்படுகிறது. அதில் பங்குகொள்ளும் உங்களுக்கு இன்னும் அதிகமாக இருக்கும். இம்மாதிரி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகுதியாகப் பாராட்டப்படவேண்டியவர்கள்.

    ReplyDelete
  14. நெகிழ்வான பகிர்வு.. உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  15. நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நன்றி வெங்கட். பேசுவோம்
    **
    மாதவன். நன்றி
    **
    இளங்கோ. மிக்க மகிழ்ச்சி. தங்கள் நற்பணிக்கு வாழ்த்துகள்
    **
    அமைதி அப்பா: நன்றி ஆங்கிலத்திலும் நல்லோர் வங்கி தான் (அதே பெயரை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்)
    **

    ReplyDelete
  17. ஹுஸைனம்மா : ஆச்சரியமாய் தனியார் பள்ளிகளை விட இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம். ஆயினும் இவர்களின் பொறுமை பாராட்டப்பட வேண்டியதே.
    **
    மிக்க நன்றி அமைதி சாரல்
    **
    நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  18. நெகிழ்வான நிகழ்வுகளின் தொகுப்பு. நல்லோரின் அறிமுகங்கள். நாளைய நட்சத்திரங்களாய் மாணாக்கர். லாவண்யா, ஜெயலட்சுமிக்கு நல்ல எதிர்காலம் அமையவும், அருள் அரசு தலைமையாசிரியரின் ஆசையை பூர்த்தி செய்யவும் வாழ்த்துவோம்.

    பேச்சின் போது மாணவரை கவனிக்கச் செய்த தங்கள் உத்தியும் அருமை. தொடரட்டும் இதுபோன்ற தன்னலமற்ற சேவைகள். மனமார்ந்த பாராட்டுக்கள்.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. சொல்ல மறந்துட்டேன்: அங்க நீங்க பேசினதை, ஏன் இங்க பதிவா எழுதக்கூடாது?

    ReplyDelete
  20. மிகுந்த மன நெகிழ்வோடு எழுதுகிறேன். உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் நல்லா இருக்கணும். (மழை மட்டும் கொஞ்சம் அளவோடு பெய்ய வைங்க:)

    மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. ட்விட்டியிருக்கிறேன்: http://twitter.com/#!/kekkepikkuni/status/30644488435142656

    ReplyDelete
  22. உங்களுக்கு வணக்கம்!!!

    ReplyDelete
  23. சீக்கிரத்தில் உங்களுடன் சேர நினைக்கிறேன். என் வார இறுதி நாள்களில் இப்பொழுது வேறு ஒரு படிப்பு படித்து வருகிறேன். சீக்கிரத்தில் அது முடிந்ததும் ஒன்றாய் இணைந்து பணியாற்றுவோம் அன்பரே.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அன்பின் மோகன் குமார் - நல்ல செயல் - நல்ல சிந்தனை - வாழ்க வளமுடன் - முத்து குமார சாமி - பிச்சம்மாள் - என் ஆர் கே - அனைவருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள். ஜெய லட்சுமியின் கனவு நிறைவேறவும், அருள் அரசு முதல் மதிப்பெண் பெறவும் நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  26. நெகிழ்வான பதிவு..

    ReplyDelete
  27. நெகிழ்ந்துவிட்டேன் ,வாழ்த்துக்கள்,நன்றி

    ReplyDelete
  28. //போபாலில் ஐ.ஏ.எஸ். தம்பதிகள் ரூபாய் 350 கோடிக்கு மேல் சட்ட விரோதமாக சொத்து குவிப்பு.//

    //முத்து குமார சாமி - அரசு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தனது கிராஜுவிட்டி பணம் பத்து லட்சத்தை ஏழை குழந்தைகள் படிப்பிற்கு மட்டுமே குடுத்து விட்டார்//

    இரண்டு செய்திக்கும் தான் என்ன வித்யாசம்!

    ReplyDelete
  29. அற்புதம், இந்த குழந்தைகள் தான் நாளைய இந்தியா. நாம் ஒவ்வொருவரும் குடும்பத்துடம் இந்த மாதிரியான பள்ளிகளுக்கு செல்லவேண்டும் , நமது குழந்தைகளை நல்லவர்களா வளர்க்க அது உதவும். நமது குழந்தைகள் உண்மையான இந்தியாவை காண அது உதவும்.

    மேலும், எங்களது ஜீவா புத்தகாலயம் (நூல் உலகம் http://www.noolulagam.com) சார்பாக, இந்த குழந்தைகளை அவர்களின் கல்வியை ஊக்குவிக்க ஏதாவது செய்யமுடியும் எனில் தெரிய படுத்தவும்.

    அன்புடன்
    வேலு சாந்தமூர்த்தி

    ReplyDelete
  30. வாழ்த்துகள் மோகன் சார். மிக்க மகிழ்ச்சி.

    திரு.முத்துக்குமாரசுவாமி போற்றுதலுக்குரிய பெரிய மனிதர். அவரை வணங்குகிறேன்.

    ReplyDelete
  31. Thiru Mohan, Its really a very touching incident and thanks for sharing. All the very best for the students.

    ReplyDelete
  32. நெகிழ்வான ஆனால் அவசியமான பதிவு. வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    ReplyDelete
  33. உங்களுக்கு இது >>>>>
    மொத்தத்தில் இது ஒரு நெகிழ்வான, நிறைவான விழாவாக இருந்தது.

    எங்களுக்கு ..?விழாவைத்தூக்கிட்டு பதிவு போட்டுக்குங்க.. ஹா ஹா செம

    ReplyDelete
  34. மிக்க நன்றி ராமலட்சுமி.. மிக குறுகிய நோட்டிசில் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயார் செய்ய நல்ல பாய்ண்டுகள் தந்தமைக்கும்
    **
    ஹுசைனம்மா said...

    சொல்ல மறந்துட்டேன்: அங்க நீங்க பேசினதை, ஏன் இங்க பதிவா எழுதக்கூடாது?//


    ஆஹா. நானும் கூட யோசித்தேன். ஆனால் கொஞ்ச நாளாவே வெளம்பரம் அதிகமா இருக்கோன்னு யோசனை. ஆனாலும் சிலருக்கு உதவும் என்றால் பகிரலாம் தான். முயலுகிறேன்.

    **
    கெக்கே பிக்குணி: வாங்க சார். நன்றி. ஆனா மழை கிழைன்னு பேசி பீதியை கிளப்புறீங்க. நானும் சாதாரண மனுஷன் தான். சொல்ல போனா இப்படி உதவ ஆரம்பித்த பின் தான் எவ்வளவு பேர் நம்மை விட பல மடங்கு இத்தகைய உதவிகள் செய்கிறார்கள் என தெரிய வருது. நாம செய்வது சிறிய அளவே.

    ReplyDelete
  35. கதிர். உங்கள் Facebook-ல் தந்த சுட்டியால் சில புது நண்பர்கள் கிடைத்தனர். மகிழ்ச்சியும் நன்றியும்
    **
    அமுதா கிருஷ்ணா: நன்றி
    **
    தராசு: வாங்கன்னா. நம்ம வலைப்பக்கம் அதிகம் வந்ததில்லை நீங்க. கேபிள் புத்தக வெளியீட்டில் இரு முறை பார்த்தும் அதிகம் பேச முடியலை. ஒத்த சிந்தனை இருந்தால் நிச்சயம் சேர்ந்து நல்ல விஷயம் செய்யலாம். படிப்பை வெற்றி கரமா முடிச்சுட்டு வாங்க. அப்பவும் நான் இது மாதிரி வேலைகள் செய்துகிட்டு தான் இருப்பேன். We can do good deeds together.
    **
    அகல் விளக்கு & நசரேயன் : நன்றி
    **

    ReplyDelete
  36. சீனா சார்: பெரியவரான தங்களின் வாக்கு பலிக்கட்டும்
    **
    ராதா கிருஷ்ணன் சார்: நன்றி
    **
    நன்றி மைதீன்
    **
    ஆதி மனிதன்: வித்யாசமா, டாபிகலா யோச்க்கிறீங்க
    **

    ReplyDelete
  37. அன்புடன் அருணா: வாங்க மேடம். நல்ல பதிவு வந்தா மட்டும் தான் உள்ளே எட்டி பாக்குறீங்க. பூங்கொத்து அப்படின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டு போயிடுறீங்க. ரைட்டு..
    **
    சாந்த மூர்த்தி சார்: மிக மகிழ்ச்சி. அவசியம் செய்யலாம். இப்பள்ளியில் ஒரு லைப்ரரி உள்ளது. அதற்கும் புத்தகங்கள் தரலாம். வேறு விதத்திலும் உதவலாம். என்னை தொடர்பு கொள்ளுங்கள். பேசுவோம் தொலை பேசி எண்: 90030 12871
    **
    சரவணா : ஆம் நானும் அதே தான் நினைத்தேன்
    **
    மிக்க நன்றி குமார்
    **
    கலாநேசன் : நன்றி
    **
    செந்தில்குமார்: வித்யாசமான வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  38. Dear Mohan,

    I would like to deposit 1000 rupees every month. Please ask them to open a savings account. The account should have the facility to deposit money from ANYWHERE INDIA.

    This amount will be for her untill the completion of her +2. If she is very good at studies, scores good marks in +2, I will try to help for higher studies. In the mean time, please send her bio-data

    with photo, s.s.l.c mark sheet, T.C copy xerox and her school Headmaster's certification stating that she is good at conduct and her educational merits.


    I really appreciate for your efforts for helping the poor. This is my small effort to support your hand.

    ReplyDelete
  39. Dear Cottongrower,

    Thank you very much.

    The documents that you had asked can definitely be organised. Please tell the address to which these documents needs to be sent. Or if you want us to scan & send the documents by mail, please tell the mail ID to which they need to be sent. Please reply to snehamohankumar@yahoo.co.in.

    Thanks

    Mohan Kumar

    ReplyDelete
  40. Dear Mr. Cottongrower,

    I saw the mail that you had sent along with the comment to my personal ID. Will organise the documents & send it.

    Thanks

    Mohan Kumar

    ReplyDelete
  41. pls scan it & mail to me. tks

    ReplyDelete
  42. நல்ல ஒரு நெகிழ்வான சந்திப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க ...
    உங்களின் அன்பு பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. அண்ணா, நல்ல பதிவு, நிறைய பேர் உதவ முன் வருவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி; இத்தனை பேர் feedback தந்து இருப்பதே இது எவ்வளவு நல்ல சேவை என்பதை காட்டுகிறது. Keep it up

    ReplyDelete
  44. நான் எதிர் பார்த்த மாதிரியே இந்தப் பதிவு, பல்வேறு நண்பர்களால் படிக்கப்பட்டதோடு, பலரும் உதவும் உள்ளத்தோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
    குறிப்பாக திரு.cottongrower-க்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  45. திரு.cottongrower தலைமை ஆசிரியரிடம் பேசி உள்ளேன். செவ்வாய் (1/2/2011) அன்று நீங்கள் கேட்டவை மெயிலில் அனுப்புவேன்என நம்புகிறேன்.
    **
    நன்றி தேவா. மகிழ்ச்சி.
    **
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
    **
    நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  46. நெகிழ்ச்சியான பதிவு ...அருமை வாழ்த்துகள் ! ! !

    ReplyDelete
  47. நன்றி பொன்சந்தர்.
    **
    திரு Cottongrower: மாணவி ஜெய லட்சுமி குறித்து தாங்கள் கேட்ட டாக்குமெண்டுகள் அனைத்தும் தங்கள் மெயில் முகவரிக்கு அனுப்பி உள்ளோம். பார்த்து விட்டு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

    ReplyDelete
  48. Dear Mohan kumar,

    i did not get any of the doc. as u informed. could you pls e.mail again?tks

    ReplyDelete
  49. திரு. Cottongrower மாதா மாதம் ஜெய லட்சுமி என்ற பதினோராம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவிக்கு ரூபாய் ஆயிரம் அனுப்பி வருகிறார். அவளுக்கென்று தனி அக்கவுன்ட் துவங்கப்பட்டு அதில் அவர் இந்த பணத்தை மாதா மாதம் சேர்ப்பிக்கிறார். தன்னை பற்றிய எந்த தகவலும் சொல்லாமலே இவர் செய்யும் உதவி போற்றுதலுக்கு உரியது.

    மிக்க நன்றி நண்பரே. ஒரு ஏழை பெண்ணை படிக்க வைப்பதன் மூலம் அவள் சந்ததிக்கு உதவுகிறீர்கள். மகிழ்ச்சியும் நன்றியும்

    ReplyDelete
  50. அருமையான பதிவு.
    மனதை நெகிழ வைத்து விட்டது. நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன என பின்னூட்டங்களில் இருந்து தெரிந்து கொண்டேன்.
    உங்கள் பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  51. மனித நேயத்தோடு மண்டியிருந்து மகத்தான சேவையில் தொடரும் ’உரத்த சிந்தனை’ பற்றிய எதார்த்தமான படப் பிடிப்பு. உங்கள் எழுத்து எளிமையோடு நெகிழவைக்கும் செய்திகளைத் தந்துள்ளது. எனக்கு,’உரத்த சிந்தனை அமைப்பின் முகவரி தொடர்பு எண் இவற்றைத் தந்துதவினால் மகிழ்வேன் நண்பரே,

    எனது தொடர்புக்கு: krishnanbalaa@gmail.com mobile:9444069234

    நட்புடன்,
    கிருஷ்ணன்பாலா
    29.12.2011

    ReplyDelete
  52. நல்ல விசயம்... நல்ல பள்ளி, நல்ல மனிதர்கள்... வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...